Thursday, February 19, 2009

முன்னோட்டம் 1: இரும்புக் கை மாயாவியின் சூப்பர் ஹீரோ தோற்றத்தின் மூலம்

FL Teaser 1

அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். என்னுடைய முதல் இரண்டு பதிவுகளில் இருந்த உண்மைகளை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள்.எனக்கு வந்த பல மின்னஞ்சல்களில் வாசக அன்பர்கள் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள்.

ஆனால், ஒரு சில வாசகர்கள் மட்டும் நான் எழுதுவதை மிகவும் "சீரியஸ்" ஆக எடுத்துக் கொண்டு எனக்கும் வாசக நண்பர்களுக்கும் போன் செய்து அவர்களது கோபத்தை தெரிவித்தார்கள். இன்னும் சிலர் அவர்களது கருத்தை இங்கேயே கமெண்ட் மூலம் வெளிப்படுத்தினார்கள்.

நம்முடைய காமிக்ஸ் டாக்டர் அவர்கள் ஏதோ பெரிய உலக அதிசயம் போல இரும்புக்கை மாயாவி அவர்களின் சூப்பர் ஹீரோ தோற்றத்தை கொண்ட ஒரு கதையையும் அந்த கதையின் மூலகாரணத்தையும் ஒரு பதிவாக போட்டு உள்ளார்.

என்னங்கடா இது? இந்த இரும்புக்கை மாயாவியின் சூப்பர் ஹீரோ தோற்றத்தின் மூலமே நம்ம தமிழ் நாட்டு காமிக்ஸ் என்பது உண்மையாக இருக்கும்போது அதை எப்படி நம் வாசகர்கள் தெரிந்து கொள்ளாமல் இருக்க வேண்டும்? அதுவும் இல்லாமல் இப்போது ஆள் ஆளுக்கு முன்னோட்டம், ட்ரைலர், டீசர் என்று பல பதிவுகளை போடுகின்றனர். பல லட்சக்கணக்கான ரசிகர்களின் (அட, நிஜம் தாங்க) வேண்டுகோளுக்கிணங்க நானும் ஒரு முன்னோட்டம் பதிவு இடுகின்றேன்.

FL Teaser 2

 

தம்பிகளா, இந்த பேட்மேன், சூப்பர்மேன், வேதாளர் (ராணி காமிக்ஸ் வாசகர்களுக்கு மாயாவி), இத்யாதி, இத்யாதி சூப்பர் ஹீரோக்களுக்கு (ஆங், மறந்து விட்டேனே, நம்ம இரும்புக் கை மாயாவியும் கூட) அவர்கள் உடுத்தும் உடுப்பின் மூலம் இதோ.

 

இந்த அமெரிக்க காமிக்ஸ் எழுத்தளார்கள் எல்லாரும் பல வருடமாக சென்னை, சிவகாசி வந்து நம்ம பழைய காமிக்ஸ் புத்தகத்தை வாங்கி போறாங்க. என்ன காரணம் தெரியுமா? எல்லாம் பாழாப் போன இந்த சூப்பர் ஹீரோ டிரஸ் தான்.

 

 

 

FL Teaser 3

 

அட, ஏன், நம்ம மன்னர் பீமா கதைய கொஞ்சம் உத்து படிசீங்கன்ன அது எங்க இருந்து சுட்ட கதைன்னு உங்களுக்கு நல்ல புரியும்.

நம்ம புராணங்களை பத்தி எப்பவுமே கதை ஆரம்பத்துல ஒரு நாலு அஞ்சு பக்கத்துக்கு வழக்கமாக எழுதுவாங்க. நாம யாரு, நம்ம பவரு ஏன்னா இப்படி பல கதையையும் எழுதுவாங்க.

இந்த வேதாளர் அப்படின்னு ஒருத்தர் கதையை பாதீங்கன்ன அதுவும் இப்படி தான் இருக்கும் ஆரம்பத்துல. நீங்களே புரிந்து கொள்ளுங்கள் யார் யாரிடம் இருந்து காபி அடித்து இருப்பார்கள் என்று.

 

 

 

FL Teaser 5 FL Teaser 6

அப்படியும் சந்தேகம் இருந்தால் நம்ம நெருப்பு விரல் சி.ஐ.டி அவர்கள் கொடுத்த ரிப்போர்ட் படி யாரோ லீ பால்க் ஆமே? அவருதான் இந்த வேதாளன் கதையை எழுதுனாரம். அவரு வீட்டு பெட் ரூம்ல நம்ம புக்'கு பலது இருந்துச்சாம்.

FL Teaser 7

அப்புறம் இந்த ஆழ நெடுங்காடு, பந்தர் இன மக்கள், பெங்காலி தீவு அது இதுன்னு பல கதைகள் இருக்காம். அட, இங்க பாருடா, நம்ம்கிட்டேயும் இப்படி பல விதமான சரக்கு இருக்கில்ல.

நம்ம தீவு பேரு போடக் ஆகும். நம்ம மக்கள் மிசோ இன மக்கள். நம்ம பேரு .......... அங்க, அதைத்தான் நீங்க கண்டு பிடிக்கணும்,

FL Teaser 8 FL Teaser 9

 

 

ஆமாம் மக்களே, நான் யாரு, என்னோட பேரு என்ன அன்பதை நீங்க பின்னுட்டம் மூலமாக தெரிய படுத்தனும்.

FL Teaser 10

 

FL Teaser 10A

பின்ன என்னங்க, நாம கொஞ்ச நாள் வேலைல பிசி ஆகிட்டா (நாமளே வேலை செய்யுறது எப்பவோ தான்) அதுக்குள்ள யார் யாரோ வந்து சும்மா பதிவு எல்லாம் போட்டு கலக்குறாங்க. இந்த காமிக்ஸ் பிரியர் க.கொ.க.கு யாருன்னே தெரியல. அவரு வந்து முன்னோட்டம் எல்லாம் போடுறாரு.எந்த கதை, எந்த புத்தகம் கண்டு பிடியுங்கள் என்று கேள்வி வேற கேக்குறாரு. என்ன கொடுமை இது?

அதனால, நாங்களும் கேப்போம்ள கேள்வி என்று தான் இந்த பதிவை போட்டேன். எங்க, தில் இருந்த இது எந்த காமிக்ஸ், ஹீரோ பேரு என்ன என்பதை சொல்லுங்க பார்ப்போம்.

 

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

34 comments:

 1. super comedy. what is your profession?

  you can go and write satires like what we used to read in Mad magazines some time back.

  all the best.

  ReplyDelete
 2. ஆகா ஆகா,

  சபாஷ் சரியான போட்டி, கனவுகளின் காதலன் இதற்கு விடை தெரியாது தலையை பிறாண்டிக் கொண்டிருப்பது என் மனக் கண்ணில் தெரிகிறது.

  மாபெரும் பாத்திரமான நெருப்பு விரலின் பின், நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது நெருப்புப் பாதங்கள்.

  பங்கெடுப்பது தான் முக்கியம். சரியான விடை தருவது முக்கியமல்ல எனும் கருத்தின் பேரில் இதோ என் பதில்
  ஃபையர் லெக் அல்லது தீக்காலி.
  உற்சாகத்துடன் தொடருங்கள்.

  ReplyDelete
 3. திரு ஒலக காமிக்ஸ் ரசிகனே,

  நாந்தான் இப்போது மனம் திருந்தி சாமியாராகி விட்டேனே? என்னை ஏன் மறுபடியும் நினை படுத்துகிறீர்கள்? நான் லிங்கம் கக்குவதில் பிஸியாக இருப்பதால் பிறகு வந்து கமெண்ட் கூறுகிறேன்.

  பெண்களை கடத்திய ஆஷ்வி டேவிட் (இப்போது மனம் திருந்திய சாமியார்)

  ReplyDelete
 4. அய்யா சாமி,

  இந்த ஆஷ்வி டேவிட்'க்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இங்கு திரு ஒலக காமிக்ஸ் ரசிகனின் முன்பாக தெரிய படுத்துகிறோம். நன்றி.

  லாரன்ஸ் & டேவிட்.

  ReplyDelete
 5. Dear Greatest ever comics fan,

  kindly do not reveal "that" photo of me buying a Fire Leg comics in chennai. Please, it would destroy my image as a original creator in USA, where all the fools are believing so.

  ReplyDelete
 6. ஒலக காமிக்ஸ் ரசிகனே,

  அருமை. போட்டிக்கே போட்டியா? நீங்களும் பல மாதங்கள் கழித்து வந்து களத்தில் குதித்து விட்டீர்கள் போல் இருக்கிறதே? இந்த காமிக்ஸ்'ன் முழு கதையையும் வெளியிடுவீரா?

  கிங் விஸ்வா.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 7. நீண்ட வருடங்களுக்கு மக்கள் என்னை மறந்து இருந்தாலும் என்னை நினைவு படுத்தியதற்கு நன்றிகள் பல.

  லாட்கி வார்னர் (உலக கடத்தல் மன்னன்)

  ReplyDelete
 8. ஒலக காமிக்ஸ் ரசிகர் அன்பரே,

  உங்கள் தயவால் எங்கள் தீவிற்கு இன்று மட்டும் எட்டு கோடியே நாலு லட்சத்து ரெண்டாயிரத்து பத்து பேர் குடியுரிமை கேட்டு அப்பளை செய்து உள்ளனர். எங்கள் தீவை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்து இருந்தார் மிஜோ மக்களின் பாதுகாவலன். அந்த தலைவனின் மர்மத்தை இப்படி வெட்ட வெளிச்சமாக்கி விட்டீரே?

  சுமோ மாரியட்டா,
  போடக் தீவின் கவர்னர்

  ReplyDelete
 9. எங்கள் அண்ணன் பெண்களை கடத்தும் ஆஷ்வி டேவிட்'ஐ பிடித்து எங்களை போன்ற பல பெண்களின் நெஞ்சில் பாலை வார்த்தார். அவர் வாழ்க. இப்போது எங்களை போன்ற பெண்கள் நிம்மதியாக உலாவ முடிகிறது.

  ஏன், நேற்று கூட நான் நகைகளுடன் நாடு இரவில் எங்கள் போடக் தீவில் வலம் வந்தேன். இதற்க்கெல்லாம் எங்கள் அண்ணன்தான் காரணம்.

  ReplyDelete
 10. Am sorry people for copying you Fire Leg. All the fault is with my creator lee falk.

  Fire Leg is a true champion. heard that he is the one who Helped the indians to defeat Alexander the great.

  ReplyDelete
 11. பெண்களை கடத்தும் அஷ் வி டேவிட்டை மாயாவி வச்சு இருகாரு. டேவிட் கடத்தின பெண்களை யாரு வெச்சு இருகாங்க. சொல்லுங்கண்ணே ....

  ReplyDelete
 12. அதெப்படி நீ என்னப்பாத்து அந்த கேள்வியக் கேக்கலாம்?

  (இதை கரகாட்டக்காரன் கவுண்டர் ஸ்டைலில் படிக்கவும்)

  ReplyDelete
 13. இந்த ஆளுக்கு இருக்கு நெருப்பு காலு,
  இந்த ஆளுக்கு இருக்கு நெருப்பு காலு,
  ஆனா....
  சிம்புகிட்ட இருக்கு பெரிய வாலு.

  சூர்யா பொண்டாட்டி பேரு ஜோ,
  சூர்யா பொண்டாட்டி பேரு ஜோ,
  ஆனா....
  நம்ம நெருப்பு காலோட இன மக்கள் மிஜோ.

  ReplyDelete
 14. காமடியிலும் ஒரு முன்னோட்டமா... உலக ரசிகரும் பட்டைய கிளப்ப ஆரம்பிச்சிடீங்க போல....

  ஷங்கர் அன்பர் கூறியது போல, நெருப்பு கால் மாயாவியாக தான் இருக்கும்.... எங்கோ எதிலோ ஒரு முறை இப்படி ஒரு காமிக்ஸ் படித்ததாக நியாபகம்....

  By the way, சும்மா சொல்ல கூடாது, ஓவியரின் வண்ண திறமை, முதல் படத்திலேயே தெள்ள தெயிவாக தெரிகிறது... இதை அவர்கள் உண்மையிலேயே காப்பி அடிக்காமல் செய்து இருந்தால், இந்த தொடர் கூட அழியா புகழ் பெற்று இருக்குமே.... ஹ்ம்ம்... என்ன பண்ண நினைப்பு தன் புலப்ப கெடுக்கும்னு சும்மாவா சொன்னாங்க :)

  காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

  ReplyDelete
 15. தீக்கால் மாயாவியின் ஆயுதங்களை பற்றி சொல்லவே இல்லையே?

  அவர் கோபமடைந்தால் அவர் கால் சாக்ஸை கழற்றி எடுத்து வில்லன்களின் முகத்தில் வைப்பார். அதைவிட கொடிய தண்டனை வேறு இருக்க முடியுமா?

  அவர் தன் வாழ்நாளில் ஒரே ஒரு ஜோடி சாக்ஸ் மட்டுமே உபயோகிப்பார். மேலும் அந்த ஆயுதத்தின் சக்தி இழந்து விடாது என அதனை துவைக்கவே மாட்டார்.

  அவர் குனிந்து சாக்ஸை எடுத்தால் வில்லன்களின் கதி அதோ கதியாமே!

  இது போன்று மேலும் பல ஆயுதங்கள் அவரிடம் உள்ளன.

  ReplyDelete
 16. முத்தையா முரளிதரன்February 23, 2009 at 4:03 PM

  என்னுடைய நண்பரும் ஒரு காமிக்ஸ் பப்ளிஷர் தான். அவர் சொல்லி தான் நான் இந்த வலை தளத்திற்கு வந்து பார்த்தேன். நன்றாக உள்ளது.

  தொடருங்கள்.

  ReplyDelete
 17. சினிமா தியேட்டர்ல முறுக்கு விக்கிற பையன்February 23, 2009 at 9:44 PM

  சார்,

  நம்ம நெருப்பு கால் மாயாவி பத்தி சீக்கிரம் எழுதுங்க சார்.

  முதல்ல நெருப்பு விரல் சி.ஐ.டீ, இப்போ நெருப்பு கால் மாயாவி, அடுத்து என்ன சார்?

  நெருப்பு வால் குரங்கு சபீஷா'ஆ? அதாங்க, நம்ம கபீஷ் குரங்கோட அண்ணா?

  சினிமா தியேட்டர்ல முறுக்கு விக்கிற பையன்.

  ReplyDelete
 18. ஒலக காமிக்ஸ் ரசிகரே,

  தமிழ் நாட்டு மக்களுக்கு படிக்கும் பழக்கத்தை வளர்க்க இது போன்ற காமிக்ஸ் கதைகள் அவசியம். நம்முடைய கல்வி அமைச்சர் அவர்களிடம் இதனையும் நாட்டுடமை ஆக்குவதை பற்றி பேசி இருக்கிறேன். விரைவில் நல்ல பதிலை எதிர் பார்க்கலாம்.

  குழந்தை கவிஞர் கும்மாங்குத்து குமார்.

  ReplyDelete
 19. ஜோஸ் அய்யா,

  நீங்கள் கூறியது முற்றிலும் தவறு ஆகும். எனென்றால் திரு தீக்கால் மாயாவி அவர்கள் எங்களிடம் தான் சாக்ஸ் வாங்குவார்.

  சாக்ஸ் கம்பெனி முதலாளி சதாசிவம்.

  ReplyDelete
 20. தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.

  என்னுடைய ஆஸ்கார் வெற்றிக்கு நம்முடைய தீக்கால் மாயாவியும் ஒரு காரணம் என்பது பலருக்கு தெரியாது.

  ஆம், இந்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு இசை அமைக்கும் அன்று இரவுதான் நான் தீக்கால் மாயாவி மோதும் "நரபலி நாயகன்" என்ற கதையை படித்தேன். இந்த கதையை உலக அளவில் கொண்டு செல்ல முடிய வில்லையே என்ற எண்ணம் என்னை தூங்க விடாமல் செய்தது.

  அதனால் அன்று இரவு நான் இசை அமைத்தேன். அதனால் தான் துக்கமும் துயரமும் தழுவிய ஒரு பாடலை என்னால் அமைக்க முடிந்தது.

  ஏ. ஆர். ரஹ்மான்.

  ReplyDelete
 21. காமிக்ஸ் வலையுலக பதிவர்களே / நண்பர்களே,

  ஆர்வக்கோளாரில் நானும் ஒரு காமிக்ஸ் வலைப்பூவை ஆரம்பித்து விட்டேன். உங்களிடம் மோத எனக்கு காமிக்ஸ் அறிவும், சக்தியும் இல்லை. அதுவிம்ல்லாமல் நான் பதிவு இடப் போவது என்னவோ தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் பற்றி என்பதால் நீங்கள் அனைவரும் ஒரு முறை வந்து என்னுடைய வலைதளத்தை பார்த்து உங்கள் பொன்னான கருத்துக்களை பதிந்து செல்ல வேண்டும் என்பது என்னுடைய சிரம் தாழ்ந்த வேண்டுகோள்.

  என்னுடைய வலைப்பூ முகவரி: http://pula-sulaki.blogspot.com/2009/02/blog-post.html

  புலா சுலாகி.

  ReplyDelete
 22. Attack On the Srilankan Team:Thilan Samaraveera, Opener Panavirathana, Kumara Sangakara & Ajantha Mendis Feared to be injured. 6 Policemen also informed dead by the bomp attack.

  A shoot out occurred in Lahore close to the Gaddafi Stadium where the second Test between Pakistan and Sri Lanka is currently underway. The Sri Lankan team was reportedly in the vicinity but are safe. The third day of the Lahore Test is scheduled to begin at 10.30 am. Now that match is cancelled.

  ReplyDelete
 23. Attack On the Srilankan Team:Thilan Samaraveera, Opener Panavirathana, Kumara Sangakara & Ajantha Mendis Feared to be injured. 6 Policemen also informed dead by the bomp attack.

  A shoot out occurred in Lahore close to the Gaddafi Stadium where the second Test between Pakistan and Sri Lanka is currently underway. The Sri Lankan team was reportedly in the vicinity but are safe. The third day of the Lahore Test is scheduled to begin at 10.30 am. Now that match is cancelled.

  ReplyDelete
 24. திரு ஒலக காமிக்ஸ் ரசிகன் அவர்களே,

  தீக்கால் மாயாவியும், ரத்த வெறியன் டோமன்'உம் எங்களை சந்திப்பது எப்போது?
  இந்த டோமன் என்பது ஒரு கெட்ட வார்த்தை போல உள்ளதே? அடுத்த பதிவு எப்போது?

  இதற்கிடையில் என்னுடைய வலைப்பூவில் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) தோன்றும் தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் கதை ஆகிய அறுந்த நரம்புகள் என்ற புத்தகத்தை அப்லோட் செய்து இருக்கிறேன்.

  நேரம் கிடைக்கின் படித்து மகிழவும்.

  புலா சுலாகி.
  தமிழ் இந்திரஜால் காமிக்ஸ்.

  ReplyDelete
 25. வணக்கம்.

  நெடு நாட்களாக வீட்டு பணிச்சுமை காரணமாக பதிவுகளும், கமெண்ட்'களும் இட இயலவில்லை. மன்னிக்கவும். அதனை சரி செய்ய, சுஸ்கி-விஸ்கி மினி லயன் மூலம் அறிமுகம் ஆன அற்புத தொடர் பற்றிய திரைப்பட பதிவை இட்டு இருக்கிறேன்.

  காமிக்ஸ் பிரியன்.

  ReplyDelete
 26. லெட் த கும்மி ஸ்டார்ட்.

  --
  பூங்காவனம்,
  எப்போதும் பத்தினி.

  ReplyDelete
 27. வயக்கரா தாத்தாMarch 21, 2009 at 8:25 PM

  பேராண்டிகளா, முத்தாத நகைக்கு கோன் ஐஸ் குடுத்ததில, கிடைச்ச பகீர் செய்திய கேளுங்கப்பா.

  அகொதீக நாட்டாமை, காமிக்ஸ் மருத்துவரு, புதுசா வாங்கின டூ வீலர்ல பூங்காவனத்த ஏத்திகிட்டு ஜாலி டூர் போறாராம். பூங்காவனத்தின் வித்தைகளில மயங்கிப்போன அந்த மகாராசன் தன் கழகத்தையும், அதன் கண்மணிகளையும் க்ளீனா மறந்துட்டாராம். என்னைக் கொஞ்சம் மாத்தி
  உன் நெஞ்சில் என்னை சாத்தி
  என டூவீலர் ரிமிக்ஸ் பாட்டு தூள் பறக்குதாம்.

  இதக்கேட்டு எனக்கு நெஞ்சு வலியே வந்திருக்கும், ந்ல்ல வேளை முத்தாத நகை கோன் ஐஸை பிடிச்சிருந்ததை ரசிச்சுக்கிட்டு இருந்ததாலே தப்பிச்சேன். இந்த காத்தவ்வும், ஷங்கரு பயலும் என்ன செய்யப்போறாங்களோ தெரியலயே. நான் என் ஸ்டண்டு மாஸ்டரு விஸ்வாவப் பாக்கப் போறேன்,

  ReplyDelete
 28. கீழே விழுகிறான் வியாபாரி,
  கீழ்தர மிட்டாய் வியாபாரி.
  மோசடி மிட்டாய் விற்குமவன்
  மோசடி இனிமேல் பலிக்காது.

  என்னுடைய அடுத்த பதிவின் முன்னோட்டம் இது.

  கெஸ் செய்ய முடிகிறதா? இது காமிக்ஸ் சம்பந்தப் பட்ட பதிவு தான், சந்தேகமில்லை.

  இன்னுமொரு Clue வேண்டுமானால் கொடுக்கிறேன்:

  ஒட்டி விளையாடு கண்மணியே,
  கை தட்டி விளையாடு கண்மணியே.
  ஒட்டிடு, ஒட்டிடு சிந்தித்து ஒட்டிடு.
  சிறப்புடன் ஒட்டிடு, சீக்கிரம் ஒட்டிடு.

  செழி.

  ReplyDelete
 29. வயக்கரா தாத்தாMarch 26, 2009 at 9:59 PM

  பேராண்டி செழி, மர்ம மங்கை சில்க்கின் மல்லிகை விடியல்கள் எனும் காமிக்ஸ் என்று எண்ணுகிறேன்.தயவு செய்து நடுப் பக்கத்தை கண்டிப்பாக ஸ்கேன் செய்து வெளியிடப்பா. மனசு துடிக்குதில்லே.

  ReplyDelete
 30. காமிக்ஸ் வலையுலக நண்பர்களுக்கு என்னுடைய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  இந்த வருடம் உங்களுக்கு எல்லா நலன்களையும் வளங்களையும் கொழிக்க எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுவதோடில்லாமல், அதற்காக உழைக்கவும் முயல்வோம். உழைப்பு இல்லையேல் உயர்வில்லை. .

  புலா சுலாகி,
  கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

  ReplyDelete
 31. dey komutti thalaiya
  comics thhekalaerunda enna? verum kala irunda enna?
  udans kadaithanda namakku mukkiyam. adhai vittupottu kadai solla vandutte. (Koundamani styleil padikka)

  ReplyDelete
 32. கிசு கிசு கார்னர்-2 வலையேற்றப்பட்டுள்ளது = http://poongaavanamkaathav.blogspot.com/2009/05/2.html

  லெட் த கும்மி ஸ்டார்ட்.

  --
  பூங்காவனம்,
  எப்போதும் பத்தினி.

  ReplyDelete
 33. ada kadavule!!!
  ithanai nalay ippadi oru bookai padikkama poitene??!?!?!?!

  ReplyDelete

என்னுடைய வலைப்பூவை நீங்கள் படிக்கவில்லையெனில், படித்தவுடன் உங்களின் எண்ணங்களை தெரிவிக்கவில்லை எனில் உங்களிடம் அடிப்படையாகவே ஏதோ தவறு உள்ளது

Related Posts with Thumbnails