Monday, February 15, 2010

பறக்கும் தட்டு - கண்டுபிடிப்பாளர் மரணம்

அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். சென்றவாரம் நான் செய்தித் தாளில் படித்த ஒரு தகவலே இந்த பதிவுக்கு மூல காரணம். ஆம், நானும் நம்முடய மருத்துவர் ஐயா போலவே பதிவுகளை இட ஆரம்பித்து விட்டேன். அதன் விளைவே இந்த பதிவு இப்போது உங்கள் பார்வையில்.

நம்மில் அனைவருமே சிறுவயதில் பிரிஸ்பீ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பறக்கும் தட்டினை கொண்டு விளையாடி இருப்போம். கிராமத்தில் இருந்த சிறுவர்கள் கூட எண்பதுகளில் இந்த பறக்கும் தட்டினை வைத்து விளையாடி மகிழ்ந்த காலம் உண்டு. அந்த பறக்கும் தட்டினை கண்டுபிடித்த வால்டர் மோரிசன் என்ற அமெரிக்கர் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று மரணம் அடைந்தார்.இதோ அவரைப் பற்றிய தகவலும் புகைப்படமும்.

Frisbee Inventor

காமிக்ஸ் இதழ்களில் பல பறக்கும் தட்டு கதைகள் வந்து இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த கதை இதோ - ஓவியர் மாலியின் கைவண்ணத்தில் பறக்கும் தட்டு பார்க்க ஏதோ ஒரு லட்டு போல இருக்கும். 007 ஜேம்ஸ் பாண்ட் கூட பார்க்க ஹிந்தி நடிகர் ராஜ் பாப்பர் போல காட்சி அளிப்பார்.

ஸ்வீடன் நாட்டில் இருந்து வெளிவந்த செமிக் என்ற பதிப்பகத்தார் வெளியிட்ட ஜேம்ஸ் பாண்ட் கதைகளை ஆசிரியர் திரு ராமஜயம் அவர்கள் முதன்முதலில் வெளியிட்டார். அதன் பின்னர் ராணி காமிக்ஸ் நிறுவனமும் தங்களின் ராணி சிண்டிகேட் மூலம் ராணி காமிக்ஸில் அந்த நாட்டு கதைகளை வெளியிட ஆரம்பித்தனர். அவற்றில் ஒன்றுதான் இந்த கதை.

Paadhi Iravil oru parakkum Thattu

சரி, வெறும் இந்த அட்டைப்படத்தை மட்டும் போடவேண்டாம், வேறு ஏதாவது தகவல் இருந்தால் அளிக்கலாம் என்று எண்ணி கூகுல் இமேஜசில் சென்று பறக்கும் தட்டு" என்று டைப் செய்து தேடித் பார்த்தால், நம்ம கிங் விஸ்வாவின் பறக்கும் குண்டு பதிவின் லிங்க் வருகிறது. என்ன கொடுமை சார் இது?

Parakkum Gundu

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன், 
ஒலக காமிக்ஸ் ரசிகன்

13 comments:

  1. ஆரம்பிச்சுட்டாங்கப்பா, ஆரம்பிச்சுட்டாங்க.

    ReplyDelete
  2. ஒலக காமிக்ஸ் நண்பரே,
    உங்களுடைய பாணி பதிவுகளை நிறுத்திவிட வேண்டாம்..

    மாண்ட்ரேக் கதை ஒன்றில் பறக்கும் தட்டு பிரதானப்படுத்தி இருக்கும் கதை தலைப்பு மறந்து விட்டது. எனக்கு மிகவும் பிடித்த கதை அது.

    ReplyDelete
  3. ஜேம்ஸ் பாண்டு கதையில் வையாபுரியா?

    ReplyDelete
  4. ஒலக காமிக்ஸ் ரசிகரே,

    கலக்குகிறீர் போங்கள் ! நமது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த கலையரசி படத்தில் பறக்கும் தட்டு வைத்து தான் கதை.பார்த்தது உண்டா நண்பரே

    ReplyDelete
  5. //ஆம், நானும் நம்முடய மருத்துவர் ஐயா போலவே பதிவுகளை இட ஆரம்பித்து விட்டேன். //

    இதை நான் வண்மையாக கண்டிக்கிறேன்!

    இது போல் மொக்கைப் பதிவுகளை முதன் முதலாக இட்டவர் கிங் விஸ்வாதான்!

    இதோ பதிவுக்கான சுட்டி!

    http://tamilcomicsulagam.blogspot.com/2009/04/apr-22-world-earth-day-national-arbor.html

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  6. நீங்கள் கூற மறந்து விட்ட பிற பறக்கும் தட்டு கதைகள்!

    பறக்கும் தட்டு மர்மம்! (காரிகன்)
    காற்றில் கரைந்த கரன்ஸி! (மாண்ட்ரேக்)

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  7. கூற மறந்து விட்டேன்!

    அண்ணாருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  8. //உங்களுடைய பாணி பதிவுகளை நிறுத்திவிட வேண்டாம்..

    மாண்ட்ரேக் கதை ஒன்றில் பறக்கும் தட்டு பிரதானப்படுத்தி இருக்கும் கதை தலைப்பு மறந்து விட்டது. எனக்கு மிகவும் பிடித்த கதை அது.//

    நன்றி சிவ. அந்த கதை காற்றில் கரைந்த கரன்சி.

    ReplyDelete
  9. //SUREஷ் (பழனியிலிருந்து) said...


    ஜேம்ஸ் பாண்டு கதையில் வையாபுரியா?//
    தல, இவர் ஸ்வீடன் நாட்டு ஜேம்ஸ்பாண்ட். அதான் அப்படி இருக்கார்.

    ReplyDelete
  10. //நமது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த கலையரசி படத்தில் பறக்கும் தட்டு வைத்து தான் கதை.பார்த்தது உண்டா நண்பரே//

    லக்கி Limat, அந்த படத்தை கேள்விப்பட்டது கூட கிடையாது. தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  11. //இது போல் மொக்கைப் பதிவுகளை முதன் முதலாக இட்டவர் கிங் விஸ்வாதான்!

    இதோ பதிவுக்கான சுட்டி!//

    அந்த பதிவை மறக்க இயலுமா டாக்டர் செவன்?

    ReplyDelete
  12. தகவலுக்கு நன்றி.

    சிறுவயதில் நான் முதன்முதலில் இந்த பிரீச்பியை வாங்கிய போது அடைந்த மகிழ்வுக்கு அளவே இல்லை.

    ReplyDelete
  13. மற்ற பறக்கும் தட்டு அட்டைப்படங்களையும் போடவும்.

    ReplyDelete

என்னுடைய வலைப்பூவை நீங்கள் படிக்கவில்லையெனில், படித்தவுடன் உங்களின் எண்ணங்களை தெரிவிக்கவில்லை எனில் உங்களிடம் அடிப்படையாகவே ஏதோ தவறு உள்ளது

Related Posts with Thumbnails