Saturday, July 4, 2009

ஜூலை நாலு - அமெரிக்க சுதந்திர தின சிறப்பு காமிக்ஸ் பதிவு

வாசகர்களே,

இன்று ஜூலை நான்காம் தேதி. இன்றுதான் நமது காமிக்ஸ் வலைப் பதிவர் காமிக்ஸ் பிரியரின் பிறந்த நாளும் கூட. அவரை வாழ்த்த வயதில்லை என்பதால் பாராட்டுகிறோம்.

காமிக்ஸ் உலகில் பிறரை காப்பி அடிக்காமல் சொந்த சரக்கை கொண்டு பதிவிடும் சில பதிவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.

 

இன்று அமெரிக்க சுதந்திர நாள். பலருக்கு தெரியாத விஷயம் என்னவென்றால் அமெரிக்காவும் ஒரு காலத்தில் பிரிட்டனிடம் அடிமையாக இருந்த நாடுதான். 1776 ஆம் ஆண்டு பிரிட்டனை எதிர்த்து நடந்த புரட்சியில் முடிவாக ஜூலை இரண்டாம் தேதி அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை தாமஸ் ஜெபர்சன் மற்றும் ஜான் ஆடம்ஸ் ஆகிய இருவரும் சேர்ந்து தயாரித்தனர். பின்னர் ஜூலை நான்காம் தேதி அமேரிக்கா சுதந்திர நாடாக அறிவிக்கப் பட்டது (அவர்களது ஐம்பதாவது சுதந்திர ஆண்டில் இந்த இருவரும் இறந்ததே ஒரு குறிப்பிடத் தக்க ஒற்றுமை).

போதும் இந்த அமெரிக்க வரலாற்று மொக்கை. நான் கூற வந்த விஷயமே இது தான். அமேரிக்காவில் தான் காமிக்ஸ் கலாச்சார கொலை ஆரம்பித்தது. சூப்பர்மேன், ஸ்பைடர் மேன், பேட் மேன், மொக்கை மேன், அயர்ன் மேன் (இஸ்த்திரி பண்ணுவாரோ?) என்று பல கதைகளை கொண்டு வந்து பேண்டசி ஜென்ரே என்று காமிக்ஸ் கதைகளை உலக அளவில் கொன்று வருகின்றனர்.

John Paul Man

ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனையே கடித்த விஷயமாக போப் ஜான் பால் மேன் என்று ஒரு காமிக்ஸ் புத்தகத்தை மார்வல் காமிக்ஸ் நிறுவனத்தினர் வெளியிட்டு உள்ளனர் என்ற தகவல் இந்த ஸ்கான்'ஐ பார்த்தால் விளங்கும்.

ஆனால் இதில் ஒரு நல்ல விஷயமும் உள்ளது. சிறுவர்களுக்கு போப் ஜான் பால் வாழ்க்கையை எளிதில் விளக்கி கூற இயலும். நம்முடைய அமர் சித்திரக் கதைகளில் வந்த சுபாஷ் சந்திர போஸ், நேரு மாமா போன்ற தலைவர்களின் வாழ்கை சரிதங்களே எனக்கு மிகவும் உதவியாக இருந்தன. அதுவும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எனக்கு ஒரு ஹீரோவாக புலப் பட ஆரம்பித்ததே இந்த கதை மூலம்தான். ஆனால், அவை எல்லாம் வாழ்கை வரலாறு காமிக்ஸ் வடிவில் இருந்தன.

ஆனால் இதுவோ, ஒரு மதத் தலைவரை காமிக்ஸ் ஹீரோவாக கொண்டு வந்ததாக இருக்கிறது. அதனால் இது கண்டிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காமிக்ஸ் போல ஒரு மொக்கை காமிக்ஸ் ஆகவே இருந்து இருக்கும் என்பதில் அய்யம் இல்லை.

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன், ஒலக காமிக்ஸ் ரசிகன்

-- If You Haven't Read this, There is Something Fundamentally Wrong With You.

Thanks in Advance.

Editor, Greatest Ever Comics.

Hell is for Heroes.

17 comments:

  1. என்ன சுதந்திர தேவி படம் மட்டும்தான் இருக்கு! பதிவக் காணோம்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  2. எல்லார்க்கும் அமெரிக்க சுதந்திர தின வாழ்த்துக்கள்.
    பதிவு எங்கே, எங்கே, எங்கே.

    வருங்காலத்தலைவர்
    இளம் சிட்டுக்கள் இல்லம்

    ReplyDelete
  3. அமெரிக்க சுதந்திர தினத்திற்கும் பாப் ஜான் பாலிற்கும் என்னப்பா தொடர்பு, மீண்டும் சஸ்பென்ஸா, தாங்க முடியலையே, தயவு பண்ணி பதிவ போடுங்க இயக்குனரே.

    ReplyDelete
  4. ஒலக காமிக்ஸ் ரசிகரே,

    இப்படியாவது தங்களை இளஞ் சமுதாயம் மறக்காமல் இருக்கட்டும் என்ற ஒர் சின்ன ஆசையாகக் கூட இருக்கலாம். வத்திக்கன் இதற்கு அனுமதி அளித்து விட்டதா.

    புதிய ஒர் தகவலை அறியச் செய்ததிற்கு நன்றி நண்பரே, தொடருங்கள் உங்கள் அட்டகாசங்களை.

    ReplyDelete
  5. //Is it super man?
    is it spider man?

    no, it is john paul ma//

    விழுந்து விழுந்து சிரித்தேன்.

    காமிக்ஸ் பிரியன்.
    இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
    காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்

    ReplyDelete
  6. ஒலக காமிக்ஸ் ரசிகரே,

    //நம்முடைய அமர் சித்திரக் கதைகளில் வந்த சுபாஷ் சந்திர போஸ், நேரு மாமா போன்ற தலைவர்களின் வாழ்கை சரிதங்களே எனக்கு மிகவும் உதவியாக இருந்தன.//

    மிகவும் சரி.

    நான் கூட அந்த கதைகளை பற்றி யோசித்துக் கொண்டு இருந்தேன். பார்க்கலாம்.

    காமிக்ஸ் பிரியன்.
    இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
    காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்

    ReplyDelete
  7. ஒலக காமிக்ஸ் ரசிகா!

    அமெரிக்க மொக்கை நன்றாகத்தான் இருக்கிறது. அதற்காக உள்ளூர் மொக்கையை கண்டுக்கொள்ளாமல் விட்டால் எப்படி? தமிழ் கூறும் நல்லுலகத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு சிறுவர் இதழில் டோனி என்பவர் (கிரிக்கெட்டெல்லாம் விளையாடுவாராம் அவர்!) 15 நாட்களுக்கு ஒருமுறை விடாபிடியாக ஏதேனும் வீர சாகஸங்களை செய்து வருகிறார். சில பல சாகஸங்களை நானும் படித்து பயந்து போயிருக்கிறேன். மொக்கையில் சிறந்த வண்ணமயமான மொக்கை அது. தயவு செய்து மொக்கை டோனியை நமது வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இல்லையேல் டோனியின் சாகஸங்களை கத்தரித்து பைண்ட் செய்து பதிவஞ்சலில் உங்களுக்கு அனுப்பி பழிவாங்குவேன் என பயத்துடன் உங்களை எச்சரிக்கிறேன்!

    ReplyDelete
  8. அருமையான மொக்கை காமிக்ஸ் பற்றிய பதிவு.

    ஒலக காமிக்ஸ் ரசிகரே, உமக்கு மட்டும் எங்கிருந்து தான் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் கிடைக்கிறதோ?

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
    புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்

    ReplyDelete
  9. ஒலக காமிக்ஸ் ரசிகரே,

    இந்த ஸ்கான் எந்த புத்தகத்தில் இருந்து எடுக்கப் பட்டது, எந்த வருடம் வந்த புத்தகம் என்பதையும் தெரிவித்தால் நன்றாக இருந்திருக்கும்.

    அமெரிக்க சுதந்திர நாளில் அவர்களை இப்படியெல்லாம் கிண்டல் செய்தால் அங்கிள் சாம கோவிச்சுக்க மாட்டாரா?

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
    புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்

    ReplyDelete
  10. சூப்பர் பதிவு.

    உங்களுக்கு மட்டும் எப்படி?

    ReplyDelete
  11. //ஒரு சிறுவர் இதழில் டோனி என்பவர் (கிரிக்கெட்டெல்லாம் விளையாடுவாராம் அவர்!)

    super.

    ReplyDelete
  12. ஒலக காமிக்ஸ் ரசிகரே,

    //இன்று அமெரிக்க சுதந்திர நாள். பலருக்கு தெரியாத விஷயம் என்னவென்றால் அமெரிக்காவும் ஒரு காலத்தில் பிரிட்டனிடம் அடிமையாக இருந்த நாடுதான். 1776 ஆம் ஆண்டு பிரிட்டனை எதிர்த்து நடந்த புரட்சியில் முடிவாக ஜூலை இரண்டாம் தேதி அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை தாமஸ் ஜெபர்சன் மற்றும் ஜான் ஆடம்ஸ் ஆகிய இருவரும் சேர்ந்து தயாரித்தனர். பின்னர் ஜூலை நான்காம் தேதி அமேரிக்கா சுதந்திர நாடாக அறிவிக்கப் பட்டது (அவர்களது ஐம்பதாவது சுதந்திர ஆண்டில் இந்த இருவரும் இறந்ததே ஒரு குறிப்பிடத் தக்க ஒற்றுமை).//

    பட் வை? लेकिन कियूं? ఐతే ఎందుకు? But why? പട്ച്ചേ എന്‍?

    ReplyDelete
  13. செம கிண்டல் பதிவு. :)

    தொடருங்கள்.


    ஜாலி ஜம்ப்பர்
    தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

    ReplyDelete
  14. புலா சுலாகி அவர்களே,

    //இந்த ஸ்கான் எந்த புத்தகத்தில் இருந்து எடுக்கப் பட்டது, எந்த வருடம் வந்த புத்தகம் என்பதையும் தெரிவித்தால் நன்றாக இருந்திருக்கும்.//

    உண்மைதான். மறந்து விட்டது.

    புத்தகம் - கல்கண்டு வார இதழ்.

    வருடம் - 1987

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  15. has this got published?

    anyway nice post.

    ReplyDelete
  16. Hey it Touching....I am remembering My childhood days...
    T k u very Much. Nice Blog....
    When time Permits have a Look about this Blog...
    http://www.pravsworld.com/

    ReplyDelete

என்னுடைய வலைப்பூவை நீங்கள் படிக்கவில்லையெனில், படித்தவுடன் உங்களின் எண்ணங்களை தெரிவிக்கவில்லை எனில் உங்களிடம் அடிப்படையாகவே ஏதோ தவறு உள்ளது

Related Posts with Thumbnails