Wednesday, December 3, 2008

மொக்கை காமிக்ஸ் ஒரு அறிமுகம் மற்றும் விஷ ஊசி வேங்கப்பா

தமிழ் கூறும் காமிக்ஸ் நல்லுலகத்திற்கு என்னுடைய முதற்கண் வணக்கங்கள். இது நாள் வரையில் சக காமிக்ஸ் தோழர்களின் வலை பூக்களில் பின்னுட்டம் இட்டு அவர்களை பின் தொடர்ந்து வந்த நான், என்னுடைய வருத்தப் படாத வாலிபர் சங்கத்தின் பிரதிநிதிகளான கிங் விஸ்வா ஜி, டாக்டர் சதீஷ், கவிஞ்சர் தமிழ் குட்டி என்று இவர்களை தொடர்ந்து நானும் ஒரு வலை பூவை தொடங்கி விட்டேன்.



என்னுடைய கடுமையான பணிகளுக்கிடையில் இதனை எப்படி தொடருவேன் என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், சக பதிவர்களாகிய கிங் விஸ்வா ஜி, தமிழ் குட்டி, மருத்துவர் அய்யா ஆகியோர் அவர்களின் பணிசுமைகளுக்கிடஎயும் தொடருவதால் எனக்கும் ஒரு வினையூக்கியாக உள்ளனர். எனவே, வாரத்திற்கு ஒரு பதிவாவது இட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு இந்த வலை பூவை ஆரம்பித்து உள்ளேன்.இந்த வலை பூவை நான் யாருடைய கதாபாத்திரத்தையும் சீர்குலைக்க ஆரம்பிக்க வில்லை (நண்பர் ஜோஸ் சந்தோஷப் பட்டு குதிக்கலாம்).





இந்த வலை பூவில் ஒவ்வொரு பதிவிலும் தமிழின் தலை சிறந்த காமிக்ஸ்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் காணலாம். முதல் பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ளப் போகும் கதை விஷ ஊசி வேங்கப்பா. என்னடா இது? இது எப்படி தலை சிறந்த காமிக்ஸ் ஆகும் என்று நினைப்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.



இந்த வலை பூவை ஏன் ஆரம்பித்தேன் என்பதை உங்களுக்கு உணர்த்த சில பல அறிவியல் பூர்வமான கருத்துகளை உங்கள் முன் எடுத்து வைக்க ஆசைபடுகிறேன்.


நமக்கு சர்க்கரை என்றவுடன் நினைவுக்கு வருவது என்ன? இனிப்பு தன்மையே ஆகும். அது போலவே உப்பு என்றவுடன் நமக்கு உவர்ப்பு தன்மையே நினைவுக்கு வரும். இவை எல்லாம் எதற்காக இப்படி நமக்கு தோன்றிகிறது என்றால், நமது சிறு வயது முதலே நமக்கு இவ்வாறு தெரிவிக்கபடுகிறது. அதனால் தான்.


இதுவே, சர்க்கரை என்றால் கசக்கும் என்று நமது சிறு வயதிலிருந்தே நமக்கு போதிக்கப்பட்டு இருந்தால், தேநீரில் கூட நாம் சர்க்கரையை சேர்க்க மாட்டோம். அது போலவே உப்பு என்றால் இனிக்கும் என்றொரு என்னத்தை நமக்கு ஊட்டி இருந்தால், நாம் தேநீரில் உப்பையும், சமையலில் சர்க்கரையையும் சேர்த்து கொண்டு சுவைப்போம். என்னடா இவன்? சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுகிறானே என நீங்கள் நினைத்தால் தவறாமல் அடுத்த பத்தியையும் படியுங்கள்.



ருசிய நாட்டு விஞ்சானியாகிய இவான் பாவ்லோவ் (1849 - 1936) நோபல் பரிசை வென்ற ஒரு மனோதத்துவ நிபுணர் ஆவார். உளவியல் துறையில் இவரின் பணி சிறப்பான இடத்தை பிடிக்கும். ஆர்கனைசேஷனால் பிஹேவியர் என்ற ஒரு நுண்ணறிவியல் பிரிவில் பாவ்லோவ் செய்த ஒரு சோதனையை இங்கே அவசியம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.



இவான் பாவ்லோவ் (Ivan Pavlov) செய்த அந்த சோதனைக்கு பெயர் கிளாசிகல் கண்டிஷனிங் ஆகும். இந்த சோதனையின் அடிப்படை வாதமே ஒரு உயிரினத்தின் பழக்க வழக்கங்களை தீவிர பயிற்சியின் மூலம் மற்ற முடியும் என்பது ஆகும். இந்த பரிசோதனைக்காக அவர் தேர்ந்து எடுத்த உயிரினம் மனிதனின் உற்ற தோழன் = நாய். (விஸ்வா ஜி கை தட்டுவதை நிறுத்துங்கள். இது உண்மையில் நடைபெற்ற ஒரு பரிசோதனை).


முதலில், ஒரு நாயை அவர் சோதனை கூடத்திற்கு கொண்டு சென்றார். அதற்க்கு உணவிடும் போது ஒரு மணியை ஆட்டுவித்தார். ஒவ்வொரு முறையும் உணவிடப்படும் போதெல்லாம் மணியும் ஒலிக்கப் பட்டது. நாளாக நாளாக, உணவு நாயின் முன்னர் வைக்கப் படாமல் இருந்தாலும், மணி ஓசையை கேட்டவுடன் நாய் உணவு உன்ன தயாராகி நின்றது. அதனுடைய மூலையில் மணி ஓசையும் உணவும் ஒன்றாக கலந்து விட்டது. The Dog was salaivating even when the food was not there.


எதற்காக நான் இந்த சோதனையை இங்கே கூறினேன் என்றால், நாமும் ஒரு வகையில் அந்த நாயை போலவே உள்ளோம். என்ன, நமக்கு சிறு வயது முதலே எல்லா விஷயங்களிலும் இவ்விதமான போதனை செய்ய படுகிறது. காலையில் உண்ண வேண்டும் (பசி எடுத்தாலும் எடுக்கா விட்டாலும்), இரவு தூங்க வேண்டும் (தொக்கம் வராவிட்டாலும் கூட) என்று பலவிதமான கருத்துக்கள் நமது மூலையில் பதிவிக்கப் படுகிறது. ஏன் இரவில் தூங்க வேண்டும்? ஏன் பகலில் தூங்க கூடாது? ஆதி மனிதன் இரவில் பயம் காரணமாக குகையை விட்டு வெளியில் வராமல் இருக்க எண்ணினான். சந்ததி சந்ததியாக அதனை நாம் பின் தொடர்ந்து வருகிறோம். செவ்விந்தியர்கள் உணவு உண்ண என்று நேரம் ஒதுக்கியது கிடையாது. பசி எடுக்கும் போதே அவர்கள் உண்பார்கள். ஆனால், நாமோ சூழ்நிலை கைதியாக உள்ளோம். நமக்கு எது நல்லது கேட்டது என்பதை கூட நம்மால் நிர்ணயிக்க முடியவில்லை. அந்த வரிசையில் மிக முக்கியமானது காமிக்ஸ் படிக்கும் பழக்கம் ஆகும்.


அதாவது, நாம் எல்லாம் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது தான் எதையாவது படிக்க ஆரம்பிக்கிறோம். நாமுடைய வீட்டில் உள்ளோர் எதை படிக்க அனுமதிக்கிறார்களோ அதுவே நம்முடைய படிக்கும் வழக்கத்தை நிர்ணயம் செய்கிறது. அந்த காலத்தில் இருந்தோர் ஒன்றும் தெரியாமல் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், ஆரம்ப கால ராணி காமிக்ஸ் என்று சிலவற்றை கொடுத்து படிக்க சொன்னதால் நாமும் அவற்றை படித்து இவை தான் சிறந்தவை என்ற தவறான கருத்தோடு வளர்ந்து விட்டோம். நமக்கு பிடிக்கும் என்றே அவர்கள் இந்த காமிச்சி எல்லாம் வாங்கி கொடுத்தாலும், நமக்கு இது பிடிக்கும் இது பிடிக்காது என்பதை நிர்ணயம் செய்ய இவர்கள் யார்? நாமல்லவோ அதை முடிவெடுக்க வேண்டும்?


உலகப் புகழ் பெற வேண்டிய சில அரிய சித்திரக் கதை பொக்கிஷங்கள் அந்த அறியாமை கடலில் மூழ்கி விட்டது. அவற்றை எல்லாம் தமிழ் உலகிற்கு மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற மகோன்னத எண்ணத்துடன் ஆரம்பிக்கப் பட்டதே இந்த வலைபூ. உடனே டாக்டர் சதீஷ், முத்து விசிறி போன்ற சிலர் சண்டைக்கு வரலாம். ஆனால், முத்து காமிக்ஸ்'ன் தலை சிறந்த மூன்று கதாபதிரங்களுமே காபியடிக்கப்பட்டவை ஆகும். அவற்றின் முகமூடியை ஒவ்வன்ராக இங்கே கிழிக்க போகிறேன். அதற்க்கு உங்களின் ஆதரவு எனக்கு தேவை.



முதலில் இரும்புக்கை மாயாவி. என்ன சார் இது கதையா இருக்கு? என்று பலர் சொல்லுவதை உண்மையாக்கி விட்டது இந்த கதை. மின்சாரம் பாய்ந்தால் அவர் மாயமாக விடுவாராம். அப்போ அவரின் உடை எல்லாம் என்ன ஆகும்? அவருக்கு தான் ஆய்வுக்கூடத்தில் விபத்து ஏற்பட்டது. உடைகளுக்கு கூடவா? சரி, சரி. அந்த கதை நமக்கு வேணாம். இந்த கதாபாத்திரதின் மூலம் தமிழில் வெளிவந்த எழில் காமிக்ஸ் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?



ஆம், தோழர்களே. உண்மை சுடும் என்பது இப்போது நெடுநாளைய முத்து காமிக்ஸ் வாசகர்களுக்கு புரிந்து இருக்கும். தமிழ் நாட்டில் சென்னை மாநகரத்தில், மயிலாபூரில் இருந்து வெளிவந்த எழில் காமிக்ஸ் என்னும் சித்திரக்கதை இதழில் கதாநாயகனாக தோன்றியவர் நெருப்பு விரல் சி.ஐ.டி 333. இவரின் சிறப்பு அம்சமே இவரது நெருப்பு விரல் ஆகும். அந்த ஆட்காட்டி விரலை அவர் தரயில் தேய்த்தால் உடனே அந்த விரலில் இருந்து நெருப்பு வரும். அதனால் தன் அந்த பெயர் அவருக்கு வழங்கப்பட்டது. இவரை காப்பியடித்தே இரும்புக் கை மாயாவி என்ற பாத்திரம் முத்து காமிக்ஸில் வெளிவந்தது என்பதை சொல்லவும் வேண்டுமா?



எழில் காமிக்ஸ் எண்பதுகளில் வெளிவந்த ஒரு சிறப்பான தமிழ் காமிக்ஸ் ஆகும். பெரிய அளவில் வெளிவந்தது, முழு வண்ணத்தில் வெளியானதும் இந்த இதழ்ன் சிறப்பு அம்சங்கள். கதையமைப்பு இந்தய மற்றும் தமிழ் கலாச்சாரத்தோடு ஒன்றியமைந்தது இன்னொரு சிறப்பம்சமாகும். இந்த எழில் காமிக்ஸ்'ன் முதல் இதழ் விஷ ஊசி வேங்கப்பா ஆகும். இந்த இதழை வாங்க காமிக்ஸ் வேட்டையர்கள் பெரும் போட்டி போட்டு கொண்டு இருக்கின்றனர். சென்னையில் இருக்கும் தமிழ் கடவுள் பெயர் கொண்ட ஒரு வேட்டயர், சேலத்தில் இருக்கும் இன்னொரு வேட்டயரிடம் இருந்து இந்த இதழை பண்ட மாற்று முறையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பெற்றார். அப்போது அவர் இந்த புத்தகத்திற்கு ஈடாக கொடுத்த புத்தகங்களை சற்று பார்த்தால் இந்த புத்தகத்தின் மதிப்பு உங்களுக்கு தெரியும். (லயன் தீபாவளி சூப்பர் ஸ்பெஷல், திகில் கோடை மலர், முத்து காமிக்ஸ் - வைரஸ் எக்ஸ், மினி லயன் - ஹாலிடே ஸ்பெஷல், லயன் - தலை வாங்கி குரங்கு). இப்போது இந்த முதல் இதழின் விமரிசனத்திற்கு செல்வோமா?






இந்திய புலனாய்வு துரையின் தலை சிறந்த துப்பறியும் நிபுணரே நெருப்பு விரல் சி.ஐ.டி. அவர் சந்தித்த வழக்குகளில் இது வரையில் அவர் தோல்வியையே சந்தித்து கிடயாது. அப்படி ஒரு முறை முக்கியமான ஒரு கடத்தல் கும்பலை பிடித்த பின், ஓய்வுக்காக அவர் வட எல்லை புத்தியில் இருக்கும்போது தன் கதை ஆரம்பம் ஆகிறது.



தமிழக கதாசிரியர்கள் அறிவியல் தொழில் நுட்பத்தில் எப்போதுமே முன்னோடியாக விளங்குபவர்கள் என்பதிற்கு எடுத்துகாட்டாக, இந்த காட்சியை பாருங்கள்.


அவரது டிஜிட்டல் வாட்சில் உள்ள மேல்பகுதி ஒரு போன் ரீசீவர் ஆகும். அதன் மூலம் அவர் உளவுத்துறை தலைவரிடம் எங்கும் எப்போதும் தொடர்பு கொள்ளலாம். இப்போது உள்ள சிக்னல் பிரச்சினை, டொவர் ப்ராப்ளம், ரீசார்ஜ் போன்ற எந்த தொந்தரவும் அவருக்கில்லை. அவருடைய தலைவர் அவரை ஒரு முக்கிய பணிக்காக விசாகபட்டினத்தில் உள்ள ஏரோ ட்ரமிர்க்கு வர சொல்லுகிறார்.கிளம்பி விட்டார் சி.ஐ.டி. இனி எதிரிகள் பாடு திண்டாட்டம் தான்.





அவருக்கு ஒப்படைக்கப்படும் பணி கொடிய கொள்ளைக்காரன் வேங்கப்பாவை பிடிப்பதே ஆகும். ரயிலில் கொள்ளை அடிப்பதில் கை தேர்ந்தவன் வேங்கப்பா என்பதால், அவர் ஒரு ரயிலில் ஏறி பயணம் செய்கிறார். அப்போது சக பயணியாக வரும் விமலா என்ற ஒரு அபலை பெண்ணை காப்பாற்றுகிறார்.

அனல் பறக்கும் அந்த சண்டை காட்சிகளை இங்கே பாருங்கள். இந்த சண்டையிலும் அவருக்கு உதவியாக இருப்பது அவரின் அந்த நெருப்பு விரலே ஆகும்.


இந்த கதாபாத்திரம் அமரர் எம். ஜி, ஆர்'ஐ மனதில் கொண்டு படைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது என்னுடைய என்ணமாகும்.

கராத்தேவில் கை தேர்ந்தவர் நமது சி.ஐ.டி என்பதை நான்காவது பேணலில் (கட்டத்தில்) அவர் நிற்கும் போஸில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். மாமா, மச்சான் என்று சமகால் சொற்தொடர்கள் படிப்பவர்களுக்கு நம்மை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.










அபலை பெண்ணாகிய விமலாவை தன்னுடன் அழைத்து கொண்டு வருகிறார் சி.ஐ.டி அவளை ஒரு ஹோட்டல் அறையில் தங்க வைத்து விட்டு பின்னர் அலுவலக பணி நிமித்தமாக வெளியே செல்கிறார்.

அப்போது ஏர்போர்ட்டில் அவரை ஒரு பிச்சை காரன் சந்திக்கிறான். அங்கே எப்படி பிச்சைக்காரன் வர முடியும் என்று சில புத்திசாலிகள் வினவலாம்.

இந்தியாவின் பொருளாதார நிலையை விளக்க ஆசிரியர் மேற்கொண்ட ஒரு யுத்தி என்பது காமிக்ஸ் ஆர்வலர்களுக்கே தெரிந்த ரகசியமாகும்.

அந்த பிச்சை காரன் கொடுத்த சீட்டில் மிக முக்கியமான ஒரு ரகசியம் அவருடைய தலைமையகத்தில் இருந்து அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அதை படித்து வியப்படைந்த சி.ஐ.டி, அருகிலுள்ள பேப்பர் கடையில் உள்ள கூட்டத்தை கண்டு வியக்கிறார்.

அந்த பேப்பரில் பிரபல கொள்ளைக்காரன் வேங்கப்பா நாளை சரணடைய போவதாக ஒரு செய்தி வந்து இருந்தது.சி.ஐ.டி சிந்திக்கும் அழகை பாருங்கள்.






மறுநாள் காலை, அனைத்து சாலைகளும் ரோமுக்கு செல்வதை போல, அனைத்து வாகனங்களும் காந்தி திடலை நோக்கியே நகர்ந்தன. அங்கே தான் பிரபல கொள்ளைக்காரன் விஷ ஊசி வேங்கப்பா காவல் துறையிடம் சரணடைய போகிறான். மக்கள் கூட்டம் அலைமோதும் இந்த இடத்தில் ஏதேனும் விபரீதம் நிகழலாம் என்று என்னும் சி.ஐ.டி, அந்த இடத்திற்கு மாறுவேடத்தில் செல்கிறார்.

தமிழ் நாட்டில் அராபிய ஷேய்க் வேடத்தில் இருக்கும் அவரை யாரும் சந்தேகத்துடன் பார்க்கவும் இல்லை. அவரை கண்டு பிடிக்கவும் இல்லை.

ஆனால் இது எவ்வளோ பரவாயில்லை. சில படங்களில் கதாநாயகன் ஒரே ஒரு மருவை மட்டும் வைத்து கொண்டு, கண்ணாடி அணிது சென்றால் வில்லன் அவரை அடையாளம் கண்டுபிடிக்க தடுமாறும்போது, இது எவ்வளவோ பரவாயில்லை தான்.

ஆந்திராவை சேர்ந்ததை போல உள்ள இவர்தான் தமிழக முதன்மந்திரியாம். இவரிடம் தான் வேங்கப்பா சரணடைய போகிறான்.இந்தியா ஒரு வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்பதை உணர்த்தவே இந்த கட்டம்.






ஆனால் அந்த சரணடையும் திட்டம் ஒரு சதிவலை ஆகும். உண்மையில் வேங்கப்பாவின் கும்பல் நகரில் உள்ள ஒரு வங்கியை கொள்ளை அடிக்கவே இப்படி ஒரு திட்டத்தை உருவாக்கினர். அந்த கொள்ளை கும்பலை பின்தொடரும் சி.ஐ.டி.யை ஒரு பொடியை தூவி பிடித்து விடுகின்றனர் சதிகாரர்கள். பின்னர் அவரை மரண உருளை மூலம் கொல்ல திட்டமிடுகின்றனர்.

நிற்க.

இந்த மரண உருளை முறையை இத்தாலியில் உள்ள செர்ஜயோ போன்னேலி என்பவர் காப்பியடித்து, டிராகன் நகரம் என்ற டெக்ஸ் வில்லர் கதையில் உபயோகப்படுத்துவார். (தீவிர லயன் காமிக்ஸ் வாசகர்களாகிய மருத்துவர் சதீஷ், கிங் விஸ்வா ஜி, புதுவை கலீல்,காமிகாலஜி ரபிஃ ராஜா போன்றவர்கள் கவனிக்க).

அந்த மரண தருவாயிலும் தன்னுடைய சமயோசித அறிவு கூர்மையினால் தப்பிக்கும் சி.ஐ.டி, நெருப்பு விரலால் விளையாடிக்கொண்டே அங்கிருந்து தப்பித்து செல்கிறார். இனி எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்தான்.




பின்னர் பல உண்மைகளை போலீசிடம் தெரிவிக்கிறார் சி.ஐ.டி. விமலா தான் உண்மையான வேங்கப்பா ஆவாள். பிச்சைக்காரன் வேடத்தில் இருந்த போலிஸ் அதிகாரி கொடுத்த ரிக்கார்டில் வேங்கப்பாவின் கையில் என்று பச்சை குத்தப் பட்டு இருப்பதை கொண்டே விமலாதான் வேங்கப்பா என்பதையும் உணருகிறார் சி.ஐ.டி.

ஆகையால் அந்த ஏர்போர்ட்டில் வந்த கதா பாத்திரத்தின் முக்கியத்துவத்தை இப்போது உணரலாம். ஏனெனில், அந்த துண்டு சீட்டில் தான் கதையின் போக்கையே மற்ற கூடிய ஒரு ரகசியம் சி.ஐ.டி.க்கு தெரிய வந்தது.

ஆனால், விமலா ஒரு மாடர்ன் தின ராபின் ஹுட் என்பதையும் போலிஸ் அதிகாரியிடம் கூறுகிறார். பல இடங்களில் கொள்ளையடித்து ஆயிரக்கணக்கான பிசைக்கரர்களை வாழவைத்து கொண்டு இருக்கும் காவல் தெய்வம் அவள்.

பிசைக்கரர்களை மட்டுமில்லாமல், தொழு நோயாளிகளையும் மற்ற சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்களையும் காப்பதே அவளது என்ணமாகும். கடமையில் இருந்து மனம் தளராத சி.ஐ.டி, ஓய்வை நாடி தன்னுடைய காரில் விரைந்து செல்வதோடு இந்த காப்பியம் முடிவடைகிறது.


அடுத்த இதழிலும் நெருப்பு விரல் சி.ஐ.டி.யின் சாகசம் என்பது மனதுக்கு மகிழ்வுட்டும் செய்தியல்லவா?


ஆம், பனியில் புதைந்த ஒரு ரகசியத்தை தேடி சி.ஐ.டி புறப்படுகிறார்.














தற்போது உள்ள தொ(ல்)லை காட்சிகளில் மெகா சீரியல்கள் வருவது போல எண்பதுகளில் குறுந்தோடர்களும், நெடுன்தொடர்களும் வலம் வந்த தருணம். அதனால், இந்த காமிக்ஸ் இதழிலும் ஒரு தொடர் சித்திரக்கதை இடம் பெற்றது. ஜிக் ஜாக் என்ற கதாநாயகன் தோன்றும் கொலை பள்ளி கூடம் (டாக்டர் சதீஷ் கவனிக்கவும்) என்ற கதையின் முதல் பகுதி இதோ.

ப்ரொபெஸ்ஸர் ஆன்தர் என்ற ஒரு கொடிய வின்ஜானியின் ஆய்வுக்கொடத்தில் நடுநிசி சாமத்தில் ஆரம்பிக்கிறது நமது கதை. விஞ்சானியின் உதவியாளர் நார்மன் ஒரு புதிய குற்ற இலக்கியத்தை (பிஸ்டல் + தோட்டா = கொலை) உருவாக்கி கொண்டு இருக்கிறார். என்ன ஒரு அறிய கண்டுபிடிப்பு என்று பலர் வியக்கலாம். இதனை அடிப்படையாக கொண்டே ஐன்ஸ்டீன் E=MC2 என்ற பார்முலாவை கண்டுபிடித்தார் என்று சொல்பவர்களும் உண்டு.

பயங்கரமான ஒரு உருவம் திரைமறைவில் இருந்து தோன்றுகிறது. இந்த உருவத்தை காமிக்ஸ் ஆர்வலர்கள் உற்று நோக்க வேண்டும். ஏனெனில் லயன் காமிக்ஸில் வெளிவந்த மரணத்தின் நிறம் பச்சை என்ற கதையில் இந்த கதாபாத்திரத்தை அப்படியே காப்பி அடித்து இருப்பார்கள். என்னே தமிழ் காமிக்ஸ் உலகம் இது (விஸ்வா கோபிக்க வேண்டாம்). நான் கூறியாது பொதுவாக, அவருடைய வலைப்பூவை குறித்து அல்ல. காமிக்ஸ் ஆர்வலர்களுக்கிடையே போட்டி இருக்கலாம்; சண்டை கூடாது.

இத்துடன் எனது இந்த முதல் பதிவை இனிதே முடித்து கொள்கிறேன்.

* இந்த பதிவில் இடம் பெற்றதை போலவே பல கதைகளின் மூலம் எது என்பதை தொடர்ந்து பதிவில் துப்பறிந்து கூற வேண்டுமா?

* இந்த பதிவில் இடம் பெற்றதை போலவே விஞ்சான அடிப்படை தத்துவங்களையும் நான் தொடர்ந்து முன் வைக்க வேண்டுமா?

* இந்த பதிவில் இடம் பெற்றதை போலவே பல உண்மையான தலை சிறந்த காமிக்ஸ்களை பற்றிய விமர்சனம் இடம் பெற வேண்டுமா?

உங்களின் விமர்சனங்களை எனக்கு என் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?
நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

30 comments:

  1. நண்பர் மொக்கராசுக்கு,

    நெருப்பு விரல் மாயாவியின் சாகசங்களை ஏன் தமிழுலகம் கண்டுக் கொள்ளவில்லை என வருந்தினேன்.

    கையில் பத்து ரூபாய் சிகார் லைட்டரை வைத்துக் கொண்டு அவர் புரியும் சாகசங்கள் பயங்கரமாக இருக்கும். இரும்புகை மாயாவிக்கு அவர்தான் முன்னோடி என்ற உங்கள் கண்டுபிடிப்பு மிகவும் குறிப்பிடதக்கது.

    அவரின் தொப்பி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதற்காக பலவித ஆராய்ச்சிகள் செய்திருக்கிறீர்கள். ஒன்ணும் சொல்ல முடியலை, ஏன்னா இது முதல் போஸ்ட், முதல் கமெண்ட்.

    பாத்து பண்ணுங்கப்பு!

    ReplyDelete
  2. சிரித்து சிரித்து கண்களில் ஆனந்தக்கண்ணீர், தொடருங்கள் நண்பரே உங்கள் அதிரடியை

    ReplyDelete
  3. திரு உலக காமிக்ஸ் ரசிகன் அவர்களே,

    வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்களின் மேம்பட்ட பணியை செய்வீர்கள் என் நம்புகிறேன்.

    உண்மையில் இந்த கருத்து பெட்டியில் உள்ள வாசகத்தை பார்த்தே இந்த பின்னுஉட்டத்தை இடுகிறேன்.

    கிங் விஸ்வா.
    Tamil Comics Ulagam தமிழ் காமிகஸ் உலகம்

    ReplyDelete
  4. இந்த பதிவில் நான் பெரும்பாலான பதிகளை படித்து ரசித்தாலும், எனக்கென்று மிகவும் பிடித்தது: =இத்துடன் எனது இந்த முதல் பதிவை இனிதே முடித்து கொள்கிறேன்=.

    ReplyDelete
  5. நண்பரே,

    அடுத்தது காட்டு ராணி காந்தா, மொக்கப் பிசாசு, எரிமலையில் ஏகாம்பரம் போன்ற உள்ளூர் சாகசங்களும், செக்கோஸ்லோவாகியாவில் செங்கமலம், இரஷ்யாவில் ரங்கசாமி, துபாய் துப்பாக்கி, கலிபோர்னியா கண்ணாத்தா போன்ற அயல்நாட்டு சாகசங்களையும் விரைவில் எதிர்பார்க்கிறோம்.

    இப்படிக்கு
    உயிருக்கு துணிந்தோர் சங்க தலைவர் (தற்கொலை படை பிரிவு)

    ReplyDelete
  6. தோழர்,

    என்னுடைய முதல் கதையை நீண்ட நாள் கழித்து பார்த்ததில் பெறுமகிழ்ச்சி. என்னுடைய சித்தப்பா மகன் தான் லூயிஸ் க்ராண்டேல். எனவே அவன் என்னை போலவே சில பல அறிய சக்திகளை பெற்று இருப்பதில் தவறேதும்மில்லை. எனவே அவனை மன்னியுங்கள்.

    நண்பர் ஜோஷுக்கு, நான் வந்த காலத்தில் எல்லாம் சிகரெட் ல்ய்டார் கிடையாது.

    ReplyDelete
  7. நல்ல வேலை, சின்ன வயதில் முத்து காமிக்ஸ் அறிமுகம் அனா பிறகே நான் இப்படிப்பட்ட விபரீத புத்தகங்களை படித்தேன். அதனால் இந்த எழுத்தர் (?!) 'ன் வார்த்தை ஜாலத்தில் மயங்கீ ஏமாந்து போவதில் இருந்து தப்பினேன். :)

    ரெட் கலர் தொப்பி, மஞ்சள் கலர் சட்டை மற்றும் கால் உரை, அப்படியே எம்.ஜி.ஆர் ஐ மனதில் கொண்டு உருவாக்கி இருபது போல தெரிகிறது.

    புகழ் பெற்ற துப்பறிவாளர், தேடும் போகிரி ஒரு ரயில் கொள்ளயனாம், அரபி உடையில் மாறு வேடமாம், பிசைகாரங்களை காப்பற்றும் கண்ணிகையம்... அய்யா சாமி இப்படி எழுத எப்படி தான் மனம் வந்ததோ.

    கடைக்காரிடம் இன்றே இந்த புத்தகத்தை வாங்க வேண்டாம் என்று சொல்லி வையுங்கள் என ஒரு புத்தக பதிப்பர் எச்சரிக்கை விடும் அளவுக்கு, இது மோசம் :)

    மொக்கை காமிக்ஸ் என்ற பெயருக்கு ஏற்பே பதிவை வெளியிட்ட உலக காமிக்ஸ் காதலர் (இது எல்லாம் ஓவரா இல்ல), நன்றி. ஆனால், திரும்பவும் இப்படி ஒரு பதிவை எடுத்து வந்தால் நமக்கு தாங்கதப்ப....

    ReplyDelete
  8. நெருப்பு விரல் சி.ஐ.டி கூறுவதை நம்பாதீர்கள். எனக்கு அவர் ஒன்றும் சொந்தக்காரர் அல்ல. என்னுடைய சித்தப்பா "தீக்கால் மாயாவி" ஆவார். அவர் தான் "நரபலி நாயகன்" என்ற மதி காமிக்ஸில் கதாநாயகன்.

    ReplyDelete
  9. அதுத கதையில் என்னை பற்றி எழுதப் போவதாக கேள்விப்பட்டேன்.
    ஜாக்கிரதை. எனக்கு கராத்தே தெரியும.மேலும் என்னுடைய பெயர் காப்பிரைட் செய்யப்பட்டுள்ளது.

    ReplyDelete
  10. அட, இரும்புகை மாயாவி சொல்றத போய் நம்புறீங்க. ஹீரோவோ ஆவறதுக்கு முன்னால ஊரை கொள்ளை அடிச்ச ஆளுங்க அவரு.

    நெருப்பு விரலு, நீ நம்ம சாதிக்கார பயபுள்ள. இனி உன்ன யார் எது சொன்னாலும் கரும்புலியண்ணங்கிட்ட சொல்லு, ஒரு காட்டு காட்டிடலாம்.



    கரும்புலி
    (இராணி காமிக்ஸ் சூப்பர் ஹீரோ)

    ReplyDelete
  11. Hi boss, you've done an amazing job. I was damn happy to see the fan site for my most favorite comics.

    However, i've set a facebook club for Lion/Muthu and all other comics.

    Please visit the group and invite your friends.

    http://www.facebook.com/group.php?gid=37137139775

    Adios Amigo.

    ReplyDelete
  12. hi,
    just tell me what ivan pavlov got to do with these comics? i was searching for ivan pavlov and it lead me here.

    kindly clarify.

    ReplyDelete
  13. ராகவ் அவர்களே,

    ஐவன் பாவ்பஜ்ஜி என்பவர் வேறு யாருமல்ல, நம்ம நெருப்பு விரலு கிட்ட படிச்ச ஸ்டூண்ட் தான் அவர். காமிக்ஸ்ன்னு சொன்னா நம்மாளுக கண்ல விளக்கெரியும்னு கண்டுபிடிச்ச பெரிசு. அதத்தானே தல சொல்ல வறீங்க?

    ReplyDelete
  14. From The Desk Of Rebel Ravi:

    Ha Ha ha. I was literally crying out of laughter. Uncontrollable. You really have a great career out of satire writing along with the ShareHunter. Could the reason be MAD ISSUES?

    Never heard about this Ezhil comics. when did this one came? any idea?

    Rebel Ravi,
    Change is the Only constant thing in this world.

    ReplyDelete
  15. "புத்தகத்திற்கு ஈடாக கொடுத்த புத்தகங்களை சற்று பார்த்தால் இந்த புத்தகத்தின் மதிப்பு உங்களுக்கு தெரியும். (லயன் தீபாவளி சூப்பர் ஸ்பெஷல், திகில் கோடை மலர், முத்து காமிக்ஸ் - வைரஸ் எக்ஸ், மினி லயன் - ஹாலிடே ஸ்பெஷல், லயன் - தலை வாங்கி குரங்கு)"

    ?!?!?!?!?!?!?! ?!?!?!?!?!?!?!
    ?!?!?!?!?!?!?! ?!?!?!?!?!?!?!
    ?!?!?!?!?!?!?! ?!?!?!?!?!?!?!
    ?!?!?!?!?!?!?! ?!?!?!?!?!?!?!

    ReplyDelete
  16. அய்யா,

    இப்படி கூட ஒரு காமிக்ஸ் வலைப்பூவை இயக்க முடியும் என்பதை காட்டி உள்ளீர்கள். உங்கள் எண்ணம் மிக தெளிவாக தெரிகின்றது. தொடர்ந்து இதை போன்றே எழுதுங்கள்.

    ஒரு சிறிய வேண்டுகோள்: கும்மி அடிப்பதால், பின்னுட்டங்கள் எண்ணிக்கை அதிகம் ஆனாலும், சில வேளைகளில் அவை இடைஞ்சலாகவே உள்ளது. ஆதலால், கும்மி அடிக்கும் அன்பர்கள் அதை குறைத்து கொண்டால் தேவலை.

    ReplyDelete
  17. Hiya,

    it was really hilarious to know that someone has taken their sweet time to make an effort like this. You must be really loving comics and your sense of writing is wonderful, to say the least.

    in acting we call this as underplaying the role. Likewise in writing you have underplayed and the result is a wonderful article on this comics. the way you co-related ivan pavlov to our comics reading was fabulas, to say the least.

    carry on writing much more. i expect you to cover indrajaal comics character bahadur (i really hated that series).

    ReplyDelete
  18. நல்வாழ்த்துக்கள் தோழர் சமுகத்திர்ர்க்கு

    தொடருங்கள் உங்கள் மொக்கையை. இது தான் இப்போது நாட்டுக்கு மிகவும் தேவை.

    ReplyDelete
  19. Hi,

    what is the agenda in starting such a blog? the idea that you have mentioned is very very funny.

    anyways, the blog seems to be one place worth visiting to read out something different apart from the rest of the tamil comics blogs. Hopefully you will not turnout to be an one post wonder.

    Cheers.
    Udhayam Sami

    ReplyDelete
  20. நல்வாழ்த்துக்கள் தோழர் சமுகத்திர்க்கு

    மினி லயன் காமிக்ஸில் தோன்றி நமது மனதை எல்லாம் கொள்ளை அடித்த குண்டன் பில்லி பற்றிய ஒரு முழு பதிவு என்னுடைய வலைப் பூவில் இடப்பட்டுள்ளது. அதனை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:

    http://kakokaku.blogspot.com/2008/12/blog-post.html

    தயவு செய்து இந்த பதிவை படித்து விட்டு உங்கள் மேம்பட்ட கருத்துக்களை பின்னூட்டமாக இட்டுச்செல்லுங்கள்.

    நன்றியுடன்,

    க.கொ.க.கூ.

    ReplyDelete
  21. hi there,

    many a Thanks for such a post. i really loved this post. especially when you put (கராத்தேவில் கை தேர்ந்தவர் நமது சி ஐ டி என்பதை நான்காவது பேணலில் (கட்டத்தில்) அவர் நிற்கும் போஸில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்) this comment, i really couldn't prevent from laughing out loudly.

    many a thanks for providing me a lovely moment of happiness after a long long time.

    ReplyDelete
  22. உலக காமிக்ஸ் ரசிகா!

    தங்கள் வலைப்பதிவை தாமதமாகத்தான் பார்க்க நேர்ந்தது. படித்தபின்தான் தெரிந்தது கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்திருக்கிறேன் என்று! தமிழக சிறுவர்களுக்கு தமிழ் பாரம்பரியத்தை பாதிக்காத இலக்கியங்களை, பொழுது போக்கு கதைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டு போய் அற்ப, அபத்தமான அந்நிய கலாச்சரங்களை ஊட்டும் காமிக்ஸ் கதைகளை மொழி மாற்றம் செய்து சிலர் வெளியிட்டு வந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் நாட்டு பற்றுடன், நமது கலாச்சாரத்தை கெடுக்காத வகையில் ஒரு காமிக்ஸ் வந்திருக்கிறது என்றால் பெருமையை தாங்கவே முடியவில்லை!

    //அபலை பெண்ணாகிய விமலாவை தன்னுடன் அழைத்து கொண்டு வருகிறார் சி ஐ டி. அவளை ஒரு ஹோட்டல் அறையில் தங்க வைத்து விட்டு பின்னர் அலுவலக பணி நிமித்தமாக வெளியே செல்கிறார்.//

    நமது நெருப்பு விரல் சி. ஐ. டி யின் இடத்தில் ஜேம்ஸ் பாண்டு இருந்திருந்தால் அலுவலக பணி நிமித்தமாக வெளியேவா போயிருப்பார்? வேறு 'பணி' யை தான் பார்த்திருப்பார். சி. ஐ. டி யின் செயல் அவருடைய நயத்தக்க நாகரிகத்தை வெளிப்படுத்துகிறது.

    அயல் நாட்டு கலாச்சாரத்தில் ஊறிப்போன நமது காமிக்ஸ் டாக்டர் போன்ற டாக்டர்கள் நோயாளிக்கு தரும் மருந்து சீட்டில் நோயாளியின் தலைவிதியை எழுதி தருவார்கள். புரிந்து கொள்ளவே முடியாது. ஆனால் உளவுத்துறை தலைவர் சி. ஐ. டி க்கு தரும் ரகசிய செய்தியை அது ரகசியம்தான் என்பதை 'cofindencial to 333' என்பதை கொட்டை எழுத்துகளில் எழுதியிருப்பார். ஏனனில் நெருப்பு விரல் சி. ஐ. டி போன்ற செயல் வீரர்களுக்கு உத்திரவு தெளிவாக இருக்க வேண்டும். இரண்டாம் உலக போரில் ஜப்பான் மீது தலைமையக உத்திரவை தவறாக புரிந்தது கொண்ட விமானிகளால்தான் அணுகுண்டு வீசப்பட்டதாக சொல்வார்கள்.

    //ஆந்திராவை சேர்ந்ததை போல உள்ள இவர்தான் தமிழக முதன்மந்திரியாம்.//

    அந்நிய பாதிப்பு உங்களை கூட விட்டு வைக்கவில்லை என்பதைத்தான் மேற்கண்ட உங்களுடைய வரிகள் சொல்லுகின்றன. இந்தியா என்பது 'வேற்றுமையில் ஒற்றுமை' கண்ட நாடு. வெள்ளையரின் 'பிரித்தாளும்' சதியால் ஆந்திராவை சேர்ந்தவர் தமிழக முதல் மந்திரியாக கூடாது என்ற எண்ணம் உங்களை அறியாமலே உங்களுக்குள் வேர் விட்டிருக்கிறது. கறுப்பர் அமெரிக்க ஜனாதிபதி ஆகிறார், சோனியா இந்தியா காங்கிரசின் தலைவர் ஆகிறார்... நீங்கள் மட்டும் இன்னும் பிற்போக்கு வாதியாக?

    'களவும் கற்று மற' என்பதே நமது முதுமொழி. 'கற்க கசடற' என்பது நமது திருக்குறள். இதனைத்தான் பின் அட்டையில் உள்ள காமிக்ஸ் தொடரில் வரும் 'கொலை பள்ளியில்' செயல் படுத்துகிறார்கள். கொலையோ கலையோ கற்பதும், கற்ப்பிக்கப்படுவதும் முறையாக, முழுமையாக இருக்கவேண்டும். பிஸ்டல் + தோட்டா = கொலை என்ற சூத்திரம் ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை என்றாலும் கூட கற்பவரின் ஐயத்தை அறவே போக்கும் அரிச்சுவடி என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

    எது எப்படியோ சாணி முதல் சாமி வரை இருக்குமதியே செய்து பழக்க பட்ட இந்தியா சமூகத்திற்கு ஒரு சுதேசி கதாநாயகனை கண்டெடுத்து தந்துள்ளீர்கள். என்னை போன்ற தேசிய வாதிகள் நிச்சயம் உங்களை மறக்க மாட்டார்கள்.

    ஆமாம்! உங்களுடன் சேர்ந்து வெள்ளை காமிக்ஸ் ஹீரோக்களுக்கு எதிராக 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் நடத்தலாம் என்று நினைக்கிறேன். கூட்டணிக்கு வர்றீங்களா?

    ReplyDelete
  23. வயசான காலத்துல என்ன ஏண்டா தொந்தரவு பண்ணுறீங்க?

    அந்த டா வின்சி என்னய்ய பண்ணுறான்? அவன என் கலாய்க்க மாட்டேன்னுறீங்க?

    இவான் பாவ்லோவ்.

    ReplyDelete
  24. என்னுடைய பிறந்த நாளாகிய இன்று எனக்கு பலர் வாழ்த்து தெரிவித்தாலும், நான் பாராட்ட விரும்புவது என்னவோ, ஒலக காமிக்ஸ் ரசிகனைத்தான். மிகச் சிறந்த காமிக்ஸ் கதனாயனாகிய நெருப்பு விரல் சி.ஐ.டி.யை உலகிற்கு தெரியச் செய்த உம்மை பாராட்டுகிறேன்.

    என்னுடைய புகழ் உலகம் முழுவதும் பரவ காரணம் முத்து திரைப் படம் ஜப்பானில் ஓடியது தான். அது போல இந்த கதையை அறிமுகப் படுத்தி இதையும் முத்து போல ஒரு ஹிட் ஆக செய்ய வேண்டும்.

    ரஜினி காந்த்,
    தமிழன்.

    ReplyDelete
  25. Thanks very much for the efforts to bring details about this old Tamil original comics. I remember I have read One of Neruppu Viral Comics which contains the story
    1. where he swims with the shark
    2. finds a tunnel inside the sea
    and other adventures
    If have you that comics, please write a article about it with scans of each page

    Once again I enjoyed reading your first article

    ReplyDelete
  26. உங்களுடைய அடுத்த பதிபிற்காக காத்திருக்கிறேன்..
    இப்படிக்கு நெருப்பு விரல் C.I.Dஇன் ரசிகன்...

    ReplyDelete
  27. ஒலக காமிக்ஸ் ரசிகா!

    காமிக்ஸ் கூட்டணி கட்சியினர் ராணி காமிக்ஸ்-இன் இருண்ட காலம் என்று எதோ எழுத போகிறார்களாம். அது ஒன்றும் இருண்ட காலம் அல்ல தமிழ் காமிக்ஸ் உலகின் 'இணையற்ற காலம்' என்பதை தக்க தரவுகளுடன் உணர்த்தி தமிழனின் தன்மானம் தகர்க்கப்படுவதை தடுக்க வேண்டுமாய் தாய் தமிழகத்தின் தலைமகனாய் தலை வணங்கி தங்களை கேட்டு கொள்கிறேன்.

    ஒழிக ஜேம்ஸ் பாண்ட்! வாழ்க ஜேம்ஸ் பாண்டு!

    ReplyDelete
  28. //அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் சொன்னது//


    பாண்டு வித்தியாசம் பாக்கிறார். நம்பாதீங்க...

    ReplyDelete
  29. Dear i really depreciate your comments.
    as per your concept the comics was released after 80's while searching i found the original steelclow was released between 60 and 70.
    please check the link.
    http://en.wikipedia.org/wiki/Steel_Claw

    please ensure your thoughts before post.

    ReplyDelete

என்னுடைய வலைப்பூவை நீங்கள் படிக்கவில்லையெனில், படித்தவுடன் உங்களின் எண்ணங்களை தெரிவிக்கவில்லை எனில் உங்களிடம் அடிப்படையாகவே ஏதோ தவறு உள்ளது

Related Posts with Thumbnails