மக்கள்ஸ்,
சாவு வீட்ல சன் மியூசிக் பாக்குற மாதிரி நல்ல இருக்குற நம்ம தமிழ் காமிக்ஸ் உலகத்துல கொஞ்சம் அதிகமாக ஆசைப்பட்ட ஒரு தீவிர காமிக்ஸ் ரசிகனின் கற்பனையே இந்த பதிவு. கொஞ்சம் ஆசை, கொஞ்சம் பேராசை இரண்டும் சேர்ந்த கலவை தான் இந்த பதிவு.
இங்கே பக்கத்துல தலை வாங்கி கையில கத்தியோட வெட்ட காத்திருக்கிறது யார தெரியுமா? நம்மள மாதிரி காமிக்ஸ் ரசிகர்களைத்தான். என்னடா இது சவுக்கு தோப்பு சங்கீதக் கச்சேரில சவுண்ட் எஃபக்ட் கம்மின்னு கம்ப்ளைன்ட் பண்ற மாதிரி இருக்கேன்னு பாக்குறீங்களா? பதிவை முழுசா படிங்க. பின்னாடி தெரியும்.
தலை வாங்கி ஃபீவர்: கடந்த ஒரு மாதமாகவே தமிழகம் முழுவதும் தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதுமாக தலை வாங்கி எங்கே? தலை வாங்கி எப்போ வரும்? என்று ஒரு கதறலாக இருந்தது. அந்த கதறலை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் விதமாக நேற்று முதல் அனைவருக்கும் காமிக்ஸ் கிளசிக்ஸ் லேட்டஸ்ட் இதழ் தலை வாங்கி குரங்கு அனுப்பப் பட்டு இருக்கிறது. எனக்கும் வந்து விட்டது. ஆனால் பதிவிட வேண்டாம் என்று நண்பர் இரவுக் கழுகு கேட்டுக் கொண்டதின் விளைவாக அமைதியாக இருந்தேன். இப்போது கூட தலைவர் முத்து விசிறியின் இந்த பதிவை பார்த்து விட்டே ஆதங்கத்துடன் இந்த பதிவினை இடுகிறேன்.
நம்ம எடிட்டர் சார் மிகவும் நேர்த்தியாக காரணங்களை கூறினாலும் கூட தலை வாங்கியை கலரில் சந்திக்கவே ஆவல். பின்னே என்னங்க, கர்ணன் படமே மேம்படுத்தப்பட்டு அரங்கு நிறைந்த காட்சிகளாக தூள் கிளப்பும்போது தலை வாங்கிக்கு என்ன குறைச்சல்? ஒரு வேலை எடிட்டர் சார் தலை வாங்கியை கலரில் வெளியிட்டு இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற அதீத கற்பனையின் விபரீத விளைவே இந்த பதிவு:
தலை வாங்கிக் குரங்கின் முதல் பக்கம் - முழு வண்ணத்தில் வந்திருந்தால் எப்படி இருக்கும்?
எடிட்டர் சார் இப்படி பதிவிட்டதால் கலகக் குரல் கிளம்பி விட்டதாக நினைத்து விடாதீர்கள். இந்தப் பதிவுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. அந்த காரணத்தை உங்கள் பார்வைக்கு முன்வைக்கவே இந்த பதிவு.
தமிழ் காமிக்ஸ் வியாபாரிகள்: கடந்த பல ஆண்டுகளாக (தேங்க்ஸ் டு கிங் விஸ்வா மற்றும் அவரது பதிவுகள்) காமிக்ஸ் பற்றிய ஆர்வமும் puththaga சேகரிப்பும் அனைவரிடமும் தொற்றிக்கொண்டு விட்டது. அதனை சில புல்லுருவிகள் காமிக்ஸ் ரசிகர்கள் என்கிற பெயரில் தவறாக உபயோகிக்க ஆரம்பித்தார்கள். முதலில் அவர்கள் செய்தது டெக்ஸ் வில்லர் கதையாகிய இருளின் மைந்தர்கள் கதையை கலரில் நாங்கள் அச்சிட்டுள்ளோம், விலை ஐந்தாயிரம் ரூபாய்தான் என்று சில காமிக்ஸ் வெறியர்களை தூண்டில் போட்டு கொக்கியில் பிடித்ததுதான். நல்ல கவனியுங்க, வித்தவங்க மேல் தப்பு சொல்லல, வாங்குனவன் மேலேயும் தப்பு சொல்லல. ஆனால் அப்படி கலர் காமிக்ஸ் பற்றிய ஒரு வெற்றிடம் இருப்பதால் இந்த காமிக்ஸ் வியாபாரிகள் அதனை சிறப்பாக உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் வருகின்ற வேளையில் கூட இதே கும்பல் ஒரு காமெடி வேலையை செய்ய நினைத்தது. நல்லவேளையாக டாக்டர் செவனின் புண்ணியத்தில் அந்த வேலை அதோகதியாக அந்தரத்திலேயே நின்று விட்டது.இவர்களே நடுவில் இனிமேல் லயன் காமிக்ஸ் வராது என்றெல்லாம் கதை கட்டி விட்டதை அனைவரும் அறிவார்கள்.
இப்போது இவர்கள் செய்யும் பணி என்னவென்றால் லயன் காமிக்ஸ் இதழ்களில் எதெல்லாம் ரீபிரின்ட் ஆகிறதோ, அவற்றை எல்லாம் கலரில் ருபாய் ஐந்தாயிரம் என்று விற்று விட ஒரு பெரிய பிளான் போட்டு வேலை செய்துக்கொண்டு இருக்கிறார்கள். அதன் முதல் கட்டமே இந்த தலை வாங்கி குரங்கு கதையின் கலர் பிரின்ட்.
ஆமாம், இன்றுதான் எனக்கு தெரிய வந்தது. தலை வாங்கி குரங்கை ருபாய் ஐந்தாயிரம் கொடுத்தால் கலரில் படிக்கலாம். முழு புத்தகமும் கலரில் உள்ளது என்று ஒரு பெரிய மார்கெட்டிங் கும்பல் கிளம்பியுள்ளது. வாசகர்கள் ஜாக்கிரதை.
எடிட்டர் சாருக்கு ஒரு வேண்டுகோள்: சார், தயவு செய்து அடுத்து நீங்கள் வெளியிடவுள்ள டெக்ஸ் வில்லர் கதையை நீங்களே கலரில் வெளியிட்டு விடுங்களேன்? இந்த மாதிரி அத்தனைக்கும் ஆசைப்படுகிற எங்களை மாதிரி காமிக்ஸ் ரசிகர்கள் பலியாகாமல் இருப்போமல்லவா?
நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?
நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.
ஐயா ஒலக காமிக்ஸ் ரசிகரே,
ReplyDeleteகொளுத்தி போட்டாச்சா?
இதுல என்னங்க இருக்கு கொளுத்திப்போட?
Deleteஅதுசரி, நீங்க மட்டும் எப்புடி மூணுக்கு போகாம மிஸ்ஸிங்?
ஹா ஹா ஹா
Deleteஇருக்குமோ? என் மதுரை அலங்கா நல்லூர் நண்பர் இணைய தளத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதவர் இது மாதிரி சொன்னதால் எனக்கும் அதே ஐயம் உள்ளது .
ReplyDeleteஅப்புறம் அந்த காமிக்ஸ் முதல் பக்கம் நீங்க எப்படி கலரில் கொண்டு வந்துள்ளீர்கள் ? மிக நன்றாக உள்ளது. அடோப் மாதிரி ஏதாவது?
ReplyDeleteஅண்ணே,
Deleteபோட்டோ ஷாப் மற்றும் பெயின்ட் துணை கொண்டு நானே இவ்வாறு செய்தேன்.
என் கண்ணே பட்டு விட்டது தம்பி மிக மிக அருமையான வேலை நிச்சயமான வெற்றி உனக்கு உண்டு. நமது மிக அருமையான காமிக்ஸ்களை அவ்வப்போது இவ்வாறு வெளியிட்டு காமிக்ஸ் ரசிகர்களை தூண்டலாம். நன்றிகள் பல
Deleteஒரு புத்தகம் முழுவதையும் ஸ்கேன் செய்து கல்ர் போட்டு கஷ்டப்பட்டு விக்குறாங்களா ? 5000 கொடுக்கலாம்னு தோணுது :)) காண்டாக்ட் நம்பர் இருக்கா ?
ReplyDeleteரவியண்ணே,
Deleteஇந்த கலர் காமிக்ஸ் புத்தகங்கள் எல்லாம் இத்தாலி, பிரெஞ்ச் மற்றும் ஆங்கில மொழிகளில் இலவசமாகவே டவுன்லோட் கிடைக்கிறது.
அவற்றை தரவிறக்கம் செய்து ஒரு ஆபரேட்டரிடம் Rs 1000 கொடுத்து டைப்பிங் செய்து விட்டால் புத்தகம் ரெடி.
ஆனால் அவ்வாறு செய்வது இல்லீகல் வேலை. காபி ரைட் சட்டப்படி தவறு. தவறிற்கு நாம் துணை போகலாமா?
அவர் உங்கள மாதிரிதான் தூண்டில் யாருக்கோ?
Deleteகாமிக்ஸ் சாம் ராஜ்யம் வளமுடன் வாழ இது போன்ற முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் கண்டிப்பா கை கொடுக்கும் நல்ல விழிப்புணர்வு பதிவு நண்பா!
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் சைமன். உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.
Deleteநன்றி ஜாலி
Delete// நேற்று முதல் அனைவருக்கும் காமிக்ஸ் கிளசிக்ஸ் லேட்டஸ்ட் இதழ் தலை வாங்கி குரங்கு அனுப்பப் பட்டு இருக்கிறது. எனக்கும் வந்து விட்டது. ஆனால் பதிவிட வேண்டாம் என்று நண்பர் இரவுக் கழுகு கேட்டுக் கொண்டதின் விளைவாக அமைதியாக இருந்தேன். //
ReplyDeleteஅங்கேயும் ஒரு இரவுக் கழுகா ........................;-)
.
// எடிட்டர் சாருக்கு ஒரு வேண்டுகோள்: சார், தயவு செய்து அடுத்து நீங்கள் வெளியிடவுள்ள டெக்ஸ் வில்லர் கதையை நீங்களே கலரில் வெளியிட்டு விடுங்களேன்? இந்த மாதிரி அத்தனைக்கும் ஆசைப்படுகிற எங்களை மாதிரி காமிக்ஸ் ரசிகர்கள் பலியாகாமல் இருப்போமல்லவா? //
ReplyDeleteஆமா .
ஆமா ...
ஆமா ......... ;-)
.
இதற்கு பதிலாக "ராபிடெக்ஸ் ஸ்பானிஷ் டு தமிழ்" புத்தகத்தை வாங்கி, ஸ்பானிஷ் கற்று, நேரடி டெக்ஸ் கதைகளை அங்கிருந்து வரவழைத்து படித்துவிடலாம் :)
ReplyDelete-கார்த்திக்
Bladepedia
அண்ணாத்தே எங்கே கொஞ்ச நாளாவே நீங்களும் பயங்கரவாதியும் காணோம் :))
ReplyDelete.
அண்ணே இத்தன நாளா எங்கிருந்தீங்க நீங்க :))
ReplyDelete.
சிபி அண்ணே, கொஞ்சம் வேலை அதிகம் ஆயிடுச்சி. போன ஜாக்கி சான் படம் நாம தமிழாக்கம் செஞ்சதுதான். இப்போ மூணு பட வேளைகளில் பிசி.
Deleteஎந்த படம் பாஸ் ? 1911 ?
Deleteராம்குமார், சென்னை..
உலக காமிக்ஸ் ரசிகருக்கு என் வந்தனங்கள்
ReplyDeleteஉங்கள் தளத்தை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும், முகவரி கீழே இணைத்துள்ளேன்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2012/08/blog-post_16.html
அருமையான பகிர்வு... பாராட்டுக்கள்...
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
Follower ஆகி விட்டேன்… இனி தொடர்வேன்…
நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…