பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். சென்ற பதிவானது பெருவாரியான மக்களையும், காமிக்ஸ் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது கண்கூடாக தெரிந்தது. அதே சமயம் பதிவு இடுவதில் ஏன் ஒரு தொய்வு என்று கேட்டும் பல மின் அஞ்சல்கள். என்னுடைய பனி நிமித்தமாக நியூசிலாந்து சென்று மூன்று மாதங்கள் அங்கேயே தங்க வேண்டிய சூழல். அதனாலேயே இந்த தாமதம். இனிமேல் தொடர்ந்து பதிவிட முயல்கிறேன்.
சமீப காலங்களில் காமிக்ஸ் பற்றிய விழிப்புணர்வு பெரிதும் வந்துள்ளது. அமெரிக்க தமிழ் FM ரேடியோவில் என்னை பேட்டி கண்டபோது நான் சில காமிக்ஸ் தளங்களை பற்றி குறிப்பிட்டு பேசி இருந்தேன். அந்த தளங்களை பற்றிய விவரம் தமிழர்களிடையே பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக முத்து விசிறியின் தளம். அப்போது முதல் பலரும் பழைய காமிக்ஸ்களை வாங்குவது பற்றியே எனக்கு மின் அஞ்சல் அனுப்பி வருகின்றனர். அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த பதிவு இடப்பட்டுள்ளது.
காமிக்ஸ் நண்பர் நிதர்சன் – 9677142992:
திருச்சியை சேர்ந்த தமிழ் காமிக்ஸ் ரசிகராகிய திரு நிதர்சன் அவர்கள் சென்னையில் தங்கி உள்ளார். அவர் தற்போது மறுபடியும் பனி நிமித்தம் காரணமாக அயல்நாடு செல்ல இருப்பதால் அவரிடம் இருக்கும் பல காமிக்ஸ் புத்தகங்களை விற்பனை செய்ய நினைக்கிறார். வழக்கமாக நாம் காமிக்ஸ் விற்பனை செய்பவர்களை ஊக்குவிப்பதில்லை. ஆனால் நண்பர் நிதர்சன் சற்றே வித்தியாசமானவர். கண்டபடி விலை பேசும் கயவர்களிடையே இவர் நேர்மையாக புத்தக விலை என்னவோ அதனையே கொடுத்தால் போதும் என்று விற்கிறார். அவரை தொடர்பு கொள்ளுங்கள். அவரிடம் இருக்கும் புத்தகங்களின் போட்டோக்கள் இதோ:
லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் இருக்கும் புத்தகங்கள்: 04562 272649
இன்றுகூட கிங் விஸ்வா'வின் தமிழ் காமிக்ஸ் உலகத்தில் ஒருவர் வந்து பழைய காமிக்ஸ் எங்கே கிடைக்கும் என்று கேட்டு இருக்கிறார். அவர்களுக்கு எல்லாம் பதிலாக இந்த பத்தி:
கடந்த பதினைந்து வருடங்களில் வந்த லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் மற்றும் காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ்களை லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் இருந்து நீங்கள் தபால் மூலம் வாங்கலாம். நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் எந்தெந்த புத்தகங்கள் வேண்டும் என்பதை (கீழ்க்காணும் லிஸ்ட்'டில் இருந்து) முடிவு செய்து அவற்றின் மொத்த விலைக்கு மணி ஆர்டரோ அல்லது காசோலையோ அனுப்பினால் உடனடியாக லயன் காமிக்ஸ் ஆபீசில் இருந்து உங்களுக்கு புத்தகங்களை அனுப்பி வைப்பார்கள்: புத்தகங்களின் பட்டியல் இதோ:
நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சென்ற பதிவைப்போல சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா? இல்லை, இதுபோலவே நம்ம பழைய ஸ்டைலில் பல அறிய தமிழ் காமிக்ஸ்களை உங்கள் பார்வைக்கு வழங்கலாமா? நீங்கள் கூறுங்கள். முடிவெடுப்போம்.
உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?
நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.
Good Post Friend.
ReplyDeleteநானும் லயன் காமிக்ஸ் நிறுவனத்திற்கு இரண்டு தடவைகள் பணம் அனுப்பி புத்தகங்களை பெற்றேன். எனது பெரியப்பா இந்தியா வரும்போதுதான் இப்படி பணம் கட்டி எனக்காக வாங்கித்தந்தார். புத்தக பார்சலை பிரிக்கும் போது ஏற்படும் அனுபவம் இனிமையானது :)
ReplyDeleteஅனைத்து புத்தங்களும் விற்பனையாகிவிட்டன.
ReplyDeleteநானும் சிறு வயதில் விரும்பி விரும்பி சித்திரக் கதைகள் (காமிக்ஸ்) படித்தவன்தான். ஆனால் உங்கள் அளவுக்கெல்லாம் இல்லை. காரணம் எனக்கு அப்பொழுது அவ்வளவு காமிக்ஸ்கள் கிடைக்கவில்லை. மேலும் காமிக்ஸை விட எனக்கு வாண்டுமாமாவின் கதைகளும், பூந்தளிரும், கோகுலமும் மிகவும் பிடித்திருந்தன. நீங்கள், கிங் விஸ்வா, டாக்டர்.செவன், அய்யம்பாளையத்தார் போன்றோர் இப்படி மீண்டும் மக்களிடையே காமிக்ஸ் ரசனையை வளர்க்க முயல்வது எனக்கு மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காக நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
ReplyDeleteerumbu kai mayavi books venum. eppadi panum anuppanum?---- Rajesh Chennai
ReplyDeleteRatna bala old tamil childrens magazine now it is comming or closed the shatter?
ReplyDeleteரத்னா பாலா இப்போது வருவதில்லை.
ReplyDeleteஇரும்புக்கை மாயாவி காமிக்ஸ் வாங்க லயன் காமிக்ஸ் அலுவலகத்தை அணுகவும்: தொலைபேசி எண் 04562 272649
வாண்டு மாமா காமிக்ஸ் மொத்தமாக எங்கே கிடைக்கும் என்று தயவுசெய்து சொல்ல முடியுமா ப்ளீஸ். அதுபோல பழைய கோகுலம் இதழ்களில் வந்த பலே பாலு போன்ற காமிக்ஸ் பற்றியும் தயவுசெய்து குறிப்பிடவும்
ReplyDeleteYou may able to get "பலே பாலு" along with "kushi vaali harish" and "samathu saaru" from Vanathi pathippagam. Price is around Rs. 150
ReplyDeletehttp://lh3.ggpht.com/_ymLqylrIhm4/S5Y89wFVc8I/AAAAAAAAD7k/QnMaBOYuYx8/s1600-h/DSC014172.jpg
Below is the address.
Vanathi pathippagam
Address: 23, Deenadayalu Street, T.Nagar , Chennai- 600017 , Tamil Nadu
Landmark: Near T Nagar Head Post Office
Phone: (044) 24310769 , (044) 24342810
unmayil naan comics padikka aarambithathu naan 5th padikkumbothu.. comics books kaaranamayai engal nanbarkalakkul nigazndha sandaigal yeralam. ippothu ninaithal sirippu varugirathu. cycle eduthukondu siru vayathileye comics books vaanga pala nanbargal veedukalukku sendrathellam gnabagam varugirathu
ReplyDeletenalla muyarchi nanbare!
ReplyDeleteஅருமையான வலைப்பூ ! வாழ்த்துக்கள் நண்பா !
ReplyDeleteஉங்கள் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.
ReplyDeleteபழைய கோகுலம் இதழ்களை படிக்க வாய்ப்புள்ளதா? கதை: ஆனந்தி; படம்: வினு கதைகளின் தரமும், அருமையும் இப்போது உள்ளது போல் தெரியவில்லையே?
ReplyDeleteI need total collection of poonthalir magazine &parvathi chitra kathaigal.where i can get it.pls guide me.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதிகில் காமிக்ஸ் என நினைவு தங்கவில்லாளி என்ற காமிக்ஸ் இன்றும் என் நினைவில் அடிக்கடி வரும் அதேபோல துப்பறியும் ஜானியின் கதையில் ஒரு வில்லன் மூளையை ஆள் மாறி மாறி மாற்றிகொண்டு போலீஸ்ல் சிக்காமல் தப்பிப்பான் பிரமாதமான கதை அது
ReplyDeleteசார் உங்கள் பதிவுக்கு நன்றி.மேலும் ராணி காமிக்ஸ் இப்போது லயன் காமிக்ஸ் போல் கிடைக்குமா..தயவுசெய்து தகவல் தரவும்
ReplyDelete