Sunday, February 28, 2010

ஹோலிப்பண்டிகை - தமிழ் காமிக்ஸ் உலகில் வண்ணங்கள்

அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.சமீப காலமாக பல்வேறு மொக்கை பதிவுகளை இந்த காமிக்ஸ் உலகம் சந்தித்து உள்ளது. இதில் போட்டியாக காமிக்ஸ் டாக்டர் வேறு களமிறங்கி உள்ளார். இருந்தாலும் தன முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் போல நானும் ஒரு புதிய பதிவுடன் வந்து உள்ளேன்.

நம்மில் பலருக்கு ஹோலிப்பண்டிகை பற்றி தெரிந்திருக்கும். வெய்யில் காலம் ஆரம்பிக்கும் பருவத்தின் முதல் பௌர்ணமி இரவுதான் ஹோலிப்பண்டிகை என்பது ஐதீகம். இந்த பண்டிகையை பற்றி சரியாக தெரியாதவர்கள் இந்த சுட்டியை உபயோகப்படுத்தி தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

வண்ணங்களை நண்பர்களின் மீது பூசி விளையாடும் இந்த ஹோலிப்பண்டிகை தமிழகத்தில் பலருக்கும் தெரிந்து இருக்காது. ஆனால் வடநாட்டில் வாசித்தவர்களுக்கும் அந்த கலாச்சார முறையை தெரிந்தவர்களுக்கும் இந்த பண்டிகை பிடித்தமான ஒன்றாகும். எனக்கும் பிடித்த இந்த பண்டிகை நாளில் தமிழ் காமிக்ஸ் உலகில் வண்ணங்களை மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ் புத்தகங்களின் அட்டைப் படங்களை உங்களின் மேலான பார்வைக்கு சமர்பிக்கிறேன்.

 

 

011 Manjal Poo Marmam 147 Manjal Poo Marmam (Reprint) CC 08-1 038 Otran Vellai Nari
17 Neelappei Marmam 199 Manjalaai Oru Asuran Coming Soon Lion Comics Chick Bill Vellaiyai oru Vedhaalam 12 Vellai Pisasu
27 Sivappu Malai Marmam 255 Maraniththin Niram Karuppu 280 Sigapputhalai Saagasam Muthu Comics # 179 - Pachai Vaanam Marmam
New_Karuppu Pathiri Marman Poster 14 Sivappu Paathai Lion # 74 - Maranaththin Niram Pachchai New_Pachai Nari Padalam

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? உதாரணமாக இன்று பௌர்ணமி. அதனால் பௌர்ணமியை மைய்யமாக வந்த காமிக்ஸ்கள் என்று கூட நம்முடைய சக பதிவர்கள் பதிவிடலாம். அல்லது இன்று காட்டுக்குள்ளே வேட்டையாடிக் கொண்டு இருக்கும் ஒரு பதிவரை கருத்தில் கொண்டு கானகத்தில் கலவரம், இருண்ட காட்டில் இரண்டு மர்மம், கானக கலாட்டா, என்று கூட பதிவிடலாம்.

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன், 
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Wednesday, February 17, 2010

வேதாளர் - முகமூடி வீரர் மாயாவி - பிறந்த நாள்

அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.டெய்லி ஸ்டிரிப் என்று சொல்லப்படும் தினசரி காமிக்ஸ் தொடர்களின் வாசகர்களுக்கும், பொதுவான காமிக்ஸ் ரசிகர்களுக்கும் இன்று ஒரு முக்கியமான நாளாகும். ஆம், பிப்ரவரி மாதம் பதினேழாம் நாள் தான் முதன் முதலில் வேதாளன் என்று இந்திரஜால் காமிக்ஸ் / குமுதம் /முத்து காமிக்ஸ் / முத்து மினி காமிக்ஸ் / கொமிக் வோல்ட்  இதழ்களிலும் முகமூடி வீரர் மாயாவி என்று ராணி காமிக்சிலும் அழைக்கப்பட்ட பேன்டம் (The Phantom) காமிக்ஸ் ரசிகர்களை சந்தித்தார்.

சரியாக எழுபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வேதாளர் முதன் முறையாக ஒரு தினசரி பத்திரிகையில் தோன்றினார். அந்த கதைதான் சிங் கொள்ளையர்களை பற்றிய கதை. சிங் சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட அந்த கதை பெற்ற வெற்றியை தொடர்ந்து பின்னாளில் வேதாளரின் கதையானது  உலக நாடுகளில் பல மொழிகளில் பல்வேறு வடிவங்களில் இன்றளவும் தொடர்கின்றது.முதன்முதலில் வந்த அந்த வேதாளரின் கதையின் பக்கம் இதோ உங்களின் பார்வைக்கு.

The Singh Brotherhood 

இந்த கதையை படிக்க விரும்பும் வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இதோ அந்த தினசரி கதையின் டவுன்லோட் லின்க்குகள்:

அன்றுமுதல் இன்று வரை வேதாளர் பல மொழிகளில் பல வடிவங்களில் நம்மை மகிழ்வித்து வந்துள்ளார். முதன்முதலில் ஒரு முழு புத்தக வடிவில் வேதாளர் தோன்றியது டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தின் இந்திரஜால் காமிக்ஸின் முதல் இதழில் தான். தமிழிலும் கூட முதல் வேதாளரின் கதை இதே பதிப்பகத்தின் தமிழ் வடிவம்தான். அந்த புத்தகம் என்னிடம் இல்லாததாலும், நண்பர்கள் அதனின் ஸ்கான் வடிவத்தை தராததாலும் நான் அதற்க்கு அடுத்தபடியாக தமிழில் குமுதம் புத்தகத்தில் வந்த முகமூடி கதையின் முதல் பக்கத்தை அளிக்கிறேன்.

குமுதத்தில் அறுபதுகளில் ஐந்து (ஆறு?) முகமூடி கதைகள் வந்தன.உலகிலேயே இந்த ஐந்து கதைகளையும் தன்னிடம் நல்ல நிலையில் வைத்து இருக்கும் ஒரே நபர் - பயங்கரவாதி டாக்டர் செவன் தான். ஐயா, தயவு செய்து அதன் முதல் பக்கங்களையாவது எங்களுக்கு காட்டுங்கள். உங்களுக்கு புண்ணியமாக போகும்.

 

முதல் வேதாளர் கதை - இந்திரஜால் காமிக்ஸ்

குமுதம் - முகமூடி - முதல் கதை - முதல் பகுதி

IndrajalComics1stissueMarch19643 KumudhamJuly281966Phantom5
  • முதல் இந்திரஜால் காமிக்ஸ் கதையை ஆன்லைனில் படிக்க,இங்கே கிளிக் செய்யவும்.Scribd
  • டவுன்லோட் செய்ய, இந்த சுட்டியை பயன்படுத்தவும். MediaFire

தமிழில் எனக்கு தெரிந்த வரையில் தெளிவான படங்களுடன், சிறந்த சித்திரங்களை கொண்டு சிறப்பான மொழி பெயர்ப்பில் வந்த வேதாளர் கதைகள் முத்து குழுமத்தில் மட்டுமே வெளியிடப்பட்டன. அதனை படிக்கும் வாய்ப்பு பலருக்கும் கிட்ட வில்லை. ஆம், எண்பதுகளிலேயே வேதாளர் கதைகளை முத்து குழுமத்தினர் நிறுத்தி விட்டனர்.

முத்து காமிக்ஸில் முதல் வேதாளர் கதை

முத்து மினி காமிக்ஸில் முதலும் கடைசியுமான வேதாளர் கதை

Muthu_Comics___058_-_Mugamoodi_Vedhalan_thumb[1] MM8_Mudhal_Vedhalanin_Kadhai_Front_Cover

படங்களை கொடுத்து உதவிய என்னுடைய நண்பர்களுக்கும், வேண்டப்பட்ட விரோதிக்கும் நன்றிகள்.

முத்து காமிக்ஸ் வேதாளர் கதைகளை வெளியிடுவதை நிறுத்தியவுடன் தமிழில் வேதாளர் கதைகளை படிக்க ரசிகர்கள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக காத்து இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது (இடையில் இந்திரஜால் நிறுவனத்தினர் "சுந்தர" தமிழில் வெளியிட்டு வந்துக்கொண்டுதான் இருந்தனர்). ராணி காமிக்ஸில் மாயாவி என்ற பெயரில் வேதாளர் தோன்றினார். அதன் பின்னர் ஒவ்வொரு இரண்டாம் இதழும் மாயாவியின் கதை என்ற நிலை தொடர்ந்தது.  ராணி காமிக்ஸை சரிவில் இருந்து மீட்ட சுந்தர பாண்டியனாக மாயாவி விளங்கினார்.

 

ராணி காமிக்ஸில் முதல் வேதாளர் மாயாவி கதை

கொமிக் வோல்ட் இதழில் வந்த பேன்டம் கதை

RaniComics1stPahntomMay19903 ComicWorld31stPhantomStoryDec19983

இந்த தொண்ணுறுகளில் தமிழில் சில பல மொக்கை காமிக்ஸ் முயற்சிகள் நடந்தன. கண்மணி காமிக்ஸ், கொமிக் வோல்ட் என்று வந்த இந்த இதழ்கள் பல வண்ணத்தில் சிறப்பான பின்புலத்தில் வந்தாலும் அவை பெரிய அளவில் எடுபடவில்லை.இதில் அல்டிமேட்  ஜோக் இந்த கொமிக் வோல்ட்தான். வேதாளர் என்றும் இல்லாமல், மாயாவி என்றும் இல்லாமல் பேன்டம் என்ற பெயரில் வந்து படு தோல்வியை தழுவியது.

ஆனால், வேதாளர் ஆங்கிலத்தில் தொடர்ந்து சக்கை போடு போட்டுக் கொண்டுதான் இருந்தார். தொண்ணுறுகளில் டைமண்ட் காமிக்சிலும், இரண்டாயிரத்தில் எக்மாண்ட் வெளியீடுகளிலும் வந்து வெற்றி பெற்றார். ஏன், இப்போதும்கூட இந்த வேதாளர் கதைகள் ஆறு கதைகளை கொண்ட பெரிய கலெக்டர்ஸ் எடிஷனாக விற்பனையாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

 

டைமண்ட் காமிக்ஸ் - முதல் வேதாளர் கதை

எக்மாண்ட் காமிக்ஸ் - முதல் வேதாளர் கதை

DiamondComics1stPhantomJune19903 TheIndianExpressEgmontPhantom1200010

இதுவரையில் வேதாளரை பற்றி ஒரு தொலைக்காட்சி படமும், ஒரு சினிமா படமும் எடுக்கப்பட்டு உள்ளன. அவற்றை பற்றி தெரிந்து கொள்ள நண்பர் காமிக்ஸ் பிரியரின் பதிவுக்கு செல்லுங்கள்.

 

முதல் வேதாளர் தொலைக்காட்சி படம் 1943

முதல் வேதாளர் சினிமா படம் 1996

ThePhantom1943SerialOriginalDVDCover The Phantom 1996 Film

காமிக்ஸ் பிரியரின் வேதாளர் பதிவு

நண்பர் புலா சுலாகி அவர்கள் வேதாளர் கதைகளை முழுவதுமாக வழங்கி உள்ளார். அவற்றை படிக்க கீழ்கண்ட லிங்க்குகளை கிளிக் செய்யவும்.

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன், 
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Tuesday, February 16, 2010

மோட்டார் சைக்கிள் சாம்பியன் வேலன்டினோ ரோஸ்சி

அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். சென்ற பதிவில் வந்து வருகை தந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. குறிப்பாக கமென்ட் இட்ட அந்த புண்ணியவான்கள் வாழ்க (முதல் மற்றும் கடைசி நபர்களை தவிர்த்து).

இன்று பிப்ரவரி மாதம் பதினாறாம் நாள். என்னடா இவன் மார்ச் பதினைந்தாம் தேதி போல இது ஏதாவது ஸ்பெஷலான நாளா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. (அது சரி, மார்ச் பதினைந்தாம் தேதி என்ன ஸ்பெஷல் என்று தெரியாதவர்கள் பின்னூட்டம் செய்க - பதில் தரப்படும்).இன்றுதான் என்னுடைய மனம் கவர்ந்த மோட்டார் சைக்கிள் சாம்பியன் வேலன்டினோ ரோஸ்சி அவர்களின் பிறந்த நாள். ஐவரும் நான் பிறந்த வருடமே பிறந்து இருப்பது மற்றுமொரு சிறப்பு. நான் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்த நாள் முதலே பைக் ஓட்ட வேண்டும் என்பது ஆசை. (பைக் ஓட்ட ஆரம்பித்த பிறகு கார் ஓட்ட ஆசைப்பட்டது வேறொரு கதை-அது அப்படியே தொடர்கதையாக போகிறது - இப்போதும் கூட).

இதற்க்கு பிறகுதான் தமிழ் காமிக்ஸில் வந்த பைக் மற்றும் பைக் சார்ந்த கதைகளை பற்றிய ஒருvalentino-rossi-photo பதிவிடும் எண்ணமே வந்தது. அதன் பலனே இதோ இந்த பதிவு. இப்படி ஒரு பதிவே இடும் அளவுக்கு அவர் என்ன பெரிய சாம்பியனா என்றும் சிலர் கேட்கலாம், தவறில்லை. இந்தியாவில் இன்னமும் கூட ரேசிங் என்பது பிரபலம் அடையவில்லை.தல அஜித் குமார் கார் ஓட்டினால் தான் கார் ரேசிங் பற்றியே பேசப்படுகிறது. என்ன கொடுமை சார் இது? நம்முடைய சச்சின் டெண்டுல்கர் அப்படி கிரிக்கெட்டில் பெரிய ஆளோ, ரோஜர் பெடரர் எப்படி டென்னிஸ் ஆட்டதிலோ,  அப்படி தான் இவர் பைக் ரேசிங்கில்.

சரி, நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி ஆகி விட்டது அல்லவா? அதனால் வழக்கம் போல பைக் ரேசிங் அல்லது டூ-வீலர் சம்பந்தப்பட்ட காமிக்ஸ் கதைகள் இதோ:

முத்து காமிக்ஸ் - வைரஸ் எக்ஸ்

முத்து காமிக்ஸ் - சிங்கத்திர்கொரு  சவால்

முத்து காமிக்ஸ்-மரண மச்சம்

Muthu Comics No 46 Agent X9 Phil Corrigan Virus X Singathirkoru Saval Muthu_Comics_Issue_No_189_Marana_MACHCHAM

வைரஸ் எக்ஸ்-இந்த கதையை பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டுமெனில் நீங்கள் இன்னமும் காமிக்ஸ் பல்கலை கழகத்தில் ஒரு மாணவனே. ஆம், ஆசிரியர் விஜயனின் டாப் டென் கதைகளில் ஒன்றான இதனை பற்றி நம்முடைய அன்பிற்கு பாத்திரமான திரு முத்து விசிறி அவர்களின் முழு நீள பதிவு இங்கே உள்ளது.  இந்த கதையை முதலில் வெளியிட்டவர்கள் மாலைமதி காமிக்ஸ் AFI நிறுவனத்தினர். இந்த கதையின் ஆங்கில பதிப்பினை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

சிங்கத்திர்கொரு  சவால் - நம்முடைய மனம் கவர்ந்த நாயகன் ஜானி ஹசார்ட் (முத்துவில் ஜார்ஜ், ராணியில் ஜானி) தோன்றும் ஒரு அசலான பைக் ரேசிங் கதை. இதனை பற்றி விரிவாக வேறொரு நாளில் நம்முடைய கிங் விஸ்வ பதிவிட போவதால் இதற்க்கு மேலும் ஒன்றும் சொல்லப்போவதில்லை. ஆனால், மிஸ் செய்யக் கூடாத கதைகளில் இதுவும் ஒன்று.

மரண மச்சம் - மறுபடியும் ஜானி ஹசார்ட் தோன்றும் மற்றுமொரு கதை. இதன் முடிவினில் ஜானி பைக் ஒட்டி சென்று தப்பிப்பார். அதனால் தான் அட்டையில் இந்த மூன்று கார் பைக் வந்து உள்ளது. இந்த அட்டையின் கதையை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

மினி லயன் - மரண சர்க்கஸ்

மினி லயன்-கருப்பு பாதிரி மர்மம்

காமிக்ஸ் கிளாசிக்ஸ்- மர்ம தீவு

Mini_Lion_Issue_No_2_Marana_Circus_Cover_thumb[1] Mini_Lion_Issue_No_4_Karuppu_Paathiri_Marmam_Cover_thumb[2] CC 12-2

மரண சர்க்கஸ்-மினி லயனில் வந்த இரண்டாவது கதை இதுதான். இந்த கதை ஒரு நடைமுறை கதை ஆகும், சூப்பர் ஹீரோக்களோ அல்லது துப்பறியும் கதைகளோ நிறைந்த அந்த நாட்களில் இது போன்ற கதைகள் ஒரு மாற்றத்தை தந்தது. மினி லயன் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

கருப்பு பாதிரி மர்மம்-லயன் காமிக்ஸில் இரட்டை வேட்டையர்கள் வந்து கலக்கி கொண்டு இருந்த நேரத்தில் இந்த புயல் வேக ரெட்டையர்கள்  மினி லயனில் தோன்றினார்கள். மொத்தமே ரெண்டே ரெண்டு கதைகளில் வந்து இருந்தாலும் கூட அவர்களை இன்னமும் என்னால் மறக்க இயலவில்லை. ஐயா கிங் விஸ்வா, இவர்களை பற்றிய ஒரு முழு நீள பதிவினை இடுமாறு உங்களை வேண்டிக் கொள்கிறேன், வழக்கம் போல முத்து விசிறி அவர்களிடம் இந்த கதைகளும் ஒரிஜினலும் இருக்குமல்லவா?

மர்ம தீவு-ஆரம்ப காலத்தில் லயன் காமிக்ஸில் வந்த (இரண்டு வண்ணங்களில்) கதையை காமிக்ஸ் கிளாசிக்சில் ரீபிரின்ட் செய்யும்போது இந்த அட்டைப்படத்தை உபயோகித்தனர். ஆர்ச்சி பைக் ஓட்டுவது சூப்பர் ஆக இல்லை?  இதனைப் போலவே ஸ்பைடர் மற்றும் இரும்புக் கை மாயாவியும் பைக் ஓட்டினால் எப்படி இருக்கும்?

     
MuthuComics178SingathinGuhaiyil1 Muthu Comics Issue No 302 Marana Oppandam Thihil49KolaikaaraKomali_thumb1

சிங்கத்தின் குகையில்-என்னால் மறக்கவே இயலாத ஒரு காமிக்ஸ் கதை. தமிழ் காமிக்ஸில் வந்த தலை சிறந்த கதாபாத்திரங்கள் பற்றி யாராவது (வேறு யார்? நம்ம கிங் விஸ்வா'தான்) பதிவிடும்போது இதனை மறக்கவே முடியாது. ஆனால் இந்த அட்டைப்படத்திற்கும் கதைக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது. இருந்தாலும் ஒன்றுக்கு மூன்று பைக்குகள் இருப்பதால் இந்த அட்டைப்படம் இங்கு வந்துள்ளது. மன்னிக்கவும்.

மரண ஒப்பந்தம்-முத்து காமிக்ஸில் கடந்த சில வருடங்களில் வந்த அட்டைப்படங்களில் ஒரு சிறந்த அட்டைப்படம் இது என்பது பலரின் கருத்து. எனக்கு அதில் உடன்பாடில்லை. இருந்தாலும் ஒரு மசாலா கதைக்கு இந்த மாதிரி மசாலா அட்டைப்படமே சரிப்பட்டு வரும்.

கொலைகார கோமாளி-இந்த கதை திகில் காமிக்ஸில் வந்த ஒரு கருப்பு கிழவி கதைக்கானது ஆகும். அந்த கதையை படிக்க இங்கே செல்லவும்.

 

ஜேம்ஸ் பாண்ட்-அதிரடி உளவாளி

ராணி காமிக்ஸ்-மர்ம ரோஜா

ராணி காமிக்ஸ்-மரண தண்டனை

James Bond Comics 01 Adhiradi Ulavali Rani Comics Marma Roja MaranaDhandanaiIssueNo62Jan1619872

அதிரடி உளவாளி-ஜேம்ஸ் பாண்ட் காமிக்ஸ் ஆரம்பித்து சிறப்பாக நடத்திய ஆசிரியர் ராமஜெயத்தின் முதல் இதழ் இது தான். நம்ம விஸ்வா'வின் நண்பர் தான் இதன் பதிப்பாளர். இந்த இதழின் ஒரிஜினல் ஆபிஸ் காபி புத்தகங்களை இன்னமும் கூட விஸ்வா வைத்துள்ளார் என்பது சிறப்பு அம்சம். இதனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள, இங்கு செல்லவும். - தமிழ் காமிக்ஸ் உலகம்.

மர்ம ரோஜா-ராணி காமிக்ஸில் ஆசிரியர் ராமஜெயத்தின் கடைசி இடழ் இதுதான். இந்த புத்தகத்தில் மொத்தம் மூன்று கதைகள் இருக்கும். இரண்டாவது கதை தான் நம்ம சூப்பர் ஹீரோ டைகர் தோன்றிய கடைசி கதை - ஆம், அதில்தான் பாட்ஷா கைது செய்யப்படுவார். நினைவு இருக்கிறதா?

மரண தண்டனை-இந்த கதையில் பைக் வரவே வராது. அட்டையில் கூட இன்ஸ்பெக்டர் ஆசாத் பைக்கில் இருந்து இறங்கிக் கொண்டுதான் இருப்பார். நான் கேட்ட சில பல அட்டைப்படங்களை நண்பர்கள் என்றழைக்கப்படும் சில துரோகிகள் தராததால் இந்த அட்டைப்படங்களை எல்லாம் போட்டு ஒப்பேற்ற வேண்டி இருக்கிறது. வேறென்ன செய்ய?

அசோக் காமிக்ஸ்-ரகசிய எதிரி

முத்து காமிக்ஸ்-விசித்திர கொள்ளையர்

Ashok Comics Issue No 29 Ragasiya Edhiri Muthu Comics 217 Visithira Kollaiyar

ரகசிய எதிரி-தமிழ் காமிக்ஸில் வந்த முதல் மட்டும் முழுதான பைக்கர் ஹீரோ யாரென்றால் அது நம்ம ஜேசன் வைல்ட் தான். பெயர்க்கு ஏற்றார்ப் போலவே வைல்ட் ஆகவே வண்டி ஓட்டுவார். இதே வரிசையில் வந்த ஜான் சில்வர் ஒரு விமான பைலட் - அவருக்கு ஏற்படும் அனுபவங்கள் சிறப்பான ஒரு கதை வரிசையை ஏற்படுத்தியதால் அதனை தொடர்ந்து அந்த ஆசிரியர்கள் இந்த பைக்கர் ஹீரோவை உருவாக்கினர். என்ன துரதிர்ஷ்டம் என்றால் இவரின் கதைகள் தமிழில் மொத்தமே மூன்று முறை தான் வந்து இருக்கிறது. இறந்து முறை அசோக் காமிக்ஸில். மூன்றாவது கதை எந்த காமிக்ஸில் வந்தது என்று சொல்வோருக்கு சிறப்பு பரிசு உண்டு.

விசித்திர கொள்ளையர்-இந்த அட்டைப்படத்தை நான் கடைசியாக போட்டதற்கு ஒரு காரணம் உண்டு. ஆம், கதையில் கூட இந்த காட்சி கடைசியில் தான் வரும். இந்த ஜோடி தப்பிக்கும்போது பைக்கை உபயோகிப்பார்கள். அது ஒரு சிறப்பான பைக் ஆகும்.

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன், 
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Monday, February 15, 2010

பறக்கும் தட்டு - கண்டுபிடிப்பாளர் மரணம்

அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். சென்றவாரம் நான் செய்தித் தாளில் படித்த ஒரு தகவலே இந்த பதிவுக்கு மூல காரணம். ஆம், நானும் நம்முடய மருத்துவர் ஐயா போலவே பதிவுகளை இட ஆரம்பித்து விட்டேன். அதன் விளைவே இந்த பதிவு இப்போது உங்கள் பார்வையில்.

நம்மில் அனைவருமே சிறுவயதில் பிரிஸ்பீ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பறக்கும் தட்டினை கொண்டு விளையாடி இருப்போம். கிராமத்தில் இருந்த சிறுவர்கள் கூட எண்பதுகளில் இந்த பறக்கும் தட்டினை வைத்து விளையாடி மகிழ்ந்த காலம் உண்டு. அந்த பறக்கும் தட்டினை கண்டுபிடித்த வால்டர் மோரிசன் என்ற அமெரிக்கர் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று மரணம் அடைந்தார்.இதோ அவரைப் பற்றிய தகவலும் புகைப்படமும்.

Frisbee Inventor

காமிக்ஸ் இதழ்களில் பல பறக்கும் தட்டு கதைகள் வந்து இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த கதை இதோ - ஓவியர் மாலியின் கைவண்ணத்தில் பறக்கும் தட்டு பார்க்க ஏதோ ஒரு லட்டு போல இருக்கும். 007 ஜேம்ஸ் பாண்ட் கூட பார்க்க ஹிந்தி நடிகர் ராஜ் பாப்பர் போல காட்சி அளிப்பார்.

ஸ்வீடன் நாட்டில் இருந்து வெளிவந்த செமிக் என்ற பதிப்பகத்தார் வெளியிட்ட ஜேம்ஸ் பாண்ட் கதைகளை ஆசிரியர் திரு ராமஜயம் அவர்கள் முதன்முதலில் வெளியிட்டார். அதன் பின்னர் ராணி காமிக்ஸ் நிறுவனமும் தங்களின் ராணி சிண்டிகேட் மூலம் ராணி காமிக்ஸில் அந்த நாட்டு கதைகளை வெளியிட ஆரம்பித்தனர். அவற்றில் ஒன்றுதான் இந்த கதை.

Paadhi Iravil oru parakkum Thattu

சரி, வெறும் இந்த அட்டைப்படத்தை மட்டும் போடவேண்டாம், வேறு ஏதாவது தகவல் இருந்தால் அளிக்கலாம் என்று எண்ணி கூகுல் இமேஜசில் சென்று பறக்கும் தட்டு" என்று டைப் செய்து தேடித் பார்த்தால், நம்ம கிங் விஸ்வாவின் பறக்கும் குண்டு பதிவின் லிங்க் வருகிறது. என்ன கொடுமை சார் இது?

Parakkum Gundu

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன், 
ஒலக காமிக்ஸ் ரசிகன்

Related Posts with Thumbnails