அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கத்தையும் தெரிவித்து கொள்ளுகிறேன். கோமாவில் இருந்து விழித்த நோயாளி போல, நெடுநாள் தூக்கத்தில் இருந்த நான் தற்போதுதான் பதிவிட ஆரம்பித்து உள்ளேன். ஆகையால் முதல் பதிவு, ஒரு தகவல் பதிவுதான்.
சென்னையில் காமிக்ஸ் புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று நண்பர்கள் பலரும் கேட்டு வருகின்றனர். அவர்களுக்காகவே இந்த பதிவு. லயன் முத்து காமிக்ஸ் இதழ்கள் சென்னை DMS வளாக பஸ் ஸ்டாப்பில் அமைந்துள்ள ஓலைச்சுவடி புத்தக நிலையத்தில் கிடைக்கும்.
இந்த ஆண்டு வெளியான அனைத்து காமிக்ஸ் இதழ்களும் இங்கே கிடைக்கும். மற்றுமொரு முக்கியமான விஷயம் இந்த கடையில் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் குறைந்தபட்சம் 10% Discount உண்டு. முகவரியும் போன் நம்பரும் போட்டோவில் காண்க:
Feb 2015: Books
1. சைத்தான் விஞ்ஞானி (ஸ்பைடர்) 50/-
2. ஆதலினால் காதல் கொள்ளாதீர் (வாய்ன் ஷெல்டன்) 60/-
3. அம்பின் பாதையில் (XIII இரத்தப்படலம்) 120/-
இதைத்தவிர மறு பதிப்புகளாக,
1. லார்கோ வின்ச் (100/-)
2. தங்க கல்லரை (100/-) கேப்டன் டைகர்
3. டபுள் த்ரில் ஸ்பெஷல் (100/-)
இதுபோக ஜனவரி மாத இதழ்கள் அனைத்துமே கிடைக்கும்.
Contact: +91 94 88 576166
உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?
நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.
Welcome Back, GEC.
ReplyDeleteவணக்கங்கள் முகம் தெரியா நண்பரே,
ReplyDeleteசரியாக இரண்டு வருடங்கள் பின் மறுபிரவேசம்...!
//என்னுடைய வலைப்பூவை நீங்கள் படிக்கவில்லையெனில், படித்தவுடன் உங்களின் எண்ணங்களை தெரிவிக்கவில்லை எனில் உங்களிடம் அடிப்படையாகவே ஏதோ தவறு உள்ளது//
மிக சரி, இது எங்களுக்கு...!
" இனி நீங்கள் உங்களுடைய வலைப்பூவை தொடரவில்லையெனில், படித்த உங்களின் எண்ணங்களை பதிவாக தெரிவிக்கவில்லைஎனில் உங்களிடம் அடிப்படையாகவே ஏதோ தவறு உள்ளது...!"
இது உங்களுக்கு நண்பரே..ஹா...ஹா....அன்புக்கூர்ந்து தொடருங்கள் ...!
எனதருமை காமிக் நண்பர்களே,
ReplyDeleteஇடையில் அயர்ந்து இருந்த சில காமிக் வலைப்பூக்கள் மறுபடியும் பூக்க ஆரம்பித்து இருக்கின்றன. உங்களின் கவனத்துக்கு:
பயங்கரவாதி டாக்டர் செவனின் அகொதீக: இங்கே கிளிக்
முத்து விசிறியின் காமிக்ஸ் வலைப்பூ: இங்கே கிளிக்
ஒலக காமிக்ஸ் ரசிகரின் தளம்: இங்கே கிளிக்
பால கணேஷின் மேய்ச்சல் மைதானம்: இங்கே கிளிக்
கிங் விஸ்வாவின் தமிழ் காமிக்ஸ் உலகம்: இங்கே கிளிக்
கிங் விஸ்வாவின் தமிழ் காமிக்ஸ் உலகம் 2: இங்கே கிளிக்
ஜாலி ஜம்ப்பரின் (நானேதான்) தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்: இங்கே கிளிக்
thodarungal sir
ReplyDeletethodarungal sir
ReplyDeleteஎன்னது 10% டிஸ்கவுண்ட் கிடைக்குதா? என்ன கொடுமை சார் இது?
ReplyDeleteஹாய்.!
ReplyDelete