Tuesday, October 6, 2009

காமிக்ஸ் வேட்டைக்காரன் – ஐயாம் தி பேக்

அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். நீண்ட நெடு நாட்களுக்கு முன்னே நானும் ஒரு காமிக்ஸ் வலைப் பதிவன் என்று ஒரு நிலை இருந்தது. பின்னர் பணிச்சுமையும் வேறு சில சுமைகளும் என்னை இந்த வலையுலகம் வரவிடாமல் தவிர்த்தன. இதோ, நான் வந்து விட்டேன்.

காமிக்ஸ் டாக்டர் வேட்டைக்காரன் என்று ஒரு மொக்கை பதிவை வெளியிட்டு அது பாப்புலரும் ஆகி, ஹிட்ஸ்களை குவித்து விட்டார். ஆனால் உண்மையான காமிக்ஸ் வேட்டைக்காரன் நான் தான் என்பதை இந்த பதிவு உணர்த்தும்.

பதிவிற்கு செல்லும் முன் பழைய புத்தக சந்தை குறித்து தமிழ் காமிக்ஸ் வலையுலக பீஷ்ம பிதாமகர் முத்து விசிறி எழுதிய இந்த பதிவையும், இந்த பதிவையும் படித்து விட்டு வரவும்.

சமீபத்தில் நான் வாங்கியுள்ள  ஒரு அரிய புத்தகத்தின் புகைப்படங்கள் இவை. தமிழ் காமிக்ஸ் வேட்டையர்களின் HOLY GRAIL ஆன லயன் தீபாவளி சூப்பர் ஸ்பெஷல் தான் இது.

காமிக்ஸ் சந்தையில் மினிமம் ரூ:1500/-க்கு விற்கப்படும் இதை நான் வாங்கிய விலை என்ன தெரியுமா? வெறும் ரூ:20/-

என்ன, ஆச்சரியமா இருக்கா? நான் இதை வாங்கியது ஒரு பழைய புத்தக கடையில். அதுவும் c2c (காமிக்ஸ் வேட்டையர்கள் மொழியில் - அட்டை TO அட்டை, முழுமையாக, எந்த வித சேதாரமும் இல்லாமல் அற்புதமான பராமரிப்பு நிலையில்).

இதே போல் பழைய புத்தக கடைகளில் புத்தகங்களை ஐந்துக்கும், பத்துக்கும் வாங்கி விட்டு பின்னர் மனசாட்சியே இல்லாமல் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் (அட்டை இல்லாமல்… முதல் மற்றும் கடைசி 10 பக்கங்கள் இல்லாமல்…) அதை ஆயிரத்திற்கும், இரண்டாயிரத்திற்கும் விற்கும் சில முதலைகளை மக்கள் தயவு செய்து நம்பி ஏமாற வேண்டாம் என்பதற்காகவே இந்த பதிவு.

நமது அபிமான லயன் காமிக்ஸ் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் பழைய காமிக்ஸ் புழக்கத்திற்காக தொடங்கிய புக் மார்கெட் பகுதி தோல்வியடைந்ததற்கு இந்த முதலைகளே காரணம்.

சில புத்திசாலி பைத்தியங்கள் ஸ்கேன் செய்த CDகளுக்கும், ஜெராக்ஸ் போட்ட ராணி காமிக்ஸுக்கும் ஒரு புத்தகத்துக்கு ரூ:100/- கொடுத்து வாங்கியதாக தகவல். இது குறித்து லயன் காமிக்ஸ் ஆசிரியரே ஒரு முறை ஹாட்-லைனில் எழுதியுள்ளார்.

இதில் கொடுமை என்னவென்றால் ராணி காமிக்ஸ் (அது முதலாவது இதழாகவே இருந்தாலும்) அதிகபட்சம் ரூ:5/-க்கு மேல் போகாது என்பது பழைய புத்தக கடையில் புத்தகம் வாங்கிய எந்த ஒரு காமிக்ஸ் வேட்டையரும் அறிந்ததே.

பழைய புத்தகங்களுக்கு விலை நிர்ணயம் செய்வது அதை வாங்குவோரின் மனநிலை பொறுத்தது. தனக்கு தேவை படும் ஒரு புத்தகம் தனக்கு நியாயமானதாக தோன்றும் ஒரு விலை கொடுத்து அவர் வாங்குவதில் தவறொன்றும் இல்லை என வாதிடுவோர்கள் இருக்கலாம்.

ஆனால் நாம் கொடுக்கும் விலைக்கான சரக்கு உள்ளதா என்று பார்க்க வேண்டும். அதே போல் ஒருவர் வாங்கியதை வைத்து மற்ற புத்தகங்களும் அதே அல்லது அதை விட உயர்ந்த விலைக்கு, புத்தகம் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும், விற்பது பஞ்சமாபாதகம் என்பது என் கருத்து.

இது குறித்து முத்து விசிறி இட்டுள்ள பதிவுகளை படிக்க கீழே உள்ள சுட்டிகளை பயன்படுத்தவும்.

IMG_0051IMG_0053

இந்த புத்தகம் மட்டுமல்ல, கிடைக்கவே கிடைக்காது என்று இந்த காமிக்ஸ் வியாபார முதலைகள் சத்தியம் செய்யும் பல புத்தகங்கள் அதிர்ஷ்டம் இருந்தால் நிச்சயம் கிடைக்கும்.

கீழ்காணும் படம் நான் கடந்த இரண்டு வருடங்களில் சேகரித்த புத்தகங்கள். இதில் c2c புத்தகங்கள் மட்டுமே உள்ளன. இவை தவிர அட்டை இல்லாத பல புத்தகங்களை இந்த கால கட்டத்தில் நான் சேகரித்துள்ளேன். ஒரு புத்தகத்தின் அதிக பட்ச விலை ரூ:10/- மட்டுமே.

IMG_0056

இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளும் பாடம் என்னவென்றால் விடா முயற்சியுடன் பொறுமையும் காத்தால், சரியான வழியில் நேர்மையாக முயன்றால் நம்மால் குறைந்த விலையில் நிறைந்த காமிக்ஸ் இன்பம் (சிற்றின்பம், பேரின்பம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது) காண முடியும் என்பதே.

பி.கு. :

  1. தயவு செய்து யாரும் இந்த காமிக்ஸ்களை விலைக்கோ, இனாமாகவோ, அன்பளிப்பாகவோ, எக்ஸ்சேஞ்சுக்கோ கேட்டு பின்னூட்டங்களோ, மின்னஞ்சலோ அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்ள படுகிறார்கள்.
  2. இந்த பதிவு வழக்கத்திற்கு மாறாக ரொம்ப சீரியஸாக இருப்பதை கண்டு நீங்கள் மனம் நொந்திருக்கலாம். ஆனால் சமூக நலன் கருதி இந்த பதிவை வெளியிட வேண்டியதாகிறது. அடுத்த பதிவில் பேக் டு ஃபார்ம் வந்து விடுகிறேன். ஒகே? டண்.
  3. அதே போல் வழக்கமாக நான் செய்யும் எழுத்து பிழைகளும் இந்த பதிவில் காணாமல் போயிருப்பதை கண்டு நீங்கள் அப்படியே ஷாக் ஆகியிருக்கலாம். GOOGLE TRANSLITERATOR-னால் வந்த வினை அது. இப்போ நான் NHM WRITER-க்கு மாறிட்டேன். அப்போ நீங்க?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன், 
ஒலக காமிக்ஸ் ரசிகன்

-- If You Haven't Read this, There is Something Fundamentally Wrong With You.

Thanks in Advance.

Editor, Greatest Ever Comics.

Hell is for Heroes.

Saturday, July 4, 2009

ஜூலை நாலு - அமெரிக்க சுதந்திர தின சிறப்பு காமிக்ஸ் பதிவு

வாசகர்களே,

இன்று ஜூலை நான்காம் தேதி. இன்றுதான் நமது காமிக்ஸ் வலைப் பதிவர் காமிக்ஸ் பிரியரின் பிறந்த நாளும் கூட. அவரை வாழ்த்த வயதில்லை என்பதால் பாராட்டுகிறோம்.

காமிக்ஸ் உலகில் பிறரை காப்பி அடிக்காமல் சொந்த சரக்கை கொண்டு பதிவிடும் சில பதிவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.

 

இன்று அமெரிக்க சுதந்திர நாள். பலருக்கு தெரியாத விஷயம் என்னவென்றால் அமெரிக்காவும் ஒரு காலத்தில் பிரிட்டனிடம் அடிமையாக இருந்த நாடுதான். 1776 ஆம் ஆண்டு பிரிட்டனை எதிர்த்து நடந்த புரட்சியில் முடிவாக ஜூலை இரண்டாம் தேதி அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை தாமஸ் ஜெபர்சன் மற்றும் ஜான் ஆடம்ஸ் ஆகிய இருவரும் சேர்ந்து தயாரித்தனர். பின்னர் ஜூலை நான்காம் தேதி அமேரிக்கா சுதந்திர நாடாக அறிவிக்கப் பட்டது (அவர்களது ஐம்பதாவது சுதந்திர ஆண்டில் இந்த இருவரும் இறந்ததே ஒரு குறிப்பிடத் தக்க ஒற்றுமை).

போதும் இந்த அமெரிக்க வரலாற்று மொக்கை. நான் கூற வந்த விஷயமே இது தான். அமேரிக்காவில் தான் காமிக்ஸ் கலாச்சார கொலை ஆரம்பித்தது. சூப்பர்மேன், ஸ்பைடர் மேன், பேட் மேன், மொக்கை மேன், அயர்ன் மேன் (இஸ்த்திரி பண்ணுவாரோ?) என்று பல கதைகளை கொண்டு வந்து பேண்டசி ஜென்ரே என்று காமிக்ஸ் கதைகளை உலக அளவில் கொன்று வருகின்றனர்.

John Paul Man

ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனையே கடித்த விஷயமாக போப் ஜான் பால் மேன் என்று ஒரு காமிக்ஸ் புத்தகத்தை மார்வல் காமிக்ஸ் நிறுவனத்தினர் வெளியிட்டு உள்ளனர் என்ற தகவல் இந்த ஸ்கான்'ஐ பார்த்தால் விளங்கும்.

ஆனால் இதில் ஒரு நல்ல விஷயமும் உள்ளது. சிறுவர்களுக்கு போப் ஜான் பால் வாழ்க்கையை எளிதில் விளக்கி கூற இயலும். நம்முடைய அமர் சித்திரக் கதைகளில் வந்த சுபாஷ் சந்திர போஸ், நேரு மாமா போன்ற தலைவர்களின் வாழ்கை சரிதங்களே எனக்கு மிகவும் உதவியாக இருந்தன. அதுவும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எனக்கு ஒரு ஹீரோவாக புலப் பட ஆரம்பித்ததே இந்த கதை மூலம்தான். ஆனால், அவை எல்லாம் வாழ்கை வரலாறு காமிக்ஸ் வடிவில் இருந்தன.

ஆனால் இதுவோ, ஒரு மதத் தலைவரை காமிக்ஸ் ஹீரோவாக கொண்டு வந்ததாக இருக்கிறது. அதனால் இது கண்டிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காமிக்ஸ் போல ஒரு மொக்கை காமிக்ஸ் ஆகவே இருந்து இருக்கும் என்பதில் அய்யம் இல்லை.

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன், ஒலக காமிக்ஸ் ரசிகன்

-- If You Haven't Read this, There is Something Fundamentally Wrong With You.

Thanks in Advance.

Editor, Greatest Ever Comics.

Hell is for Heroes.

Tuesday, June 9, 2009

ராணி காமிக்ஸ் - மாடஸ்தி - இளவரசியை தேடி

//பதினைந்து நாட்களுக்கு முன்னால் எனது அலைபேசியில் CELEBRATE-969 என்ற தகவல் குறுஞ்செய்தியாக அ.கொ.தீ.கவின் பிராந்திய தலைமையகத்திலிருந்து வந்தது. நமக்கு ஃபிளைட் 731, ஃபார்முலா X13, 007, 009, 001 ஏன் A-Z கூட தெரியும். CELEBRATE-969 என்றால் ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் நண்பர் விஸ்வா சொன்னார் 969 என்பது 2009ம் வருடம் ஜுன் மாதம் 9 ம் தேதியை குறிக்கும் என்றும், அன்றுதான் (அதாவது இன்றுதான்!) தன்னிகரில்லா தானைத்தலைவரும், நடமாடும் காமிக்ஸ் களஞ்சியமும், அ.கொ.தீ.காவின் நிறுவன மற்றும் நிறுவிய நிர்வாகத் தலைவருமான டாக்டர் செவனின் பிறந்த நாள் என்று! மேற்படி விவரப்படி தலைவரின் பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு தமிழ் கூறும் நல்லுகத்திற்கு இந்த பதிவை அர்ப்பணிக்கிறேன்!// என்று பதிவை ஆரம்பிக்க எனக்கும் ஆசையாகத்தான் உள்ளது. ஆனால், என்ன செய்வது? எனக்கு எந்த தகவலும் வர வில்லை. அதனால் தான் இந்த பில்ட் அப ஆரம்பம். சரி, சரி - போதும் என்று நீங்கள் சொல்வதற்கு முன்பு தானைத்தலைவர் டாக்டர் செவனின் பிறந்த நாள் பரிசாக அவர் நீண்ட நாட்களாக இரண்டு கண்களும் வைத்து இருந்த மாடஸ்டி பிளெய்சி பற்றிய ஒரு பதிவு இடலாம் என்று நினைத்தேன். ஆனால், நமது வலைப்பூ விதிகளுக்கு மாறாக பதிவிடும் எண்ணம் இல்லாததால் அதற்க்கு பதிலாக லேடி ஜேம்ஸ் பாண்ட் மாடஸ்தி (வித்தியாசத்தை கவனியுங்கள்) பற்றிய இந்த பதிவை இடுகிறேன்.

தமிழ் காமிக்ஸ் உலகில் முத்து, மாலைமதி, லயன் குழும காமிக்ஸ் இதழ்கள், பாலகன், மற்றும் முல்லை தங்கராசன் பணியாற்றிய அசோக் மேத்தா காமிக்ஸ், மாயாவி காமிக்ஸ் தவிர மற்ற இதழ்களில் மொழி நடை மிகவும் சிறப்பானதாக இல்லை என்பது உலகறிந்த உண்மை. இந்த வரிசையில் ராணி காமிக்ஸ் இல்லாதது குறித்து சிலர் கேள்வி கேட்கலாம்.

ஆனால், ஆரம்ப முதலே ராணி காமிக்ஸ் (ராமஜெயம் இருந்த போதும் சரி - சென்று விட்ட போதும் சரி) இந்த வரிசையில் இடம் பெற இயலாது என்பதை காமிக்ஸ் ஆர்வலர்கள் கூறுவர். ஆரம்ப கால ராணி காமிக்ஸ் கதைகளில் (ராமஜெயம் இருந்த போது) கதையின் தரம் மட்டுமே அதனை உயர்த்திக் காட்டியது. மொழ்கியாக்கம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. சில குறிப்பிட்ட கதைகளில் கதையின் சிறப்பை மொழியாக்கம் தடுத்து விட்டதையும் நண்பர்கள் அறிவார்கள். ராமஜெயம் சென்ற பிறகு? சொல்லவே வேண்டாம். குப்பை என்ற வார்த்தைக்கு விடை அந்த மொழியாக்கங்களும் அதில் வந்த கதைகளும் தான். என்னடா, இவ்வளவு வெறுப்பாக எழுதுகிறானே என்று நினைக்க வேண்டாம். காமிக்ஸ் கதைகளில் நான் படித்தவைகளில் மிகவும் சிறந்த ஒன்றாக நான் கருதுவது மாடஸ்டி வரிசைகளை தான். அதிலும் குறிப்பாக மாடச்டிக்கும் கார்வினுக்கும் இருக்கும் அந்த உறவை மிகவும் நுணுக்கமாக கையாண்டு இருப்பார்கள் (எக்ஸ் பைல்ஸ் வெற்றி பெற்றதற்கு காரணமும் அதில் வரும் டேனா ஸ்கல்லி மற்றும் பாக்ஸ் மோல்டர் இடையே இருக்கும் உறவே ஆகும் - திரைப் படத்தில் சொதப்பி இருப்பார்கள் - அது வேறு விஷயம்).

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi Cover

ஆனால் ராணி காமிக்ஸ் இதழில் முதன் முதலாக மாடஸ்டி கதை வருவதாக விளம்பரம் வந்த போது என்னுடைய நண்பன் மால்டா மகேஷ் (இப்போது கோயம்புத்தூரில் இருக்கிறான் - சமீபத்தில் பயங்கரவாதி டாக்டர் செவன் அவனை சந்தித்ததாக கேள்வி) மிகவும் சந்தோஷப் பட்டான்.

Rani Comics Lion Editorial ஆனால், அந்த கதை (பெண் சி.ஐ.டி) வந்த போது மனம் நொந்து பொய் காமிக்ஸ் படிப்பதையே தற்காலிகமாக விட்டு விட்டான். எனென்றால் அதில் வில்லி கார்வின் மாடச்டியின் காதலனாம், மாடஸ்டி என்ற பெயர் மாடஸ்தி என்று மாற்றப் பட்டதோடில்லாமல் அவள் ஒரு அரசாங்க உளவாளி என்றும் கதையை மாற்றி கொன்று இருப்பார்கள். (கதையையும், கதாபாத்திரத்தையும்).

சரி, இதனைக் கூட சில பல வாசகர்கக் சகித்துக் கொண்டு இருக்கலாம். ஆனால், திடிரென்று ஒரு நாள் இந்த பதிவு சம்பந்தப் பட்ட புத்தகம் வந்தது. வழக்கமாக மற்ற காமிக்ஸ் இதழ்களை கண்டுக் கொள்ளாத விஜயன் சார் கூட இதனைப் பற்றி அவருடைய ஹாட் லயனில் எழுதி இருப்பார். இளவரசியை தேடி என்று ஏப்ரல் பூல் ஆக வந்த இந்த கதையை பற்றி வாசகர்கள் யாரும் தயவு செய்து திரு பீட்டர் ஒ டோன்னல் இடம் கூறி விடாதீர்கள். பாவம், இந்த வயதான காலத்தில் இதனைப் போன்ற அதிர்ச்சியை தாங்கும் மனோவலிமை அவருக்கு கண்டிப்பாக இருக்காது. தயவு செய்து இதனை யாரும் டிரான்ஸ்லேட் செய்து ஆங்கிலத்தில் போட்டு விடாதீர்கள்.

கதை (அப்படி ஒன்று இருந்தால் சரி) எப்படி ஆரம்பிக்கிறது என்றால் - மாடஸ்தி ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கும் போது அவளுக்கு போலீஸ கமிஷனர் இடமிருந்து ஒரு கால் வருகிறது. உடனே மாடஸ்தி தன்னுடைய போலீஸ உடையை அணிந்து கொண்டு கமிஷனர் அலுவலகம் செல்கிறாள்.

ஓஒ, ஒரு புயல் ஒன்று புறப் பட்டதே,

ஓஓ, ஒரு பெண் சிங்கம் கிளம்பி விட்டதே,

ஓஓ, தர்ம யுத்தம் ஒன்று ஆரம்பம் ஆகி விட்டதே. ஏ ஏ ஏ

என்று எனக்கு தெரிந்த கொலை வெறி கவிஞர் ஒருவர் கவிதை வேறு எனக்கு எழுதி அனுப்பினார்.

பின் குறிப்பு: மாடஸ்தி தொலைக் காட்சியில் பார்த்துக் கொண்டு இருந்தது இந்திய புருஸ் லீ தனுஷ் நடித்த ஆக்ஷன் படத்தை என்று செக்கொஸ்லொவக்கியாவில் இருந்து செங்கமலம் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 1

இந்த கொடுமையை சற்று பாருங்கள் ஐயா. மொராக்கோ போலிசால் எதுவும் செய்ய முடியவில்லையாம். அவர்கள் சர்வதேச போலி உதவியை நாடுகிறார்கள். இதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், சர்வதேச போலீஸ இந்தியாவை சார்ந்த உளவுத்துறையை அணுகாமல் போலீஸ கமிஷனர் அவர்களை அணுகி அவரும் மாடச்தியை அழைப்பது தான் கொடுமை.

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 2

இப்போது பிளாஷ் பேக்கில் மொராக்கோ இளவரசி எப்படி கடத்தப் பட்டர் என்பதை போலீஸ கமிஷனர் மாடச்திக்கு விளக்குகிறார். அதாவது மொராக்கோ இளவரசி அழகிப் போட்டியை காண போகிறாராம். அங்கே ஒரு கார் வந்து மொதுகிரதாம். உடனே காரில் இருந்து செக்கியுரிட்டி இறங்கி போய் விசாரிக்கிறாராம். இதை விட காமெடி வேறெங்காவது கேள்விப் பட்டு இருக்கிறீர்களா?

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 3

உடனே மாடஸ்தி போலீஸ கமிஷனர் இடம் உத்தரவு பெற்றுக் கொண்டு பாரிசு கிளம்பி செல்கிறாள். அங்கே அவளை பாரிசு விமான நிலையத்தில் வரவேற்கின்றனர். அதற்காக ஒரு பைக்கை விமான நிலையத்தின் உள்ளேயே ஒட்டி வந்து இறங்காமல் வெயிட் செய்துக் கொண்டு இருக்கும் அந்த பாரிசு போலீஸ காரர்களை என்னவென்று சொல்வது?

சில பட்ஜெட் படங்களில் வெளிநாட்டுக்கு போவதை காட்ட விமானம் ஒன்று பறப்பது போன்ற காட்சியை அமைத்து இருப்பார்கள். ஆனால், காமிக்ஸ் கதைகளில் அந்த தேவை இல்லை. இருந்தாலும் மாடஸ்தி விமானத்தில் தான் வந்து இறங்கினால் என்பதை காட்ட அந்த விமானம் அங்கேயே இருப்பதை காணுங்கள். அதைப் போலவே விமான நிலையத்தின் உள்ளேயே பைக்கை ஒட்டிக் கொண்டு வரும் அந்த பாரிசு போலீஸ்காரர் பெயர் என்ன வயகரா மாமாவா?

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 4

இப்போது மாடஸ்தி காரில் ஏறப் போகிறாள். அங்கு அவளை வரவேற்க பாரிசு போலீஸ துறையை சார்ந்த ஒரு பெண் அதிகாரி போலீஸ உடையில் வந்து காத்து இருப்பதை பாருங்கள். பின்னர் மாடஸ்தி காரில் ஏறியதும் அந்த காரில் இன்னுமொரு ஆள் பின் சீட்டில் இருக்கிறான். பிறகு கார் வேகமாக போகிறது. என்ன நடக்கிறது இங்கே?

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 5

கைப் பையை கொடுப்பதைப் போல மாடச்தியின் அதிரடி அட்டகாசத்தை பாருங்கள். அடி வாங்குபவன் முகத்தில் தான் எத்தனை எத்தனை உணர்ச்சிகள்? ஒரு முன்னுறு டாலர்கள் கிடைக்கிறது என்பதற்காக இந்த கடத்தல் தொழிலுக்கு வந்ததையே, மாடச்தியிடம் அடி வாங்கியதால் வெறுப்பவன் போல அல்லவா இருக்கிறது அந்த ரியாக்ஷன்? அந்த உணர்ச்சி குழம்பை கவனியுங்கள்.

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 6

அடுத்து அங்கே வேறென்ன நடக்கும்? மாடச்தியின் அதிரடி சரவெடி தான். கச்சேரி கலை கட்டும்போது அந்த மர்ம எதிரி தப்பி ஓடி விடுகிறான். பின்னர் பாரிசு தலைமை போலீஸ அதிகாரியை மாடஸ்தி சந்திக்கிறாள். அங்கும் இருக்கும் அந்த பெண் போலீஸ அதிகாரி கறுப்புக் கண்ணாடி அணிந்து இருப்பதை கவனியுங்கள். அதிகாரி கூறுவதை சற்று கேளுங்கள்- சர்வதேச சதிகாரர்கள் என்பதால் எல்லா நாடுகளிலும் ஆட்கள் இருப்பார்கள்.

அது சரி - உங்கள் நாட்டில் இருக்கிறார்களே அதற்க்கு என்ன செய்யப் போகிறார் இந்த பாரிசு உயர் போலீஸ அதிகாரி? இந்த போலீஸ அதிகாரியை குறை கூறி ஒன்றும் ஆகப் போவது இல்லை. ஏனென்றால் இந்த பாரிசு உயர் போலீஸ அதிகாரி தான் கார்லா புருனியின் ஒன்று விட்ட மச்சினிச்சியின் மூன்றாவது மருமகனின் இரண்டாவது சகோதரன்.

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 7

அடுத்து என்ன ஒரு புத்திசாலித்தனம் என்று நீங்கள் வியந்து போகும் அளவில் சில சிந்தனைகளை செய்து விட்டு மாடஸ்தி குளிக்கப் போகிறாள். இங்குதான் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த "காட்சிகள்" வரும். வயகரா மாமா, விசிலடிக்காமல் கவனியுங்கள். மாடஸ்தி குளிக்கும்போது கூட யோசித்துக் கொண்டே தான் குளிப்பாள் என்பதை காட்டவே இந்த படங்கள். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை. அந்த சைட் ஆங்கிள் போஸ் நன்றாக இருந்தது என்று ஒரு பாண்டி மைனர் மின் அஞ்சல் அனுப்பி உள்ளார்.

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 8

மாடச்தியின் அறைக்குள் கள்ளச் சாவி போட்டுக் கொண்டு நுழையும் அந்த மர்ம நபர் மாடச்தியை அதிர்ச்சி அடைய செய்கிறான். அப்போது நீ யார் என்று மாடஸ்தி கேட்கும் கேள்விக்கு அவன் சொல்லும் பதிலை படியுங்கள்: நீ 006 என்றால், நான் 005 என்று கூறும் அவன் பதில் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

அட, அது கூட பரவாயில்லை. அடுத்து அவன் கூறும் பன்ச் டையலாகை படியுங்கள்: நீ என்னை பிடிக்க வந்து இருக்கிறாய். நான் உன்னை பிடிக்க வந்து இருக்கிறேன். நான் நினைக்கிறேன், பேரரசு போன்ற நபர்கள் இந்த காமிக்ஸ் கதைகளை படித்து விட்டு தான் வசனங்கள் எழுதுகிறார்களோ?

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 9

அடுத்து அவனிடம் இருந்து தப்பிக்க மாடஸ்தி செய்யும் துணிகர செயலை காணுங்கள். உடை அணிய செல்லும் மாடஸ்தி குதி உயர்ந்த காலனியை (என்ன கொடுமைடா இது) கழட்டி அதில் இருக்கும் போனில் இரண்டு காபி கேட்கிறாள். உடனே அழைப்பு மணி அடிக்கிறது.

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 10

கதவு மணி ஓசையை கேட்ட அந்த மர்ம நபர் மாடச்தியை கதவை திறக்க சொல்கிறான். கதவை திறக்கும் மாடஸ்தி உடனே வெளியே வந்து கதவை மூடி விட்டு தப்பித்து விடுகிறாள். அதனால் அந்த மர்ம நபர் வருத்தம் அடைகிறான். அவனிடம் இருந்து தப்பித்த மாடஸ்தி ஒரு இரவு விடுதிக்கு செல்கிறாள். அங்கு அவனை தேடுகிறாள்.

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 11

இவ்வாறாக மாடஸ்தி ஒவ்வொரு இரவு விடுதியாக நுழைந்து அங்கு நடனத்தை ரசிக்கும் நபர்களில் அந்த மர்ம உளவாளி இருக்கிறானா என்று நோட்டம் விடுகிறாள். பல இடங்களில் அவளுக்கு வருத்தமே மிச்சம். ஆயினும், கடைசியாக ஒரு விடுதியில் அந்த மர்ம உளவாளியை மாடஸ்தி பார்த்து விடுகிறாள்.

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 12

இரண்டு வைரிகளும் ஒருவரை ஒருவர் கண்டு கொண்டு விட்டனர். இன்று வேட்டை ஆடப் போவது யார்? வேட்டை ஆடப் படுவது யார் என்று தெரியாத நிலை. ஒருவரை ஒருவர் வைத்த கண் வாங்காமல் அடுத்தவரின் வருகைக்காக காத்து இருந்த இந்த காட்சியை புகழ் பெற்ற கொரியா திரைப் பட இயக்குனர் பார்க் சான் வூக் தன்னுடைய பழி வாங்கும் படலத்தின் முதல் படத்தில் வைத்து இருப்பார்.

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 13

அடுத்து மாடஸ்தி அங்கு இருந்து வெளியேறி கழிப்பறைக்கு செல்கிறாள். அந்த மர்ம உளவாளியும் அவளை பின் தொடர்ந்து வருகிறான். பின்னர் அவனிடம் இருந்து தப்பிக்க வழி தேடுகிறாள் மாடஸ்தி. அங்கு உள்ளே வரும் ஒரு பெண்ணை மயக்கமுற செய்து விட்டு அவள் உடையை அணிந்து கொண்டு மாடஸ்தி வெளியேறுகிறாள்.

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 14

முக்காடு அணிந்து மாடஸ்தி ஒய்யாரமாக நடந்து போகிறாள் = இதை மட்டும் அந்த புண்ணியவான் பீட்டர் ஒ டோன்னேல் படித்தால் அதோ கதிதான். பாவம், அந்த மனிதர். எவ்வளவு பாடுபட்டு இந்த கதாபாத்திரத்தை உருவாக்கி இருப்பார். ஆனால், கடைசியில் இப்படி முக்காடு அணிந்து ஒய்யாரமாக நடந்து செல்லும் நிலையா வரவேண்டும் மாடச்திக்கு?

அந்த பெண்ணை மாடஸ்தி இல்லை என்று ஏமாந்த மர்ம உளவாளி பின்னர் பெண்கள் கழிப்பறைக்கு வந்து பார்க்கிறான். பின்னர் மாடஸ்திக்கு உடையை கொடுத்த பெண்ணை மாடஸ்தி என்று நம்பி பின் தொடர்கிறான்.

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 15

அடுத்து அந்த பெண்ணை மர்ம உளவால் கடத்திக் கொண்டு காரில் செல்கிறான். அப்போது அவன் கூறும் அந்த பன்ச் டையலாகை கவனியுங்கள்: எந்தக் கிளியும் என் கண்ணிலிருந்து தப்பவே முடியாது.

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 16

இப்படியாக கதை செல்கிறது.

அடுத்து நடக்கப் போவது என்ன?

மாடச்தியின் நிலை என்ன ஆயிற்று?

மர்ம உளவாளி உண்மையில் யார்?

மாடஸ்தி உடைகளை கழட்டும் "அந்த" சீன எப்போது வரும்?

மொரோக்கோ இளவரசி என்ன ஆனார்?

என்று பல கேள்விகளுக்கு பதில் தெரிய வேண்டுமானால், படியுங்கள் ராணி காமிக்ஸ் இதழ் முன்னுத்தி ஏழு "இளவரசியை தேடி".

குடும்ப குத்து விளக்கு நடிகை சிநேகா, பத்தினி தெய்வம் நடிகை நமீதா ஆகியோரைப் போல மாடஸ்தி போலீஸ உடை அணிந்து இருப்பது இந்த கதையின் சிறப்பு அம்சமாகும்.

சென்ற பதிவில் பதிவு சம்பந்தப் பட்ட விஷயத்தை விட அதன் சார்பு படங்களே ரசிகர்களை மிகவும் கவர்ந்து உள்ளதை அறிய முடிந்தது. குறிப்பாக நமீதா படங்கள் பெரிதாக வில்லை என்று ஷங்கர் இங்கே குறை கூறி உள்ளார். ஆனால், இதற்க்கு மேலும் பெரிதானால் ஸ்கிரீன் தாங்காது என்பதாலே இந்த அளவு அமைக்கப் பட்டது என்பது தான் உண்மை.

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன், 
ஒலக காமிக்ஸ் ரசிகன்

Wednesday, June 3, 2009

டாக்டரின் ஆவி - The Aavi of the Doctor

 

அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். நீண்ட நெடு நாட்களுக்கு முன்னே நானும் ஒரு காமிக்ஸ் வலைப் பதிவன் என்று ஒரு நிலை இருந்தது. பின்னர் பணிச்சுமையும் வேறு சில சுமைகளும் என்னை இந்த வலையுலகம் வரவிடாமல் தவிர்த்தன. இதோ, நான் வந்து விட்டேன்.

ஆனால், இது ஒரு குழப்பமான பதிவு. இந்த பதிவின் கேள்விகளுக்கு விடை ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி தான் தெரியும். அது என்ன ஜூன் ஒன்பது என்று கேள்வி கேட்கும் நபர்களுக்கு, பிடி சாபம் - உங்கள் கனவில் நமீதா முழுவதும் போர்த்திக் கொண்டு புடவை கட்டிக் கொண்டு வர.

இந்த பதிவை முன்னோட்டம் என்றும் கூறலாம், அல்லது டீசர் என்றும் கூறலாம். அல்லது பதிவு என்றும் கூறலாம், அல்லது - அட போங்கப்பா. என்ன வேணா சொல்லுங்க. இதோ பதிவு.

 

இது எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான முயற்சி ஆகும். நன்றாக இருந்தால் எனக்கு நன்றி தெரிவியுங்கள். இல்லை என்றால் இந்த பதிவை ரசிக்கும் அளவிற்கு இன்னும் ரசனையை வளர்த்துக் கொள்ளாத உங்களை நீங்களே திட்டிக் கொள்ளுங்கள். வேறென்ன சொல்ல? இந்த பதிவில் நாம் ரசிக்கப் போகும் கதை தான் அடுத்த பதிவில் முக்கியமான ஒரு விஷயத்திற்கு முன்னோடி. அதனால் விரைவில் இந்த பதிவில் நம்முடைய கதைக்கு சென்று விடுவோம்.

வாசு காமிக்ஸ் என்ற ஒரு அற்புத பொக்கிஷத்தில் ஆவது இதழாக வந்த கதை தான் டாக்டரின் ஆவி. இந்த புத்தகம் அமேசான் வலை தளத்தில் கிட்டதட்ட ஆயிரத்து நானூறு டாலர்களுக்கு ($ 1,400) சமீபத்தில் விற்கப் பட்டது என்பது குறிப்பிட தக்கது. இந்த புத்தகத்தை வாங்கிய அதிர்ஷ்டசாலி யாரோ?

Doctarin aavi 1

 

டாக்டரின் ஆவி என்றால் என்ன? ஒரு டாக்டர் செத்துப் போவார். அவருடைய ஆவி வந்து அவரை கொன்றவர்களை பழி வாங்கும் என்று அரதப் பழசாக யோசிக்காமல் இந்த கதையை சற்று கூர்ந்து படியுங்கள். இது ஒரு விஞ்சான கதை. விஞ்சானி பீட்டர் என்பவர் ஒரு பின் நவீனத்துவ முன்னோடி கருத்துக்களை கொண்ட பகுத்தறிவுவாதி. லண்டனில் இருக்கும் இவரை உலக விஞ்சானிகள் சங்கத்தில் சேர்க்க மறுத்து விடுவதால் அவர் மனம் நொந்து தன்னை பழித்த இந்த சமுதாயத்திற்கு தான் யார் என்பதை நிரூபித்துக் காட்ட தன்னைத்தானே கொல்ல முடிவு செய்கிறார்.

 

 

Doctarin aavi 2

இந்த கூடு விட்டு கூடு பாய்வதைப் போல ஒரு மனிதனின் ஆவியானது மற்றுமொரு ஆவிக்கு வெஸ்டர்ன் யூனியன் மணி ட்ரான்ஸ்பர் போல ஆவி ட்ரான்ஸ்பர் செய்துக் காட்ட முடியும் என்பது அவரது ஆராய்ச்சியின் முடிவு. அதனால் அவர் அவருடைய அந்த அற்புத கண்டுபிடிப்பான மருந்தை உட்கொண்டு இறந்து விடுகிறார். அவரது மரணத்தை அவரது ஆஸ்பத்திரியிலேயே உறுதி செய்து அவரை ஒரு மயானத்தில் புதைத்து விடுகிறார்கள்.

 

 

 

 

 

 

Doctarin aavi 3

 

அதன் பின்னர் அவரை இந்த உலகம் மறந்து விடுகிறது. தமிழ் எழுத்தாளரும் என்னுடைய நண்பருமாகிய பட்டுக் கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய ஒரு நாவலின் தலைப்பை இங்கு உபயோகப் படுத்தி அவரின் நிலையை மக்களுக்கு விளக்குகிறேன்: இனி அவன் இறந்தவன்.

 

பின்னர் டாக்டர் பீட்டர் தன்னுடைய அற்புத மருந்தின் உதவியால் தன்னுடைய ஆவியை அவரது மருத்துவமனையில் பனி புரியும் நர்ஸ் ஆன லீலா'வின் உடலில் புகச்செய்கிறார். அதன் பின்னர் நர்ஸ் லீலா டாக்டர் பீட்டர் 'இன் ஆவி புகுந்ததால் டாக்டர் பீட்டர் ஆக மாறி விடுகிறாள். ஆம், இப்போது அவள் உடலால் லீலா, சிந்தனையில் டாக்டர் பீட்டர் . இதனைத்தான் கவிச் சக்கரவர்த்தி கம்பன் ஓர் உடல் ஈருயிர் என்று கூறினாரோ?

 

Doctarin aavi 4

Doctarin aavi 5

பின்னர் லீலா டாக்டர் பீட்டர் 'ன் உடல் புதைக் கப்பட்ட மயானத்துக்கு சென்று அந்த உடலை வெளிக் கொணர்ந்து அந்த உடலுக்குள் மறுபடியும் புகுந்து கொள்கிறார் (அதாவது இப்போது பீட்டர் உடலில் பீட்டர் , லீலா உடலில் லீலா - நோ கன்பூசன்).

Doctarin aavi 6 இனிமேல் என்ன நடக்கும்?

டாக்டர் பீட்டர் இந்த சமுதாயத்தை வஞ்சம் தீர்த்துக் கொண்டாரா?

லீலாவின் நிலை என்ன? அவளை டாக்டர் பீட்டர் அடைந்தாரா?

லீலாவின் காதலன் ஜான்சன் என்ன ஆனான்?

இந்த டாக்டரின் ஆவியை எப்படி அழிப்பது?

அப்படியே அழித்தாலும், செத்துப்போன ஒருவரை கொன்றால் உங்களுக்கு சட்டப்படி தண்டனை உண்டா?

இது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தெரிய வேண்டும் என்றால் அடுத்த பதிவை படியுங்கள் - என்று சொல்வேன் என்று எதிர் பார்த்தீர்களா? அப்படி என்றால் நீங்கள் ஏமாந்து போய் விட்டீர்கள்.

 

 

 Vijayanthi IPS ஆம், இவ்வளவு விலை கொடுத்து வாங்கிய ஒரு புத்தகத்தை நான் அவ்வளவு சுலபத்தில் உங்களுக்கு அனுபவிக்க கொடுப்பதாக இல்லை. அப்போது அடுத்த பதிவில் அப்படி என்னதான் வரப் போகிறது என்று கேட்பவர்களுக்கு - தொடர்ந்து படியுங்கள்.

1990ம வருடத்ய்தில் வந்த தெலுங்கு படம் கர்த்தவ்யம். இந்தப் படத்தில் இரண்டு சிறப்பு அம்சங்கள் உண்டு. ஒன்று - இதுதான் மொக்கை படங்களில் பாடல் காட்சிகளில் மழையில் நனைந்து "திறமை" காட்டிக் கொண்டு இருந்த விஜய சாந்தியை ஒரு கட்சியின் தலைவியாக மாற்றும் அளவிற்கு ஹிட் ஆகி அவரின் தலை எழுத்தை மாற்றிய படம். இரண்டாவது சிறப்பு அம்சம் என்ன என்பதை நீங்கள் கூற வேண்டும். அப்படி கூறுபவர்களுக்கு அந்த சிறப்பு அம்சத்தை மறுபடியும் காணும் வாய்ப்பை அளிப்பேன்.

 

இந்த கர்த்தவ்யம் படம் தான் தமிழில் வைஜெயந்தி ஐ.பி.எஸ் என்ற பெயரில் வந்தது.

karthavyam 

நம்முடைய அடுத்த பதிவிற்கும் இந்த கர்த்தவ்யம் படத்திற்கும் என்ன சம்பந்தம்?

இந்த வைஜெயந்தி ஐ.பி.எஸ் படத்திற்கும் குடும்ப குத்து விளக்கு நடிகை சிநேகா அவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

இல்லை, பத்தினி தெய்வம் நடிகை நமீதா அவர்களுக்கும் நம்முடைய அடுத்த பதிவிற்கும் என்ன சம்பந்தம்?

நம்முடைய இந்த பதிவிற்கும் நம்முடைய அடுத்த பதிவிற்கும் என்ன சம்பந்தம்? (இது கொஞ்சம் ஓவர் தான்).

bhavani35

BHAVANI

NAMITHA IPS

 

 

 

 

 

 

 

 

 

தெரிந்து கொள்ள நீங்கள் ஜூன் ஒன்பதாம் தேதி, இதே வலை தளத்திற்கு வந்து விடையை காணுங்கள். அது வரைக்கும், டொட்ட டைந்க். (ஒன்று மில்லை, நம்ம ராணி காமிக்ஸ் ஹீரோ டைகர் கதையை சமீபத்தில் ஆங்கிலத்தில் படித்தேன், அதான்).

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Thursday, February 19, 2009

முன்னோட்டம் 1: இரும்புக் கை மாயாவியின் சூப்பர் ஹீரோ தோற்றத்தின் மூலம்

FL Teaser 1

அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். என்னுடைய முதல் இரண்டு பதிவுகளில் இருந்த உண்மைகளை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள்.எனக்கு வந்த பல மின்னஞ்சல்களில் வாசக அன்பர்கள் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள்.

ஆனால், ஒரு சில வாசகர்கள் மட்டும் நான் எழுதுவதை மிகவும் "சீரியஸ்" ஆக எடுத்துக் கொண்டு எனக்கும் வாசக நண்பர்களுக்கும் போன் செய்து அவர்களது கோபத்தை தெரிவித்தார்கள். இன்னும் சிலர் அவர்களது கருத்தை இங்கேயே கமெண்ட் மூலம் வெளிப்படுத்தினார்கள்.

நம்முடைய காமிக்ஸ் டாக்டர் அவர்கள் ஏதோ பெரிய உலக அதிசயம் போல இரும்புக்கை மாயாவி அவர்களின் சூப்பர் ஹீரோ தோற்றத்தை கொண்ட ஒரு கதையையும் அந்த கதையின் மூலகாரணத்தையும் ஒரு பதிவாக போட்டு உள்ளார்.

என்னங்கடா இது? இந்த இரும்புக்கை மாயாவியின் சூப்பர் ஹீரோ தோற்றத்தின் மூலமே நம்ம தமிழ் நாட்டு காமிக்ஸ் என்பது உண்மையாக இருக்கும்போது அதை எப்படி நம் வாசகர்கள் தெரிந்து கொள்ளாமல் இருக்க வேண்டும்? அதுவும் இல்லாமல் இப்போது ஆள் ஆளுக்கு முன்னோட்டம், ட்ரைலர், டீசர் என்று பல பதிவுகளை போடுகின்றனர். பல லட்சக்கணக்கான ரசிகர்களின் (அட, நிஜம் தாங்க) வேண்டுகோளுக்கிணங்க நானும் ஒரு முன்னோட்டம் பதிவு இடுகின்றேன்.

FL Teaser 2

 

தம்பிகளா, இந்த பேட்மேன், சூப்பர்மேன், வேதாளர் (ராணி காமிக்ஸ் வாசகர்களுக்கு மாயாவி), இத்யாதி, இத்யாதி சூப்பர் ஹீரோக்களுக்கு (ஆங், மறந்து விட்டேனே, நம்ம இரும்புக் கை மாயாவியும் கூட) அவர்கள் உடுத்தும் உடுப்பின் மூலம் இதோ.

 

இந்த அமெரிக்க காமிக்ஸ் எழுத்தளார்கள் எல்லாரும் பல வருடமாக சென்னை, சிவகாசி வந்து நம்ம பழைய காமிக்ஸ் புத்தகத்தை வாங்கி போறாங்க. என்ன காரணம் தெரியுமா? எல்லாம் பாழாப் போன இந்த சூப்பர் ஹீரோ டிரஸ் தான்.

 

 

 

FL Teaser 3

 

அட, ஏன், நம்ம மன்னர் பீமா கதைய கொஞ்சம் உத்து படிசீங்கன்ன அது எங்க இருந்து சுட்ட கதைன்னு உங்களுக்கு நல்ல புரியும்.

நம்ம புராணங்களை பத்தி எப்பவுமே கதை ஆரம்பத்துல ஒரு நாலு அஞ்சு பக்கத்துக்கு வழக்கமாக எழுதுவாங்க. நாம யாரு, நம்ம பவரு ஏன்னா இப்படி பல கதையையும் எழுதுவாங்க.

இந்த வேதாளர் அப்படின்னு ஒருத்தர் கதையை பாதீங்கன்ன அதுவும் இப்படி தான் இருக்கும் ஆரம்பத்துல. நீங்களே புரிந்து கொள்ளுங்கள் யார் யாரிடம் இருந்து காபி அடித்து இருப்பார்கள் என்று.

 

 

 

FL Teaser 5 FL Teaser 6

அப்படியும் சந்தேகம் இருந்தால் நம்ம நெருப்பு விரல் சி.ஐ.டி அவர்கள் கொடுத்த ரிப்போர்ட் படி யாரோ லீ பால்க் ஆமே? அவருதான் இந்த வேதாளன் கதையை எழுதுனாரம். அவரு வீட்டு பெட் ரூம்ல நம்ம புக்'கு பலது இருந்துச்சாம்.

FL Teaser 7

அப்புறம் இந்த ஆழ நெடுங்காடு, பந்தர் இன மக்கள், பெங்காலி தீவு அது இதுன்னு பல கதைகள் இருக்காம். அட, இங்க பாருடா, நம்ம்கிட்டேயும் இப்படி பல விதமான சரக்கு இருக்கில்ல.

நம்ம தீவு பேரு போடக் ஆகும். நம்ம மக்கள் மிசோ இன மக்கள். நம்ம பேரு .......... அங்க, அதைத்தான் நீங்க கண்டு பிடிக்கணும்,

FL Teaser 8 FL Teaser 9

 

 

ஆமாம் மக்களே, நான் யாரு, என்னோட பேரு என்ன அன்பதை நீங்க பின்னுட்டம் மூலமாக தெரிய படுத்தனும்.

FL Teaser 10

 

FL Teaser 10A

பின்ன என்னங்க, நாம கொஞ்ச நாள் வேலைல பிசி ஆகிட்டா (நாமளே வேலை செய்யுறது எப்பவோ தான்) அதுக்குள்ள யார் யாரோ வந்து சும்மா பதிவு எல்லாம் போட்டு கலக்குறாங்க. இந்த காமிக்ஸ் பிரியர் க.கொ.க.கு யாருன்னே தெரியல. அவரு வந்து முன்னோட்டம் எல்லாம் போடுறாரு.எந்த கதை, எந்த புத்தகம் கண்டு பிடியுங்கள் என்று கேள்வி வேற கேக்குறாரு. என்ன கொடுமை இது?

அதனால, நாங்களும் கேப்போம்ள கேள்வி என்று தான் இந்த பதிவை போட்டேன். எங்க, தில் இருந்த இது எந்த காமிக்ஸ், ஹீரோ பேரு என்ன என்பதை சொல்லுங்க பார்ப்போம்.

 

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Related Posts with Thumbnails