Tuesday, June 9, 2009

ராணி காமிக்ஸ் - மாடஸ்தி - இளவரசியை தேடி

//பதினைந்து நாட்களுக்கு முன்னால் எனது அலைபேசியில் CELEBRATE-969 என்ற தகவல் குறுஞ்செய்தியாக அ.கொ.தீ.கவின் பிராந்திய தலைமையகத்திலிருந்து வந்தது. நமக்கு ஃபிளைட் 731, ஃபார்முலா X13, 007, 009, 001 ஏன் A-Z கூட தெரியும். CELEBRATE-969 என்றால் ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் நண்பர் விஸ்வா சொன்னார் 969 என்பது 2009ம் வருடம் ஜுன் மாதம் 9 ம் தேதியை குறிக்கும் என்றும், அன்றுதான் (அதாவது இன்றுதான்!) தன்னிகரில்லா தானைத்தலைவரும், நடமாடும் காமிக்ஸ் களஞ்சியமும், அ.கொ.தீ.காவின் நிறுவன மற்றும் நிறுவிய நிர்வாகத் தலைவருமான டாக்டர் செவனின் பிறந்த நாள் என்று! மேற்படி விவரப்படி தலைவரின் பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு தமிழ் கூறும் நல்லுகத்திற்கு இந்த பதிவை அர்ப்பணிக்கிறேன்!// என்று பதிவை ஆரம்பிக்க எனக்கும் ஆசையாகத்தான் உள்ளது. ஆனால், என்ன செய்வது? எனக்கு எந்த தகவலும் வர வில்லை. அதனால் தான் இந்த பில்ட் அப ஆரம்பம். சரி, சரி - போதும் என்று நீங்கள் சொல்வதற்கு முன்பு தானைத்தலைவர் டாக்டர் செவனின் பிறந்த நாள் பரிசாக அவர் நீண்ட நாட்களாக இரண்டு கண்களும் வைத்து இருந்த மாடஸ்டி பிளெய்சி பற்றிய ஒரு பதிவு இடலாம் என்று நினைத்தேன். ஆனால், நமது வலைப்பூ விதிகளுக்கு மாறாக பதிவிடும் எண்ணம் இல்லாததால் அதற்க்கு பதிலாக லேடி ஜேம்ஸ் பாண்ட் மாடஸ்தி (வித்தியாசத்தை கவனியுங்கள்) பற்றிய இந்த பதிவை இடுகிறேன்.

தமிழ் காமிக்ஸ் உலகில் முத்து, மாலைமதி, லயன் குழும காமிக்ஸ் இதழ்கள், பாலகன், மற்றும் முல்லை தங்கராசன் பணியாற்றிய அசோக் மேத்தா காமிக்ஸ், மாயாவி காமிக்ஸ் தவிர மற்ற இதழ்களில் மொழி நடை மிகவும் சிறப்பானதாக இல்லை என்பது உலகறிந்த உண்மை. இந்த வரிசையில் ராணி காமிக்ஸ் இல்லாதது குறித்து சிலர் கேள்வி கேட்கலாம்.

ஆனால், ஆரம்ப முதலே ராணி காமிக்ஸ் (ராமஜெயம் இருந்த போதும் சரி - சென்று விட்ட போதும் சரி) இந்த வரிசையில் இடம் பெற இயலாது என்பதை காமிக்ஸ் ஆர்வலர்கள் கூறுவர். ஆரம்ப கால ராணி காமிக்ஸ் கதைகளில் (ராமஜெயம் இருந்த போது) கதையின் தரம் மட்டுமே அதனை உயர்த்திக் காட்டியது. மொழ்கியாக்கம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. சில குறிப்பிட்ட கதைகளில் கதையின் சிறப்பை மொழியாக்கம் தடுத்து விட்டதையும் நண்பர்கள் அறிவார்கள். ராமஜெயம் சென்ற பிறகு? சொல்லவே வேண்டாம். குப்பை என்ற வார்த்தைக்கு விடை அந்த மொழியாக்கங்களும் அதில் வந்த கதைகளும் தான். என்னடா, இவ்வளவு வெறுப்பாக எழுதுகிறானே என்று நினைக்க வேண்டாம். காமிக்ஸ் கதைகளில் நான் படித்தவைகளில் மிகவும் சிறந்த ஒன்றாக நான் கருதுவது மாடஸ்டி வரிசைகளை தான். அதிலும் குறிப்பாக மாடச்டிக்கும் கார்வினுக்கும் இருக்கும் அந்த உறவை மிகவும் நுணுக்கமாக கையாண்டு இருப்பார்கள் (எக்ஸ் பைல்ஸ் வெற்றி பெற்றதற்கு காரணமும் அதில் வரும் டேனா ஸ்கல்லி மற்றும் பாக்ஸ் மோல்டர் இடையே இருக்கும் உறவே ஆகும் - திரைப் படத்தில் சொதப்பி இருப்பார்கள் - அது வேறு விஷயம்).

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi Cover

ஆனால் ராணி காமிக்ஸ் இதழில் முதன் முதலாக மாடஸ்டி கதை வருவதாக விளம்பரம் வந்த போது என்னுடைய நண்பன் மால்டா மகேஷ் (இப்போது கோயம்புத்தூரில் இருக்கிறான் - சமீபத்தில் பயங்கரவாதி டாக்டர் செவன் அவனை சந்தித்ததாக கேள்வி) மிகவும் சந்தோஷப் பட்டான்.

Rani Comics Lion Editorial ஆனால், அந்த கதை (பெண் சி.ஐ.டி) வந்த போது மனம் நொந்து பொய் காமிக்ஸ் படிப்பதையே தற்காலிகமாக விட்டு விட்டான். எனென்றால் அதில் வில்லி கார்வின் மாடச்டியின் காதலனாம், மாடஸ்டி என்ற பெயர் மாடஸ்தி என்று மாற்றப் பட்டதோடில்லாமல் அவள் ஒரு அரசாங்க உளவாளி என்றும் கதையை மாற்றி கொன்று இருப்பார்கள். (கதையையும், கதாபாத்திரத்தையும்).

சரி, இதனைக் கூட சில பல வாசகர்கக் சகித்துக் கொண்டு இருக்கலாம். ஆனால், திடிரென்று ஒரு நாள் இந்த பதிவு சம்பந்தப் பட்ட புத்தகம் வந்தது. வழக்கமாக மற்ற காமிக்ஸ் இதழ்களை கண்டுக் கொள்ளாத விஜயன் சார் கூட இதனைப் பற்றி அவருடைய ஹாட் லயனில் எழுதி இருப்பார். இளவரசியை தேடி என்று ஏப்ரல் பூல் ஆக வந்த இந்த கதையை பற்றி வாசகர்கள் யாரும் தயவு செய்து திரு பீட்டர் ஒ டோன்னல் இடம் கூறி விடாதீர்கள். பாவம், இந்த வயதான காலத்தில் இதனைப் போன்ற அதிர்ச்சியை தாங்கும் மனோவலிமை அவருக்கு கண்டிப்பாக இருக்காது. தயவு செய்து இதனை யாரும் டிரான்ஸ்லேட் செய்து ஆங்கிலத்தில் போட்டு விடாதீர்கள்.

கதை (அப்படி ஒன்று இருந்தால் சரி) எப்படி ஆரம்பிக்கிறது என்றால் - மாடஸ்தி ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கும் போது அவளுக்கு போலீஸ கமிஷனர் இடமிருந்து ஒரு கால் வருகிறது. உடனே மாடஸ்தி தன்னுடைய போலீஸ உடையை அணிந்து கொண்டு கமிஷனர் அலுவலகம் செல்கிறாள்.

ஓஒ, ஒரு புயல் ஒன்று புறப் பட்டதே,

ஓஓ, ஒரு பெண் சிங்கம் கிளம்பி விட்டதே,

ஓஓ, தர்ம யுத்தம் ஒன்று ஆரம்பம் ஆகி விட்டதே. ஏ ஏ ஏ

என்று எனக்கு தெரிந்த கொலை வெறி கவிஞர் ஒருவர் கவிதை வேறு எனக்கு எழுதி அனுப்பினார்.

பின் குறிப்பு: மாடஸ்தி தொலைக் காட்சியில் பார்த்துக் கொண்டு இருந்தது இந்திய புருஸ் லீ தனுஷ் நடித்த ஆக்ஷன் படத்தை என்று செக்கொஸ்லொவக்கியாவில் இருந்து செங்கமலம் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 1

இந்த கொடுமையை சற்று பாருங்கள் ஐயா. மொராக்கோ போலிசால் எதுவும் செய்ய முடியவில்லையாம். அவர்கள் சர்வதேச போலி உதவியை நாடுகிறார்கள். இதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், சர்வதேச போலீஸ இந்தியாவை சார்ந்த உளவுத்துறையை அணுகாமல் போலீஸ கமிஷனர் அவர்களை அணுகி அவரும் மாடச்தியை அழைப்பது தான் கொடுமை.

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 2

இப்போது பிளாஷ் பேக்கில் மொராக்கோ இளவரசி எப்படி கடத்தப் பட்டர் என்பதை போலீஸ கமிஷனர் மாடச்திக்கு விளக்குகிறார். அதாவது மொராக்கோ இளவரசி அழகிப் போட்டியை காண போகிறாராம். அங்கே ஒரு கார் வந்து மொதுகிரதாம். உடனே காரில் இருந்து செக்கியுரிட்டி இறங்கி போய் விசாரிக்கிறாராம். இதை விட காமெடி வேறெங்காவது கேள்விப் பட்டு இருக்கிறீர்களா?

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 3

உடனே மாடஸ்தி போலீஸ கமிஷனர் இடம் உத்தரவு பெற்றுக் கொண்டு பாரிசு கிளம்பி செல்கிறாள். அங்கே அவளை பாரிசு விமான நிலையத்தில் வரவேற்கின்றனர். அதற்காக ஒரு பைக்கை விமான நிலையத்தின் உள்ளேயே ஒட்டி வந்து இறங்காமல் வெயிட் செய்துக் கொண்டு இருக்கும் அந்த பாரிசு போலீஸ காரர்களை என்னவென்று சொல்வது?

சில பட்ஜெட் படங்களில் வெளிநாட்டுக்கு போவதை காட்ட விமானம் ஒன்று பறப்பது போன்ற காட்சியை அமைத்து இருப்பார்கள். ஆனால், காமிக்ஸ் கதைகளில் அந்த தேவை இல்லை. இருந்தாலும் மாடஸ்தி விமானத்தில் தான் வந்து இறங்கினால் என்பதை காட்ட அந்த விமானம் அங்கேயே இருப்பதை காணுங்கள். அதைப் போலவே விமான நிலையத்தின் உள்ளேயே பைக்கை ஒட்டிக் கொண்டு வரும் அந்த பாரிசு போலீஸ்காரர் பெயர் என்ன வயகரா மாமாவா?

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 4

இப்போது மாடஸ்தி காரில் ஏறப் போகிறாள். அங்கு அவளை வரவேற்க பாரிசு போலீஸ துறையை சார்ந்த ஒரு பெண் அதிகாரி போலீஸ உடையில் வந்து காத்து இருப்பதை பாருங்கள். பின்னர் மாடஸ்தி காரில் ஏறியதும் அந்த காரில் இன்னுமொரு ஆள் பின் சீட்டில் இருக்கிறான். பிறகு கார் வேகமாக போகிறது. என்ன நடக்கிறது இங்கே?

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 5

கைப் பையை கொடுப்பதைப் போல மாடச்தியின் அதிரடி அட்டகாசத்தை பாருங்கள். அடி வாங்குபவன் முகத்தில் தான் எத்தனை எத்தனை உணர்ச்சிகள்? ஒரு முன்னுறு டாலர்கள் கிடைக்கிறது என்பதற்காக இந்த கடத்தல் தொழிலுக்கு வந்ததையே, மாடச்தியிடம் அடி வாங்கியதால் வெறுப்பவன் போல அல்லவா இருக்கிறது அந்த ரியாக்ஷன்? அந்த உணர்ச்சி குழம்பை கவனியுங்கள்.

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 6

அடுத்து அங்கே வேறென்ன நடக்கும்? மாடச்தியின் அதிரடி சரவெடி தான். கச்சேரி கலை கட்டும்போது அந்த மர்ம எதிரி தப்பி ஓடி விடுகிறான். பின்னர் பாரிசு தலைமை போலீஸ அதிகாரியை மாடஸ்தி சந்திக்கிறாள். அங்கும் இருக்கும் அந்த பெண் போலீஸ அதிகாரி கறுப்புக் கண்ணாடி அணிந்து இருப்பதை கவனியுங்கள். அதிகாரி கூறுவதை சற்று கேளுங்கள்- சர்வதேச சதிகாரர்கள் என்பதால் எல்லா நாடுகளிலும் ஆட்கள் இருப்பார்கள்.

அது சரி - உங்கள் நாட்டில் இருக்கிறார்களே அதற்க்கு என்ன செய்யப் போகிறார் இந்த பாரிசு உயர் போலீஸ அதிகாரி? இந்த போலீஸ அதிகாரியை குறை கூறி ஒன்றும் ஆகப் போவது இல்லை. ஏனென்றால் இந்த பாரிசு உயர் போலீஸ அதிகாரி தான் கார்லா புருனியின் ஒன்று விட்ட மச்சினிச்சியின் மூன்றாவது மருமகனின் இரண்டாவது சகோதரன்.

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 7

அடுத்து என்ன ஒரு புத்திசாலித்தனம் என்று நீங்கள் வியந்து போகும் அளவில் சில சிந்தனைகளை செய்து விட்டு மாடஸ்தி குளிக்கப் போகிறாள். இங்குதான் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த "காட்சிகள்" வரும். வயகரா மாமா, விசிலடிக்காமல் கவனியுங்கள். மாடஸ்தி குளிக்கும்போது கூட யோசித்துக் கொண்டே தான் குளிப்பாள் என்பதை காட்டவே இந்த படங்கள். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை. அந்த சைட் ஆங்கிள் போஸ் நன்றாக இருந்தது என்று ஒரு பாண்டி மைனர் மின் அஞ்சல் அனுப்பி உள்ளார்.

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 8

மாடச்தியின் அறைக்குள் கள்ளச் சாவி போட்டுக் கொண்டு நுழையும் அந்த மர்ம நபர் மாடச்தியை அதிர்ச்சி அடைய செய்கிறான். அப்போது நீ யார் என்று மாடஸ்தி கேட்கும் கேள்விக்கு அவன் சொல்லும் பதிலை படியுங்கள்: நீ 006 என்றால், நான் 005 என்று கூறும் அவன் பதில் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

அட, அது கூட பரவாயில்லை. அடுத்து அவன் கூறும் பன்ச் டையலாகை படியுங்கள்: நீ என்னை பிடிக்க வந்து இருக்கிறாய். நான் உன்னை பிடிக்க வந்து இருக்கிறேன். நான் நினைக்கிறேன், பேரரசு போன்ற நபர்கள் இந்த காமிக்ஸ் கதைகளை படித்து விட்டு தான் வசனங்கள் எழுதுகிறார்களோ?

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 9

அடுத்து அவனிடம் இருந்து தப்பிக்க மாடஸ்தி செய்யும் துணிகர செயலை காணுங்கள். உடை அணிய செல்லும் மாடஸ்தி குதி உயர்ந்த காலனியை (என்ன கொடுமைடா இது) கழட்டி அதில் இருக்கும் போனில் இரண்டு காபி கேட்கிறாள். உடனே அழைப்பு மணி அடிக்கிறது.

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 10

கதவு மணி ஓசையை கேட்ட அந்த மர்ம நபர் மாடச்தியை கதவை திறக்க சொல்கிறான். கதவை திறக்கும் மாடஸ்தி உடனே வெளியே வந்து கதவை மூடி விட்டு தப்பித்து விடுகிறாள். அதனால் அந்த மர்ம நபர் வருத்தம் அடைகிறான். அவனிடம் இருந்து தப்பித்த மாடஸ்தி ஒரு இரவு விடுதிக்கு செல்கிறாள். அங்கு அவனை தேடுகிறாள்.

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 11

இவ்வாறாக மாடஸ்தி ஒவ்வொரு இரவு விடுதியாக நுழைந்து அங்கு நடனத்தை ரசிக்கும் நபர்களில் அந்த மர்ம உளவாளி இருக்கிறானா என்று நோட்டம் விடுகிறாள். பல இடங்களில் அவளுக்கு வருத்தமே மிச்சம். ஆயினும், கடைசியாக ஒரு விடுதியில் அந்த மர்ம உளவாளியை மாடஸ்தி பார்த்து விடுகிறாள்.

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 12

இரண்டு வைரிகளும் ஒருவரை ஒருவர் கண்டு கொண்டு விட்டனர். இன்று வேட்டை ஆடப் போவது யார்? வேட்டை ஆடப் படுவது யார் என்று தெரியாத நிலை. ஒருவரை ஒருவர் வைத்த கண் வாங்காமல் அடுத்தவரின் வருகைக்காக காத்து இருந்த இந்த காட்சியை புகழ் பெற்ற கொரியா திரைப் பட இயக்குனர் பார்க் சான் வூக் தன்னுடைய பழி வாங்கும் படலத்தின் முதல் படத்தில் வைத்து இருப்பார்.

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 13

அடுத்து மாடஸ்தி அங்கு இருந்து வெளியேறி கழிப்பறைக்கு செல்கிறாள். அந்த மர்ம உளவாளியும் அவளை பின் தொடர்ந்து வருகிறான். பின்னர் அவனிடம் இருந்து தப்பிக்க வழி தேடுகிறாள் மாடஸ்தி. அங்கு உள்ளே வரும் ஒரு பெண்ணை மயக்கமுற செய்து விட்டு அவள் உடையை அணிந்து கொண்டு மாடஸ்தி வெளியேறுகிறாள்.

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 14

முக்காடு அணிந்து மாடஸ்தி ஒய்யாரமாக நடந்து போகிறாள் = இதை மட்டும் அந்த புண்ணியவான் பீட்டர் ஒ டோன்னேல் படித்தால் அதோ கதிதான். பாவம், அந்த மனிதர். எவ்வளவு பாடுபட்டு இந்த கதாபாத்திரத்தை உருவாக்கி இருப்பார். ஆனால், கடைசியில் இப்படி முக்காடு அணிந்து ஒய்யாரமாக நடந்து செல்லும் நிலையா வரவேண்டும் மாடச்திக்கு?

அந்த பெண்ணை மாடஸ்தி இல்லை என்று ஏமாந்த மர்ம உளவாளி பின்னர் பெண்கள் கழிப்பறைக்கு வந்து பார்க்கிறான். பின்னர் மாடஸ்திக்கு உடையை கொடுத்த பெண்ணை மாடஸ்தி என்று நம்பி பின் தொடர்கிறான்.

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 15

அடுத்து அந்த பெண்ணை மர்ம உளவால் கடத்திக் கொண்டு காரில் செல்கிறான். அப்போது அவன் கூறும் அந்த பன்ச் டையலாகை கவனியுங்கள்: எந்தக் கிளியும் என் கண்ணிலிருந்து தப்பவே முடியாது.

Rani Comics Issue 307 April Fool 1997 Lady JamesBond Madasthy AKA Modesty Blaise Ilavarasiyai thedi 16

இப்படியாக கதை செல்கிறது.

அடுத்து நடக்கப் போவது என்ன?

மாடச்தியின் நிலை என்ன ஆயிற்று?

மர்ம உளவாளி உண்மையில் யார்?

மாடஸ்தி உடைகளை கழட்டும் "அந்த" சீன எப்போது வரும்?

மொரோக்கோ இளவரசி என்ன ஆனார்?

என்று பல கேள்விகளுக்கு பதில் தெரிய வேண்டுமானால், படியுங்கள் ராணி காமிக்ஸ் இதழ் முன்னுத்தி ஏழு "இளவரசியை தேடி".

குடும்ப குத்து விளக்கு நடிகை சிநேகா, பத்தினி தெய்வம் நடிகை நமீதா ஆகியோரைப் போல மாடஸ்தி போலீஸ உடை அணிந்து இருப்பது இந்த கதையின் சிறப்பு அம்சமாகும்.

சென்ற பதிவில் பதிவு சம்பந்தப் பட்ட விஷயத்தை விட அதன் சார்பு படங்களே ரசிகர்களை மிகவும் கவர்ந்து உள்ளதை அறிய முடிந்தது. குறிப்பாக நமீதா படங்கள் பெரிதாக வில்லை என்று ஷங்கர் இங்கே குறை கூறி உள்ளார். ஆனால், இதற்க்கு மேலும் பெரிதானால் ஸ்கிரீன் தாங்காது என்பதாலே இந்த அளவு அமைக்கப் பட்டது என்பது தான் உண்மை.

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன், 
ஒலக காமிக்ஸ் ரசிகன்

38 comments:

  1. மீ த ஃபர்ஸ்ட்டு!

    என்ன படம் மட்டும் தான் இருக்கு? கதையக் காணோம்?

    சரி, அத விடுங்க! நமீதா, ஸ்னேகா, விஜயசாந்திக்கும் இதுக்கும் என்னைய்யா சம்பந்தம்?

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  2. ha ha ha haaaaaaaaa... unable to stop my loud laughing.. Just think about the guys' faces who bought & read this comic.....

    Unforunatly I was one of them :( :(

    ReplyDelete
  3. குதி உயர்ந்த காலனியை = high heels?

    ha ha ha..........

    ReplyDelete
  4. வயகரா மாமாJune 9, 2009 at 6:45 PM

    தம்பி ஒ.கா.ர, (இதனை தனி தனியாக படிக்கவும் - சேர்த்து படித்தால் பிரச்சினை)

    // அந்த சைட் ஆங்கிள் போஸ் நன்றாக இருந்தது என்று ஒரு பாண்டி மைனர் மின் அஞ்சல் அனுப்பி உள்ளார்// அந்த பயலுக்கு வேறு என்ன தெரியும்?

    எதையும் நேருக்கு நேராக சந்திக்க வேண்டியதே ஒரு ஆண் மகனுக்கு அழகு என்பது எனக்கு நன்றாக தெரியும்.

    //மாடஸ்தி உடைகளை கழட்டும் "அந்த" சீன எப்போது வரும்?// ஆமாம், எப்போது வரும்?

    அய்யா, இப்படி ஆசையை கிளப்பி விட்டு விட்டு சென்றால் எப்படி?

    வயகரா மாமா

    ReplyDelete
  5. ஒலக காமிக்ஸ் ரசிகர்,


    வாழ்த்துக்கள். நல்லதொரு பதிவை இட்டு உள்ளீர்கள், நீண்ட நாளைக்கு பிறகு. சில இடங்களில் சிரிப்பை கட்டுப் படுத்தவே இயலவில்லை.

    பயங்கரவாதி டாக்டர் செவனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    முடிந்தால் இன்று இரவே சிறப்பு பதிவை வலையேற்ற முயல்கிறேன். நேற்று இரவுதான் நான் ஊரிலிருந்து திரும்பினேன்.தற்போதுதான் மடிக் கணினி வந்தது. பார்க்கலாம்.

    ReplyDelete
  6. தோழர்,

    சமீபத்தில் நான் படித்த காமிக்ஸ் பதிவுகளிலும் மற்ற துறை சார்ந்த பதிவுகளிலும் இது தான் மிகச்சிறந்த பதிவு.

    பிடியுங்கள் பாராட்டுக்களை.

    ReplyDelete
  7. தோழர்,

    இந்த ராணி காமிக்ஸ் அட்டை படத்தை வரைந்த மாலி என்பரை பற்றி ஏதாவது தகவல் உள்ளதா? அவர் தொடர்ந்து பத்து பதினைந்து வருடங்கள் ராணி காமிக்ஸ் அட்டையை அலங்கரித்தார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  8. GEC,

    //நீ 006 என்றால், நான் ௦௦௫// இதனை படிக்கும்போது நினைவுக்கு வந்த சம்பவம் இதுதான்.

    ஒரு தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்ஷங்கர் படம். கருப்பு வெள்ளையில் இருக்கும். அந்தப் படத்தின் சண்டைக் காட்சி ஒன்றில் வில்லனின் அடியாளை ஜெய்ஷங்கர் மடக்கி விடுவார். அப்போது அந்த அடியாள் நீ யார் என்று கேட்பதற்கு ஜெய்ஷங்கர் "நான் சி.ஐ.டி" என்று பதில் சொல்லுவார்.

    அப்போது அந்த அடியாள் "நான் டபுள் சி.ஐ.டி" என்று பிதற்றுவார். அதாவது, நீ வல்லவன் என்றால், நான் வல்லவனுக்கு வல்லவன் எனும் பாணியில் அமைய ஆசைப் பட்டு இப்படி அமைந்த வசனம் இது. அப்போதே பேரரசுகள் இருந்து இருக்கிறார்கள் என்று உணர்த்துகிறது.

    ReplyDelete
  9. mama mia,

    what a post.

    ReplyDelete
  10. Imitation is the best form of Flattery: S.Vijayan.

    I Agree 200% on this.

    ReplyDelete
  11. ஒலக காமிக்ஸ் ரசிகா!

    படித்தேன். என்னத்த சொல்ல..?
    விதி வலியது மட்டுமல்ல கொடியதும் கூட அன்றே ராணிக் காமிக்ஸ் நிருபித்துள்ள பாங்கை சில வரிகளில் பாராட்டி போக மனம் வரவில்லை. நாளை மீண்டும் (மனதை தேற்றிக் கொண்டு 'மீண்டு')- வருகிறேனே!

    ReplyDelete
  12. தம்பி மொக்க ராசு,

    மறுபடியும் ஆ"ரம்பம்" ஆகி விட்டதா? சூப்பர்.

    இந்த கதையை நல்ல வேளையாக நான் ராணி காமிக்சில் படிக்கவேயில்லை.

    ஜுடோ ஜோஸ்.
    When Judo Josh enters a room, he doesn’t turn the lights on,……… …. he turns the dark off.

    ReplyDelete
  13. கதை(?!!)யின் முதல் PANEL-ஐ கூர்ந்து கவனியுங்கள்!

    மாடஸ்தி வீட்டை ஒதுங்க வைத்து விட்டு டி.வி. பார்த்துக் கொண்டிருந்தாள்!

    அடப்பாவி அ.ம.சாமி! மாடஸ்தியை ஏதோ தமிழ் சீரியல் வேலைக்காரி போல் ஆக்கி விட்டாரே! என்னக் கொடுமை சார் இது!

    ஆனால் எல்லாவற்றிலும் சூப்பர் ‘பன்ச்’ டயலாக் இதுதான்!

    நீ 006! நான் 005!

    ஹா! ஹா! ஹா! ஹா!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  14. பக்கம் 7, கட்டம் 1:

    சர்வதேச கடத்தல்காரர்கள். அதனால்தான் சர்வதேச போலீசின் உதவியை நாடியிருக்கிறார்கள் போலிருக்கிறது(?!!)

    பக்கம் 16:

    ஒரு கராத்தே வெட்டு! ஒரு ஜாக்கிசான் உதை!

    பக்கம் 31:

    இதுதான் நரம்படி!

    ஹா! ஹா! ஹா! ஹா!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  15. //மாடஸ்தி வீட்டை ஒதுங்க வைத்து விட்டு டி.வி. பார்த்துக் கொண்டிருந்தாள்!//

    அப்போ ‘வெங்’-கை வேலையை விட்டு தொரத்திட்டாங்களா?

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  16. நல்ல வேலை,

    தலைவராவது என்னை ஞாபகத்தில் வைத்து இந்த கேள்வியை கேட்டாரே?

    எப்போது மேடம், நேமியாலஜி நிபுணர் வாஸ்த்து ரத்தனா பாண்டி மடம் பங்கஜம் சாஸ்திரி பேச்சை கேட்டு மாடஸ்டி என்று இருந்த பேரை மாடஸ்தி என்று மாற்றினார்களோ, அப்போதிலிருந்தே பணப் பிரச்சினையால் கஷ்டப் பட்டார்கள்.

    அவர்கள் எனக்கு கொடுத்தது விருப்ப ஓய்வு அல்ல, வெறுப்பு ஓய்வு.

    கட்டாய விருப்ப ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பப் பட்ட வெங்

    ReplyDelete
  17. அன்புடையீர்,

    கிசு கிசு கார்னர்-3 வலையேற்றப்பட்டுள்ளது = http://poongaavanamkaathav.blogspot.com/2009/06/3.html

    லெட் த கும்மி ஸ்டார்ட்.

    இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.

    பூங்காவனம்,
    எப்போதும் பத்தினி.

    ReplyDelete
  18. ஒலக காமிக்ஸ் ரசிகா!

    //மாடஸ்டி என்ற பெயர் மாடஸ்தி என்று மாற்றப் பட்டதோடில்லாமல் அவள் ஒரு அரசாங்க உளவாளி என்றும் கதையை மாற்றி கொன்று இருப்பார்கள்//

    மாடஸ்டியை முதலில் மாலதி என்றுதான் மாற்றுவதாக இருந்தார்கள் அதில் கவர்ச்சி இல்லை என்பதால் போனால் போகிறது என்று மாடஸ்தி என்று மாற்றினார்கள். லயன், முத்து போல ஈயடிச்சான் காப்பி அடிக்க அவர்கள் என்ன சுயப்புத்தி இல்லாதவர்களா?

    ..மாடஸ்தி ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கும் போது அவளுக்கு போலீஸ கமிஷனர் இடமிருந்து ஒரு கால் வருகிறது. உடனே மாடஸ்தி தன்னுடைய போலீஸ உடையை அணிந்து கொண்டு கமிஷனர் அலுவலகம் செல்கிறாள்.,

    மக்கு சாமி... மாடஸ்தி ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் ஃபிரேமை நுனிப்புல் மேயாமல் நன்றாக படியுங்கள். மாடஸ்தி 'வீட்டை ஒதுங்க வைத்து விட்டு' டி.வி பார்க்கிறாள். வீடு எக்கேடு கெட்டால் என்ன என்று தொடர்ந்து சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் இக்கால பெண்களுக்கு புத்தி புகட்டும் குடும்ப விளக்காக மாடஸ்தியை செதுக்கியிருக்கிறார்கள்.

    மாடஸ்திக்கு போன் அழைப்பு வரும் போது வெள்ளை நிறத்தில் புது மாடலாக இருக்கும் ரிசீவர் மாடஸ்தி கைப்பட்டதும் பழைய கருப்பு மாடல் ஆன ஜேம்ஸ்பாண்ட் பாணி விந்தையை கண்டு கொள்ளாதது உங்களது ஓரவஞ்சனையை காட்டுகிறது.

    //உடனே மாடஸ்தி தன்னுடைய போலீஸ் உடையை அணிந்து கொண்டு கமிஷனர் அலுவலகம் செல்கிறாள்//

    உடை அணியால் போயிருந்தால் பாராட்டியிருப்பீர்களோ! கையில் லத்தியை எவ்வளவு நளினமாக மாடஸ்தி வைத்துள்ளார். பாராட்ட தோன்றவில்லையே உங்களுக்கு!

    //சர்வதேச போலீஸ இந்தியாவை சார்ந்த உளவுத்துறையை அணுகாமல் போலீஸ கமிஷனர் அவர்களை அணுகி அவரும் மாடஸ்தியை அழைப்பது தான் கொடுமை.//

    இப்படி ஒரு கேள்வி கேட்பீர்கள் என்றுதானே கமிஷனிரின் மேசையில் உலக உருண்டையை ஓவியர் வரைந்துள்ளார். உலகமே எழும்மிச்சம் பழ அளவுக்கு சுருங்கி போன பின்னர் மொராக்கோ இளவரசியை காப்பாற்ற லோக்கல் மாடஸ்தி அழைக்கப்பட்டதில் என்ன வியப்பு. திறமை எங்கிருந்தாலும் அதை மதிப்பது தானே உலக இயல்பு!

    //நீ 006! நான் 005!//

    ஆகா! 005-வில்லன்,006-மாடஸ்தி, 007-ஜேம்ஸ் பாண்டு என்ன ஒரு கண்டுபிடிப்பு!ரசனை!

    005 மாடஸ்தியை பிடிக்க பெண்களின் டாய்லெட்டுக்கு நுழைந்தபோது பெண்கள் கூச்சல் போட 005 நயத்தக்க நாகரீகத்துடன் மன்னிப்பு கோருவது பெண் என்றால் பேயும் இறங்கும் என்ற பழமொழியை நினைவூட்டியது அய்யா! ஒன்று கவனிக்க வேண்டும் கதை முழுவதுமே 005 வெறிகொண்ட வில்லனாக இல்லாமல் ஒரு ஜென்டில் மேன் போலவே நடந்து கொள்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் 005யும் ஒரு காலத்தில் நேர்த்தியான அரசாங்க உளவாளியாகத்தான் இருந்திருக்க வேண்டும். அங்கு கற்றுக் கொண்ட நாகரீகம் வில்லனானப்பின்னும் விலகவில்லை. இதனைதான் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள்!

    இளவரசியைத் தேடி கதையில் வில்லன் துப்பாக்கியை எப்போது தனது நெ
    ஞ்சுக்கு குறுக்காகவே பிடித்து போஸ் கொடுத்து கொண்டிருப்பதை பார்த்தால் அவர் அல்லது அவன் நிறைய தமிழ் படங்களை பார்ப்பார் போல தெரிகிறது.

    அவர்கள் மாஸ்டியை மாடஸ்தி என்று கொன்றார்கள் என்றால் நீர் ஏன் அய்யா 'மாடச்தி', 'மாடச்தி' என்று மேலும் மேலும் கொல்கிறீர்!

    எது எப்படியோ உங்கள் புண்ணியத்தில் மாடஸ்தியின் குளியல் காட்சியை பார்க்கும் வாய்ப்பு தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கிடைத்தது. நன்றி!

    ReplyDelete
  19. ச்சே,

    அட்டகாசமான பதிவு.

    ஆனால் எனக்கு கொஞ்சம் பயமாகத் தான் உள்ளது.

    முன்பு நான் மட்டும்தான் காமிக்ஸ் புல் டவுன்லோட் அளித்து வந்தேன்.

    இப்போது என்னவென்றால் காமிக்ஸ் பிரியர் மற்றும் ஒலக காமிக்ஸ் ரசிகர் என்று பலரும் ஆரம்பித்து விட்டனர். இதனை நான் மனமார வரவேற்கிறேன்.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  20. அய்யம் வெங்கி சார்,

    //இளவரசியைத் தேடி கதையில் வில்லன் துப்பாக்கியை எப்போது தனது நெஞ்சுக்கு குறுக்காகவே பிடித்து போஸ் கொடுத்து கொண்டிருப்பதை பார்த்தால் அவர் அல்லது அவன் நிறைய தமிழ் படங்களை பார்ப்பார் போல தெரிகிறது.//

    இதில் எதற்கு இந்த இரண்டு விதமான சுட்டிகள்: அவர் அல்லது அவன்? சற்று விளக்கினால் நலம்.

    தொடருங்கள் உங்கள் அதிரடியை.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  21. //ஓஒ, ஒரு புயல் ஒன்று புறப் பட்டதே,

    ஓஓ, ஒரு பெண் சிங்கம் கிளம்பி விட்டதே,

    ஓஓ, தர்ம யுத்தம் ஒன்று ஆரம்பம் ஆகி விட்டதே. ஏ ஏ ஏ

    என்று எனக்கு தெரிந்த கொலை வெறி கவிஞர் ஒருவர் கவிதை வேறு எனக்கு எழுதி அனுப்பினார்//என்ன ஒரு கவிதை? என்ன ஒரு கவிதை? அட்டகாசம்.

    யார் அந்த கொலை வெறி கவிஞர்?

    தொடருங்கள் உங்கள் அதிரடியை.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  22. பக்கம் முப்பத்தி ரெண்டு, இரண்டாவது பேனல்: இந்த உளவாளி 005ன் முகத்தை பாருங்கள்.

    இப்போது வரும் தமிழ் படங்களில் காமெடி நடிகர் வடிவேலு உடன் வரும் கோஷ்டியில் இவரைப் போலவே ஒருவர் இருப்பார்.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  23. அடேய் ஒலக காமிக்ஸ் ரசிகா,

    நல்லவங்களுக்கு நான் மாடஸ்தி!

    உன்னை மாதிரி கெட்டவங்களுக்கு...

    மாடஸ்'தீ’!

    ReplyDelete
  24. ஒலக காமிக்ஸ் ரசிகரே,

    காமிக்ஸ் உலகிற்கு நீங்கள் வழங்கியிருக்கும் மாடஸ்தியின் குளியலறைக் காட்சிகள் பெரும் சர்ச்சையை உண்டாக்கப் போகிறது என்பதில் ஐயமில்லை.

    நைட் கிளப் காட்சிகளை கூர்ந்து கவனித்தால், வயக்கரா தாத்தா ஒர் குட்டியுடன் நழுவுவது தெரியும். நடனமாதுக்களின் நடன அசைவுகள் ஒன்ஸ் மோர் கேட்க வைக்கின்றன.

    //அந்த உணர்ச்சி குழம்பை கவனியுங்கள்.// அருமையான குழம்பு. வார்த்தையாடல் அருமை.

    உற்சாகத்துடன் தொடருங்கள் உங்கள் ரசமான பதிவுகளை.

    ReplyDelete
  25. கனவுகளின் காதலரே,

    இணைப்பு சரியாகி விட்டதா?

    உங்களின் விமோசனம் பற்றிய விமர்சனம் எப்போது வரும்? உங்களைப் பற்றிய கிசு கிசு படித்தேன்.

    ReplyDelete
  26. காதலரே,

    //காமிக்ஸ் உலகிற்கு நீங்கள் வழங்கியிருக்கும் மாடஸ்தியின் குளியலறைக் காட்சிகள் பெரும் சர்ச்சையை உண்டாக்கப் போகிறது என்பதில் ஐயமில்லை.//

    இதனை தவிர மற்றுமொரு கிளைமேக்ஸ் காட்சியில் மாடச்தி தன்னுடைய உடைகளை எல்லாம் களைந்து விட்டு தண்ணீரில் குதிப்பார். முடிந்தால் அதனை பாருங்கள். மறக்க இயலாத காட்சி.

    ReplyDelete
  27. //நைட் கிளப் காட்சிகளை கூர்ந்து கவனித்தால், வயக்கரா தாத்தா ஒர் குட்டியுடன் நழுவுவது தெரியும்//

    அந்த குட்டியே நாந்தான்.

    ReplyDelete
  28. //இளவரசியைத் தேடி கதையில் வில்லன் துப்பாக்கியை எப்போது தனது நெஞ்சுக்கு குறுக்காகவே பிடித்து போஸ் கொடுத்து கொண்டிருப்பதை பார்த்தால் அவர் அல்லது அவன் நிறைய தமிழ் படங்களை பார்ப்பார் போல தெரிகிறது.//

    //இதில் எதற்கு இந்த இரண்டு விதமான சுட்டிகள்: அவர் அல்லது அவன்? சற்று விளக்கினால் நலம்//

    அன்பர் புலா சுலாகிக்கு:

    005 ஒரு வில்லனாக இருந்தாலும் அவருடைய நடவடிக்கைகளில் ஒரு வித ஜென்டில்மேன்தனம் தென்படுகிறது. அதனால் தான் 005 மறியாதையுடன் அவர் என்று அழைப்பதும் சாலவும் சிறந்தது என்று நான் நினைத்தேன். ஆனால் வில்ல'னை' மறியாதையுடன் வில்ல'ர்' என்று அழைத்தால் நன்றாக இருக்காதே. அந்த குழப்பம்தான் எனக்கு!

    ReplyDelete
  29. நன்றிகள பல அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களே.

    ReplyDelete
  30. i have all the download links for modesy blaise.

    but no links for madasthy.

    sorry.

    ReplyDelete
  31. நல்ல அற்புதமான கதை. இதே போன்று

    எந்திரன் கதைகள் மூன்று

    அசல்

    வேட்டைக்காரன் கதைகள் எழுதியிருக்கிறேன்.

    தல உங்களுக்கு படம் வரையத் தெரியும்னா ஒரு காமிக் தொடர் ஆரம்பிக்கலாமே..,

    ReplyDelete
  32. //i have all the download links for modesy blaise.

    but no links for madasthy.

    sorry.//

    ரொம்ப ஃபீல் பண்ணி எழுதியிருக்கீங்க(?!!)

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  33. அய்யம்பாளயத்தாரே,

    //அவர்கள் மாஸ்டியை மாடஸ்தி என்று கொன்றார்கள் என்றால் நீர் ஏன் அய்யா 'மாடச்தி', 'மாடச்தி' என்று மேலும் மேலும் கொல்கிறீர்//

    என்னுடைய டைப்பிங் திறமையை இப்போதாவது தமிழ் கூறும் நல்லுலகம் புரிந்து கொண்டு இருக்கும் என்று நம்புகிறேன். உண்மை என்னவெனில், கூகுல் டிரான்ஸ் லிடரேட்டார் அமைப்பில் தனி வார்த்தையாக டைப் செய்தால் சரியாக வருகிறது. தொடர் வாக்கியமாக டைப் செய்தால் இப்படி அமைந்து விடுகிறது. என்ன செய்ய?

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  34. தல,

    //தல உங்களுக்கு படம் வரையத் தெரியும்னா ஒரு காமிக் தொடர் ஆரம்பிக்கலாமே.//

    இது போதாதுன்னு நம்ம காமிக்ஸ் வேறையா? மக்கள் நேரில் வந்து கொன்னுடுவாங்க தல.

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  35. மக்களே,

    ////i have all the download links for modesy blaise.

    but no links for madasthy.

    sorry.//

    ரொம்ப ஃபீல் பண்ணி எழுதியிருக்கீங்க(?!!)//

    என்னால தாங்க முடியல.

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  36. What is this?
    I understand that it is some kind of a Modesty-thing, but what?
    What language is it?
    Is there a translation anywhere?

    ReplyDelete
  37. Hi Redaktör'n,

    This Particular book is in Tamil language. It is from South India (Tamil Nadu is the State). What they have done is, they have recreated the entire storyline of their own with local artwork, if one can call that as art.

    This particular post is done to mock that effort.

    Modesty is a Popular Character in Tamil Language and more on that can be read from this page: http://tamilcomicsulagam.blogspot.com/2010/06/modesty-blaise-arguably-best-comics.html

    If you want more clarifications, here is my mail id: tamilcomicsulagam@gmail.com

    ReplyDelete
  38. இந்த கதையை நல்ல வேளையாக நான் ராணி காமிக்சில் படிக்கவேயில்லை.
    athethan. nambungappa. intha post moolamthan rani comicsin anthima kalam patri nanraga ariya mudigirathu!!

    ReplyDelete

என்னுடைய வலைப்பூவை நீங்கள் படிக்கவில்லையெனில், படித்தவுடன் உங்களின் எண்ணங்களை தெரிவிக்கவில்லை எனில் உங்களிடம் அடிப்படையாகவே ஏதோ தவறு உள்ளது

Related Posts with Thumbnails