
பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். சென்ற பதிவானது பெருவாரியான மக்களையும், காமிக்ஸ் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது கண்கூடாக தெரிந்தது. அதே சமயம் பதிவு இடுவதில் ஏன் ஒரு தொய்வு என்று கேட்டும் பல மின் அஞ்சல்கள். என்னுடைய பனி நிமித்தமாக நியூசிலாந்து சென்று மூன்று மாதங்கள் அங்கேயே தங்க வேண்டிய சூழல். அதனாலேயே இந்த தாமதம். இனிமேல் தொடர்ந்து பதிவிட முயல்கிறேன்.
சமீப காலங்களில் காமிக்ஸ் பற்றிய விழிப்புணர்வு பெரிதும் வந்துள்ளது. அமெரிக்க தமிழ் FM ரேடியோவில் என்னை பேட்டி கண்டபோது நான் சில காமிக்ஸ் தளங்களை பற்றி குறிப்பிட்டு பேசி இருந்தேன். அந்த தளங்களை பற்றிய விவரம் தமிழர்களிடையே பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக முத்து விசிறியின் தளம். அப்போது முதல் பலரும் பழைய காமிக்ஸ்களை வாங்குவது பற்றியே எனக்கு மின் அஞ்சல் அனுப்பி வருகின்றனர். அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த பதிவு இடப்பட்டுள்ளது.
காமிக்ஸ் நண்பர் நிதர்சன் – 9677142992:
திருச்சியை சேர்ந்த தமிழ் காமிக்ஸ் ரசிகராகிய திரு நிதர்சன் அவர்கள் சென்னையில் தங்கி உள்ளார். அவர் தற்போது மறுபடியும் பனி நிமித்தம் காரணமாக அயல்நாடு செல்ல இருப்பதால் அவரிடம் இருக்கும் பல காமிக்ஸ் புத்தகங்களை விற்பனை செய்ய நினைக்கிறார். வழக்கமாக நாம் காமிக்ஸ் விற்பனை செய்பவர்களை ஊக்குவிப்பதில்லை. ஆனால் நண்பர் நிதர்சன் சற்றே வித்தியாசமானவர். கண்டபடி விலை பேசும் கயவர்களிடையே இவர் நேர்மையாக புத்தக விலை என்னவோ அதனையே கொடுத்தால் போதும் என்று விற்கிறார். அவரை தொடர்பு கொள்ளுங்கள். அவரிடம் இருக்கும் புத்தகங்களின் போட்டோக்கள் இதோ:
லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் இருக்கும் புத்தகங்கள்: 04562 272649
இன்றுகூட கிங் விஸ்வா'வின் தமிழ் காமிக்ஸ் உலகத்தில் ஒருவர் வந்து பழைய காமிக்ஸ் எங்கே கிடைக்கும் என்று கேட்டு இருக்கிறார். அவர்களுக்கு எல்லாம் பதிலாக இந்த பத்தி:
கடந்த பதினைந்து வருடங்களில் வந்த லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் மற்றும் காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ்களை லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் இருந்து நீங்கள் தபால் மூலம் வாங்கலாம். நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் எந்தெந்த புத்தகங்கள் வேண்டும் என்பதை (கீழ்க்காணும் லிஸ்ட்'டில் இருந்து) முடிவு செய்து அவற்றின் மொத்த விலைக்கு மணி ஆர்டரோ அல்லது காசோலையோ அனுப்பினால் உடனடியாக லயன் காமிக்ஸ் ஆபீசில் இருந்து உங்களுக்கு புத்தகங்களை அனுப்பி வைப்பார்கள்: புத்தகங்களின் பட்டியல் இதோ:
நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சென்ற பதிவைப்போல சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா? இல்லை, இதுபோலவே நம்ம பழைய ஸ்டைலில் பல அறிய தமிழ் காமிக்ஸ்களை உங்கள் பார்வைக்கு வழங்கலாமா? நீங்கள் கூறுங்கள். முடிவெடுப்போம்.
உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?
நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.