அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கத்தையும் தெரிவித்து கொள்ளுகிறேன். முன்னாள் நண்பர், பலநாள் இயக்குனர் AL Vijay ”ஒரிஜினலாக” படமெடுப்பதில் வல்லவர் என்பது நாம் அனைவருக்குமே தெரியும்.
அவரது இயக்கத்தில் 2013 ஆகஸ்ட் மாதம் வெளியான படமான தலைவா படத்தின் போஸ்டர் டிசைனை பாருங்கள்.
அதே 2013ஆம் ஆண்டு நவம்பர் ஆறாம் தேதி வெளியான Prisoner of space என்ற கதையின் அட்டைப்படத்தையும் ஒருமுறை பாருங்கள்:
சரி, நவம்பர் மாதம் வெளியான காமிக்ஸ் கதைதானே பின்னாடி வெளியானது? அப்படி இருக்க ஆகஸ்டில் வெளியான விஜய் பட போஸ்டர் தானே முன்னோடி? அப்போ காமிக்ஸ் கதாசிரியர் செர்ஜ் சோரோகின் தானே காப்பி அடித்திருப்பார்?
அதுதான் கிடையாது. இந்த காமிக்ஸ் இதழின் அட்டை ஒரு வருடத்திற்கு முன்பாகவே வெளிவந்துவிட்டது. ஆகவே, இயக்குனர் விஜய் தன்னுடைய “பெருமையை” தக்க வைத்துக்கொள்ளலாம்.
பின்குறிப்பு: இந்த காமிக்ஸ் ஒரு நல்ல முயற்சி. இதன் டவுன்லோட் லின்க் ஆன்லைனில் எங்கோ கிடைக்கிறதாம். தேடிப்பிடித்து படியுங்கள். அல்லது என்னைப்போல இந்த புத்தகத்தை பதிப்பகத்திடமிருந்தும் வாங்கியும் படிக்கலாம்.
உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?
நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.
நண்பரே..இதை நடிகர் விஜய்க்கே அனுப்பலாம் என்றிருக்கிறேன்..அவருடைய bolg, fb லிங்க் இருந்தால் கொடுங்கள்..ஹாஹா...ஒருவேளை டைரக்டருக்கு அதை பார்வேர்ட் செய்துவிடுவாரோ..?
ReplyDeleteநண்பரே..இதை நடிகர் விஜய்க்கே அனுப்பலாம் என்றிருக்கிறேன்..அவருடைய bolg, fb லிங்க் இருந்தால் கொடுங்கள்..ஹாஹா...ஒருவேளை டைரக்டருக்கு அதை பார்வேர்ட் செய்துவிடுவாரோ..?
ReplyDelete