பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.இன்று ஏப்ரல் இருபத்தி ஒன்றாம் தேதி. இன்றுதான் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிறந்த நாள்.இந்த நாளில் நமது காமிக்ஸ் உலகில் இதுவரை ராணிகளை மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு.
என்னடா, சமீபத்தில் ஒரே பிறந்தநாள் பதிவுகளா என்று என்னும் நண்பர்களே, சற்று பொறுங்கள். இன்று நம்முடைய பெருமதிப்பிற்குரிய மின்சார துறை அமைச்சர் திரு ஆற்காட்டார் அவர்களின் பிறந்த நாளும்கூட. சரி, அவருக்கு பொருத்தமாக சமீபத்தில் நம்முடைய லயன் காமிக்ஸ் கவ்பாய் ஸ்பெஷலில் வந்த இரும்புக் கை மாயாவி கதையை வெளியிடலாம் என்றுதான் நினைத்தேன் (அந்த கதையின் பெயரை சொன்னால் தீவிர தி மு க ஆதரவாளர்கள் என்னை விட மாட்டார்கள்). ஆனால், சென்ற பதிவே பல அரசியல் விளையாட்டுக்களை நடத்தி விட்டதால் வேறு வழி இல்லாமல் அந்த அரசியல் நொடி வீசும் பதிவினை இடாமல் இந்த சாதா பதிவு. என்சாய் மக்களே.
லயன் காமிக்ஸ் - சாகச வீரர் சாம்சன் - மந்திர ராணி - மறக்க முடியாத கதை |
இந்த மந்திர ராணி கதை தமிழில் ஏற்கனவே வேறொரு இதழில் வந்துள்ளது. அது எந்த இதழ் என்று கூறுபவர்களுக்கு கனவுகளின் காதலரின் ஒன்றுவிட்ட சகோதரி மேகான் பாக்ஸின் மேலான் முத்தங்கள் கிடைக்கும். இது ஒரு அற்புதமான கதை. இந்த கதையில் ஒரு புதிர் சொல்லும் கிழவன் ஒருவர் வருவார். அந்த கட்டம் என்னால் இன்னமும் மறக்கவே இயலவில்லை. நன்றி விஜயன் சார்.
அடுத்தபடியாக, மிநிலயனில் வந்த சுஸ்கி & விஸ்கி சாகசமாகிய ராஜா, ராணி & ஜாக்கி. இந்த கதையில் ஒரு இடத்தில் புரூப் ரீடர் ஒரு தவறை கவனிக்க மறந்து இருப்பார். அது என்ன என்று யாராலாவது சொல்ல இயலுமா? இதனை சொன்னால் என்றும் தர்ம பத்தினியாக விளங்கும் புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப்படம் ஒன்று அன்பளிப்பாக கிடைக்கும்.
மினி லயன் காமிக்ஸ் - சுஸ்கி & விஸ்கி சாகசம் - ராஜா, ராணி & ஜாக்கி - ஒன்ஸ்மோர் விஜயன் சார் |
அடுத்தபடியாக நாம் காணவிருப்பது ராணி காமிக்ஸில் வந்த ராணி கதை பெயரை கொண்ட கதைகள். ஏக்சுவளி இரண்டு கதைகள் வந்துள்ளன. அவற்றின் விவரங்கள் இதோ:
ராணி காமிக்ஸ் Issue No 302- முகமூடி வீரர் மாயாவி - வேதாளர் - கொலைகார ராணி |
இந்த கதை ஒரு சிறந்த கதையாக இருந்தாலும்கூட, மொக்கையான மொழிபெயர்ப்பில் பெரிதும் பாதிக்கப்பட்டு ரசிக்கவே இயலாத அளவுக்கு இருக்கும். உதாரணமாக பீனிக்ஸ் நாட்டு மன்னர் தன்னுடைய மகளை மாயாவிக்கு அறிமுகப்படுத்தும்போது "இவள்தான் டெய்சி - என்னுடைய மகள் - பேரழகி" என்று கூறுவார். அந்த கட்டத்தை படித்து பாருங்கள். அடுத்து ஒரு கட்டத்தில், மாயாவியை பார்த்து "ஆபத்தாண்டவா" என்று கதறுவார். என்ன கொடுமை சார் இது?
அடுத்து நாம் பார்க்கவிருப்பது ராணி காமிக்ஸில் கடைசி கால கட்டத்தில் வந்த ஒரு கதை. இந்த கதைக்கு "மொக்கை ராணி" என்று கூட பெயரிட்டு இருக்கலாம். அந்த அளவுக்கு மொக்கை போட்டு இருப்பார் இந்த இதழின் ஆசிரியர். முடியலடா சாமி, என்று மாயாவியே வாய் விட்டு கதறுவார். இந்த கதைக்கும் இந்திரஜால் காமிக்ஸ் கூலாகூ கொடுசூலி கதைக்கும் என்ன சம்பந்தம் என்பதை பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்கள்தான் சொல்ல வேண்டும்.
ராணி காமிக்ஸ் Issue No 494 - வேதாளர் - முகமூடி வீரர் மாயாவி அதிரடி - அழகு ராணி |
நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?
உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?
நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.
மீ த ஃபர்ஸ்ட்டு!
ReplyDeleteஇப்போ மிட்நைட்க்குங்கறதால நாளைக்கு காலைல மறுபடியும் வர்றேன்!
குட் நைட்டு!
தலைவர்,
அ.கொ.தீ.க.
மீ த செகண்டு!
ReplyDelete//இப்போ மிட்நைட்க்குங்கறதால நாளைக்கு காலைல மறுபடியும் வர்றேன்!
குட் நைட்டு!//
நாமளும் அதையே ரிபீட்டு. சச்சின் டீம் பைனலுக்கு அப்பீட்டு. பெங்களூரு டீம் வீட்டுக்கு.
ஒலக காமிக்ஸ் ரசிகரே, ராணிகளின் ராஜாவே, இளவரசிகளின் ரோஜாவே..
ReplyDeleteபூங்காவனம், மெகான் ஃபாக்ஸ் டார்லிங்குகளின் பெயர்களை விளம்பரத்திற்காக தவறாக பயன்படுத்தியமையை கண்டித்து இப்பதிவை விட்டு இன்னமும் இரண்டு நிமிடங்களில் வெளி நடப்பு செய்கிறேன்.
வேதாளர் புலியின் மேல் உட்கார்ந்திருக்கும் பொஷிஷன்... ஆகா :)
அழகு ராணி என்று தலைப்பு ஆனால் யாரப்பா அந்த அழகு ராணி. அட்டையில் உள்ள அம்மைணிகள் ஓவரேஜ் பாட்டிகள் போல் உள்ளனரே.
எலிசபெத் மவராணிக்கு எங்கள் இனிய பர்த்டே வாழ்த்துக்கள். அனுபவிம்மா அனுபவி...
இந்த அழகு ராணி போஸை பார்த்து தான் பேசிக் இன்ஸ்டின்க்ட்டில் ஷாரன் ஸ்டோன் அப்படி ஒரு போஸ் கொடுத்திருப்பாரோ?!!
ReplyDeleteதலைவர்,
அ.கொ.தீ.க.
போன வாரம், ராஜா.
ReplyDeleteஇந்த வாரம் ராணி.
அடுத்து யாரு? மந்திரியா? முடியலடா சாமி.
//அனுபவிம்மா அனுபவி..//
ReplyDeleteஇந்த வயதிலுமா?
//பூங்காவனம், மெகான் ஃபாக்ஸ் டார்லிங்குகளின் பெயர்களை விளம்பரத்திற்காக தவறாக பயன்படுத்தியமையை கண்டித்து இப்பதிவை விட்டு இன்னமும் இரண்டு நிமிடங்களில் வெளி நடப்பு செய்கிறேன்.//
ReplyDeleteசார்,
நான் "பெயரை" மட்டும் தானே தவறாக உபயோகப்படுத்தினேன்? வேறு ஒன்றும் இல்லையே? அதுக்கு என் சார் இவ்வளவு கோவம்?
//வேதாளர் புலியின் மேல் உட்கார்ந்திருக்கும் பொஷிஷன்... ஆகா :)//
ReplyDeleteசத்தியமா சொல்றேன் - தமிழ் காமிக்ஸ் ஒலகத்துல உங்க ஒருத்தரால மட்டும்தான் இப்படி Think பண்ண முடியும்.
//இந்த அழகு ராணி போஸை பார்த்து தான் பேசிக் இன்ஸ்டின்க்ட்டில் ஷாரன் ஸ்டோன் அப்படி ஒரு போஸ் கொடுத்திருப்பாரோ?!!//
ReplyDeleteஎன்ன கொடுமை சார் இது? இப்படியெல்லாம் யோசிக்குறாங்க? ரூம் போட்டு யோசிப்பாங்களோ?
ஒலக காமிக்ஸ் ரசிகா!
ReplyDeleteசென்ற வாரத்தில் கிங்-க்கு பொறந்த நாள்! இந்த வாரத்தில் குயினுக்கு பொறந்த நாள்! இங்கே உள்ள குயின்களில் நம்ம கிங்கோட குயின் யாரு?
//வேதாளர் புலியின் மேல் உட்கார்ந்திருக்கும் பொஷிஷன்... ஆகா :)//
கனவுகளின் காதலர் ஒரு புரட்சிவாதி என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார்.இததான் எல்லோரும் 'மாத்தி யோசி' 'மாத்தி யோசி' என்கிறார்களோ?
//சென்ற வாரத்தில் கிங்-க்கு பொறந்த நாள்! இந்த வாரத்தில் குயினுக்கு பொறந்த நாள்! இங்கே உள்ள குயின்களில் நம்ம கிங்கோட குயின் யாரு?//
ReplyDeleteசார்,
ஏன் இந்த விபரீதமான கேள்வி? நமக்கு தான் எந்த பிரச்சினையுமே இல்லையே? அப்புறம் ஏன்? But Why? Why Me?
கொழந்தையை இந்த மாதிரி விஷயங்களில் லிங்க் பண்ணுவது சட்டப்படி தப்பு சார்.
ஒலக காமிக்ஸ் ரசிகரே ,
ReplyDeleteஇம்முறை ஒலக காமிக்ஸ் குசும்பர் என்ற பட்டத்தை தட்டி செல்கிறீர்கள் ...
i want to buy the bob e bobette version
ReplyDeletePlease help.
c.bokhoven@chello.nl