Thursday, April 14, 2011

சித்திரை முதல் நாள் - சிறப்பு பதிவு - எரிந்த மனிதன்

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். சென்ற பதிவானது பெருவாரியான மக்களையும், காமிக்ஸ் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது கண்கூடாக தெரிந்தது. ஆனால் அதே சமயம் ஒலக காமிக்ஸ் ரசிகரின் பழைய ஸ்டைல் பதிவுகள் வேண்டும் என்றும் பல்லாயிரக்கணக்கான வேண்டுகோள்கள் வந்த வண்ணம் இருக்கின்றன (ங்கொப்புரானே சத்தியமா). ஆகையால் இதோ பழைய பாணியில் ஒரு சிறப்பு பதிவு. இந்த பதிவானது இன்று பிறந்த நாள் கொண்டாடும் நம்ம காமிக்ஸ் உலகின் 'முடி' சூடிய மன்னராகிய கிங் விஸ்வாவிற்கு அர்ப்பணம். 

முத்து காமிக்ஸ் இதழ்களில் வெளிவந்த கதைகளில் இரும்புக்கை மாயாவிக்கு பிறகு மிகவும் புகழ் பெற்ற கதை வரிசை லாரன்ஸ் டேவிட் மற்றும் ஜானி நீரோ ஸ்டெல்லா ஆகும். அதுவும் ஜானி நீரோ மற்றும் ஸ்டெல்லா கதையில் வரும் கர்னல் ஜேக்கப் கதாபாத்திரம் மிகவும் சிறப்பு பெற்றது. அவர் ஜானி நீரோவை சந்திக்க வருவது, ஸ்டெல்லா அவர்களின் பேச்சை கேட்பது, ஸ்டெல்லாவை கழட்டி விட ஜானி நீரோ நினைப்பது, ஸ்டெல்லா எப்படியாவது ஜானி நீரோவுடன் ஒட்டிக்கொண்டு, பல சமயங்களில் ஜானி நீரோவை காப்பாற்றுவது என்று இந்த கதை சிறப்பாக செல்லும்.

அதைப்போலவே அகொதீக கழக சதிகளை முறியடிக்கும் இரட்டை உளவாளிகளான லாரன்ஸ் டேவிட்டையும் யாராலுமே மறக்க முடியாது. லாரன்ஸ் முழுக்க முழுக்க மூளை பலத்தையும், டேவிட் தன்னுடைய அசாத்திய உடல் வலுவையும் கொண்டு  அகொதீக கழக கண்மணிகளை வெற்றி பெரும் விதமே தனி பாங்கு. இந்த இரண்டு விதமான கதை வரிசைகளும் ஒன்றாக ஒரே கதையில் வந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு விபரீதமான சிந்தனையின் விளைவே இந்த பதிவு.

இந்த பதிவையும், இந்த முழு நீள காமிக்ஸ் கதையையும் படித்தது ரசிக்கும் முன்பு நீங்கள் நெடுநாள் முன்பு படித்த "தலை கேட்ட தங்க புதையல் (லாரன்ஸ் டேவிட் சாகசம்) + தங்க விரல் மர்மம் (ஜானி நீரோ சாகசம்)" ஆகிய இரண்டு கதைகளையும் சற்றே நினைவில் கொள்ளுங்கள். மிகவும் முக்கியம். அந்த இரண்டு கதைகளையும் நினைவில் கொண்டு வந்த பின்பு இந்த கதையை படிக்க செல்லுங்கள். அப்போதுதான் வசதி.

வரலாற்றின் பக்கங்களை கூர்ந்து படித்தவர்களுக்கு ஸ்பானிஷ் மன்னனாகிய ஹெர்னான் கோர்டஸ் படையெடுத்து அஸ்டெக் சாம்ராஜ்ஜியத்தை அழித்தது நினைவில் வரலாம். மேலும் விவரங்கள் அறிய இந்த இணைப்பில் படித்தது தெரிந்து கொள்ளுங்கள். இனிமேல் சற்றும் பொறுத்திராமல் உடனடியாக பொன்னர் சங்கர் படத்திற்கு போவோம், ச்சே பழக்க தோஷம்.  இனிமேல் சற்றும் பொறுத்திராமல் உடனடியாக பதிவிற்கு போவோம்.

பூவிழி காமிக்ஸ் - எரிந்த மனிதன் - கதை & படம் ஐஸ்வர்யா. முதல் பக்கம் - தலை கேட்ட தங்க புதையல் முதல் பக்கங்கள்
Poovizhi Comics Erindha Manidhan 1st Page

முதல் கட்டங்களில் வெறும் கொள்ளையர்களாக இருந்தவர்கள் கடைசியில் திடீரென்று அஸ்டெக் கொள்ளையர்களாக மாறிவிடுவது ஒரு திருப்பம் என்றாலும்கூட வரலாற்றை படித்தவர்களுக்கு அது ஒரு கசப்பான விஷம் (விஷமே மோசம், அதில் கசப்பான விஷம் என்றால் என்ன என்பதை இந்த கதையை முழுவதுமாக படித்தது தெரிந்து கொள்ளுங்கள்).

பை தி வே, இந்த பக்கங்கள் எல்லாம் அப்படியே தலை கேட்ட தங்க புதையல் கதையின் ஆரம்ப பக்கங்கள் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லையென்றே கருதுகிறேன். For those who came in late, முத்து காமிக்ஸில் வந்த தலை கேட்ட தங்க புதையல் என்ற கதையின் ஆரம்ப காட்சிகளை இவர்கள் அப்படியே தழுவி வரைந்து இருக்கிறார்கள். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் - இன்னமும் கூட லயன் காமிக்ஸ் ஆபீசில் காமிக்ஸ் கிளாசிக்ஸ் வரிசையில் வந்த தலை கேட்ட தங்க புதையல் வெறும் பத்து ரூபாய்க்கே கிடைக்கிறது. இல்லாதவர்கள் வாங்கி படியுங்கள். (Phone Number to Contact Lion Comics Office: 04562-72649).

பூவிழி காமிக்ஸ் - எரிந்த மனிதன் - கதை & படம் ஐஸ்வர்யா - இரண்டாம் பக்கம் - தலை கேட்ட தங்க புதையல்

Poovizhi Comics Erindha Manidhan 2nd Page

மக்கா, வழக்கமாக காமிக்ஸ் புத்தகங்களில் கதைக்கேற்ப படம் வரைவார்கள். ஆனால் இங்கேயோ நிலைமை தலைகீழ். என்ன படம் மாடலுக்கு கிடைத்ததோ அதற்கேற்ப கதையின் போக்கை அமைத்திருக்கிறார்கள். இந்த பக்கத்தில் கடைசி இரண்டு கட்டங்களில் இருந்து தலை கேட்ட தங்க புதையல் கதையில் இருந்து நம்ம கதை உடனடியாக ஒரு யூ டர்ன் போட்டு தங்க விரல் மர்மம் (ஜானி நீரோ, ஸ்டெல்லா மற்றும் கர்னல் ஜேக்கப்) கதைக்கு மாறிவிடுகிறது. ஒரே ஒரு கொடுமை என்னவென்றால் கதை மறுபடியும் தலை கேட்ட தங்க புதையல் படங்களிற்கு மாறும்போது ஸ்டெல்லா கதாபாத்திரத்தை (கிரே) ஆபரேஷன் செய்து பெண்ணாக மாற்றியது போல டேவிட் செய்யும் சண்டைகளை எல்லாம் ஸ்டெல்லா (கிரே) செய்வது போல வைத்து ஆணுக்கு இங்கே பெண் சளைத்தவள் இல்லை என்ற பாரதியின் வாக்கை மெய்ப்பிக்க முயன்று இருக்கிறார்கள். அதற்கே அவர்களை பாராட்ட வேண்டும்.

பூவிழி காமிக்ஸ் - எரிந்த மனிதன் - கதை & படம் ஐஸ்வர்யா - பக்கம் 3 - தலை கேட்ட தங்க புதையல்

Poovizhi Comics Erindha Manidhan 3rd Page

கர்னல் ஜேக்கப் பாத்திரம் தன்னுடைய பாத்திரத்தின் பெயர் ஜேக்கம் என்று கூறுவதில் இருந்தே அவர்கள் இந்த கதையை தங்க விரல் மர்மம் கதாசிரியருக்கு டெடிகேட் செய்திருப்பதை உணரலாம். அதிலும் அவர் நான் மன்னர் கோர்டசின் கொள்ளு பேரன் என்று கூறி வரலாற்றையே நானூறு வருடங்கள் முன் நகர்த்துகிறார். (கொய்யால, இந்த கதையில கூடவா லாஜிக் பார்கிறீர்கள்? என்று நீங்கள் உச்சஸ்தாயியில் கத்துவது கேட்கிறது). சரி, ஒக்கே, அப்படியே விட்டு விடலாம்.

பூவிழி காமிக்ஸ் - எரிந்த மனிதன் - கதை & படம் ஐஸ்வர்யா – பக்கம் 4 -

Poovizhi Comics Erindha Manidhan 4th Page

மெக்சிகோ வரைபடம் எல்லா கடைகளிலும் கிடைக்கும், அதுக்கு எதுக்கு இவர் அதனை தனியாக தரவேண்டும்? மெக்சிகோவில் என்ன பிரமிட்?  இந்த நவநாகரீக உலகில் நகரை வரவேற்பது போல எதற்கு ஒரு பாழடைந்த நகரம்? என்றெல்லாம் நீங்கள் கேட்பதை நான் இனிமேலும் கண்டுகொள்ளவே போவதில்லை. நீங்களும் கதையை மட்டுமே ரசியுங்கள். பாஸ், ரஜினி படத்திற்கு எதுக்கு கதை மற்றும் லாஜிக்? கதையானது இப்போது மறுபடியும் தலை கேட்ட தங்க புதையல் காமிக்சிற்கு மாறுகிறது. லாரன்சும் டேவிட்டும் கர்னல் XYZன் பாசறையில் இருந்து தப்பிக்க முயல்கின்றவேளை இது.

பூவிழி காமிக்ஸ் - எரிந்த மனிதன் - கதை & படம் ஐஸ்வர்யா – பக்கம் 5

Poovizhi Comics Erindha Manidhan 5th Page

இந்த சீகுவேன்ஸ் எல்லாமே முத்து காமிக்ஸ் தலை கேட்ட தங்க புதையல் கதையில் வருபவை. லாரன்ஸ் டேவிட் இருவரும் கேப்டன் XYZன் மறைவிடத்தில் தப்பிக்க முயல்வதில் இருந்து இந்த நிகழ்வுகள் நடைபெறுவதை பழைய காமிக்ஸ் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அதை கூட பொறுத்துக்கொள்ளலாம் பாஸ், ஆனால் டேவிட்டை இப்படி பெண் வடிவில் எப்படி பார்ப்பது என்று புகார் அளிக்க வேண்டாம். நிமிர்ந்த நன்நெஞ்சும், நேர் கொண்ட பார்வையும் கொண்ட பாரதியின் புதுமைப் பெண்ணாக டேவிட் விளங்குவது பெண்ணியவாதிகளுக்கு ஒரு வெற்றி.

பூவிழி காமிக்ஸ் - எரிந்த மனிதன் - கதை & படம் ஐஸ்வர்யா – பக்கம் 6 -

Poovizhi Comics Erindha Manidhan 6th Page

ஓநாய்களை பந்தாடி விட்டு தடியர்களை பந்தாட நம் ஜோடி ரெடி ஆகிறது. சமீபத்தில் நண்பர் கிங் விஸ்வா இந்த பதிப்பகத்தாரை நேரில் சந்தித்தது விட்டு வந்தாராம் (இன்னமும் வீடியோ இன்டர்வியூ எடுக்கவில்லை). ஒரு வேளை இந்த காமிக்ஸின் எடிட்டர் பூவிழியின் வாசத்தில் என்று தன்னுடைய காமிக்ஸ் நினைவுகளை பற்றி எழுதும்போது இப்படி எழுதுவாரோ? = அலெக்ஸ் & கிரே ஜோடியானது சேவாக் & டோனி ஜோடியை போல அதிரடிகளை தொடர்ந்து தந்து கொண்டே இருந்ததால் ஆண்டுமலரில் அவர்களுக்கு எரிந்த மனிதன் என்ற கதையில் வாய்ப்பு அளிக்கப்பட்டது & எரிந்த மனிதன் சற்றும் சோடை போகவில்லை. 'பளிச்' வெற்றி பெற்றது. 

பூவிழி காமிக்ஸ் - எரிந்த மனிதன் - கதை & படம் ஐஸ்வர்யா – பக்கம் 7 -

Poovizhi Comics Erindha Manidhan 7th Page

கதை இப்போது தங்க விரல் மர்மம் காமிக்ஸ் கதைக்கு மூவ் ஆகிறது. இனிமேல் சற்று விறுவிறுப்பாக செல்லும். கதையும் நடுப்பகுதியை நெருங்கி விட்டது. ஆமாம், எட்டாம் பக்கம் வந்து விட்டது பாருங்கள். கதை மொத்தமே பதினாறு பக்கங்கள்(தான்).

பூவிழி காமிக்ஸ் - எரிந்த மனிதன் - கதை & படம் ஐஸ்வர்யா – பக்கம் 8 -

Poovizhi Comics Erindha Manidhan 8th Page

மக்கள்ஸ், இனிமேல் நோ ரன்னிங் கமெண்ட்ரி. நீங்களே ஜாலியாக கதையை படியுங்கள். குறிப்பாக இந்த ஓவியங்களை ரசியுங்கள். அடுத்த எட்டு பக்கங்கள் இதோ உங்கள் மேலான பார்வைக்கு:

பூவிழி காமிக்ஸ் - எரிந்த மனிதன் - கதை & படம் ஐஸ்வர்யா – பக்கம் 9 To 16 -

Poovizhi Comics Erindha Manidhan 9th Page
Poovizhi Comics Erindha Manidhan 10th Page
Poovizhi Comics Erindha Manidhan 11th Page
Poovizhi Comics Erindha Manidhan 12th Page copy
Poovizhi Comics Erindha Manidhan 13th Page
Poovizhi Comics Erindha Manidhan 14th Page copy
Poovizhi Comics Erindha Manidhan 15th Page
Poovizhi Comics Erindha Manidhan 16th Page

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சென்ற பதிவைப்போல சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா? இல்லை, இதுபோலவே நம்ம பழைய ஸ்டைலில் பல அறிய தமிழ் காமிக்ஸ்களை உங்கள் பார்வைக்கு வழங்கலாமா? நீங்கள் கூறுங்கள். முடிவெடுப்போம்.

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,   
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

18 comments:

 1. மீ த ஃபர்ஸ்ட்டு!

  பதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 2. கிங் விஸ்வாவுக்கு எனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 3. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு, சித்திரைத் திருநாள், அம்பேத்கார் தின, விடுமுறை தின நல்வாழ்த்துக்கள்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 4. மக்கள்ஸ்,
  இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அதே சமயம் அனைவருக்கும் இனிய காமிக்ஸ் மறுமலர்ச்சி தின நல்வாழ்த்துக்கள்.

  அதாவது கிங் விஸ்வாவிற்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. பை தி வே, மீ தி அஞ்சாவது.

  ReplyDelete
 6. நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  விஸ்வாவிற்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

  நானும் ஒரு காமிக்ஸ் பதிவை இடுகிறேன். இன்றே.

  ReplyDelete
 7. வெல்கம் பேக், ஒலக காமிக்ஸ் ரசிகர்.

  ReplyDelete
 8. இனிமேல் டேவிட் அவர்கள் டேவிட் அம்மையார் என்றே அழைக்கப்படட்டும்.

  டேவிட் அம்மையார் என்றே அழைக்கப்படட்டும்.

  அம்மையார் என்றே அழைக்கப்படட்டும்.

  என்றே அழைக்கப்படட்டும்.

  அழைக்கப்படட்டும்.

  ReplyDelete
 9. ஒலக காமிக்ஸ் ரசிகரே...

  வெல்கம் பேக்!

  நீண்ட நாள் கழித்து பழைய ஸ்டைலில் ஒரு பதிவிட்டுள்ளீர்கள்! நன்றி!

  ஆனால் உங்கள் பதிவில் ஒரு பெரும் குறையுள்ளது!

  ஆக்சுவலி எரிந்த மனிதன் கதையைப் பார்த்து தானே தலை கேட்ட தங்கப் புதையல் கதையை காப்பியடித்திருக்க வேண்டும்!

  அதுவுமின்றி இந்த ஒரு கதையிலிருந்து அப்பட்டமாகக் காப்பியடித்துதான் லாரன்ஸ் & டேவிட் மற்றும் ஜானி நீரோ ஆகிய இருவேறு கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளனர்!

  9ம் பக்கத்திலிருந்து வரும் காட்சிகளை அப்படியே தங்க விரல் மர்மம் என்ற ஜானி நீரோ கதையில் அப்பட்டமாகக் காப்பியடித்திருப்பார்கள்!

  தமிழ் புத்தாண்டன்று, அதுவும் தமிழ் காமிக்ஸ் இனத் தானைத் தலைவனின் பிறந்த நாளன்று தமிழ் காமிக்ஸ்களின் வரலாற்றுச் சிறப்புக்களைப் பதிவு செய்யாமல் இது என்ன துரோகம்!

  100% உண்மையான பதிவுகளை இடும் நீங்கள் கூடவா சோரம் போய்விட்டீர்கள்?!!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 10. தலைவரே,
  சோரம் போனது நானல்ல, சோரம் போக நான் சேரனும் அல்ல. (அப்பாடா, ஒரு பன்ச் வசனம் சொல்லியாச்சு).

  என்னுடைய ஆரம்ப கால பதிவுகளை எடுத்து பாருங்கள். அதில் இன்னமும் பலர் வந்து விக்கிபீடியா லிங்க் எல்லாம் கொடுத்து "ஆதாரங்களை" காட்டி என்னை வியக்க வைக்கிறார்கள்.

  எது பகடி, எது உண்மை என்றே தெரியாத இந்த சோற்றிலடித்த பிண்டமான தமிழர்களிடையே காமிக்ஸ் பதிவிடும் என்னை நானே நொந்துக்கொள்கிறேன். இதுவே பல்கேரிய நாடாக இருந்தால் இந்நேரம் எனக்கு சிலை வைத்திருப்பார்கள். ருமேனிய மக்கள் எனக்கு பதிவுலக புக்கர் வழங்கி இருப்பார்கள். இங்கேயோ, அமானுஷ்ய புத்திரன் கூட என்னை மதிக்க மாட்டேங்கிறார்.

  நான் இன்று பூராவும் ஒரு அதிமுக்கியமான மொழிபெயர்ப்பு வேலையில் சோறு தண்ணியில்லாமல் மூழ்கி இருந்தேன். இப்போது கூட என் கண்கள் உடல் சோர்வினால் சொருகுகின்றன. இந்த நிலையில் எனக்கு மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கும் பின்னூட்டம் ஒன்றை எழுதியிருக்கிறீர்கள். பதிவர் என்றால் உங்கள் வீட்டு வேலைக்காரனா? நீங்கள் போன் பண்ணினால் எடுப்பதற்கு? நீங்கள் பின்னூட்டம் போட்டால் விளக்குவதற்கு?

  ReplyDelete
 11. அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!தமிழ் காமிக்ஸ் இனத் தானைத் தலைவனுக்கு இல்ல... இல்ல... தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  கதையை இன்னும் படிக்கவில்லை. இதன் ஆங்கில வடிவத்தை தமிழில் படித்து விட்டதால் படிக்க வேண்டிய தேவையும் இல்லை என்பது அறியாமல் புரிகிறது. (ஹைய்யா... எனக்கு இலக்கிய தரமாக எழுத வருகிறதே!)

  ReplyDelete
 12. //தலைவரே,
  சோரம் போனது நானல்ல, சோரம் போக நான் சேரனும் அல்ல. (அப்பாடா, ஒரு பன்ச் வசனம் சொல்லியாச்சு).//

  சேரன் அப்படின்னா கோயமுத்தூர் தேசமுங்களா.., அப்புறம் அந்த ஊரு ராஜாக்கள் பத்தி ஒரு படம் ஓடிட்டு இருக்குதுங்களே..,

  ReplyDelete
 13. கதை தானே தல்., அஸ்டெக் என்பதை புஸ்டெக் என்று வைத்திருக்கலாம்தான்

  ReplyDelete
 14. காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் (சற்றே தாமதமான) தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  விஸ்வாவிற்கு (சற்றே தாமதமான) பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

  வாண்டுமாமா அவர்களுக்கு (சற்றே முன்கூட்டிய) பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

  நீண்ட நாளைக்கு பிறகு ஒரே நாளில் இரண்டிற்கும் மேற்பட்ட பதிவுகளை ஒருங்கே காண்பதில் மகிழ்ச்சி.

  ReplyDelete
 15. டியர் ஒலக காமிக்ஸ் ரசிகர்,

  நேற்று உங்களுடைய பதிவுகளை படித்த பிறகுதான் சற்று மனம் லேசாகியது. நீண்ட நாட்களாக நல்ல சாப்பாடு கிடைக்காத ஒருவனுக்கு திடீரென்று ஒரு விருந்து கிடைத்தால் எப்படி இருக்கும்? எதையும் நிதானமாக சாப்பிடாமல், எல்லா உணவு வகைகளிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து எல்லாவற்றையும் சாப்பிட்டுவிடும் ஆர்வத்தில் இருப்பார்களே, அப்படித்தான் நேற்று உங்கள் எல்லா பதிவுகளில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சம் படித்தேன். என்னை வெகுவாகக் கவர்ந்தது உங்களுடைய மொழிபெயர்ப்பு.

  அந்தத் தலைப்புக் கதையை (எறிந்த மனிதன்) திரும்பத் திரும்பப் படித்தேன். எந்த இடத்திலும் ஒரு மொழிபெயர்ப்பைப் படிக்கிறேன் என்ற உணர்வே வரவில்லை. இந்தக் கதையை ஏற்கனவே படித்திருந்தும் நேற்றைய இரவு முழுவதையும் க்ரே ஆக்கிரமித்து விட்டாள்.

  அப்பொழுது அதிகாலை மணி இரண்டு!

  அன்புடன்,

  குரளி.

  திருவல்லிக்கேணி

  தேர்தல் தினம்.

  பின் குறிப்பு:

  நான் இன்னும் The Watchmen படிக்கவில்லை. இங்கு நான் கொடுத்திருப்பது எல்லாமே பூங்காவனம் மற்றும் உங்கள் பதிவிலிருந்து cut and paste செய்யப்பட்டதே.

  ஒரு வேண்டுகோள், The Watchmen இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப் படவில்லை என்று அறிகிறேன். யாரவது பாடாவதி மொழிபெயர்ப்பாளர் அதைச் செய்வதற்குள் நீங்களோ அல்லது பூங்காவனமோ அதைச் செய்து விடுங்கள். புண்ணியமாகப் போகும்.

  ReplyDelete
 16. மிஸ்டர் குரளி,

  நீங்கள் என்னிடம் ஒரே ஒரு டேக் வான் தோ கிக்காவது வாங்காமல் அடங்க மாட்டீர்கள் போல் தெரிகிறது. முதலில் பின்குறிப்புக்கு வருகிறேன். வாட்ச்மென்'ஐ நான் மொழிபெயர்க்கத் தயார். ஆனால் என்னுடைய நெருப்பு விரல் சி.ஐ.டி'யை வில் ஐஸ்னர் அல்லது நெயில் காமன் இருவரில் ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும். நெருப்பு விரல் சி.ஐ.டி தமிழில் கிடைப்பதால் மொழிபெயர்ப்பது அவர்களுக்கு சுலபம். இருவருமே புக்கர் பரிசு பெற்றிருப்பதால் அவர்களுக்கு என் பதிவை மொழிபெயர்க்க தகுதி இருக்கிறது என்பதில் எனக்கு ஐயமில்லை.

  நீங்கள் அதற்கு முதலில் ஏற்பாடு செய்யுங்கள். நான் வாட்ச்மென்'ஐ மொழிபெயர்க்கத் தயாராகி விடுகிறேன். மேலும், வில் ஐஸ்னர் மற்றும் நெயில் காமன் ஆகியோருக்கு என் பதிவுகளை மொழிபெயர்க்க வேண்டிய கடமையும் இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக நான் அவர்கள் இருவருக்கும் தமிழ்நாட்டின் கொள்கை பரப்புச் செயலாளராக (சம்பளம் இல்லாமல்) இயங்கி இருக்கிறேன். எனவே கேட்டுச் சொல்லுங்கள்.

  ReplyDelete
 17. கிங் விஸ்வா அவர்களுக்கு எனது தாமதமான எனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்! ;-)
  .

  ReplyDelete
 18. // தலைவரே,
  சோரம் போனது நானல்ல, சோரம் போக நான் சேரனும் அல்ல. (அப்பாடா, ஒரு பன்ச் வசனம் சொல்லியாச்சு). //

  அட்ரா சக்க
  அட்ரா சக்க
  அட்ரா சக்க ....... :))
  .

  ReplyDelete

என்னுடைய வலைப்பூவை நீங்கள் படிக்கவில்லையெனில், படித்தவுடன் உங்களின் எண்ணங்களை தெரிவிக்கவில்லை எனில் உங்களிடம் அடிப்படையாகவே ஏதோ தவறு உள்ளது

Related Posts with Thumbnails