Tuesday, October 6, 2009

காமிக்ஸ் வேட்டைக்காரன் – ஐயாம் தி பேக்

அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். நீண்ட நெடு நாட்களுக்கு முன்னே நானும் ஒரு காமிக்ஸ் வலைப் பதிவன் என்று ஒரு நிலை இருந்தது. பின்னர் பணிச்சுமையும் வேறு சில சுமைகளும் என்னை இந்த வலையுலகம் வரவிடாமல் தவிர்த்தன. இதோ, நான் வந்து விட்டேன்.

காமிக்ஸ் டாக்டர் வேட்டைக்காரன் என்று ஒரு மொக்கை பதிவை வெளியிட்டு அது பாப்புலரும் ஆகி, ஹிட்ஸ்களை குவித்து விட்டார். ஆனால் உண்மையான காமிக்ஸ் வேட்டைக்காரன் நான் தான் என்பதை இந்த பதிவு உணர்த்தும்.

பதிவிற்கு செல்லும் முன் பழைய புத்தக சந்தை குறித்து தமிழ் காமிக்ஸ் வலையுலக பீஷ்ம பிதாமகர் முத்து விசிறி எழுதிய இந்த பதிவையும், இந்த பதிவையும் படித்து விட்டு வரவும்.

சமீபத்தில் நான் வாங்கியுள்ள  ஒரு அரிய புத்தகத்தின் புகைப்படங்கள் இவை. தமிழ் காமிக்ஸ் வேட்டையர்களின் HOLY GRAIL ஆன லயன் தீபாவளி சூப்பர் ஸ்பெஷல் தான் இது.

காமிக்ஸ் சந்தையில் மினிமம் ரூ:1500/-க்கு விற்கப்படும் இதை நான் வாங்கிய விலை என்ன தெரியுமா? வெறும் ரூ:20/-

என்ன, ஆச்சரியமா இருக்கா? நான் இதை வாங்கியது ஒரு பழைய புத்தக கடையில். அதுவும் c2c (காமிக்ஸ் வேட்டையர்கள் மொழியில் - அட்டை TO அட்டை, முழுமையாக, எந்த வித சேதாரமும் இல்லாமல் அற்புதமான பராமரிப்பு நிலையில்).

இதே போல் பழைய புத்தக கடைகளில் புத்தகங்களை ஐந்துக்கும், பத்துக்கும் வாங்கி விட்டு பின்னர் மனசாட்சியே இல்லாமல் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் (அட்டை இல்லாமல்… முதல் மற்றும் கடைசி 10 பக்கங்கள் இல்லாமல்…) அதை ஆயிரத்திற்கும், இரண்டாயிரத்திற்கும் விற்கும் சில முதலைகளை மக்கள் தயவு செய்து நம்பி ஏமாற வேண்டாம் என்பதற்காகவே இந்த பதிவு.

நமது அபிமான லயன் காமிக்ஸ் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் பழைய காமிக்ஸ் புழக்கத்திற்காக தொடங்கிய புக் மார்கெட் பகுதி தோல்வியடைந்ததற்கு இந்த முதலைகளே காரணம்.

சில புத்திசாலி பைத்தியங்கள் ஸ்கேன் செய்த CDகளுக்கும், ஜெராக்ஸ் போட்ட ராணி காமிக்ஸுக்கும் ஒரு புத்தகத்துக்கு ரூ:100/- கொடுத்து வாங்கியதாக தகவல். இது குறித்து லயன் காமிக்ஸ் ஆசிரியரே ஒரு முறை ஹாட்-லைனில் எழுதியுள்ளார்.

இதில் கொடுமை என்னவென்றால் ராணி காமிக்ஸ் (அது முதலாவது இதழாகவே இருந்தாலும்) அதிகபட்சம் ரூ:5/-க்கு மேல் போகாது என்பது பழைய புத்தக கடையில் புத்தகம் வாங்கிய எந்த ஒரு காமிக்ஸ் வேட்டையரும் அறிந்ததே.

பழைய புத்தகங்களுக்கு விலை நிர்ணயம் செய்வது அதை வாங்குவோரின் மனநிலை பொறுத்தது. தனக்கு தேவை படும் ஒரு புத்தகம் தனக்கு நியாயமானதாக தோன்றும் ஒரு விலை கொடுத்து அவர் வாங்குவதில் தவறொன்றும் இல்லை என வாதிடுவோர்கள் இருக்கலாம்.

ஆனால் நாம் கொடுக்கும் விலைக்கான சரக்கு உள்ளதா என்று பார்க்க வேண்டும். அதே போல் ஒருவர் வாங்கியதை வைத்து மற்ற புத்தகங்களும் அதே அல்லது அதை விட உயர்ந்த விலைக்கு, புத்தகம் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும், விற்பது பஞ்சமாபாதகம் என்பது என் கருத்து.

இது குறித்து முத்து விசிறி இட்டுள்ள பதிவுகளை படிக்க கீழே உள்ள சுட்டிகளை பயன்படுத்தவும்.

IMG_0051IMG_0053

இந்த புத்தகம் மட்டுமல்ல, கிடைக்கவே கிடைக்காது என்று இந்த காமிக்ஸ் வியாபார முதலைகள் சத்தியம் செய்யும் பல புத்தகங்கள் அதிர்ஷ்டம் இருந்தால் நிச்சயம் கிடைக்கும்.

கீழ்காணும் படம் நான் கடந்த இரண்டு வருடங்களில் சேகரித்த புத்தகங்கள். இதில் c2c புத்தகங்கள் மட்டுமே உள்ளன. இவை தவிர அட்டை இல்லாத பல புத்தகங்களை இந்த கால கட்டத்தில் நான் சேகரித்துள்ளேன். ஒரு புத்தகத்தின் அதிக பட்ச விலை ரூ:10/- மட்டுமே.

IMG_0056

இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளும் பாடம் என்னவென்றால் விடா முயற்சியுடன் பொறுமையும் காத்தால், சரியான வழியில் நேர்மையாக முயன்றால் நம்மால் குறைந்த விலையில் நிறைந்த காமிக்ஸ் இன்பம் (சிற்றின்பம், பேரின்பம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது) காண முடியும் என்பதே.

பி.கு. :

  1. தயவு செய்து யாரும் இந்த காமிக்ஸ்களை விலைக்கோ, இனாமாகவோ, அன்பளிப்பாகவோ, எக்ஸ்சேஞ்சுக்கோ கேட்டு பின்னூட்டங்களோ, மின்னஞ்சலோ அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்ள படுகிறார்கள்.
  2. இந்த பதிவு வழக்கத்திற்கு மாறாக ரொம்ப சீரியஸாக இருப்பதை கண்டு நீங்கள் மனம் நொந்திருக்கலாம். ஆனால் சமூக நலன் கருதி இந்த பதிவை வெளியிட வேண்டியதாகிறது. அடுத்த பதிவில் பேக் டு ஃபார்ம் வந்து விடுகிறேன். ஒகே? டண்.
  3. அதே போல் வழக்கமாக நான் செய்யும் எழுத்து பிழைகளும் இந்த பதிவில் காணாமல் போயிருப்பதை கண்டு நீங்கள் அப்படியே ஷாக் ஆகியிருக்கலாம். GOOGLE TRANSLITERATOR-னால் வந்த வினை அது. இப்போ நான் NHM WRITER-க்கு மாறிட்டேன். அப்போ நீங்க?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன், 
ஒலக காமிக்ஸ் ரசிகன்

-- If You Haven't Read this, There is Something Fundamentally Wrong With You.

Thanks in Advance.

Editor, Greatest Ever Comics.

Hell is for Heroes.

Related Posts with Thumbnails