மக்கள்ஸ்,
இன்று மதியம் நடந்த ஒரு உரையாடலை என்னுடைய ஹை ஃப்ரீக்வன்சி ட்ரான்ஸ்பான்டர் மூலம் ஒட்டு கேட்டேன். அந்த உரையாடல் ஈரோட்டை சேர்ந்த ஒரு காமிக்ஸ் பெரும்புள்ளிக்கும், சென்னையை சேர்ந்த ஒரு காமிக்ஸ் மன்னருக்கும் நடந்த ரகசிய உரையாடல். அதன் ஆரம்ப புள்ளி இன்று காலையில் எடிட்டரின் ப்ளாக்கில் வந்த ஒரு கமென்ட் தான். அந்த கமென்ட் இதோ:
இனிமேல் அந்த தொலைபேசி உரையாடல்:
ஈரோடு பெரும்புள்ளி: "தோழர், இரவு கருப்பு. ஓவர்"
காமிக்ஸ் மன்னர்: "தோழர், பகல் வெளுப்பு. ஓவர்".
ஒட்டு கேட்ட நான் (மனதுக்குள்): "யோவ், இதெல்லாம் ரொம்ப, ரொம்ப ஓவர்".
ஈரோடு பெரும்புள்ளி:தம்பி, அந்த காமிக்ஸ் பதிய கமெண்ட்ட படிச்சியா?"
காமிக்ஸ் மன்னர்: "என்னது, பொண்ணு கைய புடிச்சு இழுத்தியா? ஐயையோ நான் இல்ல. அதெல்லாம் நம்ம ஒலக காமிக்ஸ் ரசிகர் பண்ற வேலை".
ஒட்டு கேட்ட நான் (மனதுக்குள்):"அடப்பாவிகளா, வெத்தில கோடி வேர்ல சுண்ணாம்பை கரைச்சு ஊத்துறீங்களே? உங்க போதைக்கு நான் ஊறுகாயா?".
ஈரோடு பெரும்புள்ளி: “தம்பி, மேட்டர் அதில்லை. கோவையில் ஏதோ ஒரு பழைய புத்தக கடையில் காமிக்ஸ் விக்கறாங்களாம். எனக்கு வாங்கி தர முடியுமா?".
காமிக்ஸ் மன்னர்: "அப்படியா? அண்ணே, அதிக மேய்ச்சலுக்கு ஆசைப்பட்ட அதிக காய்ச்சல் தான் வரும். கண்டிப்பாக அவரு வாங்கிய பிறகு நமக்கு அங்கே என்ன பாக்கி இருக்கும்?".
ஈரோடு பெரும்புள்ளி: "தம்பி, மேட்டர் அதில்லை. உங்களுக்கு தான் தமிழ்நாடு முழுக்க அட்வான்ஸ் புக்கிங் ல காமிக்ஸ் வாங்குற பழக்கம் இருக்கே? அதுல கொஞ்சம் இன்ப்ளூயன்ஸ் பண்ணி டெலிபோன் மூலமாக ஆர்டர் பண்ணி வாங்கி தர முடியுமா?".
காமிக்ஸ் மன்னர்: "வெளங்கிடும். அந்த கதைய நீங்களும் நம்புறீங்களா? அந்த லாஜிக் வச்சு பார்த்தால் நான்தானே அந்த புத்தகங்களை வாங்கி இருக்கணும்? அப்படி இருக்க யாரோ ஒருவர் கமென்ட் போட்டா நான் தெரிந்து கொள்வது? ".
ஈரோடு பெரும்புள்ளி: "அதானே? அப்போ நான் கேள்விப்பட்ட விஷயம் கொஞ்சம் கூட செட் ஆகலையே? அப்போ நிஜம்மாவே உங்களுக்கு தமிழ்நாடு முழுக்க இருக்கும் கடைகளில் அட்வான்ஸ் புக்கிங் வசதி கிடையாதா?".
காமிக்ஸ் மன்னர்:"அட்வான்ஸ் புக்கிங் ஐ விடுங்க. கரன்ட் புக்கிங்கே கிடையாது".
ஈரோடு பெரும்புள்ளி: "அபோ என்ன பண்றது? நான் எப்படி அந்த புக்குகளை வாங்குவது?".
காமிக்ஸ் மன்னர்:"கொஞ்சோம் டைம் குடுங்க. அங்கே நமது காமிரேட் ஒருத்தர் இருக்கார். அவருகிட்டே சொல்லி கடைக்கு போய் வாங்க ட்ரை பண்ணுவோம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. கால் பண்றேன்".
சிறிது நேரம் கழித்தது காமிக்ஸ் மன்னரின் நண்பர் அந்த கடைக்கு வந்துட்டு இந்த இருவரிடமும் கான்ப்ரன்ஸ் கால் மூலம் பேசுகிறார்.
ஈரோடு பெரும்புள்ளி:"தோழர், இரவு கருப்பு. ஓவர்"
காமிக்ஸ் மன்னர்:" "தோழர், பகல் வெளுப்பு. ஓவர்".
காமிரேட்: "யோவ், நீங்கெல்லாம் அந்த அளவுக்கு வொர்த் கிடையாது. வேலைய விட்டுட்டு வந்திருக்கேன். சட்டு புட்டுன்னு மேட்டர சொல்லுங்க. கிளம்பனும்".
காமிக்ஸ் மன்னர்:" "கொஞ்சம் அங்கே இருக்கும் புக்ஸ் என்னென என்று தொலைபேசியில் நண்பருக்கு சொல்லுங்க. அவருக்கு தேவைப்படுகிற புக்ஸை சொல்வாரு, வாங்கி குடுங்க".
காமிரேட்: "பாஸ், ஆல்ரெடி இங்கே ஒருத்தர் காமிக்ஸ் டைட்டில் எல்லாம் இதேமாதிரி போன்ல வேறே யாருக்கிடேயோ சொல்லிக்கிட்டு இருக்கார். இருங்க கொஞ்சம் ஒட்டுக்க் கேக்குறேன். பாஸ் அவரு பேரு பிள்ளையார் தம்பி. ஹல்லோ, கொஞ்சம் இருங்க, பாஸ் அந்த சைட்ல பேசுறதும் இப்போ நம்ம கூட கான்ப்ரன்ஸ் காலில் இருப்பவருடைய குரலும் ஒரே மாதிரி இருக்கு".
ஈரோடு பெரும்புள்ளி: "நான் தானுங்க அது. என்னோடைய இரண்டாவது செல் போனில் பேசிக்கொண்டு இருக்கிறேன். ஒருவேளை உங்க நண்பர் வருவதற்கு லேட் ஆகிவிட்டால் இந்த புத்தகங்கள் கிடைக்காமல் போய் விடும் அல்லவா? அதனால் தான் என் நண்பர் பிள்ளையார் தம்பியை அனுப்பி வைத்தேன்".
காமிரேட்: "யோவ், இதுக்கு எதுக்குயா என்ன வரச் சொன்னீங்க? இதுக்காக இருவது கிலோ மீட்டர் பைக்ல வந்தேன். இப்போ என்னடான்னா அந்த பிள்ளையார் தம்பியே 49 புக்குகளை வாங்கி விட்டார். நான் வீட்டுக்கு போறேன்".
மக்கள்ஸ், இதோ இந்த புத்தகங்கள் தான் பாக்கி இருப்பவை. சுமார் நூற்றி அறுபது புத்தகங்கள் வந்தன. பல மினி லயன் காமிக்ஸ், திகில் காமிக்ஸ் ஆரம்ப கால லயன் காமிக்ஸ் என்று பலரும் வந்ததாக இந்த புத்தக கடை அதிபர் சொல்கிறார். இது மட்டுமில்லாமல் கடந்த வாரம் ராணி காமிக்ஸ் ஒரு முப்பது புத்தகங்கள் விற்பனை ஆனதாகவும் சொல்கிறார்.
ஆனால் நண்பர்களே, பிரச்சினை இதுவல்ல. இங்கே இருக்கும் அணைத்து புத்தகங்களுமே லேட்டஸ்ட் புக்ஸ் தான். அப்படி இருக்க இவை ஒவ்வொன்றும் விலை இருவது ருபாய் என்றே இந்த கடைகாரர் விற்கிறார். வழக்கமாக பத்தடு ரூபாய்க்கு விற்கப்படும் இந்த புத்தகங்கள் இப்படி சில தீவிர வேட்டையர்களால் இப்போது இருவது ருப்வாய் என்கிற விலையை எட்டியுள்ளது. இதுதான் கவலை அளிக்கும் விஷயம். இதனை படிக்கும் நண்பர்கள் சற்றே யோசிக்க வேண்டும்.
நண்பர் முத்து விசிறியின் பாலிசி தான் என்னுடையதும் - பத்து ரூபாய்க்கு மேல் எந்த ஒரு பழைய புத்தகமும் வொர்த் இல்லை. அதை அந்த விலை கொடுத்து வாங்குவதும் தேவை இல்லை.
நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?
நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.
நல்லதொரு உரையாடல்...
ReplyDelete10 ரூபாய் புத்தகம், 20 ரூபாய் என்றால்... பகற் கொள்ளை ... இல்லை... இல்லை... பயங்கர கொள்ளை... தகவலுக்கு நன்றி...
நீங்கள் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் ய்கூருங்கள் நண்பரே.
ReplyDeleteநானும் என்னுடைய நண்பர்கள் யாரையாவது அனுப்பி இதே மாதிரி செய்யலாம் என்று இருந்தேன்.
எனக்கு இல்ல எனக்கு இல்ல.
பாஸ்,
Deleteநான் சென்னைல இருக்கேன். நான் புக் எதுவுமே வாங்கல.
காமிக்ஸ் மன்னரும் வாங்கல.
வாங்கியது நம்ம ஈரோடு பெரும்புள்ளி தான்.
யார் அந்த இரும்புக்கை மாயாவி, சாரி யார் அந்த ஈரோடு பெரும்புள்ளி?
Deleteபாஸ்,
Deleteஅந்த ஈரோடு பெரும் புள்ளிக்கும் மூன்றெழுத்து நடிகைக்கும் (இவங்க சூப்பர் ஸ்டார் ஜோடியாக நடித்தவர்) தொடர்பு உண்டு.
ஹ்மம்ம்மம்ம்ம்ம் எனக்கு மட்டும் எல்லாமே கொஞ்சம் நாட்கள் கழித்து தான் தெரிய வருகிறது
Deleteஇல்லன்னா ஈரோடு பெரும்புள்ளிக்கு போட்டியா நானும் களத்துல குதித்து இருப்பேன் ( புத்தகம் வாங்க மட்டும் தான் )
கரிட்டா சொல்லிடனும் இல்லன்னா மூன்றெழுத்து நடிகைக்கும் நமக்கும் தொடர்புன்னு போட்ட்டுவாங்க அக்காங் ;-)
.
aha aha ahha
ReplyDeleteஅச்சச்சோ, லேட்டா வந்துட்டேனே, ஐயா, ஈரோட்டய்யா எங்கய்யா இருக்கீங்க, இந்த நேரம் பாத்து கோயம்புத்தூர் ஸ்டீல் க்ளா மாயமா மறஞ்சுட்டாரே, ஹலோ, ஹலோ விஜய் ஈரோடா, சார் கொஞ்சாம் அந்த மெஜஸ்டிக் கடைக்கு போய்...
ReplyDeleteஅடச்சே.. ஈரோடு பெரும் புள்ளி யாரு, நமக்கு தெரிஞ்சது, ஈரோடு ஸ்டாலினும், விஜய் ஈரோடும் தான். இவங்க ரெண்டு பேருல ஒருத்தரா பெரும் புள்ளி....
அவங்கள கேட்டா பெரும் புள்ளியும் இல்ல சிறு புள்ளியும் இல்லன்னு சண்டைக்கு வருவாங்களோ?
அது சரி, அது யார் அது பகல் வெளுப்பு காமிக்ஸ் மன்னரும் அவருடைய காமிரேடும் எங்கோ இடிக்கிதே...
இலகுவான ரசிக்கும் நேரங்களை தந்ததற்கும், தொடர்பை கொடுத்து தொடர வைத்ததற்கும் நன்றி ஒலக காமிக்ஸ் ரசிகரே.
என் தவறை மறைக்க கமெண்ட் இட்டு விட்டேன்.;-).
நண்பர்களே
ReplyDeleteஇன்று மதியமே (அதாவது) புத்தகம் உள்ளது என்ற பதிவை பார்த்தவுடன், போன் செய்தேன் அந்த கடைக்கு...
கடைக்காரர்: சார் லயன், முத்து புக்ஸ் எதுவும் கைவசம் இல்லையே ....
நான் : சார், பெட்டி நெறைய புக்ஸ் இருக்குன்னு போட்டு இருக்கே ?
கடைக்காரர்: சார் எதுவும் இல்லை சார். வந்தால் சொல்கிறேன்.
----> நண்பர்களே
பெட்டி நிறைய இருந்த புத்தகம் எங்கே போயிற்று ?
சில நாட்களுக்கு முன்பு நண்பர் விஸ்வா, திருப்பூர் ஒரு கடையில் நிறைய புத்தகங்கள் உள்ளது என்று அவரது பதிவில் குறிப்பிட்டு இருந்தார். அப்பொழுது சென்னையில் இருந்ததால் ஒரு வாரம் (?) கழித்து சென்றால் ..
கடைக்காரர்: அப்பவே ஒருத்தர் சேலத்தில் இருந்து வந்து அனைத்து புத்தகங்களையும் வாங்கிட்டு போய்ட்டார்.
என்னதான் நடக்குது. நான் பொதுவாக எங்கே காமிக்ஸ் கிடைத்தாலும் என்னிடம் இருந்தால் அதை வாங்க மாட்டேன் (நண்பர்கள் யாருக்கேனும் கிடைக்கலாம் அல்லவா ?)
நன்றி
திருப்பூர் ப்ளுபெர்ரி
திருப்பூர் ப்ளூபெர்ரி,
Deleteநண்பரே, அந்த புத்தகங்களை வாங்கியவர் சேலத்தில் இருந்து அல்ல, திருப்பூரில் இருந்துதான் வந்து வாங்கினாராம். அந்த புத்தக செட்டில் ஒரு பகுதி இந்த ஈரோடு பெரும்புள்ளிக்கும் சென்றதாக தகவல்.
//----> நண்பர்களே
Deleteபெட்டி நிறைய இருந்த புத்தகம் எங்கே போயிற்று ?//
இரண்டு விஷயங்கள்:
1. நீங்கள் போன் செய்தது எப்போது? நான் ஒட்டுக்கேட்டது மதியம் இரண்டு மணிக்கு. ஆகையால் அந்த சம்பவம் நடந்த போது, அதன் பின் அங்கே மிச்சம் மீதி இருக்க வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம்.
2. நீங்கள் போன் செய்தது யாருக்கு? ஏனென்றால் இந்த கடை (அவர்களின் மூன்றாவது கடை இது) விற்பனையில் இருப்பவருக்கே இந்த புத்தகங்களை பற்றி தெரியும். கடை அதிபருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆஹா ,இதோ போறேன் நண்பரே நன்றி
ReplyDeleteசிபிக்கு வெச்ச ஷாக்கிலே சுய உருவம் திரும்பிட்டதா?
Delete50/50 ஞாபகம் இருக்கட்டும்.... பிஸ்கட்ட கொடுத்துபுடாதீங்க நான் அத சொல்லல.
நண்பரே ,
Delete//நண்பர் முத்து விசிறியின் பாலிசி தான் என்னுடையதும் - பத்து ரூபாய்க்கு மேல் எந்த ஒரு பழைய புத்தகமும் வொர்த் இல்லை. அதை அந்த விலை கொடுத்து வாங்குவதும் தேவை இல்லை.//
ஆசிரியர்தான் நல்ல புத்தகங்களை வெளியிட போவதை கூறியுள்ளரே ,காத்திருப்போமே ............
நண்பரே ,
Delete//நண்பர் முத்து விசிறியின் பாலிசி தான் என்னுடையதும் - பத்து ரூபாய்க்கு மேல் எந்த ஒரு பழைய புத்தகமும் வொர்த் இல்லை. அதை அந்த விலை கொடுத்து வாங்குவதும் தேவை இல்லை.//
ஆசிரியர்தான் நல்ல புத்தகங்களை திரும்ப வெளியிட போவதை கூறியுள்ளரே ,காத்திருப்போமே ............
January –> Classic THREE Special (Rs. 50) (Nayakaravil Maayavi, Vaanveli Koollaitar & Peirottil Johny Nero)
Deleteநயாகராவில் மாயாவி (முத்து வெளியீடு #12 )
வான்வெளி கொள்ளையர் (முத்து வெளியீடு #19 )
பெய்ரூட்டில் ஜானி நீரோ (முத்து வெளியீடு #21 )
அடுத்த மறுபதிப்பில் நான்கு (பழைய) கதைகள் :)
எனக்கு இன்னும் புத்தகம் வந்து சேரவில்லை.அற்புதமான கதை தொகுப்பு நண்பரே.நன்றி
Delete//அது சரி, அது யார் அது பகல் வெளுப்பு காமிக்ஸ் மன்னரும் அவருடைய காமிரேடும் எங்கோ இடிக்கிதே...//
ReplyDeleteபாஸ், எங்கிட்டு இடிக்குதோ அங்கிட்டு ஒத்தடம் கொடுங்க சரியாயிடும். (சும்மா ஜோக்கு).
//என் தவறை மறைக்க கமெண்ட் இட்டு விட்டேன்.;-).//
இதை,
இதை,
இதைதான் நான் எதிர்பார்த்தேன்.
இடிபட்டது மன்னர். மன்னரின் கோபத்துக்கு ஆளாக இஷ்டமில்லை. ஏனெனில் மன்னரால் காரியம் ஆகவேண்டும். தப்பா ஒத்தடம் கொடுத்தா முதலுக்கே மோசமாகிடும்.
Delete// பாஸ், எங்கிட்டு இடிக்குதோ அங்கிட்டு ஒத்தடம் கொடுங்க சரியாயிடும். //
Deleteஎங்க பக்கத்துல வீங்கி இருந்துச்சுனாத்தான் ஒத்தடம் கொடுப்பாங்க
இடுச்சுதுன்னா அருவாதான் (சும்மா ஜோக்கு) ;-)
.
அடிப்படை தவறை திருத்தி கொண்டேன் .
ReplyDeleteஅட்டகாசமான உரையாடல் நண்பரே,நன்றி ..................
ReplyDeleteமதியம் மஞ்சள் யாராவது இருக்கீங்களா ஓவர் ஓவர்
ReplyDeleteமாலை மல்லிகை யாராவது இருக்கீங்களா ஓவர் ஓவர் :))
Delete.
சிபி இது ரொம்ப ஓவர் .உங்களுக்கு டபுள் த்ரில் கிடைத்து விட்டதா?
Deleteமதியம் மஞ்சள் ஓவர் ,எனக்கு புத்தகம் வந்து விட்டது ஓவர்
Deleteபழைய கிடைத்தற்கரிய பொருட்கள் அதன் original விலையை விட அதிகமாக இருப்பது சகஜம்தான். இதில் ஏதும் அதிசயமோ தவறோ இருப்பதாகத் தோன்றவில்லையே?
ReplyDeleteஎன்னபா,,,,,,,,,,,,,,, ஒலக காமிக்ஸ் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ஒலக காமிக்ஸ் ன்னு பேர் வச்சிட்டு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, லோக்கல் காமிக்ஸ் ரேன்ஜ் க்கு,,,,,,,,,,,,,,,,,, பதிவு போடறிங்க ,,,,,,,,,,,,,,,,,,,,,,,, நீங்க பன்னின கலாடவுல,,,,,,,,,,,,,,,, நம்ப டாக்டர் ,,,,,,,,,,,,,,,,,,,,,, இனிமே புது புக் வாங்கினா கூட,,,,,,,,,,,, அதை பதிவு செய்ய மாட்டார் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, போல இருக்கு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ஒருத்தரோட ,,,,,,,,,,,, ஆர்வத்தை ,,,,,,,,,,,, இப்படி,,,,,,,,,,,, கலாட்டா செய்யலாமா ,,,,,,,,,,,,,, பிரதர் ,,,,,,,,,,,,,,,, டேக் கேர் friend ,,,,,,,,,,,,,,,,,,,,
ReplyDeleteமன்னித்து விடுங்கள்! nanbare!!!! naan நேற்றுதான் 5 நடுத்தர கால rani காமிக்ஸ் ஜேம்ஸ் bond கதைகள் மற்றும் oru karumpuli சாகசம் இங்கு சென்னையில் நூற்று ஐம்பது ரூபாக்கு வாங்கினேன்! இனி அப்படி செய்ய போவதில்லை என்றே நினைக்கிறேன்! ஆனாலும் பழைய காமிக்ஸ்கள் கிடைப்பது சுலபமஅல்லவே?????
ReplyDeletenanbargal face bookla attai scans pottu kalakkuraanga! konjam athuvum try pannunga!
ReplyDeleteதமிழ் காமிக்ஸ்களுக்கு என்றே எக்ஸ்குளுசிவ் பாரம். இப்போது பீட்டா வில்
ReplyDeletehttp://tamilcomicsjunction.forumotion.in