Monday, October 29, 2012

தமிழில் புதியதாக ஒரு காமிக்ஸ்: ஆர்பிட் காமிக்ஸ்

மக்கள்ஸ், 

விஷயம் எதுவும் இல்லாததால் சமீப காலழ்ந்களில் பதிவுலகம் பக்கம் தலையை காட்ட முடியவில்லை. அதுவுமில்லாமல் அண்ணன் எஸ்.ஜே சூர்யா அவர்களின் புதிய படம் (இசை) ஷூட்டிங் துவங்கி விட்டதால் அது சம்பந்தமான பணிகள் வேறு. ஆகையால் சுத்தமாக காமிக்ஸ் வலைப்பூக்கள் பக்கமே வர இயலவில்லை. மன்னிக்கவும்.

இன்று மாலை நண்பர் கிங் விஸ்வா அவர்களுடன் உரையாடிக்கொண்டு இருந்தபோது காமிரேட்ஹாஜா இஸ்மாயில் அவர்களின் புதிய காமிக்ஸ் முயற்சியை பற்றி சொன்னார். ஏற்கனவே ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக இதுபற்றி சொல்லி இருந்தாலும் இப்போது அது நடைமுறைப் படுத்தப்பட்டு இருப்பதாக கூறியதால் இந்த பதிவு.

லைட் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலமாக ஆர்பிட் காமிக்ஸ் என்கிற வெளியீட்டில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் (பழைய பத்து ருபாய் லயன் காமிக்ஸ் சைசில்) 122 பக்கங்களுடன் Rs 25/- விலையில் இந்த புத்தகங்கள் வரவிருக்கின்றன.

காமிரேட் ஹாஜா இஸ்மாயில் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வரவிருக்கும் இந்த இதழ்களில் ஹாஜா அவர்களின் அற்புதமான எழுத்துக்களுக்கு உயிரோவியம் கொடுக்கவிருப்பவர் நமது எண்ணங்களை கொள்ளை கொண்ட ஓவியர் ஆழி அவர்கள்.

தமிழில் வெளிவர இருக்கும் காமிக்ஸ் கதைகளின் அட்டைப்படங்கள் இதோ:

Orbit Comics Tamil 1 Vinnil Oru Vibareedham
Orbit Comics Tamil 2 Kolaikarak Kazhagam
Orbit Comics Tamil 3 Kadalin Marmam
Orbit Comics Tamil 4 Ennaipol Oruvan

ஆங்கிலத்தில்  வெளிவர இருக்கும் காமிக்ஸ் கதைகளின் அட்டைப்படங்கள் இதோ:

Orbit Comics Eng 1 The Target
Orbit Comics Eng 3 The Shadow of the Trail

இவை சாம்பிள் அட்டைப்படங்களே என்பதால் சிறு குறைகளை கண்டுக் கொள்ளாதீர்கள். அச்சில் குறைகள் இன்றி பிழைகள் இன்றி வரும்.

காமி ரேட் ஹாஜாவிற்கு வாழ்த்து சொல்ல நினைப்பவர்கள் இங்கே சென்று சொல்லலாம்: http://hajatalks.blogspot.in/2012/10/welcome-largo-winch-written-by-haja.html#comment-form

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,   
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Thursday, August 16, 2012

கோவையில் ஒரு குற்றம் - ஒரு காமிக்ஸ் கடத்தல்

மக்கள்ஸ்,

இன்று மதியம் நடந்த ஒரு உரையாடலை என்னுடைய ஹை ஃப்ரீக்வன்சி ட்ரான்ஸ்பான்டர் மூலம் ஒட்டு கேட்டேன். அந்த உரையாடல் ஈரோட்டை சேர்ந்த ஒரு காமிக்ஸ் பெரும்புள்ளிக்கும், சென்னையை சேர்ந்த ஒரு காமிக்ஸ் மன்னருக்கும்  நடந்த ரகசிய உரையாடல். அதன் ஆரம்ப புள்ளி இன்று காலையில் எடிட்டரின் ப்ளாக்கில் வந்த ஒரு கமென்ட் தான். அந்த கமென்ட் இதோ:

 

Comment in Editor's Blog

இனிமேல் அந்த தொலைபேசி உரையாடல்:

ஈரோடு பெரும்புள்ளி: "தோழர், இரவு கருப்பு. ஓவர்"

காமிக்ஸ் மன்னர்: "தோழர், பகல் வெளுப்பு. ஓவர்".

ஒட்டு கேட்ட நான் (மனதுக்குள்): "யோவ், இதெல்லாம் ரொம்ப, ரொம்ப ஓவர்".

ஈரோடு பெரும்புள்ளி:தம்பி, அந்த காமிக்ஸ் பதிய கமெண்ட்ட படிச்சியா?"

காமிக்ஸ் மன்னர்: "என்னது, பொண்ணு கைய புடிச்சு இழுத்தியா? ஐயையோ நான் இல்ல. அதெல்லாம் நம்ம ஒலக காமிக்ஸ் ரசிகர் பண்ற வேலை".

ஒட்டு கேட்ட நான் (மனதுக்குள்):"அடப்பாவிகளா, வெத்தில கோடி வேர்ல சுண்ணாம்பை கரைச்சு ஊத்துறீங்களே? உங்க போதைக்கு நான் ஊறுகாயா?".

ஈரோடு பெரும்புள்ளி: “தம்பி, மேட்டர் அதில்லை. கோவையில் ஏதோ ஒரு பழைய புத்தக கடையில் காமிக்ஸ் விக்கறாங்களாம். எனக்கு வாங்கி தர முடியுமா?".

காமிக்ஸ் மன்னர்: "அப்படியா? அண்ணே, அதிக மேய்ச்சலுக்கு ஆசைப்பட்ட அதிக காய்ச்சல் தான் வரும். கண்டிப்பாக அவரு வாங்கிய பிறகு நமக்கு அங்கே என்ன பாக்கி இருக்கும்?".

ஈரோடு பெரும்புள்ளி: "தம்பி, மேட்டர் அதில்லை. உங்களுக்கு தான் தமிழ்நாடு முழுக்க அட்வான்ஸ் புக்கிங் ல காமிக்ஸ் வாங்குற பழக்கம் இருக்கே? அதுல கொஞ்சம் இன்ப்ளூயன்ஸ் பண்ணி டெலிபோன் மூலமாக ஆர்டர் பண்ணி வாங்கி தர முடியுமா?".

காமிக்ஸ் மன்னர்: "வெளங்கிடும். அந்த கதைய நீங்களும் நம்புறீங்களா? அந்த லாஜிக் வச்சு பார்த்தால் நான்தானே அந்த புத்தகங்களை வாங்கி இருக்கணும்? அப்படி இருக்க யாரோ ஒருவர் கமென்ட் போட்டா நான் தெரிந்து கொள்வது? ".

ஈரோடு பெரும்புள்ளி: "அதானே? அப்போ நான் கேள்விப்பட்ட விஷயம் கொஞ்சம் கூட செட் ஆகலையே? அப்போ நிஜம்மாவே உங்களுக்கு தமிழ்நாடு முழுக்க இருக்கும் கடைகளில் அட்வான்ஸ் புக்கிங் வசதி கிடையாதா?".

காமிக்ஸ் மன்னர்:"அட்வான்ஸ் புக்கிங் ஐ விடுங்க. கரன்ட் புக்கிங்கே கிடையாது".

ஈரோடு பெரும்புள்ளி: "அபோ என்ன பண்றது? நான் எப்படி அந்த புக்குகளை வாங்குவது?".

காமிக்ஸ் மன்னர்:"கொஞ்சோம் டைம் குடுங்க. அங்கே நமது காமிரேட் ஒருத்தர் இருக்கார். அவருகிட்டே சொல்லி கடைக்கு போய் வாங்க ட்ரை பண்ணுவோம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. கால் பண்றேன்".

சிறிது நேரம் கழித்தது காமிக்ஸ் மன்னரின் நண்பர் அந்த கடைக்கு வந்துட்டு இந்த இருவரிடமும் கான்ப்ரன்ஸ் கால் மூலம் பேசுகிறார்.

ஈரோடு பெரும்புள்ளி:"தோழர், இரவு கருப்பு. ஓவர்"

காமிக்ஸ் மன்னர்:" "தோழர், பகல் வெளுப்பு. ஓவர்".

காமிரேட்: "யோவ், நீங்கெல்லாம் அந்த அளவுக்கு வொர்த் கிடையாது. வேலைய விட்டுட்டு வந்திருக்கேன். சட்டு புட்டுன்னு மேட்டர சொல்லுங்க. கிளம்பனும்".

காமிக்ஸ் மன்னர்:" "கொஞ்சம் அங்கே இருக்கும் புக்ஸ் என்னென என்று தொலைபேசியில் நண்பருக்கு சொல்லுங்க. அவருக்கு தேவைப்படுகிற புக்ஸை சொல்வாரு, வாங்கி குடுங்க".

காமிரேட்: "பாஸ், ஆல்ரெடி இங்கே ஒருத்தர் காமிக்ஸ் டைட்டில் எல்லாம் இதேமாதிரி போன்ல வேறே யாருக்கிடேயோ சொல்லிக்கிட்டு இருக்கார். இருங்க கொஞ்சம் ஒட்டுக்க் கேக்குறேன். பாஸ் அவரு பேரு பிள்ளையார் தம்பி. ஹல்லோ, கொஞ்சம் இருங்க, பாஸ் அந்த சைட்ல பேசுறதும் இப்போ நம்ம கூட கான்ப்ரன்ஸ் காலில் இருப்பவருடைய குரலும் ஒரே மாதிரி இருக்கு".

ஈரோடு பெரும்புள்ளி: "நான் தானுங்க அது. என்னோடைய இரண்டாவது செல் போனில் பேசிக்கொண்டு இருக்கிறேன். ஒருவேளை உங்க நண்பர் வருவதற்கு லேட் ஆகிவிட்டால் இந்த புத்தகங்கள் கிடைக்காமல் போய் விடும் அல்லவா? அதனால் தான் என் நண்பர் பிள்ளையார் தம்பியை அனுப்பி வைத்தேன்".

காமிரேட்: "யோவ், இதுக்கு எதுக்குயா என்ன வரச் சொன்னீங்க? இதுக்காக இருவது கிலோ மீட்டர் பைக்ல வந்தேன். இப்போ என்னடான்னா அந்த பிள்ளையார் தம்பியே 49 புக்குகளை வாங்கி விட்டார். நான் வீட்டுக்கு போறேன்".

மக்கள்ஸ், இதோ இந்த புத்தகங்கள் தான் பாக்கி இருப்பவை. சுமார் நூற்றி அறுபது புத்தகங்கள் வந்தன. பல மினி லயன் காமிக்ஸ், திகில் காமிக்ஸ் ஆரம்ப கால லயன் காமிக்ஸ் என்று பலரும் வந்ததாக இந்த புத்தக கடை அதிபர் சொல்கிறார். இது மட்டுமில்லாமல் கடந்த வாரம் ராணி காமிக்ஸ் ஒரு முப்பது புத்தகங்கள் விற்பனை ஆனதாகவும் சொல்கிறார்.

IMG402
IMG404

ஆனால் நண்பர்களே, பிரச்சினை இதுவல்ல. இங்கே இருக்கும் அணைத்து புத்தகங்களுமே லேட்டஸ்ட் புக்ஸ் தான். அப்படி இருக்க இவை ஒவ்வொன்றும் விலை இருவது ருபாய் என்றே இந்த கடைகாரர் விற்கிறார். வழக்கமாக பத்தடு ரூபாய்க்கு விற்கப்படும் இந்த புத்தகங்கள் இப்படி சில தீவிர வேட்டையர்களால் இப்போது இருவது ருப்வாய் என்கிற விலையை எட்டியுள்ளது. இதுதான் கவலை அளிக்கும் விஷயம். இதனை படிக்கும் நண்பர்கள் சற்றே யோசிக்க வேண்டும்.

நண்பர் முத்து  விசிறியின் பாலிசி தான் என்னுடையதும் - பத்து  ரூபாய்க்கு மேல் எந்த ஒரு பழைய புத்தகமும் வொர்த் இல்லை. அதை அந்த விலை கொடுத்து வாங்குவதும் தேவை இல்லை.

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,   
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Sunday, April 1, 2012

ஆசை தோசை அப்பளம் வடை - தலை வாங்கி குரங்கு - ஒரு ஆசையான பார்வை

மக்கள்ஸ்,

சாவு வீட்ல சன் மியூசிக் பாக்குற மாதிரி நல்ல இருக்குற நம்ம தமிழ் காமிக்ஸ் உலகத்துல கொஞ்சம் அதிகமாக ஆசைப்பட்ட ஒரு தீவிர காமிக்ஸ் ரசிகனின் கற்பனையே இந்த பதிவு. கொஞ்சம் ஆசை, கொஞ்சம் பேராசை இரண்டும் சேர்ந்த கலவை தான் இந்த பதிவு.

இங்கே பக்கத்துல தலை வாங்கி கையில கத்தியோட வெட்ட காத்திருக்கிறது யார தெரியுமா? நம்மள மாதிரி காமிக்ஸ் ரசிகர்களைத்தான். என்னடா இது சவுக்கு தோப்பு சங்கீதக் கச்சேரில  சவுண்ட் எஃபக்ட் கம்மின்னு கம்ப்ளைன்ட் பண்ற மாதிரி இருக்கேன்னு பாக்குறீங்களா? பதிவை முழுசா படிங்க. பின்னாடி தெரியும்.

தலை வாங்கி ஃபீவர்: கடந்த ஒரு மாதமாகவே தமிழகம் முழுவதும் தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதுமாக தலை வாங்கி எங்கே? தலை வாங்கி எப்போ வரும்? என்று ஒரு கதறலாக இருந்தது. அந்த கதறலை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் விதமாக நேற்று முதல் அனைவருக்கும் காமிக்ஸ் கிளசிக்ஸ் லேட்டஸ்ட் இதழ் தலை வாங்கி குரங்கு அனுப்பப் பட்டு இருக்கிறது. எனக்கும் வந்து விட்டது. ஆனால் பதிவிட வேண்டாம் என்று நண்பர் இரவுக் கழுகு கேட்டுக் கொண்டதின் விளைவாக அமைதியாக இருந்தேன். இப்போது கூட தலைவர் முத்து விசிறியின் இந்த பதிவை பார்த்து விட்டே ஆதங்கத்துடன் இந்த பதிவினை இடுகிறேன்.

நம்ம எடிட்டர் சார் மிகவும் நேர்த்தியாக காரணங்களை கூறினாலும் கூட தலை வாங்கியை கலரில் சந்திக்கவே ஆவல். பின்னே என்னங்க, கர்ணன் படமே மேம்படுத்தப்பட்டு அரங்கு நிறைந்த காட்சிகளாக தூள் கிளப்பும்போது தலை வாங்கிக்கு என்ன குறைச்சல்? ஒரு வேலை எடிட்டர் சார் தலை வாங்கியை கலரில் வெளியிட்டு இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற அதீத கற்பனையின் விபரீத விளைவே இந்த பதிவு:

TVK Coverதலை வாங்கிக் குரங்கின் முதல் பக்கம் - முழு வண்ணத்தில் வந்திருந்தால் எப்படி இருக்கும்?

Comics Classics Issue No 27 Dated Mar 2012 Tex Willer Thalai Vangi Kurangu Pg 03

எடிட்டர் சார் இப்படி பதிவிட்டதால் கலகக் குரல் கிளம்பி விட்டதாக நினைத்து விடாதீர்கள். இந்தப் பதிவுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. அந்த காரணத்தை உங்கள் பார்வைக்கு முன்வைக்கவே இந்த பதிவு.

தமிழ் காமிக்ஸ் வியாபாரிகள்: கடந்த பல ஆண்டுகளாக (தேங்க்ஸ் டு கிங் விஸ்வா மற்றும் அவரது பதிவுகள்) காமிக்ஸ் பற்றிய ஆர்வமும் puththaga சேகரிப்பும் அனைவரிடமும் தொற்றிக்கொண்டு விட்டது. அதனை சில புல்லுருவிகள் காமிக்ஸ் ரசிகர்கள் என்கிற பெயரில் தவறாக உபயோகிக்க ஆரம்பித்தார்கள். முதலில் அவர்கள் செய்தது டெக்ஸ் வில்லர் கதையாகிய இருளின் மைந்தர்கள் கதையை கலரில் நாங்கள் அச்சிட்டுள்ளோம், விலை ஐந்தாயிரம் ரூபாய்தான் என்று சில காமிக்ஸ் வெறியர்களை தூண்டில் போட்டு கொக்கியில் பிடித்ததுதான். நல்ல கவனியுங்க, வித்தவங்க மேல் தப்பு சொல்லல, வாங்குனவன்   மேலேயும் தப்பு சொல்லல. ஆனால் அப்படி கலர் காமிக்ஸ் பற்றிய ஒரு வெற்றிடம் இருப்பதால் இந்த காமிக்ஸ் வியாபாரிகள் அதனை சிறப்பாக உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் வருகின்ற வேளையில் கூட இதே கும்பல் ஒரு காமெடி வேலையை செய்ய நினைத்தது. நல்லவேளையாக டாக்டர் செவனின் புண்ணியத்தில் அந்த வேலை அதோகதியாக அந்தரத்திலேயே நின்று விட்டது.இவர்களே நடுவில் இனிமேல் லயன் காமிக்ஸ் வராது என்றெல்லாம் கதை கட்டி விட்டதை அனைவரும் அறிவார்கள்.

இப்போது இவர்கள் செய்யும் பணி என்னவென்றால் லயன் காமிக்ஸ் இதழ்களில் எதெல்லாம் ரீபிரின்ட் ஆகிறதோ, அவற்றை எல்லாம் கலரில் ருபாய் ஐந்தாயிரம் என்று விற்று விட ஒரு பெரிய பிளான் போட்டு வேலை செய்துக்கொண்டு இருக்கிறார்கள். அதன் முதல் கட்டமே இந்த தலை வாங்கி குரங்கு கதையின் கலர் பிரின்ட்.

ஆமாம், இன்றுதான் எனக்கு தெரிய வந்தது. தலை வாங்கி குரங்கை ருபாய் ஐந்தாயிரம் கொடுத்தால் கலரில் படிக்கலாம். முழு புத்தகமும் கலரில் உள்ளது என்று ஒரு பெரிய மார்கெட்டிங் கும்பல் கிளம்பியுள்ளது. வாசகர்கள் ஜாக்கிரதை.

எடிட்டர் சாருக்கு ஒரு வேண்டுகோள்: சார், தயவு செய்து அடுத்து நீங்கள் வெளியிடவுள்ள டெக்ஸ் வில்லர் கதையை நீங்களே கலரில் வெளியிட்டு விடுங்களேன்? இந்த மாதிரி அத்தனைக்கும் ஆசைப்படுகிற எங்களை மாதிரி காமிக்ஸ் ரசிகர்கள் பலியாகாமல் இருப்போமல்லவா?

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,   
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Related Posts with Thumbnails