Sunday, December 28, 2008

மாயாவியும் மந்திரவாதியும் & காப்பி அடிக்கும் காமிக்ஸ்'ம்

Vasu Comics MM Cover

அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். என்னுடைய முதல் பதிவில் இருந்த உண்மைகளை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள். எனக்கு வந்த பல மின்னஞ்சல்களில் வாசக அன்பர்கள் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் போன்ற காமிக்ஸ்'களின் முகமூடியை கிழிக்குமாறு கேட்டு கொண்டனர். அதன் விளைவே இந்த பதிவு. என்னுடைய முதல் பதிவில் பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.

நிற்க.

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த அவர்கள் நடிப்பில் வெளிவந்த "மன்னன்" என்ற திரைப் படத்தை நம்மில் பலருக்கு நினைவிருக்கும். அந்த படத்தை தெலுங்கு மொழியில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் நடிப்பில் "காரானா மொகுடு" என்ற பெயரில் தெலுங்கில் பெரும் வெற்றி பெற்றது. அந்த திரைப்படத்தில் நக்மா மற்றும் வாணி என்ற இரண்டு குடும்ப குத்து விளக்குகளின் "திறமை" முழுவதுமாக வெளிப் பட்டது. அதனால் அந்த படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு "அர்ஜுன்" என்ற பெயரில் வெளிவந்தது. வந்தாரை வாழ வைக்கும் தமிழன் நக்மாவில் திறமையில் மயங்கி இந்த படத்தையும் வெற்றி பெற வைத்தான். அதாவது, தமிழில் வெளிவந்த ஒரு படத்தின் தமிழாக்கத்தையும் நாம் வெற்றி பெற வைப்போம்.

தொடர்க.

சென்ற பதிவில் நான் குறிப்பிட்டதை போலவே நமது தமிழ் நாட்டு சித்திர கதைகளை மைய்யமாக கொண்டே பல காமிக்ஸ் கதைகள் வெளிவந்தன என்பது மறுக்க முடியாத உண்மை. இப்போது நான் கூறப் போகும் செய்தியால் நெடுநாள் முத்து காமிக்ஸ் ரசிகர்களாகிய முத்து விசிறி, காமிக்ஸ் டாக்டர், கிங் விஸ்வா போன்றவர்கள் அதிர்ச்சி அடையலாம்.

ஆனாலும் உண்மை என்பதை அவர்களும் அறிந்து கொள்ளட்டும். முத்து காமிக்ஸ்'இல் வந்த பெய்ருட்டில் ஜானி என்ற கதையை உங்களில் பலருக்கு நினைவிருக்கும். ஆனால் அந்த கதையின் ஆதாரம் என்ன? என்று எப்போதாவது நீங்கள் யோசித்து உண்டா? அந்த கதையின் ஆதாரமே இந்த பதிவில் நான் இடப் போகும் வாசு காமிக்ஸ் என்ற தமிழக சித்திரக்கதை பொக்கிஷமே என்பதை நீங்கள் அறிய வேண்டும்.

இதை தவிர முன்னாள் தமிழக முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய (மிகவும் புகழ் பெற்ற ஓர் இரவு, வேலைக்காரி) போன்ற கதைகளின் முன்னோடி என்ன என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நான் மேலே குறிப்பிட்ட வாசு காமிக்ஸ் அவ்வளவு சிறப்பான வரலாறு பெற்றது. சென்னை ராயப்பேட்டையில் இருந்து வெளிவந்த வாசு காமிக்ஸ் இதழின் கதைகளை இங்கிலாந்து நாட்டில் இருந்து வெளிவந்த ப்ளீட்வே என்ற நிறுவனம் காப்பி அடித்தது. அதன் கதைகளை சிவகாசியில் இருந்து வெளிவந்த முத்து காமிக்ஸ் தமிழில் மொழி பெயர்த்து வெளி இட்டது.

அதாவது, தமிழில் வெளிவந்த "மாயாவியும் மந்திரவாதியும்" என்ற கதையை இங்கிலாந்து ப்ளீட்வே நிறுவனம் ஆங்கிலத்தில் வெளி இட, அதனை தான் முத்து காமிக்ஸ் மொழி பெயர்த்து வெளிஇட்டது. ஆங்கிலேய மோகம் பிடித்து அலையும் நாம் "ஆஹா, ஒஹோ" என்று இதையும் பாராட்டுகிறோம். மேலே நான் கூறிய "மன்னன்" படமும் "அர்ஜுன்" படமும் இப்போது உங்களுக்கு விளங்கும் என்று நம்புகிறேன். இன்னமும் இதனை நம்பாத சில வாசகர்கள் இருக்க கூடும். அவர்களுக்கே இந்த பதிவு. இது மட்டும்மில்லை. வாசு காமிக்ஸ் இதழின் ஓவியர் துளசி அவர்களின் சித்திர தரம் எப்படி பட்டது என்றால், மும்பையில் இருந்து வெளிவந்த அமர் சித்திரக் கதை என்ற கதை வரிசையில் வெளி வந்த படங்கள் கூட இந்த கதையை அடிப்படையாக கொண்டு வந்தவையே ஆகும்.

என்னடா இவன்? முதலில் ஜானி நீரோ கதையை காப்பி என்றான், பிறகு அறிஞர் அண்ணாவின் கதைகளையும் கூறினான், இப்போது அமர் சித்திர கதைகளையும் கூறுகின்றானே என்று நீங்கள் வியக்கலாம். தொடந்து படியுங்கள். உங்களுக்கே உண்மை விளங்கும்.

சில வாசகர்கள் மட்டும் என்னடா இந்த அட்டைப் படத்திற்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லையே? என்று வினவலாம். ஆழ்ந்து யோசித்தால் இந்த ஒரு யுத்தியையும் நமது லயன் மற்றும் முத்து காமிக்ஸ் இதழ்களில் காப்பி அடித்து இருப்பார்கள். உதாரணத்திற்கு முத்து காமிக்ஸ் இதழ் எண் 305'ல் வெளிவந்த "கதை சொல்லும் கொலைகள்" இதழின் அட்டையை பாருங்கள். கதைக்கும் அட்டைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும், இந்த மாயாவியும் மந்திரவாதியும் அட்டையை போல.

இப்போது கதைக்கு போகலாம்: முதல் பக்கத்தை பாருங்கள். இதில் தான் கதையின் இரண்டு Vasu Comics MM Page 1வில்லன்கள் அறிமுகம் ஆகிறார்கள். கதாசிரியர் அவர்கள் இருவரையும் எப்படி புலி மற்றும் நரியின் கூட்டணி என்று கூறி படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறார் என்பதை கவனியுங்கள். இதில் குண்டப்பா என்பவர் தான் மந்திரவாதி ஆவார். ஏன் இதனை குறிப்பிடுகிறேன் என்றால் சில நேரங்களில் லயன் மற்றும் முத்து காமிக்ஸ்'களில் வரும் கதைகளின் பெயரும் கதையும் தொடர்பில்லாமல் இருக்கும். ஆனால் இந்த கதை அப்படி பட்டது இல்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். இப்போது மந்திரவாதி வந்து விட்டார், பின்னாலேயே மாயாவியும் வருவார்.அதனால், கதையும் தலைப்பும் தொடர்பு உடையது என்பதை கதையின் முதல் பக்கத்திலேயே தெரிவித்தது விட்டோம். விட்டது ஒரு தொல்லை. இந்த கதையின் ஆசிரியர் திரு துளசி அவர்களை சற்று கூர்ந்து கவனித்து உங்களுடைய நியாபகத்தில் வைத்து கொள்ளுங்கள். ஏன் என்றால் இவர் அகில உலக புகழ் பெற்ற ஒரு நபர் ஆவார். அமெரிக்காவில் உள்ள ட்வின் டவர்ஸ் தாக்குதலுக்கு ஆளானபோது BBC, CNN என பல உலக தொலைக்காட்சிகள் இவரைத்தான் தொடர்பு கொண்டன. எனேன்றால் இவர் தான் இந்தியாவின் Nostradamus என்று அழைக்கபடுபவர்.

 

Vasu Comics MM Page 2 & 3 கதையில் வரும் முக்கிய பாத்திரம் இந்த மன்னார்சாமி ஆகும். எலுமிச்சம் பழத் தோட்ட்டத்தை விற்று சினிமா கதாசிரியர் ஆகும் ஆசையில் இருக்கும் இவருக்கு பொன் சிலை போன்ற அழகான இரண்டு பெண்கள்: முறையே சுமதி மற்றும் கலா ஆகும். இந்த கலாவை பலரும் ரசித்து "கலா-ரசிகர்கள்' என்றும் கூறிக் கொண்டனர். இந்த மன்னர்சமியை சந்திக்கும் இரண்டு வில்லன்களும் அவரிடம் தாங்கள் சினிமா தயாரிப்பாளர்கள் என்று கூறி அவரின் பணத்தையும், தோட்டத்தையும் காணாமல் போகச் செய்தனர்.

இந்த படத்தில் மன்னார்சாமி எப்படி உட்கார்ந்து இருக்கிறார் என்பதை கவனியுங்கள். இது தான் ஜப்பானிய "இகிடோ - ஹட்சுமி" என்ற மனக் கட்டுப்பாட்டு கலையின் அடிப்படை ஆகும். இந்த "இகிடோ - ஹட்சுமி" பற்றி வேறு விபரங்கள் வேண்டும் என்றால் நமது காமிக்ஸ் டாக்டரை கேளுங்கள். தமிழ்வாணன் அவர்கள் எழுதிய "டோக்கியோ ரோஜா" என்ற கதையிலும் கூட இந்த "இகிடோ - ஹட்சுமி" கலையை சங்கர்லால் பின்பற்றுவதை வாசகர்கள் நினைவு கூறலாம்.

பின்னர் மன்னார்சாமி இரண்டு வில்லன்களிடமும் கடன் வாங்கும் நிலைக்கு ஆளாகிறார். தென் தமிழகத்தின் மிகப் பெரிய எலுமிச்சை தோட்ட அதிபர் இப்படி கடன் வாங்குவது பலருக்கு அதிர்ச்சியை தந்தாலும், அப்போதே இந்த Economic slow down பற்றி ஆசிரியர் எழுதி இருக்கிறார் என்பது நமக்கு தெரிகிறது. இது போன்ற பல சம்பவங்களை நமக்கு முன்னரே தெரிவித்ததால் தான் இந்த கதாசிரியர் துளசியை தமிழகத்தின் Nostradamus என்று பல அறிவியல் அறிஞர்கள் கூறுவர். இதே கதாசிரியர்தான் தமிழகத்தில் மின்சார தட்டுப் பாடு வரும் என்பதை தன்னுடைய "நாட்டுப்புற மாயாவி" என்ற கதையில் மிக அழகாக கூறி இருப்பார்.

Vasu Comics MM Page 8 & 9ஓர் இரவு: கடன் தொல்லையால் வீட்டையே இழககும் நிலை வரும்போது இளைய மகள் சுமதி தான் வேலை பார்க்கும் வீட்டு அம்மாவிடம் தன்னுடைய பணம் ரூபாய் ஐந்தாயிரத்தை வாங்கி வருகிறாள். அந்த ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களே இந்த கதைக்கு அடித்தளமாக அமைகின்றன. வாசக அன்பர்களே, இப்போது புரிகின்றதா அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு கதைக்கும் இந்த காமிக்ஸ் கதைக்கும் உள்ள தொடர்பு?

ஆனால், அப்போது தான் விதி அவள் வாழ்க்கையில் விளையாடுகிறது. விதி வலியது என்பது நம்மில் பலருக்கும் தெரியும்: ஆனால் விதி கொடியது என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். பெருமழைக்கு ஒரு மரத்தடியில் ஒதுங்கும் சுமதியை ஒரு நாகம் தீண்டிவிடுகிறது. அவள் அந்த நொடியிலேயே உயிர் துறக்கிறாள்.

அவளை பின் தொடந்து வந்த ஒரு மர்ம உருவம் அவளிடம் இருந்த ரூபாய் ஐந்தாயிரத்தை எடுத்து கொண்டு சென்று விடுகிறது. இப்படியாக விதியின் சதியால் சுமதி பணத்தை கொடுத்து கடனை அடைக்க முடியாமல் இறந்ததால் மன்னர் சாமி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்ளுகிறார்

Vasu Comics MM Page 14 & 15 Vasu Comics MM Page 38 & 39 அதனால் மிகுந்த வருத்தமுற்ற கலா தன்னுடைய பெயரை துர்கா என்று மாற்றி கொண்டு தன்னுடைய குடும்பத்தை சீர்குலைத்தவர்களை பழி வாங்க சபதம் பூண்டாள். அதனால் அவள் மருதன் வீட்டிலேயே வேலைக்கு செல்கிறாள். அப்போது மாயாவி அங்கு வருகிறார். (அப்பாட, ஒரு வழியாக கதைக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் உண்டு என்பதை நாம் நிரூபித்து விட்டோம் - அதுவும் பதினான்காம் பக்கத்திலேயே).

இவர் யார்? இவருக்கு ஏன் மாயாவி என்று பெயர் வந்தது? இது போன்ற பல கேள்விகள் உங்கள் மனதில் எழுந்தாலும் அதை கட்டுப்படுத்தி கொண்டு படியுங்கள் (கதையை முழுவதுமா படித்த எனக்கே புரியல. பதினாலு பக்கம் படிச்ச இவருக்கு புரியணுமாம் = ஆசை, தோசை அப்பளம் வடை). மாயாவி துர்காவாகிய கலாவுக்கு உதவி செய்வதாக கூறி விடை பெறுகிறார்.

வேலைக்காரி: பிறகு இரண்டு கயவர்களில் ஒருவராகிய குண்டப்பா அங்கு வருகிறார். அவர் ஒரு பெண் பித்தன் என்பது தெரிந்தாலும் கடமையே கண்ணாக கொண்ட துர்கா தன்னுடைய சேலை விலகி இருப்பதை உணராமல் இருக்கிறாள். இந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டே "வேலைக்காரி" உருவானதாக பலர் கூறுவர்.

Vasu Comics MM Page 44 & 45 Vasu Comics MM Page 46 & 47 பின்னர் தனனுடைய குடும்பத்தை நடுத்த் தெருவிற்கு கொண்டு வந்த இரண்டு கயவர்களில் ஒருவனை (குண்டப்பா) துர்கா கொன்று விடுகிறாள். மற்றும் ஒரு காமக் கொடூரன் ஆகிய வட இந்திய சேட் ஒருவனையும் துர்கா கொள்கிறாள். கடைசியாக மருதனை கொல்ல முயலும்போது மருதன் உன்மயை தெரிந்து கொள்ளுகிறார். மருதன் தனனுடைய துப்பாக்கியால் துர்காவை கொல்ல முயலும்போது மருதனின் முதல் தாரத்தின் மகனாகிய சேகர் அங்கு வந்து தோட்டாவை தான் வாங்கி கொள்கிறார். அதனால் கோபமுற்ற மருதன் சேகரை தூணில் கட்டி வைக்கிறார்.

Vasu Comics MM Page 48 & 49 Vasu Comics MM Page 50 & 51 அப்போது அருகில் இருந்த அறையில் இருந்த டி.வீ.யில் ஒரு படம் வந்தது. இந்த காட்சியை காணுங்கள். இதில் இருந்து தான் அமர் சித்திர கதைகள் உருவாகியது என்பதற்கு இரு வேறு கருத்து இருக்க முடியுமா?

 

 

 

Vasu Comics MM Page 52 & 53 Vasu Comics MM Page 60 & 61

Vasu Comics MM Page 62 & 63

 

 

 

 

 

 

 

உலகப் புகழ் பெற்ற பஞ்ச தந்திர கதைகள் உருவான அடிப்படை இந்த காக்கா-குஞ்சு கதை தான் என்று நான் சொல்ல மாட்டேன். ஏன் என்றால் அதன் அடிப்படை என்ன என்பது எனக்கு தெரியும். அப்போது சேட்'இன் தங்கம் இருக்கும் பெட்டியுடன் ஓட நினைக்கும் மருதனை மாயாவி வழி மறிக்கிறார். இந்த சண்டை காட்சியை பாருங்கள். பெய்ருட்டில் ஜானி என்ற முத்து காமிக்ஸ் புத்தகத்தில் இருந்தும் இரண்டு பக்கங்களை இங்கு ஸ்கான் செய்து உங்களின் பார்வைக்கு அளித்து உள்ளேன். ஒரு பானை சோற்றுக்கு ஓரு சோறு பதம் என்பது போல ஒரு காமிக்ஸ் காப்பி அடிக்கும் என்பதிற்கு இரண்டு பக்கங்களே போதும்.

 Muthu Comics Beirutil Jani Page 20 & 21 Muthu Comics Beirutil Jani Page 18 & 19

இந்த சண்டை காட்சிகளை கண்டு வியந்த இயக்குனர் ஷங்கர் இது போன்ற ஓரு சண்டை கட்சியை தன்னுடைய இயந்திரன் படத்தில் வைத்து இருப்பதாக தகவல். நண்பர் கேபிள் ஷங்கர் அவர்களிடம் இதைப் பற்றி உறுதி செய்ய வேண்டும்.

 

 

 Vasu Comics MM Page 64

ஓரு வழியாக தீமை அழிந்து நன்மை வாழ்வதாக இந்த கதை முடிகிறது. ஆனால் இந்த கதையுடன் பல தொடர்புகள் இன்றைய சமூக வாழ்க்கைக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களை எனக்கு என் நீங்கள் பின்னுட்டமாக பதிய கூடாது?

 

காமிக்ஸ் டாக்டர் தன்னுடைய வலைப்பூவில் ஏதோ பெரிதாக முத்து காமிக்ஸ் மாயவியிடம் இருந்து கடிதம் இருப்பதை கூறினார். ஆனால் அதன் அடிப்படை என்ன என்பதை இங்கு நீங்கள் பாருங்கள்.

 

 

Intro

next issue coming soon

நம்முடைய கிங் விஸ்வா, ரபிக் ராஜ போன்றவர்கள் தங்களுடைய வலைப் பூவில் சும்மா அடுத்த பதிவு இது என்று போட்டு நம்ம உயிரை எடுக்கிறார்கள். அதனால் தான் நானும் இப்படி ஓரு உத்தியை கொண்டு வந்து இருக்கிறேன். இந்த ஒன்பது கதையில் எந்த காவியத்தை அடுத்த பதிவாக போட வேண்டும் என்பதை நீங்கள் எனக்கு வோட்டு அளித்து தெரிவியுங்களேன்? ஆனால் டாக்டரின் ஆவி என்ற கதை பலரின் கவனத்தை கவரும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

Doctarin Aaavi

irumbuk kai Edison Aavigaludan Maayavi

இந்த டார்ஜான், டார்ஜான் என்று பலர் கூறுவார்களே, அந்த டார்ஜானின் பிறப்பிடம் இந்த கருமலை தீவு என்ற கதையே ஆகும். மேலும் முத்து விசிறி அவர்கள் பதிவிட்ட கொலைகார கலைஞன் என்ற கதையின் மூலம் இந்த கோமாளியின் கொலைகள் தான் என்பதை என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ?

MalaiVaasalil Maayavi Karumalai Theevu Komaaliyin Kolaigal

உறைபனி மர்மம் என்ற கதையில் நமது இரும்புக்கை மாயாவி தோன்றுவார். அந்த கதையின் மூலம் இந்த பனித்தீவில் மாயாவி என்ற கதை ஆகும். இதை பற்றி நமது முத்து விசிறி தனது அடுத்த பதிவில் விரிவாக எழுதலாமே?

மெக்சிகோ மாயாவி என்ற கதை ஆங்கிலத்தில் வந்து விட்டது. நம்முடைய முத்து காமிக்ஸ் தான் அதனை தமிழில் வெளி இட வில்லை. அதைப் போல பழைய முத்து காமிக்ஸ் வாசகர்கள் முகமூடி வீரர் வேதாளன் தோன்றும் "முத்திரை மோதிரம்" என்ற கதையே மோதிர விரல் என்று கீழே உள்ள கதை என்பதை உணரலாம்.

pani theevil Maayavi mexico Maayavi Modhira Viral

உங்களின் விமர்சனங்களை எனக்கு என் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?


நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

21 comments:

  1. அடடே,

    நான்தான் முதல்வனா? என்ன ஒரு ஆச்சர்யம்?

    ஒலக காமிக்ஸ் ரசிக, உனக்கு கோடி நன்றி. இப்படியே உன்னுடைய கடமையை செய் - பலனை எதிர் பார்.

    சூப்பர் ஸ்டார் ரசிகன்.

    ReplyDelete
  2. வாவ்,

    கேவலமாக உள்ளதே? ஐ மீன் அந்த காபி அடிக்கும் காமிக்ஸ்கள்.

    படு சுவாரசியம் உங்கள் எழுத்து பாணி.

    ஜவஹர்.

    ReplyDelete
  3. நண்பரே,

    போட்டு தாக்கு, தாக்கு என்று தாக்கி விட்டீர்கள்.

    இந்த மர்மங்களை எல்லாம் அறியும் போது, எவ்வளவு ஈயடிச்சான் காப்பி காமிக்ஸ் ரசிகனாக நான் இருந்துள்ளேன் என்பது தெளிவாகிறது. இன்னும் எவ்வளவு பயங்கரம்மான உண்மைகளை நீங்கள் வெளியிடப் போகிறீர்களோ என கிலி பிடித்தாட்டுகிறது.

    மலை வாசலில் மாயாவி எனும் நாவலை, சாண்டில்யன் தழுவி மலைவாசலை எழுதவில்லையா என்பதனை தெளிவு படுத்துமாறு வேண்டுகிறேன்.

    பனித்தீவில் மாயாவியை பார்க்கும் போது , மார்வெல் காமிக்ஸின் டெர்டெவில் என் கண்களிற்கு தெரிகிறாரே இது என்ன அதிசயம்.

    மெக்ஸிகோ மாயாவியில் தோன்றும் இவ்விந்தியரை,காப்டன் டைகர் கதை, சிஸ்கோ, டெக்ஸ்வில்லர் கதைகளில் நான் பார்த்திருக்கின்றேனே.

    உற்சாகத்துடன் தொடருங்கள்

    ReplyDelete
  4. நல்ல பயனுள்ள பதிவு.... நன்றி ஐயா.

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

    ReplyDelete
  5. அய்யா,

    என்ன கொடுமை இது?

    முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், பெய்ருட்டில் ஜானி, ஜானி நீரோ, அறிஞர் அண்ணா, ஓர் இரவு, வேலைக்காரி, ப்ளீட்வே, அமர் சித்திரக் கதை, அமெரிக்காவில் உள்ள ட்வின் டவர்ஸ், BBC, சனன், இந்தியாவின் Nostradamus, இகிடோ - ஹட்சுமி, தமிழ்வாணன், டோக்கியோ ரோஜா, Economic slow down, தமிழகத்தில் மின்சார தட்டுப் பாடு, பஞ்ச தந்திர கதைகள், இயக்குனர் ஷங்கர், இயந்திரன், டார்ஜான், கொலைகார கலைஞன், உறைபனி மர்மம், இரும்புக்கை மாயாவி, முகமூடி வீரர் வேதாளன், முத்திரை மோதிரம் இப்படி எல்லாரையும் விட்டு வைக்காமல் போட்டு தாக்கி விட்டீர்களே?

    கிங் விஸ்வா.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  6. From The Desk Of Rebel Ravi:

    Comics Rasigan,

    I really cannot understand what kind of a person you are. You are SERIOUSLY Funny.

    Amazing way of connecting things and Happenings. you should go and write satires like what we used to read in MAD magazines.

    Rebel Ravi,
    Change is the Only constant thing in this world.

    ReplyDelete
  7. ஒலக காமிக்ஸ் ரசிகா,

    சிறப்பான இடுகை இது. வாழ்த்துக்கள்.

    சிரித்து சிரித்து வயிறு வலித்தது. தொடருங்கள்.

    அம்மா ஆசை இரவுகள் விசிறி.

    ReplyDelete
  8. ஒலக காமிக்ஸ் ரசிகா!

    சுதேசி தமிழ் காமிக்ஸ்-களின் களவுபோன பெருமைகளை மீட்டு எடுப்பதில் இரவு பகல் பாராமல் நீங்கள் உழைத்திருப்பது இடுகையில் காணும் பறந்து விரிந்த பார்வையின் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. (முடிந்தால் கொஞ்ச நேரம் தூங்குங்கள்... இடுகையில் பத்திகளுக்கு இடையே இடைவெளி விட மறந்து விடீர்கள் மேலும் சொல்லியதையே மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள்..).

    தமிழ் திரைபடங்களில் வில்லனின் துப்பாக்கி குண்டுகளை சரமாரியாக மார்பில் வாங்கி கொண்டும் முழு பிளாஷ் பேக்கையும் சொல்லி விட்டு, முடிந்தால் நாயகியுடன் ஒரு டூயட் பாடி விட்டுதான் மரணமடைவான் நாயகன். இந்த யுத்தியை எங்கே கற்றார்கள் என்று நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் யோசிப்பேன். நீங்கள் குறிப்பிட்ட 'மாயாவியும் மந்திரவாதியும்' கதையில் வில்லன் மருதன் துர்காவை நோக்கி சுட்ட குண்டை தன் மார்பில் வாங்கி கொண்டபிறகும் தொடர்ந்து சாகசம் புரியும் சேகரிடம் இருந்துதான் தமிழ் நாயகர்கள் குண்டு பட்டாலும் சாகாமல் சாகசம் புரியும் வித்தையை கற்று கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்த பொது என் நீண்ட நாள் தேடல் முடிவுக்கு வந்த மகிழ்ச்சியில் உள்ளம் கள்ளுண்ட குரங்காய் கதறியது!

    கதைகளில் ஒரு நிகழ்வை சொல்லிகொண்டிருக்கும் போது அதோடு தொடர்புடைய மற்றொரு நிகழ்வை அல்லது அதே நேரத்தில் வேறொரு இடத்தில் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வை சொல்லத் தொடங்குவது என்பது எல்லோருக்கும் எளிதில் வந்து விடாது. இந்த கதையில் வில்லன் நாயகனை தூணில் கட்டிய பிறகு அறையில் உள்ள தொலைக்காட்சியில் ஓடும் ஒரு தொடர் அதிரடியாக 'zoom' செய்யப்பட்டு, வேறொரு சூலுக்கு வாசகன் அழைத்து செல்லபடுகிறான். இந்த யுக்தி ஒரு அறிய, அபூர்வ யுக்தி! நமது பங்கு வேட்டையர் வேதாள நகரத்தை நோக்கி வெற்றி கரமாகப் பயணித்து கொடிருந்தாலும் இரு வேறு சம்பவங்களை இணைப்பதில் ரொம்ப குழம்பி போய் சில சமயங்களில் கடற்கரையில் உட்கார்ந்து விடுகிறார். இந்த அபூர்வ யுக்தியை அவர் கற்று கற்று கொண்டால் நல்லது.!

    இறுதியில் நீஙகள் ஆதாரத்துடன் கொடுத்துள்ள அறிய உண்மைகள் முத்து, லயன் காமிக்ஸ்-களில் வெளி கதைகள் எல்லாம் ஒரிஜினல் என்றே எண்ணி கொண்டிருந்த என் நினைப்பில் மண்ணை அள்ளி போட்டன. காதல் பட கிழவி போல 'கொலக் காரப் பாவீ...!" என்று என்னையறியாமல் கத்தி விட்டேன்!

    உங்களின் உழைப்பு வீண் போகாது அய்யா... வீண் போகாது...! என்றேனும் ஒரு நாள் ஒரிஜினல் எது என்பதை உலகு அறியும்... ! ஆம்! தர்மம் தனை சூது கவ்வும்... ஆனால் தர்மம் மறுபடியும் வெல்லும்!

    ReplyDelete
  9. நண்பரே,

    உங்கள் இடுகைகளை படிக்கும்போது இந்த வெள்ளைக்கார சமுதாயம் நம்மை எவ்வாறெல்லாம் ஏமாற்றிக் கொண்டிருந்தது என நினைத்து உள்ளம் கொதிக்கிறேன்.

    நான்கூட இதற்கு முன் மங்கி காமிக்ஸ் என்று ஒன்று படித்துள்ளேன். அதில் வரும் கதாநாயகன் ஊத்துக்குளி காத்தவராயன் ஒரு பெரும் தொழிலதிபர். அவருக்கு துணையாக அவரின் செகரட்டரி பூங்காவனம் அம்மாள். உலக அளவில் புண்ணாக்கு வியாபாரத்தில் பெரிய புள்ளி.

    ஆனால் அவரின் மறுபக்கம் பயங்கரமானது. அவர் இந்திய உளவு துறையில் ஏஜென்ட் காத்தவ் என்ற பெயரில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். அவரின் சாகசங்கள் அனைத்தும் அருமையாக இருக்கும்.

    எனக்கு பிடித்தது தலைப்பு நினைவில்லை. ஒரு ஐரோப்பிய தலைநகரில் ஒரு லாட்ஜில் தங்கியிருப்பார். போலீஸ் ரெய்ட் என கேள்விப்பட்டதும் அப்படியே தப்பித்து இந்த சதிக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பார்.

    இது போன்ற அருமையான சாகசங்களை ஐரோப்பியர்கள் கண்டிருக்க மாட்டார்கள். கண்டிருந்தால் அதையும் அவர்கள் சுட்டு இருப்பார்கள். இல்லை, சுட்டு விட்டார்களா?

    இது குறித்து இந்திய பழமை காமிக்ஸ் களை களஞ்சியமான உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  10. யாருப்பா அது? எனக்கும் திருமதி பூங்காவனம் அவர்களுக்கும் உள்ள தொடர்பை பற்றி பேசுவது? உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட வெவஸ்தை கிடையாத? போ, போய் வேலையை பாருங்கள் சார்.

    ReplyDelete
  11. ஒலக காமிக்ஸ் ரசிகன் என்று சொல்வதை வீட "ஒலக பழைய காமிக்ஸ் ரசிகன்" என்று சொல்வது சரியாகும்...
    எங்கே இருந்து உங்களுக்கு கிடைத்தது இந்த பொக்கிஷங்கள். மிகவும் சுவாரசியமாக எழுதுகிறீர்கள்...ஒரு mild சிரிப்பு வரவைப்பவை உங்கள் எழுத்துக்கள்
    கருமலை தீவுக்கு என் வோட்டு.....டாக்டரின் ஆவிக்கு அடுத்த படியாக...

    ReplyDelete
  12. பஞ்சமா பாவிகளா,

    என்னுடைய பெயரை என் இன்னும் கெடுக்கிறீர்கள்?

    ஒழிந்து போங்கள்.

    ReplyDelete
  13. நல்வாழ்த்துக்கள் தோழர் சமுகத்திர்க்கு

    மிகவும் அருமையாக இருந்தது. வெகு விரைவில் நானும் ஒரு பதிவை இட்டு விடுகிறேன்.

    நன்றியுடன்,
    க.கொ.க.கூ

    ReplyDelete
  14. திரு ஒலக காமிக்ஸ் ரசிகரே,

    உங்களின் பங்களிப்பு காமிக்ஸ் உலகிற்கு மிகவும் தேவையான ஒன்றாகும். ஏனெனில் நீங்கள் தான் எங்களுக்கு பல உண்மைகளை புட்டு புட்டு வைகிறீர்கள். உங்கள் சேவை தமிழ் காமிக்ஸ் உலகிற்கு தேவை.

    தொடருங்கள். என்னுடைய வோட்டு டாக்டரின் ஆவி என்ற கதைக்கே.

    காமிக்ஸ் பிரியன்.

    ReplyDelete
  15. Sir,

    Kindly update with another story of C.I.D 333.

    We are waiting.

    ReplyDelete
  16. Dear,

    what a fake comments from your mouth.

    do you know Anna born in 1909 and ended his life in 1969 but this comics was released after 80's.

    enna kodumai sir ethu...

    வேலைக்காரி: பிறகு இரண்டு கயவர்களில் ஒருவராகிய குண்டப்பா அங்கு வருகிறார். அவர் ஒரு பெண் பித்தன் என்பது தெரிந்தாலும் கடமையே கண்ணாக கொண்ட துர்கா தன்னுடைய சேலை விலகி இருப்பதை உணராமல் இருக்கிறாள். இந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டே "வேலைக்காரி" உருவானதாக பலர் கூறுவர்.

    ReplyDelete
  17. Another one mistake

    இந்த டார்ஜான், டார்ஜான் என்று பலர் கூறுவார்களே, அந்த டார்ஜானின் பிறப்பிடம் இந்த கருமலை தீவு என்ற கதையே ஆகும். மேலும் முத்து விசிறி அவர்கள் பதிவிட்ட கொலைகார கலைஞன் என்ற கதையின் மூலம் இந்த கோமாளியின் கொலைகள் தான் என்பதை என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ?

    Tarzan, a fictional character created by Edgar Rice Burroughs, first appeared in the 1912 novel Tarzan of the Apes,[1] and then in twenty-three sequels. The character proved immensely popular and quickly made the jump to other media, first and most notably to comics and film. This article concerns Tarzan's appearance in comics.

    many thanks for google and wiki

    ReplyDelete
  18. நல்ல முயற்சி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
    - நஞ்சையம்பாளையம் வெங்கடேஷ்

    ReplyDelete
  19. hi nalla kathaigal

    ReplyDelete
  20. படுபாவிகள் என்னை பற்றி இன்னும் தவறாக எழுதி வருகின்றனர்.

    ஆண் ஆதிக்கம் நிறைந்த உலகம் இது என்பதை இவர்களை போன்ற பலரும் நிரூபித்து வருகின்றனர். காதலர் தினமான நேற்றும் கூட எங்களை இந்த பாவிகள் நிம்மதியாக இருக்க விட வில்லை.

    என்ன செய்யலாம்?

    என்னுடைய நிலைமையை விளக்கி ஒரு சொந்த பதிவு இட்டு உள்ளேன். வந்து என் சோக கதையை தெரிந்து கொள்ளுங்கள்.

    சுட்டி இங்கே: http://poongaavanamkaathav.blogspot.com/2009/02/blog-post.html

    ReplyDelete
  21. வலையுலக நண்பர்களே,

    தயவு செய்து பூவாசம் வீசும் எங்கள் வாழ்வில் புயல் வீச வைக்காதீர்கள்.

    எங்களையும் வாழ விடுங்கள்.

    காத்தவ்,
    புயல் அடிக்கும்போது பூ பறிப்பவன்.
    வெள்ளத்தில் மீன் பிடிப்பவன்.

    ReplyDelete

என்னுடைய வலைப்பூவை நீங்கள் படிக்கவில்லையெனில், படித்தவுடன் உங்களின் எண்ணங்களை தெரிவிக்கவில்லை எனில் உங்களிடம் அடிப்படையாகவே ஏதோ தவறு உள்ளது

Related Posts with Thumbnails