Thursday, April 22, 2010

அய்யம்பாளயத்தாரின் அதிரடி அரசியல் பிரவேசம்

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். தமிழ் காமிக்ஸ் உலகில் பல பதிவர்கள் இருந்தாலும்கூட தனியிடத்தினை பிடித்தவர் திரு அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்கள். யாருக்கும் அஞ்சாமை, சீரிய சிந்தனை, நேர்மையான போக்கு, என்று பல குணாதிசயங்களை கொண்ட இவர் சுலபத்தில் அனைவரின் கருத்தினையும் கவர்ந்தவர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

தன்னுடைய காமிக்ஸ் பூக்கள் என்ற சிறுவர் இலக்கிய சிந்தனை வலைப்பூவிலேயே பல அனல் கக்கும் அரசியல் கருத்துக்களை அஞ்சாமல் அள்ளி வீசுபவர் அய்யம்பாளையம் சார் என்பது அவரின் வலைதளத்தினை தொடர்பவர்களுக்கு நன்றாக தெரியும். பல நாட்களாக தன்னுடைய கொள்கைகளை வகுத்துக்கொண்டிருந்த நண்பர் இப்போது அரசியல் உலகில் அடியெடுத்து வைக்கிறார். மிக, மிக விரைவில் கோட்டைக்கு போகப் போகும் அவரைப் பாராட்டி, இந்த நாளில் நமது காமிக்ஸ் உலகில் இதுவரை கோட்டைகளை மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு.

முதன் முதலில் விஜயன் சாரின் தயாரிப்பில் வந்த கோட்டை கதை இதுதான். இந்த கதையை ராணி காமிக்ஸ் மறுபடியும் வெளியிட்டார்கள். அட்டைப்படம் அட்டகாசம்.

லயன் காமிக்ஸ் Issue No 011 - மாடஸ்டி ப்ளைசி - மரணக் கோட்டை – Death of a Jester

Lion011MaranaKottai2

தொன்னூறுகளில் வெளிவந்த பார்வதி சித்திரக்கதை புத்தகங்களில் வாண்டுமாமா அவர்களின் சிறந்த கதைகள் வெளிவந்தன. அவற்றில் இரண்டு.

பார்வதி சித்திரக் கதைகள் - வாண்டுமாமா - ஓநாய்க் கோட்டை - அங்கதன் கோட்டை அதிசயம்

PCK Onaaik Kottai
PCK Angadhan Kottai Athisayam

ராணி காமிக்ஸ் இதழ்களில் பல கோட்டை சம்பந்தமான கதைகள் வந்தன. அவற்றில் சிலவற்றை உங்களின் பார்வைக்கு வைத்துள்ளேன்.

ராணி காமிக்ஸ் - ஆசிரியர் ராமஜெயம் - கிட கார்சன் சாகசம் - மரக்கோட்டை - அற்புதமான கதை

Rani Comics Marak Kottai

ராணி காமிக்ஸ் - ஆசிரியர் ராமஜெயம் - ஜூலி சாகசம் - பீரங்கிக் கோட்டை - சென்சார் செய்யப்பட்ட படங்கள்

Rani Comics Beerangi Kottai

ராணி காமிக்ஸ் - கொத்தியவர் அ.மா.சாமி - கோட்டைக்குள் குத்து வெட்டு - கிட கார்சன்

Rani Comics Kottaikkul Kuthu Vettu

ராணி காமிக்ஸ் - கொத்தியவர் அ.மா.சாமி - மர்மக் கோட்டை - பெண் சி.ஐ.டி மாடஸ்தி

Rani Comics Marma Kottai

ராணி காமிக்ஸ் - கொத்தியவர் அ.மா.சாமி - கடல் கோட்டை - நெஞ்சை அள்ளும் படக்கதை 

Rani Comics Kadal Kottai

ராணி காமிக்ஸ் - கொத்தியவர் அ.மா.சாமி - கடல் கோட்டை - முகமூடி வீரர் மாயாவி சாகசம்

Rani Comics Kadal Kottai Phantom

ராணி காமிக்ஸ் - கொத்தியவர் அ.மா.சாமி - கொலைகாரன் கோட்டை - கிட கார்சன் சாகசம்

Rani Comics Kolaikaran Kottai

வாண்டுமாமா அவர்களின் எழுத்தில் கோட்டை சார்ந்த மேலும் இரண்டு கதைகள் உங்களின் பார்வைக்கு. இவற்றில் இந்த கரடிக் கோட்டை புத்தகம் இன்னமும் விற்பனைக்கு உள்ளது. மேல் விவரங்களுக்கு இந்த பதிவினை படிக்கவும்.

வாண்டுமாமா - நெருப்பு கோட்டை - இல்லாத புத்தகம்

வாண்டுமாமா - கரடி கோட்டை

Palaniappa Brothers OO81 Neruppu Kottai Karadikkottai

தமிழ் காமிக்ஸ் உலகில் கேப்டன் பிரின்சை தெரியாதவர்கள் குறைவே. அவரின் ஒரே கதை இரண்டு பதிப்பகங்களின் மூலம் வந்துள்ளது. பார்த்து ரசியுங்கள்.

ஸ்டார் காமிக்ஸ் - பனிமலைக்கோட்டை

திகில் காமிக்ஸ் - பனி மண்டல கோட்டை

star comics pani mandala kottai Thigil Comics Pani mandala kottai

வாசகர்களுக்கு ஒரு போட்டி: அரசியல் உலகில் அடியெடுத்து வைக்கும் அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் சாருக்கு பிற்காலத்தில் அரசியல் விடிவெள்ளி, வாழும் கலைஞர், ஓடும் வள்ளுவர் என்றெல்லாம் பட்டப்பெயர்கள் வழங்கப்படும். ஆனால், இப்போதைய நிலையில் (பேரரசர் என்பதை தவிர) வேறு பட்டப்பெயர்கள் இல்லாமல் இருக்கிறார் அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் சார். ஒரு அரசியல்வாதிக்கு அழகே பட்டப்பெயர் தான். ஆகையால் நமது அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் சாருக்கு ஒரு சரியான பட்டப்பெயரை தேர்ந்தெடுத்து வழங்குங்கள்.  பொருத்தமான பெயரை வழங்குபவர்களுக்கு பரிசு பதவி வழங்கப்படும்.

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,  
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

22 comments:

  1. மீ த ஃபர்ஸ்ட்டு!

    அடச்சே, மீ த செகண்டு.

    பதிவைப் படித்து முடித்து விட்டு மீண்டும் வருகிறேன்! மன்னிக்கவும், பதிவை பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்.

    ReplyDelete
  2. கடற்கோட்டை மர்மம் (திகில்), கற்கோட்டைப் புதையல் (முத்து), ஆகாயக் கோட்டை (லயன் விடுமுறை மலர்) அட்டைப்படங்கள் எல்லாம் விட்டுட்டீங்களே!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  3. தலைவரே,

    அதெல்லாம் சரி. சார் தேர்தல்ல ஜெயிச்சு உண்மையில் கோட்டைக்கு போகும்போது சிறப்பு பதிவிட வேண்டாமா? அப்போது சில பல கவர்கள் தேவை.

    //கடற்கோட்டை மர்மம் (திகில்), கற்கோட்டைப் புதையல் (முத்து), ஆகாயக் கோட்டை (லயன் விடுமுறை மலர்) அட்டைப்படங்கள் எல்லாம் விட்டுட்டீங்களே!//
    இதைதவிர

    பார்வதி சித்திரக் கதை - கரடிக்கொட்டை
    ராணி காமிக்ஸ் - மந்திரக் கோட்டை (வேதாளர்)
    இந்திரஜால் காமிக்ஸ் - மாயக்கோட்டை மதில் (மாண்டிரெக் கதை)
    ராணி காமிக்ஸ் - பேய் கோட்டை (வேதாளர் சாகசம்)
    ராணி காமிக்ஸ் - கோட்டைக்குள் வேட்டை (வேதாளர் - அரசியல்வாதிக்கு பொருத்தமாக இருக்கும்)
    ராணி காமிக்ஸ் - பேய் கோட்டை (மறுபடியும் வேறொரு புத்தகம் - பீரங்கி கோட்டை ரீபிரின்ட்)
    ராணி காமிக்ஸ் - மாயக் கோட்டை (அக்னிபுத்திரா சாகசம்)
    ராணி காமிக்ஸ் - கரடி கோட்டை (கரும்புலி சாகசம்)
    ராணி காமிக்ஸ் - கல் கோட்டை (வேதாளர் சாகசம்)
    முத்து காமிக்ஸ் - கழுகு மலை கோட்டை
    முத்து காமிக்ஸ் - கழுகு மலை கோட்டை - ரீபிரின்ட்

    என்று பல கதைகள் உள்ளன. அவற்றை எல்லாம் பதவியேற்கும் நாளில் வெளியிட உள்ளேன்.

    ReplyDelete
  4. //அரசியல் விடிவெள்ளி, வாழும் கலைஞர், ஓடும் வள்ளுவர்//

    யாரையோ குத்துர மாதிரி இருக்கே?

    ReplyDelete
  5. http://poongaavanamkaathav.blogspot.com/2010/04/7.html

    //நம்முடனே பல பதிவுகளின் மூலம் தம்முடைய கருத்துக்களை அளித்த தென்னம்பாளயத்தார் அவர்கள் திடீரென்று அதிரடியாக அரசியலில் குதித்துள்ளார். கோட்டையை நோக்கி சென்றுக் கொண்டு இருந்த அவரை அண்டவெளி ரசிகர் ஒருவர் பார்த்து விட்டு சிலபல புகைப்படங்களை ஆதாரமாக வேறு எடுத்துவிட, வேறு வழியில்லாத தென்னம்பாளயத்தார் தான் கோட்டையை நோக்கி முன்னேறுவதை ஒப்புக் கொண்டு தன்னுடய அரசியல் பிரவேசத்தினைஉறுதி செய்தார். அதனைப் பற்றிய ஒரு முழுநீள பதிவினை வேறவதாவது தளத்தில் இந்த வாரம் படியுங்கள்.//

    OK. Got It.

    ReplyDelete
  6. ஒலக காமிக்ஸ் ரசிகா!

    ராஜா, ராணி, கோட்டை.... அடுத்தடுத்த பதிவுகள் போகிற போக்கு ஒரு மார்க்கமாகத்தான் இருக்கிறது!

    உலக மற்றும் உள்ளூர் தமிழர்களே!

    திருச்சியில் உள்ள மேலக் கல்கண்டார்'கோட்டை'க்கு செல்கிறேன் என்று நான் கூறியதை நம்பி என்னை அரசியலில் இறக்கி விட்ட ஒலக காமிக்ஸ் ரசிகனை நம்ப வேண்டாம்.

    இருப்பினும் தொண்டர்களும் குண்டர்களும் கண்ணீரும் கம்பளையுமாக வேண்டிக் கொண்டால் தமிழர்களை காப்பாற்ற அரசியலில் இறங்க...நான்... இல்லையில்லை நாங்கள் தயார்... என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  7. ஒலக காமிக்ஸ் ரசிகா!

    அவசரப்பட்டு அறிக்கை விட்டாச்சு! ஆனா... ஒண்ணு இடிக்குதே! இப்போது கோட்டைக்கு போய் எலியைதான் புடிக்க முடியும். சட்டமன்றத்தைதான் அந்த பெட்ரோல் டேங்கருக்கு மாத்திட்டாங்களே.

    ReplyDelete
  8. கோடானுகோடி பொதுமக்களின் நலன்கருதி

    //இருப்பினும் தொண்டர்களும் குண்டர்களும் கண்ணீரும் கம்பளையுமாக வேண்டிக் கொண்டால் தமிழர்களை காப்பாற்ற அரசியலில் இறங்க...நான்... இல்லையில்லை நாங்கள் தயார்... என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்//

    அரசியலில் இறங்கிய எங்கள் அண்ணன், வாழும் வள்ளுவன், திருச்சி கண்ட தியாக செம்மல், தமிழகத்தின் தலைமகன், உண்மையான தமிழின தலைவன் அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்கள் வாழ்க, வாழ்க.

    ReplyDelete
  9. //சட்டமன்றத்தைதான் அந்த பெட்ரோல் டேங்கருக்கு மாத்திட்டாங்களே//

    இதாங்க, சாரோட ஸ்டைல். பார்த்தீங்கள்ள, எதையும் நேரிடையாகவே சொல்லிடுவார் சார்.

    அடிச்சு ஆடுங்க சார்.

    ReplyDelete
  10. ஒலக காமிக்ஸ் ரசிகரே, கோட்டைகளின் கோமானே, அகழி முதலைகளிற்கு ஆபாந்த்பாவனே....

    ஒரு எழுத்துப் பிழை நேரிடினும் விபரீதமான ஒரு முடிவை நோக்கிச் சென்றிருக்கக் கூடிய பதிவை தில்லுடன் வழங்கியதற்கு முதலில் பாராட்டுக்கள்.

    இன்றைய காந்தி, தமிழின் உயிர், இமயத்தின் ஆல்ப்ஸ், நீதியின் நிஜ முகமான நண்பர் அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் அரசியல் பிரவேசம் வெற்றிகரமாக அமைந்திட எம் வாழ்த்துக்கள்.

    பீரங்கி கோட்டை ஜூலி சாகசத்தில் நிச்சயமாக ஜூலியை நோக்கும் பீரங்கிகளின் குறி தப்பாது.

    மர்மக் கோட்டை அட்டையில் மாடஸ்தீ அணிந்திருக்கும் சங்கிலியின் பதக்கம் தெளிவாகத் தெரியவில்லை என்பது ஒரு குறையே.

    கடல் கோட்டையில் வேதாளன் போஸ், விரைவில் வரவிருக்கும் மருத்துவர் இளைய தளபதியின் நடன அசைவுகளை ஒத்திருக்கிறது. அவரின் ட்ரெயிலர் ஒன்றை இன்று பார்க்கும் வாய்ப்பு குழந்தை ஒன்றின் கருணையால் கிடைத்தது. அழுது விட்டேன். சீனர்களின் சித்திரவதை எம்மாத்திரம்.

    கொலைகாரன் கோட்டையில் கிட் கார்சனை நோக்கி வரும் தோட்டா அவர் தலையை கொண்டு போயிருக்க வேண்டும் ஆனால் அவர் தொடர்ந்து சுடுவார் இல்லையா.

    பின்னுங்க ஒலக காமிக்ஸ் ரசிகரே.

    ReplyDelete
  11. வேணும்னா அய்யம்பாளையத்துக்காரருக்கு இந்தப் பட்டங்களைக் கொடுக்கலாம்:

    அய்யம்பாளைய அகத்தியர், இடிதாங்கி, குடிதாங்கி, தண்ணிடாங்கி (இதில் தண்ணிடாங்கியை இரு முறை ரிப்பீட் செய்துகொள்ளவும்) . .

    ஆல்ஸோ, தீப்பொறி திருமுகம், வாழும் கா(கே)ந்தி, வாழாத பூந்தி . . இப்புடி மானே தேனே பொன்மானே எல்லாத்தையும் சேர்த்துக்கணும் . .

    ReplyDelete
  12. முதுகெலும்புள்ள முக்கிய பதிவரே,

    இனமான உணர்வுள்ள இளஞ்சிங்கமே,

    சகோதர மனப்பான்மை கொண்ட சந்தியா ராகமே,

    அமைதி பூங்காவின் அதிரடி மன்னனே,

    முத்தமிழின் நான்காவது தமிழே,

    முப்பாலின் நான்காவது பாலே,

    மனிதர்களின் தேவனே, தேவர்களின் மனிதனே,

    நீவிர் வாழ்க

    ReplyDelete
  13. வருக வருக..... எங்க ஓட்டு உங்களுக்குத்தான்

    ReplyDelete
  14. ஸ்ரீ லங்காவில் இருந்து உங்களுக்காக கள்ள வாக்குப் போடுகின்றோம்.

    ஒரு தடவை முத்து விசிறி தன் பதிவில் இந்த அங்கதன் கோட்டை அதிசயம் புத்தகம் பற்றி எழுதியிருந்தார். அது டின் டின் கதை ஒன்றின் அப்பட்டமாக காப்பி :)

    டெக்ஸ் வில்லரின் The Lonesome Rider

    ReplyDelete
  15. நாளைக்கே நான் டெல்லி போயாகனும். ஃப்ளைட் புக் பண்ணுங்க.

    ReplyDelete
  16. பிளைட் எல்லாம் புக் பண்ண முடியாது . பூ மிதிக்க வேணும்னா புக் பண்றோம்

    ReplyDelete
  17. யோவ்,

    யாருய்யா இந்த பன்னிக்குட்டி ராமசாமி? கொஞ்சம் எனக்கு பெரு பெர்சனல் மெயில் அனுப்பியாவது யாருன்னு சொல்லுங்கப்பு. மர்மம் தாங்க முடியல.

    ReplyDelete
  18. //கொலைகாரன் கோட்டையில் கிட் கார்சனை நோக்கி வரும் தோட்டா அவர் தலையை கொண்டு போயிருக்க வேண்டும் ஆனால் அவர் தொடர்ந்து சுடுவார் இல்லையா.//

    காதலர் சார்,

    அங்கதான் நீங்க தப்பு பண்றீங்க (என்னது அங்கயுமா?).

    அதாவது இந்த படம் டூ டி (2-D)யில் வரையப்பட்டது. த்ரீ டி (3-D)யில் பார்த்தால் அந்த தோட்டா கார்சனின் தலைக்கு பின்புறம் செல்வது தெரியும்.

    ReplyDelete
  19. I want that Neruppu Kottai comic book. Where can I get that one? I'm searching it for so many days. Please help me to get that book.

    Thanks and Regards,
    Rajasekaran.R

    ReplyDelete

என்னுடைய வலைப்பூவை நீங்கள் படிக்கவில்லையெனில், படித்தவுடன் உங்களின் எண்ணங்களை தெரிவிக்கவில்லை எனில் உங்களிடம் அடிப்படையாகவே ஏதோ தவறு உள்ளது

Related Posts with Thumbnails