Thursday, March 18, 2010

தெலுகு வருட பிறப்பு - உகாதி சிறப்பு பதிவு

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். நேற்று முன்தினம் தெலுகு வருடப்பிறப்பு ஆகும். இதனை தெலுங்கில் உகாதி என்று கூறுவார்கள்.

எனக்கு தெலுகில் மிகவும் பிடித்த ஹீரோவாகிய நடிகர் பாலக்ருஷ்ணா அவர்கள் வழக்கம் போல பல போலிகளை போளிகளை தின்று தீர்த்து விட்டு கொட்டாவி விட்டவாறே வீட்டில் தூங்கி பொழுதை கழித்தாராம். அதனால் போலி என்று வரும் காமிக்ஸ் கதைகளை கூட பதிவிடலாமே என்று நான் நினைத்தேன். ஆனால் அவாறு செய்தால் அது ரொம்ப ஓவராகிவிடும் என்பதால் இதோ தெலுகில் வந்த சிலபல மர்ம நாவல்களின் அட்டைப்படங்கள் உங்களின் பார்வைக்கு: 

6th Dead Lock - Panuganti Zero Hunter - Panuganti Yodhodu - Suryadevara
100 Reasons for 1 Death Oke Hathyaku 100 Karanalu A Minute in Hell - Madhu Baabu A Profession of Violence - Shri Bhayankar
A Quick Death Afgon Dragon - NagiReddi Angry Bullet - Panuganti
athanu - MadhuBaabu Big Play - Koppi Setti Casanova 99
Dazzling Spark Death is After You Mrithuvu Tarumukosthondhi - Girija Shri Bagavan Fight With Fast Devils - Panuganti
Horror of Darkness Good Bye to Bornia - Panuganti Lone Wolf - MadhuBaabu
My Dear Bullet Maraniki Maro Margam - Girija Shri Bagavan Mrithyu Geetham - Girija Shri Bagavan
No 444 - Kommuri Sambasivarao Personal Revenge - Kala Sagar Secret Device - Girija Shri Bagavan
Urishiksha Neeku Jejelu - Girija Shri Bagavan The Brainwashers - Madhu Baabu Shadow in Bhagdhad
Violence Web of Death Wrong Signal - Panuganti

இந்த புத்தகங்களை நீங்கள் படிக்கவிரும்பினால், இந்த சுட்டியை உபயோகப்படுத்தி டவுன்லோட் செய்துக் கொள்ளவும். தெலுகு உங்களுக்கு தெலுசா?  Download

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு பார்த்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா?உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன், 
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Tuesday, March 16, 2010

உலக தொடர்பு நாள் - சிறப்பு பதிவு

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.

நேற்று உலக தொடர்பு நாள். அதாவது World Contact Day ஆகும். நமக்கெல்லாம் புரியும்படி சொல்வதென்றால் நமது பூமியை தவிர அண்டவெளியில் உள்ள பல கிரகங்களிலும் உயிரினங்கள் வசிப்பதாகவும் அவற்றுடன் தொடர்பு கொள்ளும் நாளாக இது கருதப்படுகிறது. மேலும் இது குறித்து தெரிந்து கொள்ள இந்த விக்கிபீடியா சுட்டியை பயன்படுத்தவும். Wikipedia

இந்த மாதிரி அயல் கிரக தொடர்பு கதைகள் முழுவதும் சைன்ஸ் பிக்ஷன் / பேண்டசி வகையை சேர்ந்தவை என்பதால் அந்த துரையின் தலை சிறந்த ஹீரோவாகிய இரும்புக் கை மாயாவியின் கதைகளில் வந்த அயல் கிரகவாசிகளின் கதைகளை பற்றி இங்கு காண்போம்.

மாயாவி ஆரம்பமே அமர்களமாக தான் ஆரம்பித்தார். ஆம், இந்த இயந்திரத் தலை மனிதர்கள் நம்முடைய எடிட்டர் விஜயன் சாரின் டாப் டென் கதைகளில் ஒன்றாகும். சுருக்கமாக சொல்வதென்றால், இது ஒரு பக்க கமர்ஷியல் படம், நம்ம "தமிழ்நாட்டு டாரண்டினோ" பேரரசு-இளைய தளபதி விஜய் கூட்டணியில் வரும் மசாலா தமிழ் படம் போல.

இரும்புக் கை மாயாவி - முத்து காமிக்ஸ் - இயந்திரத் தலை மனிதர்கள்  இரும்புக் கை மாயாவி - முத்து காமிக்ஸ் - விண்வெளி ஒற்றர்கள்
022 Iyanthira Thalai Manitharkal 125 Vinveli Otrarkal

அதன் பிறகும் சில பல வேளைகளில் மாயாவி (போரடிக்கும் போதெல்லாம்?) ஏதாவது ஒரு அயல் கிரக வில்லன்களுடன் மோதுவார். இந்த கதைகள் எல்லாம் ஆங்கிலத்தில் ஏதாவது ஆண்டுமலரிலோ, அல்லது வேறு ஸ்பெஷல் இதழிலோ ஒரு சிறு கதையாக வந்து இருக்கும். அதனால், இதோ, அப்படி வந்த ஒரு கதை - விண்வெளி ஒற்றர்கள்.

ஆனால், அடுத்து வந்த தவளை மனிதர்கள் அப்படி பட்ட கதை அல்ல. இது ஒரு முழு நீல கதை ஆகும். மாயாவியின் கதைகளில் இது ஒரு சிறப்பான மற்றும் முக்கியமான கதை ஆகும். ஏனெனில் இந்த கதையில் தான் மாயாவி மின்சாரத்தை கடத்தும் ஆற்றலை பெறுகிறார். அதன் மூலம் அதனை ஒரு ஆயுதமாகவே பின்னாளில் பயன் படுத்தவும் செய்கிறார்.

இரும்புக்கை மாயாவி - முத்து காமிக்ஸ் - தவளை மனிதர்கள்  இரும்புக்கை மாயாவி - முத்து காமிக்ஸ் - விண்வெளி விபத்து 
MuthuComics132ThavalaiManidhargal_th Muthu Comics Steel Claw Vinveli Vibathu Cover[3]

அடுத்து வந்த விண்வெளி விபத்து கதை தான் பின்னாளில் ஹாலிவுட்டில் சுடப்பட்டு ஸ்பீசிஸ் என்ற பெயரில் வந்தது. ஆமாம், விண்வெளியில் இருந்து திரும்பும் ஒரு விண்வெளி வீரரின் உடலில் வேற்று கிரக சக்தி ஒன்று புகுந்துக் கொண்டு அட்டுழியம் செய்வதை மாயாவி எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை.

விண்வெளி கொள்ளையர் கதை சமீபத்தில் தான் காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழில் வந்தது. அதனால் அதனைப் பற்றி பெரிய அளவில் சொல்ல வேண்டி இருக்காது. மேல் விவரங்களுக்கு அகோதீக தலைவரின் இந்த பதிவினை கவனிக்கவும்.

இரும்புக்கை மாயாவி - முத்து காமிக்ஸ் - விண்வெளி கொள்ளையர் இரும்புக்கை மாயாவி - முத்து காமிக்ஸ் - மாயாவிக்கொரு சவால்
MuthuComicsNo.144VinvelikKollaiyarCo[2] 170 Maayavikkoru Savaal

மாயாவிக்கொரு சவால் கதையை மிகவும் சிறப்பாக விளம்பரப்படுத்திருப்பார்கள். நானும் அதனை நம்பி வாங்கினேன், தவறில்லை. ஆனால், கதை வெறும் பதினாறு பக்கம்தான். மீதம் இறுக்கம் நூற்றி முப்பது பக்கங்களுக்கு மற்றுமொரு ஹீரோவின் கதையை வெளியிட்டு விட்டார் ஆசிரியர்.

அடுத்து வந்த சைத்தான் சிறுவர்கள் கதை காமிக்ஸ் உலகில் ஒரு மைல் கல் என்று கூட சொல்லலாம். ஏனெனில், இதன் பதிப்பிற்கு பின்னல் ஒரு பெரிய கதையே உள்ளது. அதாவது, எண்பதுகளில் இந்த கதையை கேட்டு ஆசிரியர் இங்கிலாந்தில் இருக்கும் உரிமை நிறுவனத்திற்கு கடிதம் எழுதினர். அவர்களும் ஒப்புக் கொண்டு விட்டனர். அதனை தொடர்ந்து ஆசிரியரும் விளம்பரங்களை வெளியிடலானார். ஆனால், அந்தோ பரிதாபம், குறித்த நேரத்தில் கதையின் இரண்டாம் பாகமே வந்து சேர்ந்தது. முதல் பாகத்தை கேட்டு தந்தி அடித்தால் - அதை விட கொடுமை - ஆம், அந்த உரிமை நிறுவனமே தண்ணீரில் மூழ்கி விட்டதாம். அதனால் உடனடியாக அனுப்ப இயலாது என்றும் கூறிவிட்டனர். 

வேறு வழி இல்லாத ஆசிரியர் முதல் பகுதியை சற்று ஒப்பேற்றி கதையை வெளியிட்டார். அதில் தான் அவரின் முழு திறமையும் இருக்கிறது. ஆம், அந்த கதை ஒரு ஒப்பேற்றப்பட்ட ஆரம்பம் என்பது சமீப காலம் வரை (அதாவது ஆங்கில ஒரிஜினலை நான் காணும் வரை) யாருக்கும் தெரியாமலே இருந்து வந்தது. பின்னர் அந்த கதையை தான் ஆசிரியர் நூறு ருபாய் ஸ்பெஷல் இதழில் வெளியிட்டார்.

இரும்புக்கை மாயாவி - முத்து காமிக்ஸ் - சைத்தான் சிறுவர்கள் இரும்புக்கை மாயாவி - முத்து காமிக்ஸ் -இயந்திரத் தலை மனிதர்கள் 
Muthu172SaithaanSiruvargal4 Muthu Comics iyandhirathalai manidhargal

அடுத்து வந்தவை பெரும்பாலும் மறுபதிப்புகளே. ஆனாலும் சிறப்பான அளவில் விற்பனை ஆன புத்தகங்கள் இவை. இயந்திரத் தலை மனிதர்களும் தவளை மனிதர்களும் அந்த வரிசையில் சேரும்.

   
239 Thavalai Manithargal New_CC Cover 04 iyandhirathalai manidhargal

சரி, போதும் மொக்கை போட்டது என்று பதிவினை முடிக்க நினைத்தால் நேற்று ஒரு சம்பவம் நடந்தது. அதாவது நமது பெங்களூரு விண்வெளி மையத்தில் தாக்குதல் என்பது தான் அந்த தகவல். இதோ, அந்த தகவலுக்கான சுட்டி: Maalaimalar

Malaimalar news headlines

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன், 
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Sunday, March 14, 2010

தமிழ் காமிக்ஸில் விபத்துகள்

அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.இரண்டு தினங்களுக்கு முன்பு (ப்ரைடே த டுவல்த் – Friday The Twelfth) நான் என்னுடைய வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது ஒரு டிரங்கன் மன்க் என்னுடைய வாகனத்தின் மீது மோதி, மோதி விளையடிட்ட்டான்.

அது என்னமோ தெரியலீங்க, எப்பவுமே தப்பு செய்றவந்தான் ஈசியா தப்பிச்சுடுறான். நம்மள மாதிரி ஆட்கள் எல்லாருமே பாதிக்கப்படுறோம். ஆம், சாலை விதிகளை சரியாக கடைபிடிக்கும் (அதாவது, சைக்கிள் ஒட்டும்போதே சீட்பெல்ட் இல்லியான்னு கேட்டவன் நான்) என்னைமாதிரி ஆட்கள் தான் அதிகம் விபத்தினால் பாதிக்கப்படுகிறார்கள்.

அதனால வழக்கம் போல இந்த தடவையும் எதிரில் வந்த டிரங்கன் மன்க்குக்கு எந்த (பெரிய அளவில்) பாதிப்பும் இல்லை - உடலுக்கும் , வாகனத்திற்கும். ஆனால், சரியானபடி வாகனத்தை ஓட்டிவந்த எனக்கோ, உடலிலும், வாகனத்திலும் மோசமான காயங்கள். அந்த வாகனத்தி இனிமேல் உபயோகப்படுத்தவே முடியாதாம். கையிலோ "ஆய்த எழுத்து" சூர்யா மாதிரி ஒரு பெரிய தொட்டில். பதினைந்து நாட்கள் பெட் ரெஸ்டாம். என்ன கொடுமை சார் இது?

இது கூட பரவாயில்லை, ஒத்தை கையால் டைப்பிங் கூட பண்ண முடியவில்லை. இந்த பதிவையே இரண்டு நாட்களாக டைப் செய்துக் கொண்டு இருக்கிறேன். இந்த நிலையில் என்னுடைய சக பதிவராகிய கிங் விஸ்வா, என்னுடைய நிலையை பார்த்தது "சரி விடுங்க பாஸ், பேசாம இரும்புக்கை மாயாவி மாதிரி உங்களுக்கும் ஒரு இரும்புக்கை வச்சுடலாம்" என்று கூசாமல் சொல்கிறார்.

இது கூட பரவாயில்ல, நண்பர் ஐய்யம்பாளயத்தார் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல "இந்த முறை இரும்புக்கையில் பல புது விதமான ஐட்டங்களை கூட சேர்த்து வைக்கலாம், உதாரணமாக செல்போன் சார்ஜர், நெயில் கட்டார், கி செயின் ஹாங்கர்" என்று அடுக்கிக் கொண்டே போகிறார். 

டாக்டர் செவனோ, "லேட்டஸ்ட் காமிக்ஸ் கிளாசிக்ஸ் இரும்புக்கை மாயாவி கதையாகிய விண்வெளிக் கொள்ளையர் கதையில் வருவதைப் போல நியுக்ளியர் நர்ஸ் மூலம் உங்களை குணப்படுத்தலாம், ஆனால் உங்களை நம்பி எப்படி ஒரு நர்சை தனியாக அனுப்புவது?" என்று கிண்டலாக கேட்கிறார்.

இதனால் மனம் நொந்த நான், வழக்கம் போல இந்த சந்தர்ப்பத்தையும் கூட பயன்படுத்திக் கொண்டு ஒரு காமிக்ஸ் பதிவிட்டால் என்ன என்று நினைத்து இதுவரை தமிழ் காமிக்ஸில் வந்த விபத்து சம்பந்தமான அட்டைப்படங்களை உங்களின் பார்வைக்கு சமர்பிக்கிறேன்.

முத்து காமிக்ஸ் - இரும்புக்கை மாயாவி - விண்வெளி விபத்து - என்ன கொடுமை சார்? விபத்துன்னா மாயாவியா?

Muthu Comics Steel Claw Vinveli Vibathu Cover

விபத்துன்னா மாயாவியா? என்ற கேள்வி சரிதானே? ஏனென்றால் மாயாவி உருவானதே ஆய்வுக் கூடத்தில் நடந்த ஒரு விபத்து மூலமாகத்தானே?  அதனால் அவரின் கதையின் அட்டைப்படத்தை வெளியிடுவதில் தவறில்லையே?

முத்து காமிக்ஸ் - தீ விபத்தில் திரைப்பட சுருள் – அட்டைப்படம் – One of the Best ever Covers
Muthu Comics 066 Theevibathil Thiraipada Surul Cover

இந்த கதை ஒரு கிளாசிக் கதை ஆகும். இந்த புத்தகத்தை நான் சமீபத்தில் ஒரு பழைய புத்தக கடையில் வாங்கினேன் (திருச்சியில் இல்லை). அந்த கடைகாரர் பயங்கர புத்திசாலி போல. அட்டைப்படத்தில் உள்ள விலை குறித்த பகுதியை கிழித்து விட்டால் விலை தெரியாதாம். மக்களே, உங்களில் யாருக்காவது பழைய புத்தக கடைக்காரர் நண்பர்களாக இருந்தால் சொல்லுங்கள் - தயவு செய்து அட்டையில் விலை உள்ள பகுதியை கிழிக்க வேண்டாம் என்று.

முத்து காமிக்ஸ் - இரும்புக் கை மாயாவி - விபத்தில் சிக்கிய விமானம்

Muthu Comics Steel Claw Vibathil Sikkiya Vimanam Cover

விபத்தில் சிக்கிய விமானம் ஒரு மாயாவியின் சிறுகதை ஆகும். இந்த கதையை ஆங்கிலத்தில் டவுன்லோட் செய்ய கீழ்க்காணும் சுட்டியை பயன்படுத்தவும். அந்த சுட்டியில் நியுயார்க்கில் மாயாவியும் இருக்கும், ஆனால் என்ன ஆங்கிலத்தில், கலரில் இருக்கும். Rapidshare

ராணி காமிக்ஸ் - சூப்பர் ஹீரோ டைகர் - மர்ம விபத்து
Rani Comics Issue No 43 Dated 1st April 1986 Marma Vibathu

அடுத்ததாக நம்ம எல்லோருக்கும் பேவரிட் ஆன ராணி காமிக்ஸ் ஹீரோ, மன்னிக்கவும் சூப்பர் ஹீரோ டைகர் அவர்களின் கதை ஒன்று. மர்ம விபத்து. டைகரிடம் எனக்கு பிடித்த ஒன்று அவரின் வசனம் - டொட்ட டாங். சமீபத்தில் நம்ம இயக்குனர் சரணின் படமாகிய அசல் (அஜித் நடித்தது) படக்த்தில் ஒரு பாடல் கூட இந்த வசனத்தை மைய்யமாக கொண்டே இருக்கும்.

அந்த படத்தின் பாடலை எழுதிய கவிஞர் இந்த காமிக்ஸ் ஹீரோவின் வாசகரோ? Who knows.விபத்து, விபத்துன்னு சொல்லிட்டு விபத்து உள்ள ஒரு அட்டைப்படத்தி மிஸ் பண்ணால் எப்படி? அதனால் இதோ ராணி காமிக்ஸில் வந்த மர்ம ரோஜா அட்டைப்படத்தின் ஸ்கான். இந்த படத்தில் உள்ள விபத்தினை பாருங்கள்.
 
ராணி காமிக்ஸ் - சீக்ரெட் ஏஜென்ட் 007 ஜேம்ஸ்பாண்ட் -  மர்ம ரோஜா
Rani Comics Issue No 92 Marma Roja

கடைசியாக முடிக்கும் முன்பு வாசகர்களுக்கு ஒரு போட்டி: நம்ம நண்பர்கள் சொன்னது போல இரும்புக் கை மாயாவி இப்போதைய உலகில் இருந்தால் அவரது இரும்புக் கையில் வழக்கமான ஆயுதங்கள் தவிர வேறென்ன புதிய உபகரணங்களை மேற்கொள்ளலாம் என்பதை ஏன் நீங்கள் பின்னூட்டம் மூலம் தெரிவிக்கக் கூடாது? சிறந்த பின்னூட்டத்திற்கு பரிசும் உண்டு.

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன், 
ஒலக காமிக்ஸ் ரசிகன்

Related Posts with Thumbnails