Tuesday, April 20, 2010

ஹிட்லர் - ஒரு சகாப்தம்

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.இன்று ஏப்ரல் இருபதாம் தேதி. இன்றுதான் ஹிட்லரின் பிறந்த நாள். (நீங்கள் தமிழ் விக்கிபீடியா படிப்பவரானால் இட்லர் என்றுதான் படிக்கவேண்டும், வேறுவழி இல்லை). இவரை பொறுத்தவரையில் ஒன்று இவரை ஹீரோவாக கொண்டாடுவார்கள் (எங்களைப் போன்றவர்கள்), அல்லது வில்லனாக உருவகப்படுதுவார்கள் (மற்ற சிலரைப் போல). வரலாறு என்பது எழுதப்படுவரின் எண்ணவோட்டத்தில் தான் இருக்கிறது என்பதை பொதுவானவர்கள் மறந்துவிடக்கூடாது. தற்போதைய இந்திய பள்ளிக்குழந்தைகள் பாட புத்தகங்களில் படிக்கும் விஷயங்களை பற்றி நாம் எப்போதாவது யோசித்து இருக்கிறோமா? தயவு செய்து அடுத்த முறை ஏதாவது ஒரு வரலாற்று பாடப்புத்தகதினை பார்த்தால் சும்மா புரட்டி பார்க்காமல் தயவு செய்து படித்து பார்க்க முயலவும். பல விடயங்கள் புலப்படும். 

சரி, சரி சீரியசான விஷயங்களை விட்டு விட்டு நம்ம மேட்டருக்கு வருவோம். இந்த நன்னாளில் நமது காமிக்ஸ் உலகில் இதுவரை ஹிட்லரையும், நாஜிக்களையும் மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு.பெரும்பாலான கதைகள் இங்கிலாந்தில் இருந்தே வந்தவை என்பதால் அதில் அனைத்திலும் ஹிட்லர் ஒரு வில்லனாகவே சித்தரிக்கப்பட்டு இருப்பார் என்பது வேறு விடயம். அதனைப்போலவே இங்கிலாந்து ராணுவ வீரர்கள் அனைவரும் யோக்கியமான ஹீரோக்கள் போல இருப்பார்கள். வேறு வழி இல்லை. சகித்துக் கொண்டே ஆகவேண்டும்.

ஹிட்லரை நேரிடையாக சம்பந்தப்படுத்தி இரண்டே இரண்டு காமிக்ஸ் கதைகள் தான் வந்துள்ளன (தவறாக இருந்தால் திருத்தவும் - இந்த பதிவு அவசரமாக போடப்படும் ஒன்று - தகவல் சரிபார்க்க நேரமில்லை). அதில் ஒன்றில் தலைப்பே மீண்டும் ஹிட்லர். கதையை நான் பலமுறை படித்து இருந்தாலும் இதன் அட்டைப்படதினை நான் இன்றுதான் பார்த்தேன். நண்பர் முத்து விசிறி அவர்கள் தான் அளித்தார். நண்பர்கள் சிலரிடம் கேட்டும் பயனில்லை. முத்து விசிறி வாழ்க.

லயன் காமிக்ஸ் - இரட்டை வேட்டையர் சாகசம் - மீண்டும் ஹிட்லர் - சூப்பர் ஹிட் கதை - பார்ப்பதற்கரிய அட்டைப்படம் 

032 Meendum Hitler

இரண்டாம் உலகப்போர் முடிந்து சுமார் இருவது வருடங்கள் கழித்து ஹிட்லரின் மகன் தனியொரு ராணுவத்தினை சேர்த்து மறுபடியும் இங்கிலாந்தினை தக்க முயல்வதே கதையின் சாராம்சம். அவர்களின் அட்டகாசத்தையும், அதனை உங்களின் அபிமான ஜோடி அடக்கும் சாகசத்தையும் இந்த கதையில் ரசிக்கலாம்.

அடுத்ததாக நாம் பார்க்கவிருப்பது இரும்புக் கை நாமனின் ரீ என்ட்ரி. ஆம், சுமார் ஐந்து வருடங்கள் கழித்து இரும்புக் கை நார்மனின் கதை வந்தது. எனக்கு மிகவும் பிடித்த கதை நாயகன் இவர். இவரின் முதல் கதையை படித்து விட்டு நான் சிறுவயதில் அழுதது கூட உண்டாம். இந்த இரண்டாவது கதையில் இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருக்கும்போது ஹிட்லரைப்போலவே ஒருவர் இருப்பதை நேசநாடுகள் கண்டுபிடிப்பார்கள் (போலி ஹிட்லர்). அந்த போலி ஹிட்லரை பத்திரமாக கொணரும் பொறுப்பினை நார்மனிடம் ஒப்படைப்பார்கள். நகைச்சுவையோடு சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட இந்த கதை அருமையான ஒன்று.

லயன் காமிக்ஸ் - இரும்பிக் கை நார்மன் சாகசம் - மரணத்தின் நிழலில்- இரண்டாவது கதை

075 Maranathin Nizhalil Cover

மின்னல் படையினரை யாரால் மறக்க முடியும்? இவர்களின் படையை பற்றிய முழுமையான விவரங்களுக்கு வேண்டப்படாத நண்பர் (வேண்டப்பட்ட விரோதியின் எதிர்ப்பதம்) பயங்கரவாதி டாக்டர் செவனின் இந்த பதிவினைப் படிக்கவும்.

மாகக் கோட்டை மர்மம்: ஹிட்லருக்கு ஆல்ப்ஸ் மலையில் ஒரு ரகசிய மறைவிடம் இருப்பதை கண்டறியும் நேசநாடுகள் அதனை ஒழிக்கும் பொறுப்பை மின்னல் படையிடம் ஒப்படைப்பார்கள். அந்த சாகசம் இந்த இதழில் உள்ளது. 

எஜன்ட் ஈகிள்:அடுத்தபடியாக லயன் காமிக்ஸ் விபரீத விதவை இதழில் பக்க நிரப்பியாக ஒரு கதை இருந்தது. அற்புதமான ஹீரோ ஒருவரைப்பற்றிய கதை அது. இங்கிலாந்து கதைகளை ஆங்கிலத்தில் படித்த நண்பர்கள் இந்த கதையை பற்றி மனிக்கனக்கில் சிலாகிப்பார்கள். அத்துணை அருமையான கதை வரிசை அது. முடிந்தால் படித்துப் பாருங்கள். நீங்களும் ரசிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

லயன் காமிக்ஸ் - மேகக்கோட்டை மர்மம் - மின்னல் படையினர் சாகசம்

எஜன்ட் ஈகிள் - ஒருமுறை மட்டுமே வந்த சாகசம்

Lion Comics No.125 - Mega-k-Kottai Marmam - Cover  LionComicsNo.125MegakKottaiMarmamPag[1] lion Comics Issue 113 June 1995 Vibareedha Vidhavai War Story Agent Nelson Fleetway Original

என்னால் மறக்கவே முடியாத காமிக்ஸ் ஹீரோக்களில் ஒருவர் இரும்புக் கை நார்மன். அவரின் முதல் கதையாகிய மனித எரிமலையை படித்த அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். அடுத்து அவரது இரத்தக் கண்ணீர் கதை கண்ணில் உண்மையிலேயே இரத்தக் கண்ணீரை வரவழைக்கும்.

இரும்புக் கை நார்மன் - முதல் கதை விளம்பரம்

இரும்புக் கை நார்மன் - முதல் கதை விளம்பரம்

Editor S Vijayan's Tour 1 Lion Comics Issue No 20 Africa Sahi Intro Norman_thumb[1] Editor S Vijayan's Tour 1 Lion Comics Issue No 20 Africa Sathi Intro Norman 2_thumb[2]

இந்த அட்டைப்படம் ஒரு சூப்பர் படைப்பாகும். அந்த நாட்களில் இரும்புக்கை மாயாவி மோகம் தலைவிரித்தாடிய காலம். இரும்புக் கையுடன் ஒரு ஹீரோ கிடைத்தாலே போதும், புகுந்து விளையாடுவார்கள் நமது காமிக்ஸ் எடிட்டர்கள். இப்படியாக வந்த காமிக்ஸ் ஹீரோக்களில் ஒருவர்தான் இவர் (என்று சொல்ல ஆசை) ஆனால் உண்மையில் ஒரு உணர்ச்சிபூர்வமான கதை இது. படிக்கதவராதீர்கள்.

இரும்புக் கை நார்மன்- மனித எரிமலை

லயன் தீபாவளி மலர் - நார்மன் அட்டையில்

Lion#021 - Manidha Erimalai_thumb[2] Lion031DeepavaliMalar86_thumb4

ஒரு காலகட்டத்தில் விளம்பரங்களின் மூலம் ஆர்வத்தினை தூண்டி நம்மையெல்லாம் வாங்க வைத்தார் எடிட்டர் விஜயன் சார். இப்போது? எங்க வைக்கும் படங்கள் இவை.

நார்மன் கதை விளம்பரம்  - இரத்தக் கண்ணீர்

நார்மன் கதை விளம்பரம் -பனிமலையில் ஒரு கொலை 

DiwaliMalar1987Ad1_thumb2 KodaiMala61986Ad2_thumb2

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,  
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

16 comments:

  1. மீ த ஃபர்ஸ்ட்டு!

    பதிவில் அரசியல் நெடி வீசுவதால் மீ த எஸ்கேப்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  2. இட்லர் இட்லி விரும்பி சாப்புடுவாரோ? அதனால் இட்டாலியுடன் சுமூகமான உறவுகள் நிலவியதோ?

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  3. ஒலக காமிக்ஸ் ரசிகரே, இட்லரின் இளவலே, நாஜிக்களின் நாயகனே,

    அமரர் இட்லர் அவர்கள் நினைவுதினத்தையொட்டி தாங்கள் வழங்கியிருக்கும் இந்தப் பதிவில் உள்ள ஸ்கேன்கள் மிகவும் சிறப்பாக உள்ளன.

    மிஸ்டர் தவளை, எறும்புப் பட்டாளம், என ஸ்பைடரிற்கு ஏற்ற வில்லன்களின் அணி அபாரமாகவுள்ளது. ஸ்பைடரின் மார்க்கச்சையின் கவர்சியே தனி :)

    நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  4. ஒலக காமிக்ஸ் ரசிகா!

    காமிக்ஸை பொறுத்தவரை ஹிட்லர் ஒரு வில்லன்தான். ஆனால் இந்திய வரலாற்றை பார்த்தோமானால் ஹிட்லர் ஒரு ஹீரோவாக போற்றப்பட வேண்டியவர். ஆங்கில வந்தேறிகளை எதிர்க்க நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்திற்கு உதவியது முதல் வீரன் செண்பகராமன் ஆங்கில ஆதிக்கத்தில் இருந்த சென்னையின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்த துணை புரிந்தது வரை எத்தனையோ வழிகளில் ஹிட்லர் இந்திய விடுதலைக்கு உதவியுள்ளார்.

    இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் அமெரிக்காவின் அணுகுண்டாலும், ஜெர்மனி ரஷ்யாவின் மீது தவறான ஒரு பருவகாலத்தில் தாக்குதல் நடத்தியதாலும் தோற்கடிக்கப்பட்டது. இங்குதான் இந்தியாவின் துரதிஷ்டம் பல்லை இளித்தது.

    ஜெர்மனியையும், ஜப்பானையும் நம்பி இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் முன்னேறி கெர்ண்டிருந்த நேதாஜின் படைகள் பலத்த தோல்வியை சந்தித்தன. நேதாஜியும் விமான விபத்தில் 'கொல்ல'ப்பட்டார்.

    ஊசி தங்கம் என்பதற்காக அதனை வயிற்றில் குத்திக் கொள்ளும் மேல்தட்டு மேதாவி அரசியல்வாதிகள் இந்திய தலையெழுத்தை நிர்ணயிக்கும் நிலைக்கு வந்தனர்.

    அடிமைப்படுத்திய ஆங்கிலேயன் ஹீரோவாகவும், விடுதலைக்கு உதவிய ஹிட்லர் முதலானவர்கள் வில்லன்களாக இந்திய வரலாற்றில் புனையப்பட்டனர்.

    யூதர்கள் விடயத்தில் ஹிட்லர் தவறு செய்திருக்கலாம். ஆனால், முதல் உலகப்போரின் முடிவில் ஏற்பட்ட வெர்சல்ஸ் உடன்படிக்கையில் ஜெர்மனி எப்படி வஞ்சிக்ப்பட்டது என்பதை அறிந்தால் ஹிட்லரின் போர்க்குணத்தின் காரணம் புரியும்.

    வரலாற்றை பார்த்தோமானால்-அளவுக்கு மீறி ஒரு இனம் மற்ற இனத்தால் இம்சிக்கப்படும் போது இம்சிக்கப்படும் இனம் மனித நேயத்தை மறந்து பதிலடியில் இறங்குவது தவிர்க்கஇயலாத ஒரு துயரம் என்பதை மறுக்க இயலாது.

    இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட இரும்புக்கை நார்மன் காமிக்ஸ்களை படிக்கும் போது ஒரு விதத்தில் நார்மன் ஜெயிக்க வேண்டும் என்று மனம் எண்ணினாலும், ஹிட்லரின் மீதான எனது அபிமானம் என்றும் குறைந்ததில்லை.

    இந்திய விடுதலைபோர் நடந்த காலத்தில் ஜெர்மனியை ஒதுக்கி வைத்து ஏமாந்து போன இந்திய மேதாவிகள் தான் இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு யூதர்களின் இஸ்ரேலை ஒதுக்கி வைத்து மீண்டும் ஒருமுறை தங்க ஊசியை வயிற்றில் குத்திக் கொண்டார்கள்.

    எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படை அரசியல் கோட்பாட்டை தந்த சாணக்கியன் பிறந்த நாடுதான் இந்தியா. ஆனால் நண்பன் யார் எதிரி யார் என்றே தெரியாத நிலையில் இந்தியாவின் வல்லரசு கனவு சற்றே அதிகம் தான்!

    ReplyDelete
  5. நண்பரே,முத்து காமிக்ஸில் வெளிவந்த "ஜானி IN பாரிஸ்" கதையும் ஹிட்லர் சம்பந்ட்தபட்ட கதையே என ஞாபகம்.

    \\எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படை அரசியல் கோட்பாட்டை தந்த சாணக்கியன் பிறந்த நாடுதான் இந்தியா. ஆனால் நண்பன் யார் எதிரி யார் என்றே தெரியாத நிலையில் இந்தியாவின் வல்லரசு கனவு சற்றே அதிகம் தான்!\\

    இந்தியாவை பொறுத்த வரை இன்றும் இது உண்மையாகவே இருக்கிறது.

    ReplyDelete
  6. அனல் பறக்கும் அரசியல் கருத்துக்களை அள்ளி வீசும் அய்யம்பாளையத்தாரே...

    //அடிமைப்படுத்திய ஆங்கிலேயன் ஹீரோவாகவும், விடுதலைக்கு உதவிய ஹிட்லர் முதலானவர்கள் வில்லன்களாக இந்திய வரலாற்றில் புனையப்பட்டனர். //

    உலக வரலாற்றிலும் அப்படித்தான்! வெற்றி பெற்றவர்களுக்கு கிடைக்கும் பரிசுகளில் ஒன்று வரலாற்றை அவர்களுக்கு சாதகமாக எழுதும் வாய்ப்பு! இது உலக நியதி!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  7. சிவ்,

    //நண்பரே,முத்து காமிக்ஸில் வெளிவந்த "ஜானி IN பாரிஸ்" கதையும் ஹிட்லர் சம்பந்ட்தபட்ட கதையே என ஞாபகம்.//

    அது வேறொரு சரித்திரம்! ஃப்ரெஞ்சு உள்நாட்டு அரசியல் சம்பந்தப்பட்ட விஷயம்! இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பிறகு நடந்த சமாச்சாரம்!

    அதுக்கும் ஹிட்லருக்கும் சம்பந்தம் கிடையாது! மைல்டாக வேண்டுமானால் ஒரு சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்!

    ஜானி IN பாரீஸ் குறித்து விரைவில் அ.கொ.தீ.க.வில் பதிவு அரங்கேறும்! ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  8. நான் அப்பவே சொன்னேன்...அரசியல் வாடை அதிகமா வீசுதுன்னு!

    இப்ப பாருங்க...அய்யம்பாளையத்தாரை இனி யாராலும் அடக்க முடியாதூ!

    அதனால மீண்டும் மீ த எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  9. அனல் பறக்கும் அரசியல் கருத்துக்களை அள்ளி வீசும் அய்யம்பாளையத்தாரே...

    //யூதர்கள் விடயத்தில் ஹிட்லர் தவறு செய்திருக்கலாம். ஆனால், முதல் உலகப்போரின் முடிவில் ஏற்பட்ட வெர்சல்ஸ் உடன்படிக்கையில் ஜெர்மனி எப்படி வஞ்சிக்ப்பட்டது என்பதை அறிந்தால் ஹிட்லரின் போர்க்குணத்தின் காரணம் புரியும்.//

    இதைப் படிக்கும் போது சிரிக்கும் மரணம் கதையில் ஜோக்கர் சொல்லும் ஒரு வசனம் ஞாபகத்திற்கு வருகிறது!

    “அது போகட்டும் - இரண்டாவது உலக மகா யுத்தத்தை தூண்டிய விஷயம் எது என்றாவது தெரியுமா? ஜெர்மனி எத்தனை தந்திக் கம்பங்களை தனக்கு முந்தைய யுத்தத்தில் உதவிய நாடுகளுக்கு கடன்பட்டிருக்கிறது என்ற ஒரு அற்ப சர்ச்சை! தந்திக் கம்பங்கள்! ஹா-ஹா-ஹா!”

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  10. என்னங்க நடக்குது இங்க?

    கொஞ்ச நேரம் வெளில ஒரு மீட்டிங் போயிட்டு வந்த வலைதளமே ரணகளமாகி அதகளமாக இருக்கே?

    அய்யம் சார் வாழ்க. என்னுடைய கருத்துக்களை அப்படியே Xerox எடுத்து சொன்ன மாதிரி இருக்குது அவரின் எண்ணங்கள்.

    ReplyDelete
  11. மத்த கமெண்ட்டுகள் எல்லாம் லேட் நைட்டில்.

    மீ த எஸ்கேப் டு ஹோம்.

    ReplyDelete
  12. //ஸ்பைடரின் மார்க்கச்சையின் கவர்சியே தனி :)//

    ஆரம்பிச்சுட்டாங்கையா, ஆரம்பிச்சுட்டாங்க.

    பை தி வே, மீ த Back.

    ReplyDelete
  13. இரும்புக்கை நார்மன் எனக்கும் ரொம்ப பிடிக்கும் தல.....ஹீரோவோட characterisation எனக்கு ரொம்ப பிடிச்ச ஒண்ணு.....மனித எரிமலை கதைய படமாவே எடுக்கலாம். அத stallone வச்சு படமா எடுத்தா....நினைக்கவே ஜில்லுனு இருக்கே.....

    // எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படை அரசியல் கோட்பாட்டை தந்த சாணக்கியன் பிறந்த நாடுதான் இந்தியா. ஆனால் நண்பன் யார் எதிரி யார் என்றே தெரியாத நிலையில் இந்தியாவின் வல்லரசு கனவு சற்றே அதிகம் தான்!//

    செருப்படி...

    ReplyDelete
  14. பதிவ விட அந்த கருத்தும் கமென்ட்டுகளும் எனக்கு ரொம்ப லைக் ஆயிடுச்சு.

    ReplyDelete
  15. //ஊசி தங்கம் என்பதற்காக அதனை வயிற்றில் குத்திக் கொள்ளும் மேல்தட்டு மேதாவி அரசியல்வாதிகள் இந்திய தலையெழுத்தை நிர்ணயிக்கும் நிலைக்கு வந்தனர்.//

    அரசியல்வாதிகள்னாலே தியாகிகள்தானே!

    ReplyDelete
  16. நார்மன் உண்மைக்கு மிக அருகில் படைக்கப்பட்டவர். படித்த போது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியவர்.

    ReplyDelete

என்னுடைய வலைப்பூவை நீங்கள் படிக்கவில்லையெனில், படித்தவுடன் உங்களின் எண்ணங்களை தெரிவிக்கவில்லை எனில் உங்களிடம் அடிப்படையாகவே ஏதோ தவறு உள்ளது

Related Posts with Thumbnails