
அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.இரண்டு தினங்களுக்கு முன்பு (ப்ரைடே த டுவல்த் – Friday The Twelfth) நான் என்னுடைய வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது ஒரு டிரங்கன் மன்க் என்னுடைய வாகனத்தின் மீது மோதி, மோதி விளையடிட்ட்டான்.
அது என்னமோ தெரியலீங்க, எப்பவுமே தப்பு செய்றவந்தான் ஈசியா தப்பிச்சுடுறான். நம்மள மாதிரி ஆட்கள் எல்லாருமே பாதிக்கப்படுறோம். ஆம், சாலை விதிகளை சரியாக கடைபிடிக்கும் (அதாவது, சைக்கிள் ஒட்டும்போதே சீட்பெல்ட் இல்லியான்னு கேட்டவன் நான்) என்னைமாதிரி ஆட்கள் தான் அதிகம் விபத்தினால் பாதிக்கப்படுகிறார்கள்.
அதனால வழக்கம் போல இந்த தடவையும் எதிரில் வந்த டிரங்கன் மன்க்குக்கு எந்த (பெரிய அளவில்) பாதிப்பும் இல்லை - உடலுக்கும் , வாகனத்திற்கும். ஆனால், சரியானபடி வாகனத்தை ஓட்டிவந்த எனக்கோ, உடலிலும், வாகனத்திலும் மோசமான காயங்கள். அந்த வாகனத்தி இனிமேல் உபயோகப்படுத்தவே முடியாதாம். கையிலோ "ஆய்த எழுத்து" சூர்யா மாதிரி ஒரு பெரிய தொட்டில். பதினைந்து நாட்கள் பெட் ரெஸ்டாம். என்ன கொடுமை சார் இது?
இது கூட பரவாயில்லை, ஒத்தை கையால் டைப்பிங் கூட பண்ண முடியவில்லை. இந்த பதிவையே இரண்டு நாட்களாக டைப் செய்துக் கொண்டு இருக்கிறேன். இந்த நிலையில் என்னுடைய சக பதிவராகிய கிங் விஸ்வா, என்னுடைய நிலையை பார்த்தது "சரி விடுங்க பாஸ், பேசாம இரும்புக்கை மாயாவி மாதிரி உங்களுக்கும் ஒரு இரும்புக்கை வச்சுடலாம்" என்று கூசாமல் சொல்கிறார்.
இது கூட பரவாயில்ல, நண்பர் ஐய்யம்பாளயத்தார் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல "இந்த முறை இரும்புக்கையில் பல புது விதமான ஐட்டங்களை கூட சேர்த்து வைக்கலாம், உதாரணமாக செல்போன் சார்ஜர், நெயில் கட்டார், கி செயின் ஹாங்கர்" என்று அடுக்கிக் கொண்டே போகிறார்.
டாக்டர் செவனோ, "லேட்டஸ்ட் காமிக்ஸ் கிளாசிக்ஸ் இரும்புக்கை மாயாவி கதையாகிய விண்வெளிக் கொள்ளையர் கதையில் வருவதைப் போல நியுக்ளியர் நர்ஸ் மூலம் உங்களை குணப்படுத்தலாம், ஆனால் உங்களை நம்பி எப்படி ஒரு நர்சை தனியாக அனுப்புவது?" என்று கிண்டலாக கேட்கிறார்.
இதனால் மனம் நொந்த நான், வழக்கம் போல இந்த சந்தர்ப்பத்தையும் கூட பயன்படுத்திக் கொண்டு ஒரு காமிக்ஸ் பதிவிட்டால் என்ன என்று நினைத்து இதுவரை தமிழ் காமிக்ஸில் வந்த விபத்து சம்பந்தமான அட்டைப்படங்களை உங்களின் பார்வைக்கு சமர்பிக்கிறேன்.
முத்து காமிக்ஸ் - இரும்புக்கை மாயாவி - விண்வெளி விபத்து - என்ன கொடுமை சார்? விபத்துன்னா மாயாவியா? |
விபத்துன்னா மாயாவியா? என்ற கேள்வி சரிதானே? ஏனென்றால் மாயாவி உருவானதே ஆய்வுக் கூடத்தில் நடந்த ஒரு விபத்து மூலமாகத்தானே? அதனால் அவரின் கதையின் அட்டைப்படத்தை வெளியிடுவதில் தவறில்லையே?
இந்த கதை ஒரு கிளாசிக் கதை ஆகும். இந்த புத்தகத்தை நான் சமீபத்தில் ஒரு பழைய புத்தக கடையில் வாங்கினேன் (திருச்சியில் இல்லை). அந்த கடைகாரர் பயங்கர புத்திசாலி போல. அட்டைப்படத்தில் உள்ள விலை குறித்த பகுதியை கிழித்து விட்டால் விலை தெரியாதாம். மக்களே, உங்களில் யாருக்காவது பழைய புத்தக கடைக்காரர் நண்பர்களாக இருந்தால் சொல்லுங்கள் - தயவு செய்து அட்டையில் விலை உள்ள பகுதியை கிழிக்க வேண்டாம் என்று.
விபத்தில் சிக்கிய விமானம் ஒரு மாயாவியின் சிறுகதை ஆகும். இந்த கதையை ஆங்கிலத்தில் டவுன்லோட் செய்ய கீழ்க்காணும் சுட்டியை பயன்படுத்தவும். அந்த சுட்டியில் நியுயார்க்கில் மாயாவியும் இருக்கும், ஆனால் என்ன ஆங்கிலத்தில், கலரில் இருக்கும். Rapidshare
அடுத்ததாக நம்ம எல்லோருக்கும் பேவரிட் ஆன ராணி காமிக்ஸ் ஹீரோ, மன்னிக்கவும் சூப்பர் ஹீரோ டைகர் அவர்களின் கதை ஒன்று. மர்ம விபத்து. டைகரிடம் எனக்கு பிடித்த ஒன்று அவரின் வசனம் - டொட்ட டாங். சமீபத்தில் நம்ம இயக்குனர் சரணின் படமாகிய அசல் (அஜித் நடித்தது) படக்த்தில் ஒரு பாடல் கூட இந்த வசனத்தை மைய்யமாக கொண்டே இருக்கும்.
கடைசியாக முடிக்கும் முன்பு வாசகர்களுக்கு ஒரு போட்டி: நம்ம நண்பர்கள் சொன்னது போல இரும்புக் கை மாயாவி இப்போதைய உலகில் இருந்தால் அவரது இரும்புக் கையில் வழக்கமான ஆயுதங்கள் தவிர வேறென்ன புதிய உபகரணங்களை மேற்கொள்ளலாம் என்பதை ஏன் நீங்கள் பின்னூட்டம் மூலம் தெரிவிக்கக் கூடாது? சிறந்த பின்னூட்டத்திற்கு பரிசும் உண்டு.
நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?
நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்
மீ த ஃபர்ஸ்ட்டு!
ReplyDeleteபதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!
டொட்டடொய்ங்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
ஒலக காமிக்ஸ் ரசிகரே,
ReplyDeleteவிரைவில் நீங்கள் எல்லா நலமும் பெற்று முழு உடல் நலனையும் அடைய வாழ்த்துக்கள்.
விபத்து குறித்தான பதிவு சிறப்பு. அய்யம்பளயத்தாரின் ஆலோசனைகளை வரவேற்கிறேன்.
மறந்தே விட்டேன்,
ReplyDeleteடொட்டடொய்ங்!
//கையிலோ "ஆய்த எழுத்து" சூர்யா மாதிரி ஒரு பெரிய தொட்டில்//
ReplyDeleteஇதெல்லாம் ரொம்ப ஓவர். இந்த விஷயம் ஜோதிகாவுக்கு தெரியுமா?
வாங்க மேடம்,
ReplyDeleteகேப்டன் சவுரவ் கங்குலி எப்படி இருக்கார்?
நல்ல கான்சப்ட். விரைவில் குணமடைய வாழ்த்துக்கள். அந்த டிரங்கன் மனக் எப்படி இருக்கிறார்?
ReplyDeleteவிரைவில் நலம்பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteநண்பரே,
ReplyDeleteவிரைவில் உடல் நலம் பூரணமாகி, புயல் போல் கிளம்பிட வேண்டுகிறேன்.
- உள்ளங்கையில் ஒரு திரை, ஒலக சினிமா பார்க்க, இணையத்தில் உலவ, பல சாமிகளின் தியானங்களை கண்டு மகிழ!
- பெருவிரலில் ஒரு ஒப்னர்- பீர், குளிர்பான மூடிகளை ஒடைக்க
- சின்ன விரலில் ஒரு Ear Bud! சுகமாக காது குடையலாம்
- நடு விரலில்- வேண்டாம் இந்த விபரீதமான எண்ணங்கள் என்னை விட்டு போகட்டும்.
விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteவிரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் நண்பரே.
ReplyDeleteஇந்த முறை இரும்பு கையை கொஞ்சம் கலரடித்து உலாவ விடுங்கள். பழைய இரும்புக்கடை சரக்கு போல் இருக்கு. நர்சுகளுக்கெள்ளாம் நல்ல கலரான இரும்பு கை தான் பிடிக்கிறதாமே
ஒலக காமிக்ஸ் ரசிகா!
ReplyDeleteஉங்களுக்கு நடந்த விபத்தை கூட காமிக்ஸ் கண்ணோடு கண்ட உங்களுடைய ஆர்வம் புல்லரிக்க வைக்கிறது. சமீபத்தில் நடந்த ஒரு சர்வேயில் 12 சதவீத விபத்துக்கள் குடிகாரர்களால் தான் நடக்கிறதாம். இதிலிருந்து என்ன தெரிகிறது? மீதம் 88 சதவீதம விபத்துக்கள் குடிக்காமல் வண்டி ஓட்டுபவர்களால்தான் நடைபெறுகிறது! அப்படியிருக்க நீங்கள் அந்த குடிகாரரை சுட்டிக்காட்டி புலம்புவதில் நியாயம் இல்லை என்பது பொதுமக்களின் கருத்து. இரும்புக்கையில் ஆறு விரல்களை அமைக்கலாம் என்பது எனது யோசனை. ஏனெனில் ஆறாவது விரல் இருந்தால் அதிர்ஷ்டம் வருமாம்.
adhu sari. antha kudimaganuku onnum aagalaiye.tharaila nadanthathala ''vinveli vibathu'' comics wrapper podalaiya// vibathaiyum kalai kannoda ,partha ungaluku adikadi vibathu nadaka pray pannuren.
ReplyDeletevinveli vibathu podavittalum , vibathil sikkiya vimanam pottatha sariya parkama comment pottuten. said mr.r.s.k.
ReplyDelete