Tuesday, February 16, 2010

மோட்டார் சைக்கிள் சாம்பியன் வேலன்டினோ ரோஸ்சி

அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். சென்ற பதிவில் வந்து வருகை தந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. குறிப்பாக கமென்ட் இட்ட அந்த புண்ணியவான்கள் வாழ்க (முதல் மற்றும் கடைசி நபர்களை தவிர்த்து).

இன்று பிப்ரவரி மாதம் பதினாறாம் நாள். என்னடா இவன் மார்ச் பதினைந்தாம் தேதி போல இது ஏதாவது ஸ்பெஷலான நாளா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. (அது சரி, மார்ச் பதினைந்தாம் தேதி என்ன ஸ்பெஷல் என்று தெரியாதவர்கள் பின்னூட்டம் செய்க - பதில் தரப்படும்).இன்றுதான் என்னுடைய மனம் கவர்ந்த மோட்டார் சைக்கிள் சாம்பியன் வேலன்டினோ ரோஸ்சி அவர்களின் பிறந்த நாள். ஐவரும் நான் பிறந்த வருடமே பிறந்து இருப்பது மற்றுமொரு சிறப்பு. நான் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்த நாள் முதலே பைக் ஓட்ட வேண்டும் என்பது ஆசை. (பைக் ஓட்ட ஆரம்பித்த பிறகு கார் ஓட்ட ஆசைப்பட்டது வேறொரு கதை-அது அப்படியே தொடர்கதையாக போகிறது - இப்போதும் கூட).

இதற்க்கு பிறகுதான் தமிழ் காமிக்ஸில் வந்த பைக் மற்றும் பைக் சார்ந்த கதைகளை பற்றிய ஒருvalentino-rossi-photo பதிவிடும் எண்ணமே வந்தது. அதன் பலனே இதோ இந்த பதிவு. இப்படி ஒரு பதிவே இடும் அளவுக்கு அவர் என்ன பெரிய சாம்பியனா என்றும் சிலர் கேட்கலாம், தவறில்லை. இந்தியாவில் இன்னமும் கூட ரேசிங் என்பது பிரபலம் அடையவில்லை.தல அஜித் குமார் கார் ஓட்டினால் தான் கார் ரேசிங் பற்றியே பேசப்படுகிறது. என்ன கொடுமை சார் இது? நம்முடைய சச்சின் டெண்டுல்கர் அப்படி கிரிக்கெட்டில் பெரிய ஆளோ, ரோஜர் பெடரர் எப்படி டென்னிஸ் ஆட்டதிலோ,  அப்படி தான் இவர் பைக் ரேசிங்கில்.

சரி, நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி ஆகி விட்டது அல்லவா? அதனால் வழக்கம் போல பைக் ரேசிங் அல்லது டூ-வீலர் சம்பந்தப்பட்ட காமிக்ஸ் கதைகள் இதோ:

முத்து காமிக்ஸ் - வைரஸ் எக்ஸ்

முத்து காமிக்ஸ் - சிங்கத்திர்கொரு  சவால்

முத்து காமிக்ஸ்-மரண மச்சம்

Muthu Comics No 46 Agent X9 Phil Corrigan Virus X Singathirkoru Saval Muthu_Comics_Issue_No_189_Marana_MACHCHAM

வைரஸ் எக்ஸ்-இந்த கதையை பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டுமெனில் நீங்கள் இன்னமும் காமிக்ஸ் பல்கலை கழகத்தில் ஒரு மாணவனே. ஆம், ஆசிரியர் விஜயனின் டாப் டென் கதைகளில் ஒன்றான இதனை பற்றி நம்முடைய அன்பிற்கு பாத்திரமான திரு முத்து விசிறி அவர்களின் முழு நீள பதிவு இங்கே உள்ளது.  இந்த கதையை முதலில் வெளியிட்டவர்கள் மாலைமதி காமிக்ஸ் AFI நிறுவனத்தினர். இந்த கதையின் ஆங்கில பதிப்பினை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

சிங்கத்திர்கொரு  சவால் - நம்முடைய மனம் கவர்ந்த நாயகன் ஜானி ஹசார்ட் (முத்துவில் ஜார்ஜ், ராணியில் ஜானி) தோன்றும் ஒரு அசலான பைக் ரேசிங் கதை. இதனை பற்றி விரிவாக வேறொரு நாளில் நம்முடைய கிங் விஸ்வ பதிவிட போவதால் இதற்க்கு மேலும் ஒன்றும் சொல்லப்போவதில்லை. ஆனால், மிஸ் செய்யக் கூடாத கதைகளில் இதுவும் ஒன்று.

மரண மச்சம் - மறுபடியும் ஜானி ஹசார்ட் தோன்றும் மற்றுமொரு கதை. இதன் முடிவினில் ஜானி பைக் ஒட்டி சென்று தப்பிப்பார். அதனால் தான் அட்டையில் இந்த மூன்று கார் பைக் வந்து உள்ளது. இந்த அட்டையின் கதையை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

மினி லயன் - மரண சர்க்கஸ்

மினி லயன்-கருப்பு பாதிரி மர்மம்

காமிக்ஸ் கிளாசிக்ஸ்- மர்ம தீவு

Mini_Lion_Issue_No_2_Marana_Circus_Cover_thumb[1] Mini_Lion_Issue_No_4_Karuppu_Paathiri_Marmam_Cover_thumb[2] CC 12-2

மரண சர்க்கஸ்-மினி லயனில் வந்த இரண்டாவது கதை இதுதான். இந்த கதை ஒரு நடைமுறை கதை ஆகும், சூப்பர் ஹீரோக்களோ அல்லது துப்பறியும் கதைகளோ நிறைந்த அந்த நாட்களில் இது போன்ற கதைகள் ஒரு மாற்றத்தை தந்தது. மினி லயன் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

கருப்பு பாதிரி மர்மம்-லயன் காமிக்ஸில் இரட்டை வேட்டையர்கள் வந்து கலக்கி கொண்டு இருந்த நேரத்தில் இந்த புயல் வேக ரெட்டையர்கள்  மினி லயனில் தோன்றினார்கள். மொத்தமே ரெண்டே ரெண்டு கதைகளில் வந்து இருந்தாலும் கூட அவர்களை இன்னமும் என்னால் மறக்க இயலவில்லை. ஐயா கிங் விஸ்வா, இவர்களை பற்றிய ஒரு முழு நீள பதிவினை இடுமாறு உங்களை வேண்டிக் கொள்கிறேன், வழக்கம் போல முத்து விசிறி அவர்களிடம் இந்த கதைகளும் ஒரிஜினலும் இருக்குமல்லவா?

மர்ம தீவு-ஆரம்ப காலத்தில் லயன் காமிக்ஸில் வந்த (இரண்டு வண்ணங்களில்) கதையை காமிக்ஸ் கிளாசிக்சில் ரீபிரின்ட் செய்யும்போது இந்த அட்டைப்படத்தை உபயோகித்தனர். ஆர்ச்சி பைக் ஓட்டுவது சூப்பர் ஆக இல்லை?  இதனைப் போலவே ஸ்பைடர் மற்றும் இரும்புக் கை மாயாவியும் பைக் ஓட்டினால் எப்படி இருக்கும்?

     
MuthuComics178SingathinGuhaiyil1 Muthu Comics Issue No 302 Marana Oppandam Thihil49KolaikaaraKomali_thumb1

சிங்கத்தின் குகையில்-என்னால் மறக்கவே இயலாத ஒரு காமிக்ஸ் கதை. தமிழ் காமிக்ஸில் வந்த தலை சிறந்த கதாபாத்திரங்கள் பற்றி யாராவது (வேறு யார்? நம்ம கிங் விஸ்வா'தான்) பதிவிடும்போது இதனை மறக்கவே முடியாது. ஆனால் இந்த அட்டைப்படத்திற்கும் கதைக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது. இருந்தாலும் ஒன்றுக்கு மூன்று பைக்குகள் இருப்பதால் இந்த அட்டைப்படம் இங்கு வந்துள்ளது. மன்னிக்கவும்.

மரண ஒப்பந்தம்-முத்து காமிக்ஸில் கடந்த சில வருடங்களில் வந்த அட்டைப்படங்களில் ஒரு சிறந்த அட்டைப்படம் இது என்பது பலரின் கருத்து. எனக்கு அதில் உடன்பாடில்லை. இருந்தாலும் ஒரு மசாலா கதைக்கு இந்த மாதிரி மசாலா அட்டைப்படமே சரிப்பட்டு வரும்.

கொலைகார கோமாளி-இந்த கதை திகில் காமிக்ஸில் வந்த ஒரு கருப்பு கிழவி கதைக்கானது ஆகும். அந்த கதையை படிக்க இங்கே செல்லவும்.

 

ஜேம்ஸ் பாண்ட்-அதிரடி உளவாளி

ராணி காமிக்ஸ்-மர்ம ரோஜா

ராணி காமிக்ஸ்-மரண தண்டனை

James Bond Comics 01 Adhiradi Ulavali Rani Comics Marma Roja MaranaDhandanaiIssueNo62Jan1619872

அதிரடி உளவாளி-ஜேம்ஸ் பாண்ட் காமிக்ஸ் ஆரம்பித்து சிறப்பாக நடத்திய ஆசிரியர் ராமஜெயத்தின் முதல் இதழ் இது தான். நம்ம விஸ்வா'வின் நண்பர் தான் இதன் பதிப்பாளர். இந்த இதழின் ஒரிஜினல் ஆபிஸ் காபி புத்தகங்களை இன்னமும் கூட விஸ்வா வைத்துள்ளார் என்பது சிறப்பு அம்சம். இதனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள, இங்கு செல்லவும். - தமிழ் காமிக்ஸ் உலகம்.

மர்ம ரோஜா-ராணி காமிக்ஸில் ஆசிரியர் ராமஜெயத்தின் கடைசி இடழ் இதுதான். இந்த புத்தகத்தில் மொத்தம் மூன்று கதைகள் இருக்கும். இரண்டாவது கதை தான் நம்ம சூப்பர் ஹீரோ டைகர் தோன்றிய கடைசி கதை - ஆம், அதில்தான் பாட்ஷா கைது செய்யப்படுவார். நினைவு இருக்கிறதா?

மரண தண்டனை-இந்த கதையில் பைக் வரவே வராது. அட்டையில் கூட இன்ஸ்பெக்டர் ஆசாத் பைக்கில் இருந்து இறங்கிக் கொண்டுதான் இருப்பார். நான் கேட்ட சில பல அட்டைப்படங்களை நண்பர்கள் என்றழைக்கப்படும் சில துரோகிகள் தராததால் இந்த அட்டைப்படங்களை எல்லாம் போட்டு ஒப்பேற்ற வேண்டி இருக்கிறது. வேறென்ன செய்ய?

அசோக் காமிக்ஸ்-ரகசிய எதிரி

முத்து காமிக்ஸ்-விசித்திர கொள்ளையர்

Ashok Comics Issue No 29 Ragasiya Edhiri Muthu Comics 217 Visithira Kollaiyar

ரகசிய எதிரி-தமிழ் காமிக்ஸில் வந்த முதல் மட்டும் முழுதான பைக்கர் ஹீரோ யாரென்றால் அது நம்ம ஜேசன் வைல்ட் தான். பெயர்க்கு ஏற்றார்ப் போலவே வைல்ட் ஆகவே வண்டி ஓட்டுவார். இதே வரிசையில் வந்த ஜான் சில்வர் ஒரு விமான பைலட் - அவருக்கு ஏற்படும் அனுபவங்கள் சிறப்பான ஒரு கதை வரிசையை ஏற்படுத்தியதால் அதனை தொடர்ந்து அந்த ஆசிரியர்கள் இந்த பைக்கர் ஹீரோவை உருவாக்கினர். என்ன துரதிர்ஷ்டம் என்றால் இவரின் கதைகள் தமிழில் மொத்தமே மூன்று முறை தான் வந்து இருக்கிறது. இறந்து முறை அசோக் காமிக்ஸில். மூன்றாவது கதை எந்த காமிக்ஸில் வந்தது என்று சொல்வோருக்கு சிறப்பு பரிசு உண்டு.

விசித்திர கொள்ளையர்-இந்த அட்டைப்படத்தை நான் கடைசியாக போட்டதற்கு ஒரு காரணம் உண்டு. ஆம், கதையில் கூட இந்த காட்சி கடைசியில் தான் வரும். இந்த ஜோடி தப்பிக்கும்போது பைக்கை உபயோகிப்பார்கள். அது ஒரு சிறப்பான பைக் ஆகும்.

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன், 
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

21 comments:

  1. //ஐவரும் நான் பிறந்த வருடமே பிறந்து இருப்பது மற்றுமொரு சிறப்பு//

    Good Joke.

    அடிச்சு ஆடுங்க நண்பரே. உங்க காட்ல மழை.

    ReplyDelete
  2. அடங்கப்பா! வலேண்டினோ ரோசியையும் தமிழ் காமிக்ஸ் உலகத்தையும் இந்தமாதிரி ஒருபாலம் போட்டு இணைக்க முடியும்னு இப்பதான் தெரியுது. தொடரட்டும் உங்கள் ஆராய்ச்சி பணி!

    முன்னரே தலைப்பை சொல்லி இருந்தால் நான் சில காலத்திற்கு முன் பைக் ஓட்டும்போது எடுத்த புகைப்படம் கொடுத்து உதவியிருப்பேனே!

    ReplyDelete
  3. ஏன்தனோ இந்த காமிக்ஸ் விமர்சகர்கள் இந்த மாதிரி அட்டைப்படம் போட்டு நம்மளை இந்த படுபடுதுகரிகளோ.... இவர்களுக்கு வாயற்றுவழி (காமிக்ஸ் வலி) வராதோ?

    ReplyDelete
  4. அண்ணாருக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  5. ஆர்ச்சி IN பாரிஸ் அட்டைப்படத்திலும் ஆர்ச்சி பைக் ஓட்டி சாகஸம் புரியும்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  6. //முன்னரே தலைப்பை சொல்லி இருந்தால் நான் சில காலத்திற்கு முன் பைக் ஓட்டும்போது எடுத்த புகைப்படம் கொடுத்து உதவியிருப்பேனே!//

    மேன்மைதகு முத்து விசிறி அவர்களே, இப்போதும் கூட ஒன்றும் குறையவில்லை. நீங்கள் கார் ஓட்டுவது போலவோ அல்லது சைக்கிள் ஓட்டுவது போலவோ கூட படங்களை அனுப்புங்கள். விரைவில் அவை பதிப்பிக்கப்படும்.

    ReplyDelete
  7. ////ஐவரும் நான் பிறந்த வருடமே பிறந்து இருப்பது மற்றுமொரு சிறப்பு//

    Good Joke.

    அடிச்சு ஆடுங்க நண்பரே. உங்க காட்ல மழை.//

    என்ன சீனியர், நீங்களே இப்படி சொல்லலாமா?

    ReplyDelete
  8. //ஏன்தனோ இந்த காமிக்ஸ் விமர்சகர்கள் இந்த மாதிரி அட்டைப்படம் போட்டு நம்மளை இந்த படுபடுதுகரிகளோ.... //

    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை. பிடிக்கவில்லை என்றால் படிக்கவே தேவை இல்லையே?

    ReplyDelete
  9. //Sundar சுந்தர் said...


    நன்றி!//
    நன்றி திரு சுந்தர் அவர்களே.

    ReplyDelete
  10. பயங்கரவாதி அவர்களே,
    நன்றி. அந்த அட்டைப்படத்தை நானும் உங்களிடம் கேட்டேன். நீங்களும் சரி விஸ்வா'வும் சரி அனுப்பவில்லை. அதான்.

    ReplyDelete
  11. //செம பதிவு நண்பரே.
    விரைவில் விரைவில் அந்த அடுத்த லக்கிலூக் பதிவினை இடுங்கள்.
    இது வேண்டுகோள் அல்ல, கட்டளை, கட்டளை, கட்டளை, கட்டளை, கட்டளை, கட்டளை, கட்டளை, கட்டளை, கட்டளை, கட்டளை, கட்டளை, கட்டளை.//

    ஆகா,விட்டா நம்மள கட்டி போட்டு விஜய் படத்த பாக்க வைப்பனுங்க போலயே....
    அந்த அளவு சித்திரவதைய தாங்குற சக்தி எனக்கு இல்லைங்க.
    விரைவில புது பதிவு போடுறேன்.thanks for coming thala....

    ReplyDelete
  12. ஹ ஹா.. இது புடிகவில்லை என்பது இல்லை... உங்க கிட்டமட்டும் இந்த மாதிரி காமிக்ஸ் இருக்குதுன்னு ஒரு சொகமான புலம்பல்...

    ReplyDelete
  13. // இது புடிகவில்லை என்பது இல்லை... உங்க கிட்டமட்டும் இந்த மாதிரி காமிக்ஸ் இருக்குதுன்னு ஒரு சொகமான புலம்பல்...//

    நன்றி நண்பரே.

    என்ன செய்வது, ஒருவரிடம் இருப்பது மற்றவரிடம் இல்லை அல்லவா?

    அதனால் தான் அட்லீஸ்ட் இந்த ஸ்கான் படங்களையாவது மக்கள் பார்க்க பதிவிடுகிறேன்.

    ReplyDelete
  14. //விரைவில புது பதிவு போடுறேன்//

    அதனை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  15. //அண்ணாருக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்//

    ரிப்பீட்டேய்.

    ReplyDelete
  16. இவ்வளவு பைக் அட்டைப்படங்கள் வந்து உள்ளனவா? என்னிடம் கூட இரண்டு மூன்று தேசமலர் காமிக்ஸ் அட்டைப்படங்கள் உள்ளன. அனுப்பவா?

    ReplyDelete
  17. காதலர் தின பதிவிடாமல் விட்டது ஏன்?

    ReplyDelete
  18. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  19. i want these comics books.any body help me-vijay.ambattur.ph-9444109642

    ReplyDelete
  20. spider cgaractor anybody remember?

    ReplyDelete

என்னுடைய வலைப்பூவை நீங்கள் படிக்கவில்லையெனில், படித்தவுடன் உங்களின் எண்ணங்களை தெரிவிக்கவில்லை எனில் உங்களிடம் அடிப்படையாகவே ஏதோ தவறு உள்ளது

Related Posts with Thumbnails