மக்கள்ஸ்,
விஷயம் எதுவும் இல்லாததால் சமீப காலழ்ந்களில் பதிவுலகம் பக்கம் தலையை காட்ட முடியவில்லை. அதுவுமில்லாமல் அண்ணன் எஸ்.ஜே சூர்யா அவர்களின் புதிய படம் (இசை) ஷூட்டிங் துவங்கி விட்டதால் அது சம்பந்தமான பணிகள் வேறு. ஆகையால் சுத்தமாக காமிக்ஸ் வலைப்பூக்கள் பக்கமே வர இயலவில்லை. மன்னிக்கவும்.
இன்று மாலை நண்பர் கிங் விஸ்வா அவர்களுடன் உரையாடிக்கொண்டு இருந்தபோது காமிரேட்ஹாஜா இஸ்மாயில் அவர்களின் புதிய காமிக்ஸ் முயற்சியை பற்றி சொன்னார். ஏற்கனவே ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக இதுபற்றி சொல்லி இருந்தாலும் இப்போது அது நடைமுறைப் படுத்தப்பட்டு இருப்பதாக கூறியதால் இந்த பதிவு.
லைட் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலமாக ஆர்பிட் காமிக்ஸ் என்கிற வெளியீட்டில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் (பழைய பத்து ருபாய் லயன் காமிக்ஸ் சைசில்) 122 பக்கங்களுடன் Rs 25/- விலையில் இந்த புத்தகங்கள் வரவிருக்கின்றன.
காமிரேட் ஹாஜா இஸ்மாயில் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வரவிருக்கும் இந்த இதழ்களில் ஹாஜா அவர்களின் அற்புதமான எழுத்துக்களுக்கு உயிரோவியம் கொடுக்கவிருப்பவர் நமது எண்ணங்களை கொள்ளை கொண்ட ஓவியர் ஆழி அவர்கள்.
தமிழில் வெளிவர இருக்கும் காமிக்ஸ் கதைகளின் அட்டைப்படங்கள் இதோ:
ஆங்கிலத்தில் வெளிவர இருக்கும் காமிக்ஸ் கதைகளின் அட்டைப்படங்கள் இதோ:
இவை சாம்பிள் அட்டைப்படங்களே என்பதால் சிறு குறைகளை கண்டுக் கொள்ளாதீர்கள். அச்சில் குறைகள் இன்றி பிழைகள் இன்றி வரும்.
காமி ரேட் ஹாஜாவிற்கு வாழ்த்து சொல்ல நினைப்பவர்கள் இங்கே சென்று சொல்லலாம்: http://hajatalks.blogspot.in/2012/10/welcome-largo-winch-written-by-haja.html#comment-form
நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?
நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.
தோழரே!
ReplyDeleteகாமி ரேட்ஒலக காமிக்ஸ் ரசிகன் அவர்களே!! தங்களின் செயல் வேகம் என்னை திகைக்க வைக்கின்றது " ஆழக்குழி வட்டி அதில் ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தல் தொண்ணூறு முட்டைகள் "என்ற விடு கதை தான்
நினைவுக்கு வருகின்றது. !!காரணம் நன் பதிவை இட்டு கணினியை நிறுத்தும் முன்பாக தங்களின் பதிவும் வந்து விட்டது மிக்க நன்றி நண்பர்கள் செய்யும் இந்த உதவிகளை என்றும் நிகழ,எதிர் காலங்களில் நினைவில் இருக்கும் மிக்கநன்றி
அருமை. இனிமேல் தமிழ் காமிக்ஸ்களின் பொற்காலம் என்றே சொல்லுங்கள்
ReplyDeleteராஜேஷ் கே
வாழ்த்துக்கள் ஹாஜா. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி.
ReplyDeleteஅட்டை படங்கள் அவ்வளவு எனக்கு பிடிக்கவில்லை. ரொம்ப பழைய ஸ்டைலில் இருக்கிறது.
ReplyDelete//
என்னுடைய வலைப்பூவை நீங்கள் படிக்கவில்லையெனில், படித்தவுடன் உங்களின் எண்ணங்களை தெரிவிக்கவில்லை எனில் உங்களிடம் அடிப்படையாகவே ஏதோ தவறு உள்ளது//
இதுல்லாம் கொஞ்சம் ஓவர் :D
தலீவா! எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! உங்க வழியிலேயே ஏர்போர்ட்டில் மாயாவி பதிவிட்டிருக்கிறேன்! இசையைக் கட்டமைத்து வரும் முயற்சி சிறப்பானதாக அமைய என் வாழ்த்துக்கள்!
ReplyDelete