Showing posts with label மன்னிக்கவும் மருத்துவர் விஜய். Show all posts
Showing posts with label மன்னிக்கவும் மருத்துவர் விஜய். Show all posts

Saturday, March 7, 2015

காப்பி அடிப்பது ஒரு கலை: வாழ்த்துகள் இயக்குனர் AL விஜய்

அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கத்தையும் தெரிவித்து கொள்ளுகிறேன். முன்னாள் நண்பர், பலநாள் இயக்குனர் AL Vijay ”ஒரிஜினலாக” படமெடுப்பதில் வல்லவர் என்பது நாம் அனைவருக்குமே தெரியும்.

அவரது இயக்கத்தில் 2013 ஆகஸ்ட் மாதம் வெளியான படமான தலைவா படத்தின் போஸ்டர் டிசைனை பாருங்கள்.

Thalaivaa Poster

அதே 2013ஆம் ஆண்டு நவம்பர் ஆறாம் தேதி வெளியான Prisoner of space என்ற கதையின் அட்டைப்படத்தையும் ஒருமுறை பாருங்கள்:

Prisoner of space cover

சரி, நவம்பர் மாதம் வெளியான காமிக்ஸ் கதைதானே பின்னாடி வெளியானது? அப்படி இருக்க ஆகஸ்டில் வெளியான விஜய் பட போஸ்டர் தானே முன்னோடி? அப்போ காமிக்ஸ் கதாசிரியர் செர்ஜ் சோரோகின் தானே காப்பி அடித்திருப்பார்?

அதுதான் கிடையாது. இந்த காமிக்ஸ் இதழின் அட்டை ஒரு வருடத்திற்கு முன்பாகவே வெளிவந்துவிட்டது. ஆகவே, இயக்குனர் விஜய் தன்னுடைய “பெருமையை” தக்க வைத்துக்கொள்ளலாம்.

பின்குறிப்பு: இந்த காமிக்ஸ் ஒரு நல்ல முயற்சி. இதன் டவுன்லோட் லின்க் ஆன்லைனில் எங்கோ கிடைக்கிறதாம். தேடிப்பிடித்து படியுங்கள். அல்லது என்னைப்போல இந்த புத்தகத்தை பதிப்பகத்திடமிருந்தும் வாங்கியும் படிக்கலாம்.

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Monday, May 3, 2010

தமிழ் காமிக்ஸ் உலகில் சுறா

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். நேற்றைய "தல" பதிவானது தமிழ் காமிக்ஸ் உலகில் பல அதிரடி மாற்றங்களை கொணர்ந்துள்ளது.

அதாகப்பட்டது, பல (உண்மையிலேயே) இளைய தளபதி டாக்டர் விஜய் ரசிகர்கள் நமக்கு மின்னஞ்சல் அனுப்பி நீங்கள் "தல" ரசிகரா? அதனால் தான் சுறா ரிலீஸ் ஆகும் தருணத்தில் "தல" பற்றிய பதிவினை இட்டு (இன்னமும் இருக்கும்) இளைய தளபதி டாக்டர் விஜய் ரசிகர்களை மனம் நோகச் செய்கிறீர்கள் - என்று வினவினார்கள். இந்த அரசியலில் கலக்க விரும்பாத ஒரு காரணத்தினால், இந்த பதிவானது இடப்பட்டுள்ளது. எனவே நமது காமிக்ஸ் உலகில் இதுவரை "சுறா"வை மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு.

என்னிடம் இருக்கும் புத்தகங்களிலேயே இதுதான் முதல் சுறா படக்கதை. அதனால் இந்த அட்டைப்படத்தினை முதலில் அளித்துள்ளேன். இந்த புத்தகம் ஒரு கிடைத்தற்கரிய புத்தகம். இந்த புத்தகத்தினை கனவுகளின் காதலர் (கவனித்தீர்களா மரியாதையை - ர்) போன்ற ரசிகர்கள் முதலில் கடையில் வாங்கி படித்திருக்கவும் வாய்ப்புண்டு. ஹாஜா, காதலர், முத்து விசிறி போன்ற நண்பர்கள் அந்த அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டால் சுகம்.

இந்த புத்தகத்தினை நான் முதலில் பார்த்தபோது லாரன்ஸ் டேவிட் ஜோடி சாகாசம் போலிருக்கிறது என்றெண்ணி விட்டேன். அட்டையில் இருக்கும் லோதரை பார்க்கையில் டேவிட் போலவே இருந்தது (கிறது?).

முத்து காமிக்ஸ் - மந்திரவாதி மாண்டிரெக் கதை - குறும்புக்கார சுறாமீன் – Issue No 77 – 15th June 1978

Kurumbukaara Surameen

என்னிடம் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் மற்றுமொரு புத்தகம் இது. இதுவும் கிடைத்தற்கரிய ஒன்றே ஆகும். இதனை எல்லாம் ரீபிரின்ட் செய்ய சொன்னால் நன்றாக இருக்கும். ஆனால் கடந்த முத்து காமிக்ஸ் (மாண்டிரெக் சாகசம்) விற்பனை நிலையை சற்றேன்ணினால் வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு என்றே தோன்றுகிறது.

முத்து காமிக்ஸ் - மந்திரவாதி மாண்டிரெக் சாகசம் - விண்ணில் நீந்தும் சுறா – Issue 81 – 15th Oct 1978

Vinnil Neendhum Sura

நான் படித்த முதல் ஒரு ருபாய் முத்து காமிக்ஸ் இதுதான். இந்த கதையில் ஜார்ஜ் உடன் வரும் ஒரு பெண் பாத்திரம் என் மனதை கவர்ந்த ஒரு பாத்திரம் ஆகும். இந்த கதை இதுவரை ராணி காமிக்ஸில் வரவில்லை என்பது கூடுதல் தகவல்.

முத்து காமிக்ஸ் - ஜார்ஜ் சாகசம் - ராணி காமிக்ஸ் ஜானி - சுறாமீன் வேட்டை – Issue 128 – 01st Sept 1981

Surameen Vettai

நான் வாங்கிய முதல் ராணி காமிக்ஸ் இதுவே. வேவு வீரர் ஜேம்ஸ் பான்ட் என்னை மிகவும் கவர்ந்த ஒரு ஹீரோ. அதுவும் அந்த முரட்டு கத்யாவை கவர அவர் படும்பாடு இருக்கிறதே, அப்பப்பா சொல்லி மாளாது. பல கிளுகிளுப்பான காட்சிகள் நிறைந்த கதை என்பதை சொல்லவும் வேண்டுமோ?

ராணி காமிக்ஸ் - வேவு வீரர் 007 ஜேம்ஸ் பான்ட் சாகசம் - சுறா வேட்டை – Issue No 7

Rani Comics Sura Vettai

உலகிலேயே ராணி காமிக்ஸில் தான் ஒரே பெயரில் பல கதைகள் அட்டைப்படத்திலேயே வந்துள்ளது என்றெண்ணுகிறேன். அதற்க்கு உதாரணம் இதோ:

ராணி காமிக்ஸ் - முகமூடி வீரர் மாயாவி -அடுத்த வெளியீடு விளம்பரம் 

ராணி காமிக்ஸ் - முகமூடி வீரர் மாயாவி- சுறா வேட்டை 

Rani Comics 331 Sura Vettai Next Issue Ad Rani Comics 332 Sura Vettai 1st Page

ஆம், ஆரம்ப காலத்தில் ஜேம்ஸ்பான்ட் எப்படி ராணி காமிக்ஸை காப்பாற்றினாரோ, அதைப்போலவே பிற்காலத்தில் மாயாவியும் ராணியை காப்பாற்றினார். இது மாயாவியின் சுறா வேட்டை.

ராணி காமிக்ஸ்-முகமூடி வீரர் மாயாவி-விறுவிறுக்க வைக்கும் படக்கதை-சுறா வேட்டை-படிக்க தவறாதீர்கள்

Rani Comics 332 Phantom Sura Vettai Cover

dr 7

இந்த இடத்தில் பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களைப் பற்றி சொல்லியே தீரவேண்டும். தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த விஷயம் (நன்றாக கவனிக்கவும் - விடயம் இல்லை) என்னவென்றால் அவர் ஒரு மருத்துவர் விஜய் ரசிகர் என்பது. ஆனால் தெரியாத விஷயம் என்ன என்றால் அவர் கடந்த மருத்துவர் விஜய் படமாகிய வேட்டைக்காரனை தியேட்டரில் பிளாக் டிக்கெட் கொடுத்து பார்த்தார் என்பதே. அந்த தருணத்தில் அவர் வெளியிட்ட இரண்டு பதிவுகளும் வேட்டைக்கரனை பற்றியதே. முதல் பதிவு வேட்டைக்காரன் திரை விமர்சனம். (படிக்க இங்கே அமுக்கவும் - அமுக்கினால் தனியாக வரும்) இரண்டாவது பதிவு - வேட்டைக்காரியை பற்றியது. அது ஒரு கசமுசா பதிவாகும், அதனை படிக்க இங்கே கிளிக்கவும். இதோ தமிழ் காமிக்ஸில் வந்த வேட்டைக்காரன் அட்டைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

ராணி காமிஸ் - முகமூடி வீரர் மாயாவி - வேட்டைக்காரன் 1

ராணி காமிஸ்-முகமூடி வீரர் மாயாவி  வேட்டைக்காரன் 2

Rani Comics Vettaikkaran 1 Rani Comics Vettaikkaran 2

சரி, ஏதோ சென்ற படத்தை தான் பிளாக் டிக்கெட்டில் பார்த்தார் என்றால் இந்த சுறா படத்தை சுமார் இருநூறு கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து தனியாக (ஆமாங்க, தனி ஆளாக - ஒண்டியாக) இந்த படத்தை முழுவதுமாக பார்த்து விட்டு செய்கூலி சேதாரம் இல்லாமல் திரும்பி வந்துள்ளார் என்பதே இந்த பதிவில் நாம் கூற விரும்பும் முக்கிய கருத்து.

வாழ்க டாக்டர் செவன், வளர்க அவரது தைரியம். உண்மையிலேயே நாம் அவரைப்பாராட்டியே தீர வேண்டும். எத்துனை தைரியம் இருந்தால் இப்படி ஒரு காரியத்தை தனியாக செய்திருப்பார். இதற்காகவே எஸ்.எ. சந்திரசேகரா அவர்கள் இவருக்கு தனியாக ஏதாவது ஒரு விருது வழங்க வேண்டும். அல்லது நாம் அனைவரும் சேர்ந்து ஜனாதிபதிக்கு மனு போட்டு நமது நாட்டின் உயரிய வீரச்செயலுக்கு வழங்கப்படும் பரம் வீர் சக்ரா போன்ற விருதகளையாவது வழங்க ஆவன செய்ய வேண்டும்.

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,  
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Related Posts with Thumbnails