Thursday, April 22, 2010

அய்யம்பாளயத்தாரின் அதிரடி அரசியல் பிரவேசம்

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். தமிழ் காமிக்ஸ் உலகில் பல பதிவர்கள் இருந்தாலும்கூட தனியிடத்தினை பிடித்தவர் திரு அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்கள். யாருக்கும் அஞ்சாமை, சீரிய சிந்தனை, நேர்மையான போக்கு, என்று பல குணாதிசயங்களை கொண்ட இவர் சுலபத்தில் அனைவரின் கருத்தினையும் கவர்ந்தவர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

தன்னுடைய காமிக்ஸ் பூக்கள் என்ற சிறுவர் இலக்கிய சிந்தனை வலைப்பூவிலேயே பல அனல் கக்கும் அரசியல் கருத்துக்களை அஞ்சாமல் அள்ளி வீசுபவர் அய்யம்பாளையம் சார் என்பது அவரின் வலைதளத்தினை தொடர்பவர்களுக்கு நன்றாக தெரியும். பல நாட்களாக தன்னுடைய கொள்கைகளை வகுத்துக்கொண்டிருந்த நண்பர் இப்போது அரசியல் உலகில் அடியெடுத்து வைக்கிறார். மிக, மிக விரைவில் கோட்டைக்கு போகப் போகும் அவரைப் பாராட்டி, இந்த நாளில் நமது காமிக்ஸ் உலகில் இதுவரை கோட்டைகளை மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு.

முதன் முதலில் விஜயன் சாரின் தயாரிப்பில் வந்த கோட்டை கதை இதுதான். இந்த கதையை ராணி காமிக்ஸ் மறுபடியும் வெளியிட்டார்கள். அட்டைப்படம் அட்டகாசம்.

லயன் காமிக்ஸ் Issue No 011 - மாடஸ்டி ப்ளைசி - மரணக் கோட்டை – Death of a Jester

Lion011MaranaKottai2

தொன்னூறுகளில் வெளிவந்த பார்வதி சித்திரக்கதை புத்தகங்களில் வாண்டுமாமா அவர்களின் சிறந்த கதைகள் வெளிவந்தன. அவற்றில் இரண்டு.

பார்வதி சித்திரக் கதைகள் - வாண்டுமாமா - ஓநாய்க் கோட்டை - அங்கதன் கோட்டை அதிசயம்

PCK Onaaik Kottai
PCK Angadhan Kottai Athisayam

ராணி காமிக்ஸ் இதழ்களில் பல கோட்டை சம்பந்தமான கதைகள் வந்தன. அவற்றில் சிலவற்றை உங்களின் பார்வைக்கு வைத்துள்ளேன்.

ராணி காமிக்ஸ் - ஆசிரியர் ராமஜெயம் - கிட கார்சன் சாகசம் - மரக்கோட்டை - அற்புதமான கதை

Rani Comics Marak Kottai

ராணி காமிக்ஸ் - ஆசிரியர் ராமஜெயம் - ஜூலி சாகசம் - பீரங்கிக் கோட்டை - சென்சார் செய்யப்பட்ட படங்கள்

Rani Comics Beerangi Kottai

ராணி காமிக்ஸ் - கொத்தியவர் அ.மா.சாமி - கோட்டைக்குள் குத்து வெட்டு - கிட கார்சன்

Rani Comics Kottaikkul Kuthu Vettu

ராணி காமிக்ஸ் - கொத்தியவர் அ.மா.சாமி - மர்மக் கோட்டை - பெண் சி.ஐ.டி மாடஸ்தி

Rani Comics Marma Kottai

ராணி காமிக்ஸ் - கொத்தியவர் அ.மா.சாமி - கடல் கோட்டை - நெஞ்சை அள்ளும் படக்கதை 

Rani Comics Kadal Kottai

ராணி காமிக்ஸ் - கொத்தியவர் அ.மா.சாமி - கடல் கோட்டை - முகமூடி வீரர் மாயாவி சாகசம்

Rani Comics Kadal Kottai Phantom

ராணி காமிக்ஸ் - கொத்தியவர் அ.மா.சாமி - கொலைகாரன் கோட்டை - கிட கார்சன் சாகசம்

Rani Comics Kolaikaran Kottai

வாண்டுமாமா அவர்களின் எழுத்தில் கோட்டை சார்ந்த மேலும் இரண்டு கதைகள் உங்களின் பார்வைக்கு. இவற்றில் இந்த கரடிக் கோட்டை புத்தகம் இன்னமும் விற்பனைக்கு உள்ளது. மேல் விவரங்களுக்கு இந்த பதிவினை படிக்கவும்.

வாண்டுமாமா - நெருப்பு கோட்டை - இல்லாத புத்தகம்

வாண்டுமாமா - கரடி கோட்டை

Palaniappa Brothers OO81 Neruppu Kottai Karadikkottai

தமிழ் காமிக்ஸ் உலகில் கேப்டன் பிரின்சை தெரியாதவர்கள் குறைவே. அவரின் ஒரே கதை இரண்டு பதிப்பகங்களின் மூலம் வந்துள்ளது. பார்த்து ரசியுங்கள்.

ஸ்டார் காமிக்ஸ் - பனிமலைக்கோட்டை

திகில் காமிக்ஸ் - பனி மண்டல கோட்டை

star comics pani mandala kottai Thigil Comics Pani mandala kottai

வாசகர்களுக்கு ஒரு போட்டி: அரசியல் உலகில் அடியெடுத்து வைக்கும் அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் சாருக்கு பிற்காலத்தில் அரசியல் விடிவெள்ளி, வாழும் கலைஞர், ஓடும் வள்ளுவர் என்றெல்லாம் பட்டப்பெயர்கள் வழங்கப்படும். ஆனால், இப்போதைய நிலையில் (பேரரசர் என்பதை தவிர) வேறு பட்டப்பெயர்கள் இல்லாமல் இருக்கிறார் அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் சார். ஒரு அரசியல்வாதிக்கு அழகே பட்டப்பெயர் தான். ஆகையால் நமது அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் சாருக்கு ஒரு சரியான பட்டப்பெயரை தேர்ந்தெடுத்து வழங்குங்கள்.  பொருத்தமான பெயரை வழங்குபவர்களுக்கு பரிசு பதவி வழங்கப்படும்.

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,  
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Wednesday, April 21, 2010

தமிழ் காமிக்ஸ் உலகில் ராணிகள்

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.இன்று ஏப்ரல் இருபத்தி ஒன்றாம் தேதி. இன்றுதான் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிறந்த நாள்.இந்த நாளில் நமது காமிக்ஸ் உலகில் இதுவரை ராணிகளை மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு.

என்னடா, சமீபத்தில் ஒரே பிறந்தநாள் பதிவுகளா என்று என்னும் நண்பர்களே, சற்று பொறுங்கள். இன்று நம்முடைய பெருமதிப்பிற்குரிய மின்சார துறை அமைச்சர் திரு ஆற்காட்டார் அவர்களின் பிறந்த நாளும்கூட. சரி, அவருக்கு பொருத்தமாக சமீபத்தில் நம்முடைய லயன் காமிக்ஸ் கவ்பாய் ஸ்பெஷலில் வந்த இரும்புக் கை மாயாவி கதையை வெளியிடலாம் என்றுதான் நினைத்தேன் (அந்த கதையின் பெயரை சொன்னால் தீவிர தி மு க ஆதரவாளர்கள் என்னை விட மாட்டார்கள்). ஆனால், சென்ற பதிவே பல அரசியல் விளையாட்டுக்களை நடத்தி விட்டதால் வேறு வழி இல்லாமல் அந்த அரசியல் நொடி வீசும் பதிவினை இடாமல் இந்த சாதா பதிவு. என்சாய் மக்களே.

லயன் காமிக்ஸ் - சாகச வீரர் சாம்சன் - மந்திர ராணி - மறக்க முடியாத கதை

Lion Mandhira Rani

இந்த மந்திர ராணி கதை தமிழில் ஏற்கனவே வேறொரு இதழில் வந்துள்ளது. அது எந்த இதழ் என்று கூறுபவர்களுக்கு கனவுகளின் காதலரின் ஒன்றுவிட்ட சகோதரி மேகான் பாக்ஸின் மேலான் முத்தங்கள் கிடைக்கும். இது ஒரு அற்புதமான கதை. இந்த கதையில் ஒரு புதிர் சொல்லும் கிழவன் ஒருவர் வருவார். அந்த கட்டம் என்னால் இன்னமும் மறக்கவே இயலவில்லை. நன்றி விஜயன் சார்.

அடுத்தபடியாக, மிநிலயனில் வந்த சுஸ்கி & விஸ்கி சாகசமாகிய ராஜா, ராணி & ஜாக்கி. இந்த கதையில் ஒரு இடத்தில் புரூப் ரீடர் ஒரு தவறை கவனிக்க மறந்து இருப்பார். அது என்ன என்று யாராலாவது சொல்ல இயலுமா? இதனை சொன்னால் என்றும் தர்ம பத்தினியாக விளங்கும் புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப்படம் ஒன்று அன்பளிப்பாக கிடைக்கும்.

மினி லயன் காமிக்ஸ் - சுஸ்கி & விஸ்கி சாகசம் - ராஜா, ராணி & ஜாக்கி - ஒன்ஸ்மோர் விஜயன் சார்

Mini Lion#019 - Raja Rani Jackie

அடுத்தபடியாக நாம் காணவிருப்பது ராணி காமிக்ஸில் வந்த ராணி கதை பெயரை கொண்ட கதைகள். ஏக்சுவளி இரண்டு கதைகள் வந்துள்ளன. அவற்றின் விவரங்கள் இதோ:

ராணி காமிக்ஸ் Issue No 302- முகமூடி வீரர் மாயாவி - வேதாளர் - கொலைகார ராணி

Rani Kolaikara Rani
Rani Kolaikara Rani 1st page

இந்த கதை ஒரு சிறந்த கதையாக இருந்தாலும்கூட, மொக்கையான மொழிபெயர்ப்பில் பெரிதும் பாதிக்கப்பட்டு ரசிக்கவே இயலாத அளவுக்கு இருக்கும். உதாரணமாக பீனிக்ஸ் நாட்டு மன்னர் தன்னுடைய மகளை மாயாவிக்கு அறிமுகப்படுத்தும்போது "இவள்தான் டெய்சி - என்னுடைய மகள் - பேரழகி" என்று கூறுவார். அந்த கட்டத்தை படித்து பாருங்கள். அடுத்து ஒரு கட்டத்தில், மாயாவியை பார்த்து "ஆபத்தாண்டவா" என்று கதறுவார். என்ன கொடுமை சார் இது?

அடுத்து நாம் பார்க்கவிருப்பது ராணி காமிக்ஸில் கடைசி கால கட்டத்தில் வந்த ஒரு கதை. இந்த கதைக்கு "மொக்கை ராணி" என்று கூட பெயரிட்டு இருக்கலாம். அந்த அளவுக்கு மொக்கை போட்டு இருப்பார் இந்த இதழின் ஆசிரியர். முடியலடா சாமி, என்று மாயாவியே வாய் விட்டு கதறுவார். இந்த கதைக்கும் இந்திரஜால் காமிக்ஸ் கூலாகூ கொடுசூலி கதைக்கும் என்ன சம்பந்தம் என்பதை பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்கள்தான் சொல்ல வேண்டும்.

ராணி காமிக்ஸ் Issue No 494 - வேதாளர் - முகமூடி வீரர் மாயாவி அதிரடி - அழகு ராணி

Rani Azhagu Rani
Rani Azhagu Rani 1st page

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,  
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Tuesday, April 20, 2010

ஹிட்லர் - ஒரு சகாப்தம்

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.இன்று ஏப்ரல் இருபதாம் தேதி. இன்றுதான் ஹிட்லரின் பிறந்த நாள். (நீங்கள் தமிழ் விக்கிபீடியா படிப்பவரானால் இட்லர் என்றுதான் படிக்கவேண்டும், வேறுவழி இல்லை). இவரை பொறுத்தவரையில் ஒன்று இவரை ஹீரோவாக கொண்டாடுவார்கள் (எங்களைப் போன்றவர்கள்), அல்லது வில்லனாக உருவகப்படுதுவார்கள் (மற்ற சிலரைப் போல). வரலாறு என்பது எழுதப்படுவரின் எண்ணவோட்டத்தில் தான் இருக்கிறது என்பதை பொதுவானவர்கள் மறந்துவிடக்கூடாது. தற்போதைய இந்திய பள்ளிக்குழந்தைகள் பாட புத்தகங்களில் படிக்கும் விஷயங்களை பற்றி நாம் எப்போதாவது யோசித்து இருக்கிறோமா? தயவு செய்து அடுத்த முறை ஏதாவது ஒரு வரலாற்று பாடப்புத்தகதினை பார்த்தால் சும்மா புரட்டி பார்க்காமல் தயவு செய்து படித்து பார்க்க முயலவும். பல விடயங்கள் புலப்படும். 

சரி, சரி சீரியசான விஷயங்களை விட்டு விட்டு நம்ம மேட்டருக்கு வருவோம். இந்த நன்னாளில் நமது காமிக்ஸ் உலகில் இதுவரை ஹிட்லரையும், நாஜிக்களையும் மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு.பெரும்பாலான கதைகள் இங்கிலாந்தில் இருந்தே வந்தவை என்பதால் அதில் அனைத்திலும் ஹிட்லர் ஒரு வில்லனாகவே சித்தரிக்கப்பட்டு இருப்பார் என்பது வேறு விடயம். அதனைப்போலவே இங்கிலாந்து ராணுவ வீரர்கள் அனைவரும் யோக்கியமான ஹீரோக்கள் போல இருப்பார்கள். வேறு வழி இல்லை. சகித்துக் கொண்டே ஆகவேண்டும்.

ஹிட்லரை நேரிடையாக சம்பந்தப்படுத்தி இரண்டே இரண்டு காமிக்ஸ் கதைகள் தான் வந்துள்ளன (தவறாக இருந்தால் திருத்தவும் - இந்த பதிவு அவசரமாக போடப்படும் ஒன்று - தகவல் சரிபார்க்க நேரமில்லை). அதில் ஒன்றில் தலைப்பே மீண்டும் ஹிட்லர். கதையை நான் பலமுறை படித்து இருந்தாலும் இதன் அட்டைப்படதினை நான் இன்றுதான் பார்த்தேன். நண்பர் முத்து விசிறி அவர்கள் தான் அளித்தார். நண்பர்கள் சிலரிடம் கேட்டும் பயனில்லை. முத்து விசிறி வாழ்க.

லயன் காமிக்ஸ் - இரட்டை வேட்டையர் சாகசம் - மீண்டும் ஹிட்லர் - சூப்பர் ஹிட் கதை - பார்ப்பதற்கரிய அட்டைப்படம் 

032 Meendum Hitler

இரண்டாம் உலகப்போர் முடிந்து சுமார் இருவது வருடங்கள் கழித்து ஹிட்லரின் மகன் தனியொரு ராணுவத்தினை சேர்த்து மறுபடியும் இங்கிலாந்தினை தக்க முயல்வதே கதையின் சாராம்சம். அவர்களின் அட்டகாசத்தையும், அதனை உங்களின் அபிமான ஜோடி அடக்கும் சாகசத்தையும் இந்த கதையில் ரசிக்கலாம்.

அடுத்ததாக நாம் பார்க்கவிருப்பது இரும்புக் கை நாமனின் ரீ என்ட்ரி. ஆம், சுமார் ஐந்து வருடங்கள் கழித்து இரும்புக் கை நார்மனின் கதை வந்தது. எனக்கு மிகவும் பிடித்த கதை நாயகன் இவர். இவரின் முதல் கதையை படித்து விட்டு நான் சிறுவயதில் அழுதது கூட உண்டாம். இந்த இரண்டாவது கதையில் இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருக்கும்போது ஹிட்லரைப்போலவே ஒருவர் இருப்பதை நேசநாடுகள் கண்டுபிடிப்பார்கள் (போலி ஹிட்லர்). அந்த போலி ஹிட்லரை பத்திரமாக கொணரும் பொறுப்பினை நார்மனிடம் ஒப்படைப்பார்கள். நகைச்சுவையோடு சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட இந்த கதை அருமையான ஒன்று.

லயன் காமிக்ஸ் - இரும்பிக் கை நார்மன் சாகசம் - மரணத்தின் நிழலில்- இரண்டாவது கதை

075 Maranathin Nizhalil Cover

மின்னல் படையினரை யாரால் மறக்க முடியும்? இவர்களின் படையை பற்றிய முழுமையான விவரங்களுக்கு வேண்டப்படாத நண்பர் (வேண்டப்பட்ட விரோதியின் எதிர்ப்பதம்) பயங்கரவாதி டாக்டர் செவனின் இந்த பதிவினைப் படிக்கவும்.

மாகக் கோட்டை மர்மம்: ஹிட்லருக்கு ஆல்ப்ஸ் மலையில் ஒரு ரகசிய மறைவிடம் இருப்பதை கண்டறியும் நேசநாடுகள் அதனை ஒழிக்கும் பொறுப்பை மின்னல் படையிடம் ஒப்படைப்பார்கள். அந்த சாகசம் இந்த இதழில் உள்ளது. 

எஜன்ட் ஈகிள்:அடுத்தபடியாக லயன் காமிக்ஸ் விபரீத விதவை இதழில் பக்க நிரப்பியாக ஒரு கதை இருந்தது. அற்புதமான ஹீரோ ஒருவரைப்பற்றிய கதை அது. இங்கிலாந்து கதைகளை ஆங்கிலத்தில் படித்த நண்பர்கள் இந்த கதையை பற்றி மனிக்கனக்கில் சிலாகிப்பார்கள். அத்துணை அருமையான கதை வரிசை அது. முடிந்தால் படித்துப் பாருங்கள். நீங்களும் ரசிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

லயன் காமிக்ஸ் - மேகக்கோட்டை மர்மம் - மின்னல் படையினர் சாகசம்

எஜன்ட் ஈகிள் - ஒருமுறை மட்டுமே வந்த சாகசம்

Lion Comics No.125 - Mega-k-Kottai Marmam - Cover  LionComicsNo.125MegakKottaiMarmamPag[1] lion Comics Issue 113 June 1995 Vibareedha Vidhavai War Story Agent Nelson Fleetway Original

என்னால் மறக்கவே முடியாத காமிக்ஸ் ஹீரோக்களில் ஒருவர் இரும்புக் கை நார்மன். அவரின் முதல் கதையாகிய மனித எரிமலையை படித்த அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். அடுத்து அவரது இரத்தக் கண்ணீர் கதை கண்ணில் உண்மையிலேயே இரத்தக் கண்ணீரை வரவழைக்கும்.

இரும்புக் கை நார்மன் - முதல் கதை விளம்பரம்

இரும்புக் கை நார்மன் - முதல் கதை விளம்பரம்

Editor S Vijayan's Tour 1 Lion Comics Issue No 20 Africa Sahi Intro Norman_thumb[1] Editor S Vijayan's Tour 1 Lion Comics Issue No 20 Africa Sathi Intro Norman 2_thumb[2]

இந்த அட்டைப்படம் ஒரு சூப்பர் படைப்பாகும். அந்த நாட்களில் இரும்புக்கை மாயாவி மோகம் தலைவிரித்தாடிய காலம். இரும்புக் கையுடன் ஒரு ஹீரோ கிடைத்தாலே போதும், புகுந்து விளையாடுவார்கள் நமது காமிக்ஸ் எடிட்டர்கள். இப்படியாக வந்த காமிக்ஸ் ஹீரோக்களில் ஒருவர்தான் இவர் (என்று சொல்ல ஆசை) ஆனால் உண்மையில் ஒரு உணர்ச்சிபூர்வமான கதை இது. படிக்கதவராதீர்கள்.

இரும்புக் கை நார்மன்- மனித எரிமலை

லயன் தீபாவளி மலர் - நார்மன் அட்டையில்

Lion#021 - Manidha Erimalai_thumb[2] Lion031DeepavaliMalar86_thumb4

ஒரு காலகட்டத்தில் விளம்பரங்களின் மூலம் ஆர்வத்தினை தூண்டி நம்மையெல்லாம் வாங்க வைத்தார் எடிட்டர் விஜயன் சார். இப்போது? எங்க வைக்கும் படங்கள் இவை.

நார்மன் கதை விளம்பரம்  - இரத்தக் கண்ணீர்

நார்மன் கதை விளம்பரம் -பனிமலையில் ஒரு கொலை 

DiwaliMalar1987Ad1_thumb2 KodaiMala61986Ad2_thumb2

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,  
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Wednesday, April 14, 2010

தமிழ் காமிக்ஸ் உலகில் ராஜாக்களும், மன்னர்களும்,

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். இன்று தமிழ் புத்தாண்டு நாள். தமிழ் காமிக்ஸ் உலகின் ரசிகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அதுமட்டுமல்ல, இன்று தமிழ் காமிக்ஸ் உலகின் முடி சூடிய மன்னர் கிங் விஸ்வாவின் பிறந்த நாளும்கூட.

இந்த நன்னாளில் நமது காமிக்ஸ் உலகில் இதுவரை ராஜாக்களையும், மன்னர்களையும் மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு. இந்த பதிவை இடாவிட்டால் தொடர்ந்து கவிதை சொல்லி டார்ச்சர் செய்வதாக "வேண்டப்பட்ட விரோதிகள்" என்னை மிரட்டியதால் வேறு வழி இல்லாமல் இப்படி ஒரு பதிவினை இடுகிறேன். பேரு என்னவோ, கிங் விஸ்வா, வலைப்பூ என்னவோ தமிழ் காமிக்ஸ் உலகம். ஆனால், எழுதுவது என்னவோ ஆங்கிலத்தில். இப்படி சில இருந்தாலும்கூட தமிழ் காமிக்ஸ் பற்றிய உருப்படியான தளமாக இருப்பதால் ஆங்கில அடிவருடித்தனத்தையும் கூட மறந்து அவரை வாழ்த்துகிறோம். நண்பர் முத்துவிசிறிக்கு பிறகு தரமான பதிவுகளை அற்புதமான நடையில் தொடர்ந்து தரும் நண்பர் கிங் விஸ்வாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

அவருடை பெயர் கிங் விஸ்வா என்பதால், தமிழ் காமிக்ஸ் உலகில் ராஜா மற்றும் மன்னர் என்று வந்த காமிக்ஸ்களை பற்றி அலசுவோம். முதலில் இதோ ராணி காமிக்ஸில் வந்த வேவு வீரர் ஜேம்ஸ்பாண்ட் துப்பறியும் ராஜா என்று பெயருள்ள கதைகள்:

ராணி காமிக்ஸ்-வேவு வீரர் 007-தங்க ராஜா ராணி காமிக்ஸ்-வேவு வீரர் 007-ராஜாளி ராஜா
James Bond Rani Comics Thanga Raja Cover Rani Comics 007 James Bond Rajali Raja Cover

அடுத்தபடியாக ராஜா மற்றும் மன்னர் என்று வந்த சில கதைகள். இந்த கதையின் தலைப்பை பாருங்கள் - ரவுடி ராஜா. என்ன கொடுமை சார் இது? ஒரு ரவுடி எப்படி ராஜாவாக முடியும் என்றா கேட்கிறீர்கள்? நீங்கள் இன்றைய அரசியல் நிலவரம் தெரியாத ஆள் என்று நினைக்கிறேன்.

ராணி காமிக்ஸ்-முகமூடி வீரர் மாயாவி-வேதாளர்-ரவுடி ராஜா
Rani Comics 007 Phantom Ravudi Raja
ராணி காமிக்ஸ்-முகமூடி வீரர் மாயாவி-வேதாளர்-தலைவெட்டி மன்னன்
Rani Comics Phantom Thalai Vetti Mannan

மன்னர் என்று வந்த சில பல தலைப்புகள் கொண்ட கதைகள். நண்பர் ஒருவருக்கு மிகவும் பிடித்த கதை இந்த தப்பி ஓடிய இளவரசி என்ற ராணி காமிக்ஸில் வந்த ஆரம்ப கதை. இதன் ஆங்கில வடிவ கதையை ஐய்யம்பாளயத்தார் அவர்களின் வீட்டில் பார்த்து ரசித்தேன். முழு வண்ணத்தில், பெரிய அளவில் வந்த அந்த புத்தகம் என்னை மிகவும் கவர்ந்தது. அதனை "தாருங்கள், படித்து விட்டு தருகிறேன்" என்று கேட்டால், அவரோ "இதெல்லாம் இப்போது கிடைக்காது சாமி" என்று கூறிவிட்டார். அதனால் மனம் நொந்தேன். இந்த அதிரடி மன்னன் கதையின் அட்டைப்படதினை அண்ணன் அழகிரி பிறந்த நாளின்போதும் இடலாம்.

ராணி காமிக்ஸ்-தப்பி ஓடிய இளவரசி-மன்னன் மகள் ஜூனியர் லயன் காமிக்ஸ்-சிக்பில்-அதிரடி மன்னன்
Rani Comics Historial Mannan Magal JuniorLionComics3AdhiradiMannan5

லயன் காமிக்ஸில் சமீபத்தில் வந்த இரண்டு கதைகளின் அட்டைப்படங்கள் இதோ. இந்த அட்டைப்படங்கள் நவீன கால யுத்தியை கையாண்டு லயன்  காமிக்ஸ் அலுவலகத்தில் உருவாக்கப்பட்டவை.

லயன் காமிக்ஸ்-சிக்பில்-மறையில்லா மன்னர் லயன் காமிக்ஸ்-லக்கிலூக்-மேற்கே ஒரு மாமன்னர் 
197 Maraiilla Mannar luckyluke

திகில் காமிக்ஸில் கருப்பு கிழவியின் கதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. ஆசிரியர் விஜயன் அவர்களின் எடிட்டோரியல் திறமைக்கு இந்த கதைகள் ஒரு சான்று. இதோ அவற்றில் ஒரு சிறந்த கதையை கொண்ட அட்டைப்படம்.

திகில் காமிக்ஸ்-அடுத்த வெளியீடு-தலையில்லா ராஜா திகில் காமிக்ஸ் - அட்டைப்படம் - தலையில்லா ராஜா
New_Thalaiyilla Raaja 39 Thalaiyilla Raja

டார்ஜான் அவர்களுக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஷூஜா என்ற கதாபாத்திரம் தமிழில் வனராஜா என்று முல்லை தங்கராசர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் மன்னர் பீமா என்ற பெயரில் ராணி காமிக்ஸ் ஆசிரியர் ராமஜெயம் அவர்களால் தொடரப்பட்டது.

முத்து காமிக்ஸ் வாரமலர் - முல்லை தங்கராசரின் அற்புத படைப்பு - வனராஜா யார்?
MCV18VanaRaja7
முத்து காமிக்ஸ் வாரமலர் - முல்லை தங்கராசரின் அற்புத படைப்பு - வனராஜா வண்ணத்தில்
MCV1VanaRaja5

மினி லயன் காமிக்ஸ் ஒரு அற்புத படைப்பு. சமீபத்தில் ஒருவர் என்னிடம் மொத்தம் நாற்பது மினி லயன் காமிக்ஸ்களையும் எட்டாயிரம் ரூபாய்க்கு விற்றார். இதோ அவற்றில் ஒன்று ராஜா ராணி ஜாக்கி.

மினி லயன் - சுஸ்கி மற்றும் விஸ்கி தோன்றும் - ராஜா ராணி ஜாக்கி - ஒரு அற்புதமான காமெடி தோரணம்
Mini Lion#019 - Raja Rani Jackie

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,  
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Wednesday, April 7, 2010

உலக சுகாதார நாள் - தமிழ் காமிக்ஸ் உலகில் டாக்டர்கள்

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். இன்று உலக சுகாதார நாள் ஆகும். உலக சுகாதார நாள் (World Health Day) என்பது உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக சுகாதார அமைப்பின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக சுகாதார நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து ஓர் முக்கியமான உலக சுகாதார அமைப்பின் முக்கியமான சுகாதாரம் சம்பந்தமான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.

இந்த நன்னாளில் நமது காமிக்ஸ் உலகில் இதுவரை டாக்டர்களை மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு. தமிழ் காமிக்ஸ் உலகம் என்றாலே திறமையான ஆங்கில பதிவர்கள் மட்டுமே (முதன் முதலில் முத்துவிசிறி & பின்னர் கிங் விஸ்வா) என்று இருந்த நிலையை மாற்றி தமிழிலும் சிறந்த காமிக்ஸ் தளங்களை இயக்க முடியும் என்பதை உலகிற்கு காட்டியவர் நமது காமிக்ஸ் டாக்டர் செவன். அவருக்கு இந்த பதிவுகளை சமர்ப்பணம் செய்கிறேன். நன்றி டாக்டர். உங்களால் தான் பலரும் தமிழில் காமிக்ஸ் வலைப்பதிவுகளை ஆரம்பித்தனர் என்பது கண்கூடான உண்மை. அவர்கள் அனைவரின் சார்பிலும் நன்றி.

அடுத்தபடியாக நான் நன்றி சொல்லும் இன்னொரு நபர் பழனி (எங்க சொந்த ஊர்) திருதலதினை சேர்ந்த டாக்டர் சுரேSH அவர்கள். யார் ஒருவர் காமிக்ஸ் பற்றிய பதிவினை இட்டாலும் வந்து அவர்களை பாராட்டும் ஒரு சிறப்பான மனிதர். வாழ்க அவர். வளர்க அவரின் கனவுகள்.

முத்து காமிக்ஸ் - சீக்ரெட் எஜன்ட் காரிகன் கதை - பயங்கரவாதி டாக்டர் செவன் - ஒரு கிளாசிக் சாகசக் கதை
Bayangaravaadhi Dr 7

நம்முடைய காமிக்ஸ் டாக்டர் முதன்முதலில் பதிவுலகில் அடியெடுத்து வைத்தபோது இந்த பதிவுடந்தான் வந்தார். ஆனால் அந்த பதிவில் இந்த கதையை பற்றி எதுவுமே சொல்லவில்லை என்பது ஒரு கொடிய உண்மை. ஆனால், அந்த பதிவின் தலைப்புக்கு நியாயம் செய்யும் விதமாகவே அந்த பதிவு இருந்தது என்பது மறுக்க இயலாத உண்மை.

லயன் காமிக்ஸ் - சூப்பர் ஸ்டார் ஸ்பைடர் சாகசம் - டாக்டர் டக்கர் - ஒரு அமானுஷ்ய வில்லனுடன் மோதல்
Lion004DoctorTakkar2

நம்முடைய லயன் காமிக்ஸில் வந்த மறக்க முடியாத ஸ்பைடர் கதை இது. இன்னமும் எனக்கு இந்த கதையை முதன்முதலில் படித்த நினைவு உள்ளது. பள்ளியில் ஸ்கூல் பையில் வைத்து தான் இந்த கதையை படித்தேன். புத்தகம் வரும்போது அல்ல, வந்து ஐந்து வருடங்களுக்கு பிறகு தான் 1989-இந்த புத்தகம் எனக்கு ஒரு பழைய புத்தககடையில் கிடைத்தது. அதனால் மதிய உணவு இடைவேளையில் இந்த கதையின் ஆரம்ப பக்கங்களை படித்தேன். மதிய உணவு இடைவெளி முடிந்தவுடன் முதல் வகுப்பு புவனேஸ்வரி மேடம் அவர்களின் வகுப்பு. அதனால் தைரியமாக கதையை படித்து முடித்தேன்.

ராணி காமிக்ஸ் - ராமஜெயம் அவர்களின் வெளியீடு – 007 ஜேம்ஸ் பாண்ட் சாகசம் - டாக்டர் நோ

RaniComics019Dr.No2

ராணி காமிக்ஸில் மறக்க முடியாத கதை இது. ஒரு கட்டத்தில் ஜேம்ஸ் பாண்ட் (கடைசியில்) தப்பிக்கும்போது மிகவும் தளர்ந்து விடுவார். அப்போதுகூட அவர் "ஜேம்ஸ் கண்ணா, மேலே நீந்தி போ" என்று நகைச்சுவையாக தன்னைத்தானே தேற்றிக்கொள்வார். மறக்கமுடியாத கட்டம் அது. சமீபத்தில் டாக்டர் செவன் இது தொடர்பான பதிவினை வெளியிட்டார். பதிவை படிக்க இங்கே கிளிக்கவும்.

லயன் காமிக்ஸ் - கராத்தே டாக்டர் – W.H.O டாக்டர் ஜஸ்டிஸ் - உலக சுகாதார நாள் சிறப்பு அட்டை படம்
Lion Comics Issue 41 Dated September 1986 Dr Justice Front Cover

இந்த அட்டைப்படதிர்க்கும் கதைக்கும் சம்பந்தமில்லை. இந்த அட்டைப்படம் இந்த புத்தகத்தில் வந்த ஒரு அற்புதமான கதையை மைய்யமாக கொண்டது. அந்த கதையின் தலைப்பு சூப்பர் மென். உங்களில் யாருக்கேனும் நினைவிருக்கிறதா? அது சரி, இந்த கதையை சென்ற ஆண்டே சிறப்பு பதிவாக இடுவதாக சொன்ன ஸ்ட்ராபெர்ரி சோம்பேறி விஸ்வா எங்கே?

லயன் காமிக்ஸ் - ஹாலிடே சூப்பர் ஸ்பெஷல் - மீண்டும் டாக்டர் செவன் - காரிகன் சாகசம்

Lion#083 - Holiday Super Special - BackLion Comics Phil Corrigan Agent X9 Issue No 83 Lion Holiday Sper Special Meendum Dr 7

இங்கிலாந்தில் இருந்து வந்த ஜேம்ஸ் பாண்ட் கதைகளுக்கு போட்டியாக அறுபதுகளில் வந்தவை காரிகன் கதைகள் (அதற்க்கு முன்னரே ஆரம்பித்தாலும், இந்த சமயத்தில் தான் இவை புகழ் பெற்றன). காரிகன் கதைகள் என்றாலே ஒரு சிறப்பு அம்சம் தரமான வில்லன்கள். குறிப்பாக டாக்டர் செவன். காமிக்ஸ் உலகின் தலைசிறந்த வில்லன்களில் முதன்மை இடத்திற்கு போட்டியிடுபவர் டாக்டர் செவன். அவரின் கதைகளில் சிறந்த கதை இது.

காமிக்ஸ் கிளாசிக்ஸ் - ஸ்பைடர் - மறுபதிப்பு -டாக்டர் டக்கர் - நல்ல அட்டைப்படம்?

CC 01-21

ஏற்கனவே இந்த கதையை பற்றி சொல்லிவிட்டதால் ஒரே ஒரு கம்ப்ளைன்ட் மட்டும்: ஏம்பா, ரெண்டு வருஷத்திற்கு முன்பே இந்த ஸ்பைடர் பற்றிய பதிவிடுவதாக சொன்ன சோம்பேறி எங்கே?

வாசு காமிக்ஸ் - ஒரிஜினல் தமிழ் காமிக்ஸ் - டாக்டரின் ஆவி - ஆஸ்கர் விருது பெற்ற படம் இந்த கதையில் இருந்து சுடப்பட்டது. 

Doctarin Aaavi

இந்த கதையை பற்றி நாம் ஏற்கனவே அலசி ஆராய்ந்து விட்டதால் புதிதாக சொல்ல எதுவும் இல்லை. புதிய வாசகர்கள் இந்த சுட்டியை பயன்படுத்தி நம்முடைய பழைய பதிவினை படிக்கவும். இந்த அட்டைப்படத்தை வரைந்த ஓவியர் G.K.மூர்த்தி அவர்களை பற்றி தீவிர ஆராய்ச்சி நடந்து வருகிறது. விரைவில் ஓவியர்களை பற்றிய ஒரு பதிவினை இட நான் உத்தேசித்து உள்ளேன்.

மாலைமதி காமிக்ஸ் AFI - ரகசிய எஜன்ட் காரிகன் - நம்பிக்கை துரோகி டாக்டர் செவன்

Corrigan Nambikkai Thurogi Doctor Seven

படத்தினை நண்பருக்கு மின் அஞ்சலில் அனுப்பி வைத்த உயர்திரு முது விசிறி அவர்களுக்கு நன்றி. படத்தை அனுப்ப மறுத்த டாக்டர் செவனுக்கு கண்டனம். வேறென்ன சொல்ல? இந்த பதிவில் இந்த அட்டைப்படத்தினை போட்டால் அவருடைய இமேஜ் பாதிக்கப்படுமாம். என்ன கொடுமை சார் இது?

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன், 
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Related Posts with Thumbnails