Wednesday, June 3, 2009

டாக்டரின் ஆவி - The Aavi of the Doctor

 

அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். நீண்ட நெடு நாட்களுக்கு முன்னே நானும் ஒரு காமிக்ஸ் வலைப் பதிவன் என்று ஒரு நிலை இருந்தது. பின்னர் பணிச்சுமையும் வேறு சில சுமைகளும் என்னை இந்த வலையுலகம் வரவிடாமல் தவிர்த்தன. இதோ, நான் வந்து விட்டேன்.

ஆனால், இது ஒரு குழப்பமான பதிவு. இந்த பதிவின் கேள்விகளுக்கு விடை ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி தான் தெரியும். அது என்ன ஜூன் ஒன்பது என்று கேள்வி கேட்கும் நபர்களுக்கு, பிடி சாபம் - உங்கள் கனவில் நமீதா முழுவதும் போர்த்திக் கொண்டு புடவை கட்டிக் கொண்டு வர.

இந்த பதிவை முன்னோட்டம் என்றும் கூறலாம், அல்லது டீசர் என்றும் கூறலாம். அல்லது பதிவு என்றும் கூறலாம், அல்லது - அட போங்கப்பா. என்ன வேணா சொல்லுங்க. இதோ பதிவு.

 

இது எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான முயற்சி ஆகும். நன்றாக இருந்தால் எனக்கு நன்றி தெரிவியுங்கள். இல்லை என்றால் இந்த பதிவை ரசிக்கும் அளவிற்கு இன்னும் ரசனையை வளர்த்துக் கொள்ளாத உங்களை நீங்களே திட்டிக் கொள்ளுங்கள். வேறென்ன சொல்ல? இந்த பதிவில் நாம் ரசிக்கப் போகும் கதை தான் அடுத்த பதிவில் முக்கியமான ஒரு விஷயத்திற்கு முன்னோடி. அதனால் விரைவில் இந்த பதிவில் நம்முடைய கதைக்கு சென்று விடுவோம்.

வாசு காமிக்ஸ் என்ற ஒரு அற்புத பொக்கிஷத்தில் ஆவது இதழாக வந்த கதை தான் டாக்டரின் ஆவி. இந்த புத்தகம் அமேசான் வலை தளத்தில் கிட்டதட்ட ஆயிரத்து நானூறு டாலர்களுக்கு ($ 1,400) சமீபத்தில் விற்கப் பட்டது என்பது குறிப்பிட தக்கது. இந்த புத்தகத்தை வாங்கிய அதிர்ஷ்டசாலி யாரோ?

Doctarin aavi 1

 

டாக்டரின் ஆவி என்றால் என்ன? ஒரு டாக்டர் செத்துப் போவார். அவருடைய ஆவி வந்து அவரை கொன்றவர்களை பழி வாங்கும் என்று அரதப் பழசாக யோசிக்காமல் இந்த கதையை சற்று கூர்ந்து படியுங்கள். இது ஒரு விஞ்சான கதை. விஞ்சானி பீட்டர் என்பவர் ஒரு பின் நவீனத்துவ முன்னோடி கருத்துக்களை கொண்ட பகுத்தறிவுவாதி. லண்டனில் இருக்கும் இவரை உலக விஞ்சானிகள் சங்கத்தில் சேர்க்க மறுத்து விடுவதால் அவர் மனம் நொந்து தன்னை பழித்த இந்த சமுதாயத்திற்கு தான் யார் என்பதை நிரூபித்துக் காட்ட தன்னைத்தானே கொல்ல முடிவு செய்கிறார்.

 

 

Doctarin aavi 2

இந்த கூடு விட்டு கூடு பாய்வதைப் போல ஒரு மனிதனின் ஆவியானது மற்றுமொரு ஆவிக்கு வெஸ்டர்ன் யூனியன் மணி ட்ரான்ஸ்பர் போல ஆவி ட்ரான்ஸ்பர் செய்துக் காட்ட முடியும் என்பது அவரது ஆராய்ச்சியின் முடிவு. அதனால் அவர் அவருடைய அந்த அற்புத கண்டுபிடிப்பான மருந்தை உட்கொண்டு இறந்து விடுகிறார். அவரது மரணத்தை அவரது ஆஸ்பத்திரியிலேயே உறுதி செய்து அவரை ஒரு மயானத்தில் புதைத்து விடுகிறார்கள்.

 

 

 

 

 

 

Doctarin aavi 3

 

அதன் பின்னர் அவரை இந்த உலகம் மறந்து விடுகிறது. தமிழ் எழுத்தாளரும் என்னுடைய நண்பருமாகிய பட்டுக் கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய ஒரு நாவலின் தலைப்பை இங்கு உபயோகப் படுத்தி அவரின் நிலையை மக்களுக்கு விளக்குகிறேன்: இனி அவன் இறந்தவன்.

 

பின்னர் டாக்டர் பீட்டர் தன்னுடைய அற்புத மருந்தின் உதவியால் தன்னுடைய ஆவியை அவரது மருத்துவமனையில் பனி புரியும் நர்ஸ் ஆன லீலா'வின் உடலில் புகச்செய்கிறார். அதன் பின்னர் நர்ஸ் லீலா டாக்டர் பீட்டர் 'இன் ஆவி புகுந்ததால் டாக்டர் பீட்டர் ஆக மாறி விடுகிறாள். ஆம், இப்போது அவள் உடலால் லீலா, சிந்தனையில் டாக்டர் பீட்டர் . இதனைத்தான் கவிச் சக்கரவர்த்தி கம்பன் ஓர் உடல் ஈருயிர் என்று கூறினாரோ?

 

Doctarin aavi 4

Doctarin aavi 5

பின்னர் லீலா டாக்டர் பீட்டர் 'ன் உடல் புதைக் கப்பட்ட மயானத்துக்கு சென்று அந்த உடலை வெளிக் கொணர்ந்து அந்த உடலுக்குள் மறுபடியும் புகுந்து கொள்கிறார் (அதாவது இப்போது பீட்டர் உடலில் பீட்டர் , லீலா உடலில் லீலா - நோ கன்பூசன்).

Doctarin aavi 6 இனிமேல் என்ன நடக்கும்?

டாக்டர் பீட்டர் இந்த சமுதாயத்தை வஞ்சம் தீர்த்துக் கொண்டாரா?

லீலாவின் நிலை என்ன? அவளை டாக்டர் பீட்டர் அடைந்தாரா?

லீலாவின் காதலன் ஜான்சன் என்ன ஆனான்?

இந்த டாக்டரின் ஆவியை எப்படி அழிப்பது?

அப்படியே அழித்தாலும், செத்துப்போன ஒருவரை கொன்றால் உங்களுக்கு சட்டப்படி தண்டனை உண்டா?

இது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தெரிய வேண்டும் என்றால் அடுத்த பதிவை படியுங்கள் - என்று சொல்வேன் என்று எதிர் பார்த்தீர்களா? அப்படி என்றால் நீங்கள் ஏமாந்து போய் விட்டீர்கள்.

 

 

 Vijayanthi IPS ஆம், இவ்வளவு விலை கொடுத்து வாங்கிய ஒரு புத்தகத்தை நான் அவ்வளவு சுலபத்தில் உங்களுக்கு அனுபவிக்க கொடுப்பதாக இல்லை. அப்போது அடுத்த பதிவில் அப்படி என்னதான் வரப் போகிறது என்று கேட்பவர்களுக்கு - தொடர்ந்து படியுங்கள்.

1990ம வருடத்ய்தில் வந்த தெலுங்கு படம் கர்த்தவ்யம். இந்தப் படத்தில் இரண்டு சிறப்பு அம்சங்கள் உண்டு. ஒன்று - இதுதான் மொக்கை படங்களில் பாடல் காட்சிகளில் மழையில் நனைந்து "திறமை" காட்டிக் கொண்டு இருந்த விஜய சாந்தியை ஒரு கட்சியின் தலைவியாக மாற்றும் அளவிற்கு ஹிட் ஆகி அவரின் தலை எழுத்தை மாற்றிய படம். இரண்டாவது சிறப்பு அம்சம் என்ன என்பதை நீங்கள் கூற வேண்டும். அப்படி கூறுபவர்களுக்கு அந்த சிறப்பு அம்சத்தை மறுபடியும் காணும் வாய்ப்பை அளிப்பேன்.

 

இந்த கர்த்தவ்யம் படம் தான் தமிழில் வைஜெயந்தி ஐ.பி.எஸ் என்ற பெயரில் வந்தது.

karthavyam 

நம்முடைய அடுத்த பதிவிற்கும் இந்த கர்த்தவ்யம் படத்திற்கும் என்ன சம்பந்தம்?

இந்த வைஜெயந்தி ஐ.பி.எஸ் படத்திற்கும் குடும்ப குத்து விளக்கு நடிகை சிநேகா அவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

இல்லை, பத்தினி தெய்வம் நடிகை நமீதா அவர்களுக்கும் நம்முடைய அடுத்த பதிவிற்கும் என்ன சம்பந்தம்?

நம்முடைய இந்த பதிவிற்கும் நம்முடைய அடுத்த பதிவிற்கும் என்ன சம்பந்தம்? (இது கொஞ்சம் ஓவர் தான்).

bhavani35

BHAVANI

NAMITHA IPS

 

 

 

 

 

 

 

 

 

தெரிந்து கொள்ள நீங்கள் ஜூன் ஒன்பதாம் தேதி, இதே வலை தளத்திற்கு வந்து விடையை காணுங்கள். அது வரைக்கும், டொட்ட டைந்க். (ஒன்று மில்லை, நம்ம ராணி காமிக்ஸ் ஹீரோ டைகர் கதையை சமீபத்தில் ஆங்கிலத்தில் படித்தேன், அதான்).

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

11 comments:

 1. அந்த படத்துல தான் விஜய சாந்தி நடிச்சாங்க. அந்த அனுபவத்த வச்சு தான் இப்போ நடிக்குறாங்க.

  ReplyDelete
 2. சிஸ்டர் சிஸ்டர் என்று அழைத்த அந்த கொடியவனை தோலுரித்து காட்டிய ஒலக காமிக்ஸ் ரசிகனுக்கு நன்றி.

  என்னுடய உடலில் புகுந்து கொடு அவன் பண்ணிய அட்டகாசங்கள் தான் என்ன என்ன? சொல்லி மாளாது போங்கள்.

  ReplyDelete
 3. எங்கள் தானைத்தலைவி நமீதா அவர்களை முதல் முதலாக காமிக்ஸ் வலையுலகில் கொண்டு வந்த ஒலக காமிக்ஸ் ரசிகனுக்கு நன்றிக பல.

  தலைவர்,
  N.D.F.

  ReplyDelete
 4. உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது? :)

  ReplyDelete
 5. i still can't undrstand anything from this.

  ReplyDelete
 6. ஒலக காமிக்ஸ் ரசிகா!

  //ஆனால், இது ஒரு குழப்பமான பதிவு//

  ஒத்துக்கிறேன். நீங்க நேர்மையானவர்தான்.

  //இந்த பதிவை முன்னோட்டம் என்றும் கூறலாம், அல்லது டீசர் என்றும் கூறலாம். அல்லது பதிவு என்றும் கூறலாம், அல்லது - அட போங்கப்பா. என்ன வேணா சொல்லுங்க. //

  பொறுமை..! பொறுமை..!
  படைக்கிற உங்களுக்கே பொறுமையில்லன்னா...
  படிக்கிற எங்களுக்கு எப்படி இருக்கும்? ... ஆனாலும் அருமை!

  //பீட்டர் என்பவர் ஒரு பின் நவீனத்துவ முன்னோடி//

  பின்னாடி வந்த நவீனத்தில் முன்னாடி-ன்னுதானே சொல்ல வாரீங்க?

  //ஆம், இப்போது அவள் உடலால் லீலா, சிந்தனையில் டாக்டர் பீட்டர் . இதனைத்தான் கவிச் சக்கரவர்த்தி கம்பன் ஓர் உடல் ஈருயிர் என்று கூறினாரோ?//

  கம்பரை ஏனெய்யா வம்புக்கு இழுக்கிறீர்? ஹார்டுவேர் - டாக்டர் பீட்டரோடது. சாப்ட்வேர் - நர்ஸ் லீலாவோடதுன்னு நவீனத்துவமா சொல்ல வேண்டியதுதானே?

  //நம்முடைய இந்த பதிவிற்கும் நம்முடைய அடுத்த பதிவிற்கும் என்ன சம்பந்தம்?//

  தேறீட்டீங்க தலைவா...

  ReplyDelete
 7. அய்யம்பாளயத்தாரே,

  //ஹார்டுவேர் - டாக்டர் பீட்டரோடது. சாப்ட்வேர் - நர்ஸ் லீலாவோடதுன்னு நவீனத்துவமா சொல்ல வேண்டியதுதானே?//

  அருமை. பின்னீட்டீங்க.

  ReplyDelete
 8. வயகரா மாமாJune 5, 2009 at 12:14 AM

  தானைத்தலைவீ நமிதா அவர்களின் அந்த இரண்டு, உருண்டு, திரண்ட, பெருத்த, கொழு கொழு என்று இருக்கும் ......................... கண்களை காணக் கண் கோடி வேண்டும்.

  ReplyDelete
 9. ஒலக காமிக்ஸ் ரசிகரே, சிறிய இடைவெளி ஒன்றின் பின் உங்களை புதிய பதிவின் மூலம் சந்திப்பது மகிழ்ச்சி தருகிறது.

  நான் கள்ள வோட்டுப் போட்டும் ஆவிகளுடன் மாயாவி கதையை டாக்டரின் ஆவி கதை பீட் பண்ணியது எனக்கு வருத்தத்தை தந்தாலும், இப்படி ஒர் பின், முன் நவீனத்துவ ஆவி கூடு பாயும் கதை ஒர் மாணிக்கம் என்பதை உணர்கிறேன்.

  நர்ஸ் லீலாவின் உடலினுள் ஆவி புகும் காட்சிகளை வர்ணிக்காது விட்ட ஒலக காமிக்ஸ் ரசிகனை ஜே.கே ரித்திஷின் ஆவி கூடு விட்டு பாய்ந்து அலம்பல் செய்ய வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  நர்ஸ் லீலா, எல்லா டாக்டர்களும் மோசமானவர்கள் அல்ல, உங்கள் வேதனையை ஏன் நீங்கள் டாக்டர் 7 உடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது, நிச்சயமாக அவர் உங்கள் வாழ்வில் குத்து விளக்கை ஏற்றி வைப்பார்.

  மதிப்பிற்குரிய நண்பர் அ.வெ அவர்களின் ஹார்ட்வேர், ஸாஃப்ட்வேர் உவமை கம்பனை மிஞ்சி விட்டது என்றால் அது மிகையாகாது.

  குடும்ப குத்து விளக்கு சினேகா, அக்மார்க் பத்தினித் தெய்வம் நமீதா, பொதுக் கிணறு விஜய சாந்தி போன்ற பாட்டிகளிற்கும் ஜூன் 9 க்கும் என்ன சம்பந்தம் என்று அறிய ஆவலாக உள்ளேன்.

  வயகரா மாமா நீங்கள் போய் ஒர் கண் டாக்டரை பார்ப்பது நல்லது.

  பி.கு.-1- நமீதாவின் அந்தப் படம் பெரிதாகவில்லை என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  2- நமீதா கையில் துப்பாக்கி பிடித்திருக்கும் ச்டைலே தனி ராஜா.

  ReplyDelete
 10. தோழர்,

  நல்ல முன்னோட்ட பதிவு. அதிலும் அந்த சினிமா படங்களும் அதனை சார்ந்த சங்கதியும் சிறப்பாக இருந்தன. நான் அடுத்த பதிவை படித்து விட்டு இந்த பதிவுக்கு வந்ததால் எனக்கு சுலபமாக இருக்கிறது

  ReplyDelete
 11. // இரண்டாவது சிறப்பு அம்சம் என்ன என்பதை நீங்கள் கூற வேண்டும். அப்படி கூறுபவர்களுக்கு அந்த சிறப்பு அம்சத்தை மறுபடியும் காணும் வாய்ப்பை அளிப்பேன்//

  2nd important thing - meena's gang rape.

  here is the link:http://69.41.167.131/masalaboard/showthread.php?t=203067&page=466

  ReplyDelete

என்னுடைய வலைப்பூவை நீங்கள் படிக்கவில்லையெனில், படித்தவுடன் உங்களின் எண்ணங்களை தெரிவிக்கவில்லை எனில் உங்களிடம் அடிப்படையாகவே ஏதோ தவறு உள்ளது

Related Posts with Thumbnails