Tuesday, October 6, 2009

காமிக்ஸ் வேட்டைக்காரன் – ஐயாம் தி பேக்

அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். நீண்ட நெடு நாட்களுக்கு முன்னே நானும் ஒரு காமிக்ஸ் வலைப் பதிவன் என்று ஒரு நிலை இருந்தது. பின்னர் பணிச்சுமையும் வேறு சில சுமைகளும் என்னை இந்த வலையுலகம் வரவிடாமல் தவிர்த்தன. இதோ, நான் வந்து விட்டேன்.

காமிக்ஸ் டாக்டர் வேட்டைக்காரன் என்று ஒரு மொக்கை பதிவை வெளியிட்டு அது பாப்புலரும் ஆகி, ஹிட்ஸ்களை குவித்து விட்டார். ஆனால் உண்மையான காமிக்ஸ் வேட்டைக்காரன் நான் தான் என்பதை இந்த பதிவு உணர்த்தும்.

பதிவிற்கு செல்லும் முன் பழைய புத்தக சந்தை குறித்து தமிழ் காமிக்ஸ் வலையுலக பீஷ்ம பிதாமகர் முத்து விசிறி எழுதிய இந்த பதிவையும், இந்த பதிவையும் படித்து விட்டு வரவும்.

சமீபத்தில் நான் வாங்கியுள்ள  ஒரு அரிய புத்தகத்தின் புகைப்படங்கள் இவை. தமிழ் காமிக்ஸ் வேட்டையர்களின் HOLY GRAIL ஆன லயன் தீபாவளி சூப்பர் ஸ்பெஷல் தான் இது.

காமிக்ஸ் சந்தையில் மினிமம் ரூ:1500/-க்கு விற்கப்படும் இதை நான் வாங்கிய விலை என்ன தெரியுமா? வெறும் ரூ:20/-

என்ன, ஆச்சரியமா இருக்கா? நான் இதை வாங்கியது ஒரு பழைய புத்தக கடையில். அதுவும் c2c (காமிக்ஸ் வேட்டையர்கள் மொழியில் - அட்டை TO அட்டை, முழுமையாக, எந்த வித சேதாரமும் இல்லாமல் அற்புதமான பராமரிப்பு நிலையில்).

இதே போல் பழைய புத்தக கடைகளில் புத்தகங்களை ஐந்துக்கும், பத்துக்கும் வாங்கி விட்டு பின்னர் மனசாட்சியே இல்லாமல் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் (அட்டை இல்லாமல்… முதல் மற்றும் கடைசி 10 பக்கங்கள் இல்லாமல்…) அதை ஆயிரத்திற்கும், இரண்டாயிரத்திற்கும் விற்கும் சில முதலைகளை மக்கள் தயவு செய்து நம்பி ஏமாற வேண்டாம் என்பதற்காகவே இந்த பதிவு.

நமது அபிமான லயன் காமிக்ஸ் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் பழைய காமிக்ஸ் புழக்கத்திற்காக தொடங்கிய புக் மார்கெட் பகுதி தோல்வியடைந்ததற்கு இந்த முதலைகளே காரணம்.

சில புத்திசாலி பைத்தியங்கள் ஸ்கேன் செய்த CDகளுக்கும், ஜெராக்ஸ் போட்ட ராணி காமிக்ஸுக்கும் ஒரு புத்தகத்துக்கு ரூ:100/- கொடுத்து வாங்கியதாக தகவல். இது குறித்து லயன் காமிக்ஸ் ஆசிரியரே ஒரு முறை ஹாட்-லைனில் எழுதியுள்ளார்.

இதில் கொடுமை என்னவென்றால் ராணி காமிக்ஸ் (அது முதலாவது இதழாகவே இருந்தாலும்) அதிகபட்சம் ரூ:5/-க்கு மேல் போகாது என்பது பழைய புத்தக கடையில் புத்தகம் வாங்கிய எந்த ஒரு காமிக்ஸ் வேட்டையரும் அறிந்ததே.

பழைய புத்தகங்களுக்கு விலை நிர்ணயம் செய்வது அதை வாங்குவோரின் மனநிலை பொறுத்தது. தனக்கு தேவை படும் ஒரு புத்தகம் தனக்கு நியாயமானதாக தோன்றும் ஒரு விலை கொடுத்து அவர் வாங்குவதில் தவறொன்றும் இல்லை என வாதிடுவோர்கள் இருக்கலாம்.

ஆனால் நாம் கொடுக்கும் விலைக்கான சரக்கு உள்ளதா என்று பார்க்க வேண்டும். அதே போல் ஒருவர் வாங்கியதை வைத்து மற்ற புத்தகங்களும் அதே அல்லது அதை விட உயர்ந்த விலைக்கு, புத்தகம் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும், விற்பது பஞ்சமாபாதகம் என்பது என் கருத்து.

இது குறித்து முத்து விசிறி இட்டுள்ள பதிவுகளை படிக்க கீழே உள்ள சுட்டிகளை பயன்படுத்தவும்.

IMG_0051IMG_0053

இந்த புத்தகம் மட்டுமல்ல, கிடைக்கவே கிடைக்காது என்று இந்த காமிக்ஸ் வியாபார முதலைகள் சத்தியம் செய்யும் பல புத்தகங்கள் அதிர்ஷ்டம் இருந்தால் நிச்சயம் கிடைக்கும்.

கீழ்காணும் படம் நான் கடந்த இரண்டு வருடங்களில் சேகரித்த புத்தகங்கள். இதில் c2c புத்தகங்கள் மட்டுமே உள்ளன. இவை தவிர அட்டை இல்லாத பல புத்தகங்களை இந்த கால கட்டத்தில் நான் சேகரித்துள்ளேன். ஒரு புத்தகத்தின் அதிக பட்ச விலை ரூ:10/- மட்டுமே.

IMG_0056

இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளும் பாடம் என்னவென்றால் விடா முயற்சியுடன் பொறுமையும் காத்தால், சரியான வழியில் நேர்மையாக முயன்றால் நம்மால் குறைந்த விலையில் நிறைந்த காமிக்ஸ் இன்பம் (சிற்றின்பம், பேரின்பம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது) காண முடியும் என்பதே.

பி.கு. :

  1. தயவு செய்து யாரும் இந்த காமிக்ஸ்களை விலைக்கோ, இனாமாகவோ, அன்பளிப்பாகவோ, எக்ஸ்சேஞ்சுக்கோ கேட்டு பின்னூட்டங்களோ, மின்னஞ்சலோ அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்ள படுகிறார்கள்.
  2. இந்த பதிவு வழக்கத்திற்கு மாறாக ரொம்ப சீரியஸாக இருப்பதை கண்டு நீங்கள் மனம் நொந்திருக்கலாம். ஆனால் சமூக நலன் கருதி இந்த பதிவை வெளியிட வேண்டியதாகிறது. அடுத்த பதிவில் பேக் டு ஃபார்ம் வந்து விடுகிறேன். ஒகே? டண்.
  3. அதே போல் வழக்கமாக நான் செய்யும் எழுத்து பிழைகளும் இந்த பதிவில் காணாமல் போயிருப்பதை கண்டு நீங்கள் அப்படியே ஷாக் ஆகியிருக்கலாம். GOOGLE TRANSLITERATOR-னால் வந்த வினை அது. இப்போ நான் NHM WRITER-க்கு மாறிட்டேன். அப்போ நீங்க?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன், 
ஒலக காமிக்ஸ் ரசிகன்

-- If You Haven't Read this, There is Something Fundamentally Wrong With You.

Thanks in Advance.

Editor, Greatest Ever Comics.

Hell is for Heroes.

18 comments:

  1. நண்பரே,

    நீங்கள் திரும்பியது மிக்க மகிழ்ச்சி. அடுத்த பதிவில் தயவு செய்து உங்கள் வழமையான பாணிக்கு திரும்பிடுங்கள்.

    20ரூபாவிற்கு காமிக்ஸ் வாங்கிய தகவலை வெளியிட்டு எங்கள் மனங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டீர்கள். அந்தக் கடைக்காரர் கடவுளிற்கு சமம்.

    சிற்றின்பம்!!!! பேரின்பம்!!! இது எல்லாம் எங்கே கிடைக்கும். 20 ரூக்கு கிடைக்குமா. அல்லது பொறுமை காக்க வேண்டுமா.

    ஒற்றன் வெள்ளை நரி எனக்கு மிகவும் பிடித்தமான கதை நண்பரே.

    வருக வருக எமக்கு ஒலக காமிக்ஸ் இன்பம் தருக.

    ReplyDelete
  2. //சில புத்திசாலி பைத்தியங்கள் ஸ்கேன் செய்த CDகளுக்கும், ஜெராக்ஸ் போட்ட ராணி காமிக்ஸுக்கும் ஒரு புத்தகத்துக்கு ரூ:100/- கொடுத்து வாங்கியதாக தகவல்//

    நல்ல தொழிலாக இருக்கும் போல இருக்கே..,

    ReplyDelete
  3. ஒலக காமிக்ஸ் ரசிகர் திரும்பி வந்தது மகிழ்வை தருகிறது.

    தொடருங்கள். உங்களின் பதிவுகள் தனி ரகம்.

    ReplyDelete
  4. ரசிகரே,

    அந்த புத்தகங்களில் தொகுப்பில் அட்டைப் படங்கள் முழுமையாக தெரியவில்லை. அதனை சரி செய்ய இயலுமா?

    இத்தனை புத்தகங்கள் வாங்கியதே பெரிய விஷயம். அதுவும் இந்த விலையில். நான் கூட திரிச்சியை சேர்ந்த ஒருவரிடம் ருபாய் ஐந்நூறு விலையில் சராசரியாக புத்தகத்தை வாங்கிக் கொண்டு இருந்தேன். இப்போது நிறுத்தி விட்டேன்.

    ReplyDelete
  5. great to have you back.

    hopefully you will continue to enthrall all of us with your unique way of posting.

    all the best.

    ReplyDelete
  6. the ultimate comis post that i have read so far is your 1st ever post. that guy visha oosi vengappa and the hero - both were fabulous.

    ReplyDelete
  7. //இந்த பதிவு வழக்கத்திற்கு மாறாக ரொம்ப சீரியஸாக இருப்பதை கண்டு நீங்கள் மனம் நொந்திருக்கலாம். ஆனால் சமூக நலன் கருதி இந்த பதிவை வெளியிட வேண்டியதாகிறது. அடுத்த பதிவில் பேக் டு ஃபார்ம் வந்து விடுகிறேன். ஒகே?//

    தயவு செய்து வழக்கமான பாணிக்கு வாருங்கள். இப்படிப் பட்ட பதிவுகள் இட ஆயிரம் பேர் இருப்பார்கள். ஆனால் உங்களைப் போல பதிவிட யாருமே இல்லை.

    ReplyDelete
  8. நண்பரே உங்களை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. பழைய புத்தக கடைகளில் ஒரு ஜாக்பாட்டே அடித்து இருக்கிறீகள்.
    கிடைப்ப்தற்க்கு அறிய பொருட்கள் அனைத்துமே இது போன்று கூடுதல் விலை வைத்து விற்கப்படுவது வழக்கமே. அறிய நாணயங்கள், தபால்தலைகள் போன்றவை உதாரணங்கள். வாங்குவது என்பது அவர்அவருடைய விருப்பத்தையும் பாக்கெட்டையும் பொருத்தது என்பது என் கருத்து.
    இதனால் ஏற்படும் இழப்பு சாதாரண வாசகர்கள் அனுக முடியாத உயரத்தில் புத்தகங்களின் விலை இருப்பது தான். இதற்க்கான தீர்வு அதிக அளவில் மறுபதிப்புகளை வெளியிடுவதும், ரெகுலராக புது புத்தகங்கள் வருவதும் தான் என நான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  9. ஒலக காமிக்ஸ் ரசிகரே,
    இவ்வளவு நாளாக எங்கே போயிருந்தீர்கள்? நான் உங்களுக்கு மெயில் அனுப்பியும் நீங்கள் பதில் அனுப்பவில்லை . நீங்கள் திரும்பியது மிகவும் மகிழ்ச்சி . 20 விலைக்கு வாங்கினேன் என கூறி பொறாமை பட வைத்து விட்டீர்கள் . நான் என்ன தான் தேடினாலும் எனக்கு ஒரு புத்தகம் கூட கிடைக்க மாட்டேன் என்கிறது .

    siv அவர்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் . நடிகர் ,நடிகைகள் உபயோகித்த ஆடைகளை சிலர் பல கோடி கொடுத்து வாங்குகிறார்கள் . அதற்க்கு இது எவ்வளவோ மேல் அல்லவா . நமக்கு பிடித்த அரிய புத்தகங்களை விலை கொடுத்து வாங்கலாம் . ஆனால் இதை பயன்படுத்தி கொண்டு சிலர் மேலும் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர் . நீங்கள் கூறியது போல் விலை கொஞ்சம் நியாயமானதாக இருக்கும் பட்சத்தில் நானும் புத்தகங்களை வாங்கவே செய்வேன் . என்னிடம் பழைய லயன் காமிக்ஸ் எதுவுமே இல்லை . இதற்கு தீர்வு மறுபதிப்பு செய்வதே ஆகும் நண்பரே !

    மறுபதிப்பு வரவில்லை எனில் லயன் காமிக்ஸ் தீவிர ஒலக ரசிகர்கள் அனைவருமே விலைக்கோ, இனாமாகவோ, அன்பளிப்பாகவோ, எக்ஸ்சேஞ்சுக்கோ தராமல் போற்றி பாதுகாக்கும் போது அத்தகைய மதிப்புடைய புத்தகங்களை எப்படியாவது நாமும் வாங்கி படித்து விட வேண்டும் என என்னும் என்னை போன்ற பல காமிக்ஸ் பொக்கிசங்களை படிக்காமல் தவற விட்டவர்கள் வேறு என்ன செய்வது அன்பரே ? கைக்கு கிடைக்கும் போது வாங்க தானே தோன்றும் நண்பரே ?

    அன்புடன் ,
    லக்கி லிமட் - காமிக்ஸ் உலவல்

    ReplyDelete
  10. அருமை. நல்ல பதிவு. நல்ல கருத்து.

    ஆனாலும் ஒரு பொருளை வாங்க வேண்டியே ஆக வேண்டிய ஒரு நிர்பந்தம் வரும்போது இந்த பொறுமை காணாமல் போய் விடுகிறது. என்ன செய்ய?

    ஆகையால், ஒவ்வொருவருக்கும் ஒரு நியதி உண்டு. அண்ணல் எல்லாரும் சேர்ந்து ஒரு புத்தகத்தின் விலை ஆயிரம் என்று ஏற்றாமல் இருந்தால் சரி தான்.

    ReplyDelete
  11. //நமது அபிமான லயன் காமிக்ஸ் ஆசிரியர் திரு.S.விஜயன் அவர்கள் பழைய காமிக்ஸ் புழக்கத்திற்காக தொடங்கிய புக் மார்கெட் பகுதி தோல்வியடைந்ததற்கு இந்த முதலைகளே காரணம்.//

    முற்றிலும் உண்மை. மறுக்க இயலாத உண்மை.

    ஆசிரியரே நமக்கு உதவ முயற்சி செய்த போது சிலரின் தகாத செயல்களால் இது நின்று விட்டது.

    ReplyDelete
  12. ரீபிரிண்ட் செய்ய கோரும் நண்பர்கள் ஒரு விடயத்தை நன்றாக யோசிக்க வேண்டும். இப்போதெல்லாம் ரீபிரிண்ட் செய்ய புதிதாக ஒரு தொகை செலுத்த வேண்டி உள்ளது. அந்த தொகை புதிய புத்தகத்தின் ராயல்டி தொகையை விட அதிகம்.

    ReplyDelete
  13. வாவ்...ரொம்ப அதிர்ஷ்டசாலிங்க நீங்க..இதுக்கு நான் தேடாத இடமில்லைங்க :(... எந்த கடை, எந்த ஊரு, எந்த நாடு (எப்படியும் இந்த பதிவ படிச்சுட்டு அங்க போனா ஒரு பெரிய கியூ நிக்கும்) சொல்லுங்க..

    இருங்க முழு பதிவையும் படிச்சுடறேன்.. அட்டை படத்த பார்த்த சந்தோஷத்துல பின்னூட்டமிட ஆரம்பிச்சுடேன்... :)

    ReplyDelete
  14. எனக்கு அடிக்கடி வரும் ஒரே கனவு பழைய லயன் காமிக்ஸ் வாங்குவது போலத் தான்.

    நீங்கள் சொன்ன மாதிரி நானும் கொஞ்சம் ரூபாய் செலவு செய்து ஸ்கேன் காப்பி வாங்கினேன் :((.

    ஒருவரிடம் இந்த புத்தகமிருக்கிறது எனத் தெரிந்து விசாரித்த போது அவர் சொன்ன தொகை 3000.

    ReplyDelete
  15. அருமை. அப்படியே அது எந்த புத்தகக் கடை என்று எனக்கு மட்டும் தனிமடலில் சொல்லவும் :-)

    ReplyDelete
  16. damaal..dumeel...padaar...sath...booom....
    ha haa payappadaatheergal.idhellaam ennai kavarntha comics satthankal..
    tamil comics rasigarkal anaivarum vazhga valamudan..
    TEX WILLER

    ReplyDelete

என்னுடைய வலைப்பூவை நீங்கள் படிக்கவில்லையெனில், படித்தவுடன் உங்களின் எண்ணங்களை தெரிவிக்கவில்லை எனில் உங்களிடம் அடிப்படையாகவே ஏதோ தவறு உள்ளது

Related Posts with Thumbnails