பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். இன்று மே தினம். அதாவது உழைப்பாளர் தினம். அதாவது உழைப்பாளர்களின் பெருமையை உலகுக்கு காட்டும் தினமாகும். இந்த நாளில் அனைத்து அரசாங்க மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கும் விடுமுறையாகும். ஆனால், உழைப்பாளர் தினத்திலேயே உழைக்கவில்லைஎனில் மற்ற நாளில் என்ன உழைப்பீர்கள்? என்ற கேள்வியுடன் நண்பர் திரு அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்கள் விடாபிடியாக இன்றும் தன்னுடைய கடமையை செய்ய பணிக்கு சென்றுள்ளார். அவர் வாழ்க, அவருடைய கடமை உணர்ச்சி வாழ்க.
இந்த உழைப்பாளர் தின நாளில் பிறந்தவர்தான் நம்முடைய அல்டிமேட் ஸ்டார் அஜித். அவரை ரசிகர்கள் செல்லமாக "தல" என்று அழைப்பார்கள். இந்த நாளில் அவரின் பிறந்த நாளை போற்றும் விதமாக இந்நாளில் நமது காமிக்ஸ் உலகில் இதுவரை "தல"யை மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு.
முதன் முதலில் நான் படித்த "தல" கதை டெக்ஸ் வில்லர் தோன்றும் (அறிமுகமாகும்) தலை வாங்கி குரங்கு. எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது அந்த நாள். டெக்ஸ் கூட ஒரு ஜென்டில் மென் ஹீரோதான் (ஆனால் நண்பர் கனவுகளின் காதலன் அவர்கள் எப்போது டெக்ஸின் கப்படிக்கும் சட்டையை பற்றியே கூறுவதால் ஒருவேளை அவர் இத கருத்தில் இருந்து மாறுபடலாம்). நம்ம தல போல வருமா என்று பாடல் வரும்போது எனக்கு என்னமோ டெக்ஸ் தான் நினைவுக்கு வருகிறார்.
லயன் காமிக்ஸ் - முதல் டெக்ஸ் கதை - தலை வாங்கி குரங்கு | லயன் காமிக்ஸ் - முதல் டெக்ஸ் கதை - தலை வாங்கி குரங்கு |
அடுத்தபடியாக நான் கடையில் வாங்கிய திகில் காமிக்ஸ் இதழ் - தலையில்லா ராஜா. இதில் வரும் ஒரு கதையை நண்பர் ஒருவர் பல வருடங்களாக பதிவிடுகிறேன் என்று சொல்லியே நாளை கழித்து வருகிறார். இந்த புத்தகம் ஒரு அரிய புத்தகம் ஆகும். கிடைத்தால் என்ன விலையாயினும் வாங்கி விடுங்கள்.
திகில் காமிக்ஸ் - கருப்பு கிழவி கதைகள்-தலையில்லா ராஜா | திகில் காமிக்ஸ் - கருப்பு கிழவி கதைகள்-தலையில்லா ராஜா |
பிறகு ராணி காமிக்ஸில் முகமூடி வீரர் மாயாவி (மாயாவி குத்து கும்மாங்குத்து - மறக்க முடியுமா?) தோன்றும் தலை வெட்டி மன்னன் கதை. இது போன்ற மொக்கையான மொழிமாற்றத்தை யாரும் படித்திருக்கவே இயலாது. என்ன கொடுமை என்றால் கடந்த ஜெனரேஷனில் வந்த பல காமிக்ஸ் ரசிகர்கள் இது போன்ற மொக்கை கதைகளைத்தான் நினைவில் கொண்டிருக்கிறார்கள்.
ராணி காமிக்ஸ் - முகமூடி வீரர் மாயாவி தோன்றும் தலை வெட்டி மன்னன் - மொக்கை தமிழாக்கம் |
இந்த கதை வேவு வீரர் ஜேம்ஸ் பான்ட் தோன்றும் மொட்டை தலை ஒற்றன் கதையாகும். இந்த கதையையும் இதன் ஆங்கில மூலக்கதையையும் படித்தவர்கள் கேட்ட முதல் கேள்வி இதுதான்: "மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் என்னையா சம்பந்தம்?". அந்த அளவுக்கு பல வர்ணனைகள் இந்த கதையில் இருக்கும். மறக்க முடியாத ஒரு ஜெம்: கிளைமாக்சில் ஜேம்ஸ் பான்ட் கூறுவது: "இந்த ஜாடிக்கு மூடி தேவை இல்லை".
ராணி காமிக்ஸ் - வேவு வீரர் 007 - மொட்டை தலை ஒற்றன் - என்னாமா டைட்டில் வைக்கிறாங்கோ? |
நான் முத்து காமிக்ஸில் ரசித்து படித்த கதை இந்த கதையாகும். தமிழில் நான் படித்த லாரன்ஸ் டேவிட்டின் முதல் கதை இதுவே. மறக்க முடியாத ஒரு வில்லன் பாத்திரம் இந்த கதையில் வருவார். மிஸ்டர் XYZஐ மறக்க முடியுமா தோழர்களே?
முத்து காமிக்ஸ் - சி.ஐ.டி. லாரன்ஸ் & டேவிட் சாகசம் - தலை கேட்ட தங்க புதையல் |
ஒரு அற்புதமான ஆக்ஷன் சீன் எப்படி அட்டைப்படமாக மாறுகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் ஆகும். காமிக்ஸ் கிலாசிக்சில் வந்த இந்த அட்டைப்படதினை பற்றிய விரிவான பதிவினை விரைவில் (ஒரிஜினல் ஒலக காமிக்ஸ் ரசிகன் ஸ்டைலில்) நீங்கள் படிக்கலாம். குறிப்பாக டேவிட் எப்படி ஆபரேஷன் செய்யப்பட்டு மாறுகிறார் என்பதே முக்கிய அம்சம். மறந்து விடாதீர்கள்.
காமிக்ஸ் கிளாசிக்ஸ் - சி.ஐ.டி. லாரன்ஸ் & டேவிட் சாகசம் - தலை கேட்ட தங்க புதையல் |
நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?
உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?
நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.
மீ த ஃபர்ஸ்ட்டு!
ReplyDeleteபதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!
//பதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்//
ReplyDeleteஇதே வேலையாப் போச்சு. இருந்தாலும் வருகைக்கு நன்றி.
கலக்குங்க
ReplyDeletehai
ReplyDeleteஅருமை.
ReplyDeleteதலைக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
ராணி காமிக்ஸில் தலை வெட்டி கூட்டம் என்றும் ஒரு கதை வந்ததாக நினைவு.
ReplyDeleteதிரு அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் கடமை உணர்ச்சிக்கு "தல" வணங்குகிறேன்.
ReplyDelete// இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?//
ReplyDeleteஇதே வேலையாப் போச்சு. அடங்கவே மாட்டீர்களா?
ஒலக காமிக்ஸ் ரசிகா!
ReplyDeleteகட்டாயப்பணி கடுப்பேற்றிய நிலையில் 'தல' காமிக்ஸ் அட்டைகளை வெளியிட்டு சந்தோஷப்படுத்தி விட்டீர்கள்! 'தல' கதைகளில் தலைக் கேட்டத் தங்க புதையலும், தலைவாங்கிக் குரங்கும்தான் நெஞ்சை விட்டு நீங்காத கதைகள்!
//அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் said...
ReplyDeleteMay 1, 2010 11:59 PM//
இந்த பின்னிரவு நேரத்திலும் கூட அய்யம் சார் முழிதிருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது.
ஒலக காமிக்ஸ் ரசிகரே, தல பதிவரே, உமக்கிலை நிகரே.
ReplyDeleteதலைகேட்ட தங்கப்புதையல் நல்லதொரு ஆக்ஷன் கதை. அதனை நீங்கள் உங்கள் பாணியில் விரைவில் தரவிருப்பது தல சிறந்த முயற்சி.
இதோ வழமையான காதலன் ஆராய்ச்சிக் கேள்வி.
தல இல்லாக் குரங்கு அட்டைப் படத்தில் குதிரையின் முதுகில் விரிக்கப்பட்டிருக்கும் பச்சை துண்டின்மேல் ரோஜா வண்ணத்தில் துருத்திக் கொண்டிருக்கும் வஸ்து என்ன? :))
//இதோ வழமையான காதலன் ஆராய்ச்சிக் கேள்வி.
ReplyDeleteதல இல்லாக் குரங்கு அட்டைப் படத்தில் குதிரையின் முதுகில் விரிக்கப்பட்டிருக்கும் பச்சை துண்டின்மேல் ரோஜா வண்ணத்தில் துருத்திக் கொண்டிருக்கும் வஸ்து என்ன? :)//
OMG.................
'தல' க்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
ReplyDelete\\இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?\\
போதும்னு நினைக்கிறேன். அப்பிடீன்னு சொன்னா விடவா போறீங்க. நடத்துங்க ரசிகரே
அருமையான அட்டைப் படங்கள். நன்றி. இதில் டெக்ஸ் கதையை தவிர மற்றவைகளை நான் வாசிக்க கிடைக்கவில்லை.
ReplyDeleteஅருமையான அட்டைப் படங்கள். தலக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteடெக்ஸ் வில்லரின் Lonesome Rider
ஆசிரமத்தின் ஆசிர்வாதங்கள் உங்களுக்கு உண்டு.
ReplyDelete