Tuesday, March 16, 2010

உலக தொடர்பு நாள் - சிறப்பு பதிவு

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.

நேற்று உலக தொடர்பு நாள். அதாவது World Contact Day ஆகும். நமக்கெல்லாம் புரியும்படி சொல்வதென்றால் நமது பூமியை தவிர அண்டவெளியில் உள்ள பல கிரகங்களிலும் உயிரினங்கள் வசிப்பதாகவும் அவற்றுடன் தொடர்பு கொள்ளும் நாளாக இது கருதப்படுகிறது. மேலும் இது குறித்து தெரிந்து கொள்ள இந்த விக்கிபீடியா சுட்டியை பயன்படுத்தவும். Wikipedia

இந்த மாதிரி அயல் கிரக தொடர்பு கதைகள் முழுவதும் சைன்ஸ் பிக்ஷன் / பேண்டசி வகையை சேர்ந்தவை என்பதால் அந்த துரையின் தலை சிறந்த ஹீரோவாகிய இரும்புக் கை மாயாவியின் கதைகளில் வந்த அயல் கிரகவாசிகளின் கதைகளை பற்றி இங்கு காண்போம்.

மாயாவி ஆரம்பமே அமர்களமாக தான் ஆரம்பித்தார். ஆம், இந்த இயந்திரத் தலை மனிதர்கள் நம்முடைய எடிட்டர் விஜயன் சாரின் டாப் டென் கதைகளில் ஒன்றாகும். சுருக்கமாக சொல்வதென்றால், இது ஒரு பக்க கமர்ஷியல் படம், நம்ம "தமிழ்நாட்டு டாரண்டினோ" பேரரசு-இளைய தளபதி விஜய் கூட்டணியில் வரும் மசாலா தமிழ் படம் போல.

இரும்புக் கை மாயாவி - முத்து காமிக்ஸ் - இயந்திரத் தலை மனிதர்கள்  இரும்புக் கை மாயாவி - முத்து காமிக்ஸ் - விண்வெளி ஒற்றர்கள்
022 Iyanthira Thalai Manitharkal 125 Vinveli Otrarkal

அதன் பிறகும் சில பல வேளைகளில் மாயாவி (போரடிக்கும் போதெல்லாம்?) ஏதாவது ஒரு அயல் கிரக வில்லன்களுடன் மோதுவார். இந்த கதைகள் எல்லாம் ஆங்கிலத்தில் ஏதாவது ஆண்டுமலரிலோ, அல்லது வேறு ஸ்பெஷல் இதழிலோ ஒரு சிறு கதையாக வந்து இருக்கும். அதனால், இதோ, அப்படி வந்த ஒரு கதை - விண்வெளி ஒற்றர்கள்.

ஆனால், அடுத்து வந்த தவளை மனிதர்கள் அப்படி பட்ட கதை அல்ல. இது ஒரு முழு நீல கதை ஆகும். மாயாவியின் கதைகளில் இது ஒரு சிறப்பான மற்றும் முக்கியமான கதை ஆகும். ஏனெனில் இந்த கதையில் தான் மாயாவி மின்சாரத்தை கடத்தும் ஆற்றலை பெறுகிறார். அதன் மூலம் அதனை ஒரு ஆயுதமாகவே பின்னாளில் பயன் படுத்தவும் செய்கிறார்.

இரும்புக்கை மாயாவி - முத்து காமிக்ஸ் - தவளை மனிதர்கள்  இரும்புக்கை மாயாவி - முத்து காமிக்ஸ் - விண்வெளி விபத்து 
MuthuComics132ThavalaiManidhargal_th Muthu Comics Steel Claw Vinveli Vibathu Cover[3]

அடுத்து வந்த விண்வெளி விபத்து கதை தான் பின்னாளில் ஹாலிவுட்டில் சுடப்பட்டு ஸ்பீசிஸ் என்ற பெயரில் வந்தது. ஆமாம், விண்வெளியில் இருந்து திரும்பும் ஒரு விண்வெளி வீரரின் உடலில் வேற்று கிரக சக்தி ஒன்று புகுந்துக் கொண்டு அட்டுழியம் செய்வதை மாயாவி எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை.

விண்வெளி கொள்ளையர் கதை சமீபத்தில் தான் காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழில் வந்தது. அதனால் அதனைப் பற்றி பெரிய அளவில் சொல்ல வேண்டி இருக்காது. மேல் விவரங்களுக்கு அகோதீக தலைவரின் இந்த பதிவினை கவனிக்கவும்.

இரும்புக்கை மாயாவி - முத்து காமிக்ஸ் - விண்வெளி கொள்ளையர் இரும்புக்கை மாயாவி - முத்து காமிக்ஸ் - மாயாவிக்கொரு சவால்
MuthuComicsNo.144VinvelikKollaiyarCo[2] 170 Maayavikkoru Savaal

மாயாவிக்கொரு சவால் கதையை மிகவும் சிறப்பாக விளம்பரப்படுத்திருப்பார்கள். நானும் அதனை நம்பி வாங்கினேன், தவறில்லை. ஆனால், கதை வெறும் பதினாறு பக்கம்தான். மீதம் இறுக்கம் நூற்றி முப்பது பக்கங்களுக்கு மற்றுமொரு ஹீரோவின் கதையை வெளியிட்டு விட்டார் ஆசிரியர்.

அடுத்து வந்த சைத்தான் சிறுவர்கள் கதை காமிக்ஸ் உலகில் ஒரு மைல் கல் என்று கூட சொல்லலாம். ஏனெனில், இதன் பதிப்பிற்கு பின்னல் ஒரு பெரிய கதையே உள்ளது. அதாவது, எண்பதுகளில் இந்த கதையை கேட்டு ஆசிரியர் இங்கிலாந்தில் இருக்கும் உரிமை நிறுவனத்திற்கு கடிதம் எழுதினர். அவர்களும் ஒப்புக் கொண்டு விட்டனர். அதனை தொடர்ந்து ஆசிரியரும் விளம்பரங்களை வெளியிடலானார். ஆனால், அந்தோ பரிதாபம், குறித்த நேரத்தில் கதையின் இரண்டாம் பாகமே வந்து சேர்ந்தது. முதல் பாகத்தை கேட்டு தந்தி அடித்தால் - அதை விட கொடுமை - ஆம், அந்த உரிமை நிறுவனமே தண்ணீரில் மூழ்கி விட்டதாம். அதனால் உடனடியாக அனுப்ப இயலாது என்றும் கூறிவிட்டனர். 

வேறு வழி இல்லாத ஆசிரியர் முதல் பகுதியை சற்று ஒப்பேற்றி கதையை வெளியிட்டார். அதில் தான் அவரின் முழு திறமையும் இருக்கிறது. ஆம், அந்த கதை ஒரு ஒப்பேற்றப்பட்ட ஆரம்பம் என்பது சமீப காலம் வரை (அதாவது ஆங்கில ஒரிஜினலை நான் காணும் வரை) யாருக்கும் தெரியாமலே இருந்து வந்தது. பின்னர் அந்த கதையை தான் ஆசிரியர் நூறு ருபாய் ஸ்பெஷல் இதழில் வெளியிட்டார்.

இரும்புக்கை மாயாவி - முத்து காமிக்ஸ் - சைத்தான் சிறுவர்கள் இரும்புக்கை மாயாவி - முத்து காமிக்ஸ் -இயந்திரத் தலை மனிதர்கள் 
Muthu172SaithaanSiruvargal4 Muthu Comics iyandhirathalai manidhargal

அடுத்து வந்தவை பெரும்பாலும் மறுபதிப்புகளே. ஆனாலும் சிறப்பான அளவில் விற்பனை ஆன புத்தகங்கள் இவை. இயந்திரத் தலை மனிதர்களும் தவளை மனிதர்களும் அந்த வரிசையில் சேரும்.

   
239 Thavalai Manithargal New_CC Cover 04 iyandhirathalai manidhargal

சரி, போதும் மொக்கை போட்டது என்று பதிவினை முடிக்க நினைத்தால் நேற்று ஒரு சம்பவம் நடந்தது. அதாவது நமது பெங்களூரு விண்வெளி மையத்தில் தாக்குதல் என்பது தான் அந்த தகவல். இதோ, அந்த தகவலுக்கான சுட்டி: Maalaimalar

Malaimalar news headlines

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன், 
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

19 comments:

 1. மீ த ஃபர்ஸ்ட்டு!

  பதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 2. //இது ஒரு முழு நீல கதை ஆகும். //

  அப்படீன்னா இது ஒரு மேட்டர் கதையா?

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 3. //இது ஒரு பக்க கமர்ஷியல் படம்//

  கதைய ஒரு பக்கத்துல எழுதீரலாம்னா அது இதுதானா?

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 4. //ஏனெனில் இந்த கதையில் தான் மாயாவி மின்சாரத்தை கடத்தும் ஆற்றலை பெறுகிறார்.//

  ஆற்காட்டார் புண்ணியத்துல இங்க அவனவன் கரண்டில்லாம கஷ்டப்படும் போது...ங்கொய்யால...மாயாவி கரண்ட அண்டை மாநிலத்துக்கு கடத்துராராமில்ல...புடிங்கடா அவன...அடைங்கடா ஜெயில்ல...

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 5. //ஏனெனில் இந்த கதையில் தான் மாயாவி மின்சாரத்தை கடத்தும் ஆற்றலை பெறுகிறார்.//

  ஆக்சுவல்லி, அவர் மின்சாரத்தை பாய்ச்சும் ஆற்றலைப் பெறுகிறார்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 6. ஏதேது?

  தலைவர் இன்று புல் பார்மில் இருக்கிறார் போலிருக்கிறதே?

  ReplyDelete
 7. //மாயாவிக்கொரு சவால் கதையை மிகவும் சிறப்பாக விளம்பரப்படுத்திருப்பார்கள். நானும் அதனை நம்பி வாங்கினேன்,//

  மீ டூ!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 8. //நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா?//

  இது என்ன ஸ்டாண்டர்ட் வசனமா? கொடுமையாக இருக்கே?

  ReplyDelete
 9. //ஏதேது?

  தலைவர் இன்று புல் பார்மில் இருக்கிறார் போலிருக்கிறதே?//

  பின்னே...நம்ம ஏரியாவுல கைய வச்சா...பின்னிருவோம்ல!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 10. தலைவரே, அவர் உங்கள் ஏரியாவில் எந்தப் பகுதியில் கையை வைத்தார்!! இந்தப் பின்னு பின்னுகிறீர்கள். முத்துவில் முழு நீல கதை வந்தது எனக்கு இன்றுதான் தெரிந்தது. படித்தால் கிளுகிளுப்பாக இருக்குமா. உணர்ச்சிகளில் மின்சாரம் பாயுமா. பருவ உணர்ச்சிகள் ஷாக் அடிக்குமா. தவளை மனிதர்கள் அட்டைப் படத்தில் மாயாவியின் இரும்புக்கரத்தில் இருப்பது ஜன்னலா அல்லது அது அவரது ஜாதகமா. இஸ்ரோ விண்வெளி மையத்தை தாக்கியது வேற்றுலக வாசிகளா. பதில் தாருங்கள்.

  ReplyDelete
 11. //புல் பார்மில் இருக்கிறார்// யார் அவரிற்கு புல் வாங்கிக் கொடுத்தது!!

  ReplyDelete
 12. தலைவரே,

  ஒத்தக் கையால் தட்டு தடுமாறி டைப்பிங் செய்து போடும் பதிவு இது. மன்னிக்கவும்.

  இருந்தாலும் இந்த கொலைவெறி ஆகாது சாரே.

  ReplyDelete
 13. தட்டு ஏன் டைப் அடிக்கிறது விரல்களால் அல்லவா அடிக்க வேண்டும்! நாங்களும் ஃபுல்! ஃபார்ம்

  ReplyDelete
 14. காதலரே,

  ஒத்தக் கையால் தட்டு தடுமாறி டைப்பிங் செய்து போடும் பதிவு இது. மன்னிக்கவும்.

  இருந்தாலும் இந்த கொலைவெறி ஆகாது உங்களுக்கு. அது என்னையா எதுகை மோனையோடு கேள்வி கேக்குறது? ரொம்ப ஓவர் ஆமாம்.

  ReplyDelete
 15. ஒலக காமிக்ஸ் ரசிகா!

  ஒற்றைக் கண் ஜாக், ஒற்றைக் கண் பிலிப் வரிசையில் ஒற்றைக் கை ஒலக காமிக்ஸ் ரசிகன். நல்லதொரு பதிவு!

  என்னதான் ஒற்றைக்கையால் தட்டு தடுமாறி டைப் செய்தாலும் 'நீளக் கதை'யை 'நீலக் கதை'யாக்கியது கொடுமை! இந்த போக்கு தொடர்ந்தால் தமிழர்கள் தங்களுடைய போர்க்குணத்தை (அப்படீன்னா...?) காட்ட வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறேன்.

  ReplyDelete
 16. அரசியல் கருத்துக்களை அள்ளி வீசும் அய்யம்பாளயத்தாரே,

  வருகைக்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து வருவது மகிழ்ச்சி.

  ReplyDelete
 17. அனைத்து ஸ்கான்களும் அருமை.

  அட்டைப்படங்கள் கண்ணை கவர்கின்றன.

  ReplyDelete
 18. விபத்தில் இருந்து மீண்டு வர வாழ்த்துக்கள்.

  ஒத்தைக் கையுடன் இரண்டு நாளில் இரண்டு பதிவுகளா?

  amazing.

  ReplyDelete
 19. வெறும் மாயாவி கதைகள் மட்டும் தானா? மாடஸ்டியின் 'பூமிக்கொரு பிளாக்மெயில்' மிகவும் வித்தியாசமான அயல்கிரகவாசிகளை பற்றிய கதை

  ReplyDelete

என்னுடைய வலைப்பூவை நீங்கள் படிக்கவில்லையெனில், படித்தவுடன் உங்களின் எண்ணங்களை தெரிவிக்கவில்லை எனில் உங்களிடம் அடிப்படையாகவே ஏதோ தவறு உள்ளது

Related Posts with Thumbnails