Wednesday, February 17, 2010

வேதாளர் - முகமூடி வீரர் மாயாவி - பிறந்த நாள்

அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.டெய்லி ஸ்டிரிப் என்று சொல்லப்படும் தினசரி காமிக்ஸ் தொடர்களின் வாசகர்களுக்கும், பொதுவான காமிக்ஸ் ரசிகர்களுக்கும் இன்று ஒரு முக்கியமான நாளாகும். ஆம், பிப்ரவரி மாதம் பதினேழாம் நாள் தான் முதன் முதலில் வேதாளன் என்று இந்திரஜால் காமிக்ஸ் / குமுதம் /முத்து காமிக்ஸ் / முத்து மினி காமிக்ஸ் / கொமிக் வோல்ட்  இதழ்களிலும் முகமூடி வீரர் மாயாவி என்று ராணி காமிக்சிலும் அழைக்கப்பட்ட பேன்டம் (The Phantom) காமிக்ஸ் ரசிகர்களை சந்தித்தார்.

சரியாக எழுபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வேதாளர் முதன் முறையாக ஒரு தினசரி பத்திரிகையில் தோன்றினார். அந்த கதைதான் சிங் கொள்ளையர்களை பற்றிய கதை. சிங் சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட அந்த கதை பெற்ற வெற்றியை தொடர்ந்து பின்னாளில் வேதாளரின் கதையானது  உலக நாடுகளில் பல மொழிகளில் பல்வேறு வடிவங்களில் இன்றளவும் தொடர்கின்றது.முதன்முதலில் வந்த அந்த வேதாளரின் கதையின் பக்கம் இதோ உங்களின் பார்வைக்கு.

The Singh Brotherhood 

இந்த கதையை படிக்க விரும்பும் வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இதோ அந்த தினசரி கதையின் டவுன்லோட் லின்க்குகள்:

அன்றுமுதல் இன்று வரை வேதாளர் பல மொழிகளில் பல வடிவங்களில் நம்மை மகிழ்வித்து வந்துள்ளார். முதன்முதலில் ஒரு முழு புத்தக வடிவில் வேதாளர் தோன்றியது டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தின் இந்திரஜால் காமிக்ஸின் முதல் இதழில் தான். தமிழிலும் கூட முதல் வேதாளரின் கதை இதே பதிப்பகத்தின் தமிழ் வடிவம்தான். அந்த புத்தகம் என்னிடம் இல்லாததாலும், நண்பர்கள் அதனின் ஸ்கான் வடிவத்தை தராததாலும் நான் அதற்க்கு அடுத்தபடியாக தமிழில் குமுதம் புத்தகத்தில் வந்த முகமூடி கதையின் முதல் பக்கத்தை அளிக்கிறேன்.

குமுதத்தில் அறுபதுகளில் ஐந்து (ஆறு?) முகமூடி கதைகள் வந்தன.உலகிலேயே இந்த ஐந்து கதைகளையும் தன்னிடம் நல்ல நிலையில் வைத்து இருக்கும் ஒரே நபர் - பயங்கரவாதி டாக்டர் செவன் தான். ஐயா, தயவு செய்து அதன் முதல் பக்கங்களையாவது எங்களுக்கு காட்டுங்கள். உங்களுக்கு புண்ணியமாக போகும்.

 

முதல் வேதாளர் கதை - இந்திரஜால் காமிக்ஸ்

குமுதம் - முகமூடி - முதல் கதை - முதல் பகுதி

IndrajalComics1stissueMarch19643 KumudhamJuly281966Phantom5
  • முதல் இந்திரஜால் காமிக்ஸ் கதையை ஆன்லைனில் படிக்க,இங்கே கிளிக் செய்யவும்.Scribd
  • டவுன்லோட் செய்ய, இந்த சுட்டியை பயன்படுத்தவும். MediaFire

தமிழில் எனக்கு தெரிந்த வரையில் தெளிவான படங்களுடன், சிறந்த சித்திரங்களை கொண்டு சிறப்பான மொழி பெயர்ப்பில் வந்த வேதாளர் கதைகள் முத்து குழுமத்தில் மட்டுமே வெளியிடப்பட்டன. அதனை படிக்கும் வாய்ப்பு பலருக்கும் கிட்ட வில்லை. ஆம், எண்பதுகளிலேயே வேதாளர் கதைகளை முத்து குழுமத்தினர் நிறுத்தி விட்டனர்.

முத்து காமிக்ஸில் முதல் வேதாளர் கதை

முத்து மினி காமிக்ஸில் முதலும் கடைசியுமான வேதாளர் கதை

Muthu_Comics___058_-_Mugamoodi_Vedhalan_thumb[1] MM8_Mudhal_Vedhalanin_Kadhai_Front_Cover

படங்களை கொடுத்து உதவிய என்னுடைய நண்பர்களுக்கும், வேண்டப்பட்ட விரோதிக்கும் நன்றிகள்.

முத்து காமிக்ஸ் வேதாளர் கதைகளை வெளியிடுவதை நிறுத்தியவுடன் தமிழில் வேதாளர் கதைகளை படிக்க ரசிகர்கள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக காத்து இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது (இடையில் இந்திரஜால் நிறுவனத்தினர் "சுந்தர" தமிழில் வெளியிட்டு வந்துக்கொண்டுதான் இருந்தனர்). ராணி காமிக்ஸில் மாயாவி என்ற பெயரில் வேதாளர் தோன்றினார். அதன் பின்னர் ஒவ்வொரு இரண்டாம் இதழும் மாயாவியின் கதை என்ற நிலை தொடர்ந்தது.  ராணி காமிக்ஸை சரிவில் இருந்து மீட்ட சுந்தர பாண்டியனாக மாயாவி விளங்கினார்.

 

ராணி காமிக்ஸில் முதல் வேதாளர் மாயாவி கதை

கொமிக் வோல்ட் இதழில் வந்த பேன்டம் கதை

RaniComics1stPahntomMay19903 ComicWorld31stPhantomStoryDec19983

இந்த தொண்ணுறுகளில் தமிழில் சில பல மொக்கை காமிக்ஸ் முயற்சிகள் நடந்தன. கண்மணி காமிக்ஸ், கொமிக் வோல்ட் என்று வந்த இந்த இதழ்கள் பல வண்ணத்தில் சிறப்பான பின்புலத்தில் வந்தாலும் அவை பெரிய அளவில் எடுபடவில்லை.இதில் அல்டிமேட்  ஜோக் இந்த கொமிக் வோல்ட்தான். வேதாளர் என்றும் இல்லாமல், மாயாவி என்றும் இல்லாமல் பேன்டம் என்ற பெயரில் வந்து படு தோல்வியை தழுவியது.

ஆனால், வேதாளர் ஆங்கிலத்தில் தொடர்ந்து சக்கை போடு போட்டுக் கொண்டுதான் இருந்தார். தொண்ணுறுகளில் டைமண்ட் காமிக்சிலும், இரண்டாயிரத்தில் எக்மாண்ட் வெளியீடுகளிலும் வந்து வெற்றி பெற்றார். ஏன், இப்போதும்கூட இந்த வேதாளர் கதைகள் ஆறு கதைகளை கொண்ட பெரிய கலெக்டர்ஸ் எடிஷனாக விற்பனையாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

 

டைமண்ட் காமிக்ஸ் - முதல் வேதாளர் கதை

எக்மாண்ட் காமிக்ஸ் - முதல் வேதாளர் கதை

DiamondComics1stPhantomJune19903 TheIndianExpressEgmontPhantom1200010

இதுவரையில் வேதாளரை பற்றி ஒரு தொலைக்காட்சி படமும், ஒரு சினிமா படமும் எடுக்கப்பட்டு உள்ளன. அவற்றை பற்றி தெரிந்து கொள்ள நண்பர் காமிக்ஸ் பிரியரின் பதிவுக்கு செல்லுங்கள்.

 

முதல் வேதாளர் தொலைக்காட்சி படம் 1943

முதல் வேதாளர் சினிமா படம் 1996

ThePhantom1943SerialOriginalDVDCover The Phantom 1996 Film

காமிக்ஸ் பிரியரின் வேதாளர் பதிவு

நண்பர் புலா சுலாகி அவர்கள் வேதாளர் கதைகளை முழுவதுமாக வழங்கி உள்ளார். அவற்றை படிக்க கீழ்கண்ட லிங்க்குகளை கிளிக் செய்யவும்.

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன், 
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

21 comments:

  1. தல,

    நன்றி தல.

    எங்கே தல உங்கள் பதிவுகள காணோம்?

    ReplyDelete
  2. நன்றி செந்தழல் ரவி அவர்களே.

    ReplyDelete
  3. நண்பரே,

    மூன்று நாளும் தொடர்ந்து பதிவு மழையாக இருக்கிறதே? என்ன விசேஷம்?

    எப்படி உங்களால் முடிகிறது? நானும் ரெண்டு மாதமாக பதிவிட முடியாமல் தவிக்கிறேன்.

    தொடருங்கள் உங்கள் பதிவுகளை.

    வேதாலருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    அட்டை படங்கள் அனைத்துமே அருமை.

    ReplyDelete
  4. டவுன்லோட் லிங்க் வழங்கியமைக்கு நன்றி.

    ReplyDelete
  5. very good. I am 55 years old. In my childhood my father used bring me Ambulimama and Indrajal comics( Mainly Phantom and Mandrake).In my dream i will imagine MGR as Phantom and Sivaji as Mandrake.

    ReplyDelete
  6. தல.புது போஸ்ட் ஒண்ணு போட்டு இருக்கேன்.வந்து பாத்துபுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.

    http://illuminati8.blogspot.com/2010/02/wasabi-punisher-max.html

    ReplyDelete
  7. ஒலக காமிக்ஸ் ரசிகரே, நல்ல பதிவு.
    சக்திமான் தொடர் வந்த காலத்தில் நமது தூர்தர்சனில் கூட மாயாவி என்று தொடர் ஆரம்பித்தார்கள் என்று ஞாபகம்

    ReplyDelete
  8. ஆமாம் சிவ, எனக்கு கூட நியாபகம் இருக்கிறது. ஆனால் அந்த கதை ஒரு வடநாட்டு தயாரிப்பாகும். அந்த ஹீரோ கூட நம்ம வேதாளர் மாதிரியே காட்டில் இருப்பார், கூடவே குதிரையும் நாயும் வரும். நினைவூட்டியமைக்கு நன்றி.

    ReplyDelete
  9. //swamiarudran said...


    very good. I am 55 years old. In my childhood my father used bring me Ambulimama and Indrajal comics( Mainly Phantom and Mandrake).In my dream i will imagine MGR as Phantom and Sivaji as Mandrake.//
    உண்மைதான் சார். நாங்களும் கூட அப்படித்தான்

    ReplyDelete
  10. http://www.facebook.com/editphoto.php?oid=304888368658&success=4&failure=0#!/group.php?gid=304888368658

    join all mugamoodi veerar mayavi lovers

    ReplyDelete
  11. Really i miss முகமூடி வீரர் மாயாவி stories..

    ReplyDelete
  12. nanraga iruthathu.#001 Phantoms Belt.rar file download seithullen.but pass word. kekirathu .please give me

    ReplyDelete
  13. Beautiful memories... still remember my days with mayavi and mandrake stories.

    ReplyDelete

என்னுடைய வலைப்பூவை நீங்கள் படிக்கவில்லையெனில், படித்தவுடன் உங்களின் எண்ணங்களை தெரிவிக்கவில்லை எனில் உங்களிடம் அடிப்படையாகவே ஏதோ தவறு உள்ளது

Related Posts with Thumbnails