பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். நேற்றைய "தல" பதிவானது தமிழ் காமிக்ஸ் உலகில் பல அதிரடி மாற்றங்களை கொணர்ந்துள்ளது.
அதாகப்பட்டது, பல (உண்மையிலேயே) இளைய தளபதி டாக்டர் விஜய் ரசிகர்கள் நமக்கு மின்னஞ்சல் அனுப்பி நீங்கள் "தல" ரசிகரா? அதனால் தான் சுறா ரிலீஸ் ஆகும் தருணத்தில் "தல" பற்றிய பதிவினை இட்டு (இன்னமும் இருக்கும்) இளைய தளபதி டாக்டர் விஜய் ரசிகர்களை மனம் நோகச் செய்கிறீர்கள் - என்று வினவினார்கள். இந்த அரசியலில் கலக்க விரும்பாத ஒரு காரணத்தினால், இந்த பதிவானது இடப்பட்டுள்ளது. எனவே நமது காமிக்ஸ் உலகில் இதுவரை "சுறா"வை மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு.
என்னிடம் இருக்கும் புத்தகங்களிலேயே இதுதான் முதல் சுறா படக்கதை. அதனால் இந்த அட்டைப்படத்தினை முதலில் அளித்துள்ளேன். இந்த புத்தகம் ஒரு கிடைத்தற்கரிய புத்தகம். இந்த புத்தகத்தினை கனவுகளின் காதலர் (கவனித்தீர்களா மரியாதையை - ர்) போன்ற ரசிகர்கள் முதலில் கடையில் வாங்கி படித்திருக்கவும் வாய்ப்புண்டு. ஹாஜா, காதலர், முத்து விசிறி போன்ற நண்பர்கள் அந்த அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டால் சுகம்.
இந்த புத்தகத்தினை நான் முதலில் பார்த்தபோது லாரன்ஸ் டேவிட் ஜோடி சாகாசம் போலிருக்கிறது என்றெண்ணி விட்டேன். அட்டையில் இருக்கும் லோதரை பார்க்கையில் டேவிட் போலவே இருந்தது (கிறது?).
முத்து காமிக்ஸ் - மந்திரவாதி மாண்டிரெக் கதை - குறும்புக்கார சுறாமீன் – Issue No 77 – 15th June 1978 |
என்னிடம் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் மற்றுமொரு புத்தகம் இது. இதுவும் கிடைத்தற்கரிய ஒன்றே ஆகும். இதனை எல்லாம் ரீபிரின்ட் செய்ய சொன்னால் நன்றாக இருக்கும். ஆனால் கடந்த முத்து காமிக்ஸ் (மாண்டிரெக் சாகசம்) விற்பனை நிலையை சற்றேன்ணினால் வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு என்றே தோன்றுகிறது.
முத்து காமிக்ஸ் - மந்திரவாதி மாண்டிரெக் சாகசம் - விண்ணில் நீந்தும் சுறா – Issue 81 – 15th Oct 1978 |
நான் படித்த முதல் ஒரு ருபாய் முத்து காமிக்ஸ் இதுதான். இந்த கதையில் ஜார்ஜ் உடன் வரும் ஒரு பெண் பாத்திரம் என் மனதை கவர்ந்த ஒரு பாத்திரம் ஆகும். இந்த கதை இதுவரை ராணி காமிக்ஸில் வரவில்லை என்பது கூடுதல் தகவல்.
முத்து காமிக்ஸ் - ஜார்ஜ் சாகசம் - ராணி காமிக்ஸ் ஜானி - சுறாமீன் வேட்டை – Issue 128 – 01st Sept 1981 |
நான் வாங்கிய முதல் ராணி காமிக்ஸ் இதுவே. வேவு வீரர் ஜேம்ஸ் பான்ட் என்னை மிகவும் கவர்ந்த ஒரு ஹீரோ. அதுவும் அந்த முரட்டு கத்யாவை கவர அவர் படும்பாடு இருக்கிறதே, அப்பப்பா சொல்லி மாளாது. பல கிளுகிளுப்பான காட்சிகள் நிறைந்த கதை என்பதை சொல்லவும் வேண்டுமோ?
ராணி காமிக்ஸ் - வேவு வீரர் 007 ஜேம்ஸ் பான்ட் சாகசம் - சுறா வேட்டை – Issue No 7 |
உலகிலேயே ராணி காமிக்ஸில் தான் ஒரே பெயரில் பல கதைகள் அட்டைப்படத்திலேயே வந்துள்ளது என்றெண்ணுகிறேன். அதற்க்கு உதாரணம் இதோ:
ராணி காமிக்ஸ் - முகமூடி வீரர் மாயாவி -அடுத்த வெளியீடு விளம்பரம் | ராணி காமிக்ஸ் - முகமூடி வீரர் மாயாவி- சுறா வேட்டை |
ஆம், ஆரம்ப காலத்தில் ஜேம்ஸ்பான்ட் எப்படி ராணி காமிக்ஸை காப்பாற்றினாரோ, அதைப்போலவே பிற்காலத்தில் மாயாவியும் ராணியை காப்பாற்றினார். இது மாயாவியின் சுறா வேட்டை.
ராணி காமிக்ஸ்-முகமூடி வீரர் மாயாவி-விறுவிறுக்க வைக்கும் படக்கதை-சுறா வேட்டை-படிக்க தவறாதீர்கள் |
இந்த இடத்தில் பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களைப் பற்றி சொல்லியே தீரவேண்டும். தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த விஷயம் (நன்றாக கவனிக்கவும் - விடயம் இல்லை) என்னவென்றால் அவர் ஒரு மருத்துவர் விஜய் ரசிகர் என்பது. ஆனால் தெரியாத விஷயம் என்ன என்றால் அவர் கடந்த மருத்துவர் விஜய் படமாகிய வேட்டைக்காரனை தியேட்டரில் பிளாக் டிக்கெட் கொடுத்து பார்த்தார் என்பதே. அந்த தருணத்தில் அவர் வெளியிட்ட இரண்டு பதிவுகளும் வேட்டைக்கரனை பற்றியதே. முதல் பதிவு வேட்டைக்காரன் திரை விமர்சனம். (படிக்க இங்கே அமுக்கவும் - அமுக்கினால் தனியாக வரும்) இரண்டாவது பதிவு - வேட்டைக்காரியை பற்றியது. அது ஒரு கசமுசா பதிவாகும், அதனை படிக்க இங்கே கிளிக்கவும். இதோ தமிழ் காமிக்ஸில் வந்த வேட்டைக்காரன் அட்டைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.
ராணி காமிஸ் - முகமூடி வீரர் மாயாவி - வேட்டைக்காரன் 1 | ராணி காமிஸ்-முகமூடி வீரர் மாயாவி வேட்டைக்காரன் 2 |
சரி, ஏதோ சென்ற படத்தை தான் பிளாக் டிக்கெட்டில் பார்த்தார் என்றால் இந்த சுறா படத்தை சுமார் இருநூறு கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து தனியாக (ஆமாங்க, தனி ஆளாக - ஒண்டியாக) இந்த படத்தை முழுவதுமாக பார்த்து விட்டு செய்கூலி சேதாரம் இல்லாமல் திரும்பி வந்துள்ளார் என்பதே இந்த பதிவில் நாம் கூற விரும்பும் முக்கிய கருத்து.
வாழ்க டாக்டர் செவன், வளர்க அவரது தைரியம். உண்மையிலேயே நாம் அவரைப்பாராட்டியே தீர வேண்டும். எத்துனை தைரியம் இருந்தால் இப்படி ஒரு காரியத்தை தனியாக செய்திருப்பார். இதற்காகவே எஸ்.எ. சந்திரசேகரா அவர்கள் இவருக்கு தனியாக ஏதாவது ஒரு விருது வழங்க வேண்டும். அல்லது நாம் அனைவரும் சேர்ந்து ஜனாதிபதிக்கு மனு போட்டு நமது நாட்டின் உயரிய வீரச்செயலுக்கு வழங்கப்படும் பரம் வீர் சக்ரா போன்ற விருதகளையாவது வழங்க ஆவன செய்ய வேண்டும்.
நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?
உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?
நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.
அப்பாடி.... நான் தான் முதல்ல!
ReplyDeleteஅப்பாடி, நான் ரெண்டாவது.
ReplyDeleteஒரு மகிழ்ச்சி - டாக்டர் செவன் இங்கு நம்மை முந்தவில்லை.
//வாழ்க டாக்டர் செவன், வளர்க அவரது தைரியம்!//
ReplyDelete//இந்த படத்தை முழுவதுமாக பார்த்து விட்டு செய்கூலி சேதாரம் இல்லாமல் திரும்பி வந்துள்ளார்//
எதற்கும் நல்லதொரு மனநல மருத்துவரை டாக்டர் செவன் சென்று பார்ப்பது நல்லது என்பது என் தாழ்மையான கருத்து!
அருமையான கலக்ஷன்
ReplyDeleteSUPER
ReplyDeleteமிகமிக நல்ல காமெடிப்பதிவு. இன்னும் இதைப்போல் நிறைய எழுதுங்கள். காசா, பணமா? :-)
ReplyDeleteThe quality of the scans are really good friend.Or is it the quality of those books cover?
ReplyDeleteஅடேய் ஒலக காமிக்ஸ் ரசிகா...
ReplyDelete//தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த விஷயம் (நன்றாக கவனிக்கவும் - விடயம் இல்லை) என்னவென்றால் அவர் ஒரு மருத்துவர் விஜய் ரசிகர் என்பது.//
இதை நான் வண்மையாகக் கண்டிக்கிறேன்! ஒரு மொக்கைப் படத்தைப் பார்க்க அதன் ஹீரோவின் ரசிகனாக இருக்க வேண்டுமென்பதில்லை!
அகிலமே அஞ்சி நடுங்கும் அ.கொ.தீ.க. தலைவர் வேட்டைக்காரன், சுறா போன்ற அற்ப விஷயங்களைப் பார்க்க அஞ்சி பயந்து நடுங்கினால் என் இமேஜ் என்ன ஆவது!
எதற்கும் அஞ்சாதவரே அ.கொ.தீ.க. தலைவராக நீடிக்க முடியும் என்பதை மக்களுக்கு உணர்த்தவே தொடர்ந்து இது போன்ற ரிஸ்க்குகளை ரஸ்க்கு சாப்பிடுவது போல் எடுத்து வருகிறேன்!
இதே போல் தான் அசல், ஏகன், ஆழ்வார் போன்ற ‘தல’சிறந்த மொக்கைப் படங்களையும் நான் தைரியமாகப் பார்த்திருக்கிறேன் என்பதை இந்த சமயத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்!
எனக்குத் தெரிந்த காமிக்ஸ் வலைப்பதிவர் ஒருவர் யூத் படத்தையெல்லாம் முதல் நாள் முதல் ஷோவில் பார்த்தவர்! பாத்துட்டு படம் அற்புதமுன்னு சொன்ன ஆளு அவர்! அப்போ அவரையெல்லாம் என்னவென்று சொல்வது?
அதெப்படிறா என்னப் பாத்து இப்படியொரு ஸ்டேட்மெண்ட் நீ வுடலாம்! மவனே ஜாக்கிரதையா இருந்துக்க! பார்சல்ல பாம் வரப் போகுது!
தலைவர்,
அ.கொ.தீ.க.
பரம் வீர் சக்ரா வென்ற பயங்கரவாதி வாழ்க.
ReplyDelete//எனக்குத் தெரிந்த காமிக்ஸ் வலைப்பதிவர் ஒருவர் யூத் படத்தையெல்லாம் முதல் நாள் முதல் ஷோவில் பார்த்தவர்! பாத்துட்டு படம் அற்புதமுன்னு சொன்ன ஆளு அவர்! அப்போ அவரையெல்லாம் என்னவென்று சொல்வது?//
மக்களே, அது நான்தான். அந்த படத்தின் தலைப்பும் கான்செப்டும் எனக்கு ஒத்திருந்ததால் முதல் நாள் சென்று பார்த்தேன்.
ஏதேது? மருத்துவர் ஐயா கோவத்தில் இருப்பது போல இருக்கிறதே?
ReplyDeleteதவறாக இருப்பின் மன்னிக்கவும்.
வாசக அன்பர்களுக்கு ஒரு போட்டி: மருத்துவர் பயங்கரவாதி டாக்டர் செவனுக்கும் மருத்துவர் விஜய் அவர்களுக்கும் உள்ள ஆறு வித்தியாசங்களை பட்டியல் இட்டால், சிறப்பு பரிசு வழங்கப்படும்.
கிங் விஸ்வா மற்றும் ஒலக காமிக்ஸ் ரசிகர்,
ReplyDeleteரெண்டு பேரும் சேர்ந்து ஜனா, ஆஞ்சனேயா படத்தையெல்லாம் முதல் நாள் முதல் ஷோ பாத்திருக்கீங்க!
ஒலக காமிக்ஸ் ரசிகர் தல அஜீத்துக்கு பிறந்த நாள் பதிவு போடுறாரு! கிங் விஸ்வாவ எல்லோரும் தல தலன்னு கூப்புடுறாங்க!
அப்போ நீங்க ரெண்டு பேரும் தீவிர அஜீத்தின் ரசிகர்களோ?!!
கருமாந்திரம் புடிச்ச கந்தசாமி படத்தையெல்லாம் காசு கொடுத்து பாத்தீங்களே நீங்க ரெண்டு பேரும்! அப்போ நீங்க ச்சீயான் விக்ரமின் தீவிர ரசிகர்களோ?!!
தலைவர்,
அ.கொ.தீ.க.
பயங்கரவாதியே,
ReplyDelete//கிங் விஸ்வா மற்றும் ஒலக காமிக்ஸ் ரசிகர்,
ரெண்டு பேரும் சேர்ந்து ஜனா, ஆஞ்சனேயா படத்தையெல்லாம் முதல் நாள் முதல் ஷோ பாத்திருக்கீங்க!//
இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஜனா படத்தை நாங்கள் காலை முதல் காட்சியாக கண்டதென்னவோ உண்மைதான். (அந்த படத்தில் பனி புரிந்த நண்பர் ஒருவர் கூறினார் - பாட்ஷா படம் மாதிரியே இருக்கும் என்று - ஆனால் பாட்ஷா படத்தை தான் ஜனா என்ற பேரில் எடுப்பார்கள் என்று தெரியாது).
ஆனால் ஆஞ்சநேயா படத்தை நான் இதுவரையில் டிவிடியில் கூட பார்த்தது கிடையாது.
//ஒலக காமிக்ஸ் ரசிகர் தல அஜீத்துக்கு பிறந்த நாள் பதிவு போடுறாரு! கிங் விஸ்வாவ எல்லோரும் தல தலன்னு கூப்புடுறாங்க!
அப்போ நீங்க ரெண்டு பேரும் தீவிர அஜீத்தின் ரசிகர்களோ?!//
ஒலக காமிக்ஸ் ரசிகரை பற்றி நான் கூற இயலாது. ஆனால் நான் தல ரசிகன் அல்ல. உண்மையில் நான் யாருக்கும் ரசிகன் அல்ல. என்னையே எனக்கு பிடிக்காத போது மத்தவங்களை எப்படி எனக்கு பிடிக்கும்? (நோட் பண்ணுங்கப்பா, நோட் பண்ணுங்க - கவிதை).
//கருமாந்திரம் புடிச்ச கந்தசாமி படத்தையெல்லாம் காசு கொடுத்து பாத்தீங்களே நீங்க ரெண்டு பேரும்! அப்போ நீங்க ச்சீயான் விக்ரமின் தீவிர ரசிகர்களோ?!!//
ஐயம் சாரின் ஆல் டைம் பேவரிட் படம் பற்றி தவறாக கூற என்ன துணிச்சல்? இருந்தாலும்கூட ஸ்ரேயா வெறும் துண்டு மட்டுமே கட்டிக்கொண்டு ஆடுறாங்க என்று போனில் கூறியது யார்? படம் பார்க்க தூண்டியது யார்?
ARUMAIYANA KARPANAI
ReplyDeleteVISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.com
JUNIOR VAALPAIYYAN
ஒலக காமிக்ஸ் ரசிகரே,
ReplyDeleteநீங்கள் கணித்தது உண்மை விண்ணில் நீந்தும் சுறா, குறும்புக்கார சுறா போன்ற கதைகளின் அட்டைப்படங்கள் என் முற்பிறப்பு நினைவுகளை எனக்கு மீட்டளித்தன. அருமையான அட்டைப்பட கலெக்ஷன், செலெக்ஷன். கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போல் அவ்வளவு அழகு நண்பரே.
பதிவை விட கருத்துக்களம் அதிக சூடாகி விட்டது போலிருக்கிறது. பயங்கரமான டயலாக்குகள், தலைவர் படு சூடாக இருக்கிறார். எதற்கும் பார்சல்களை ஜாக்ரதையாக கையாளவும்.
ஒலக காமிக்ஸ் ரசிகரே
ReplyDeleteவெரி ரேரர் புத்தகங்கள் மிக நன்றி
அட்டை படத்தை மட்டும் போடாமல் அதனை பற்றி உங்கள் நடையில் விவரித்து சொன்னால்
மிகவும் நன்றாக இருக்கும்
ஒலக காமிக்ஸ் ரசிகரே,
ReplyDeleteஎன்னுடைய படத்தை பற்றியா பேசுகிறீர்கள்?
அன்பு தோழருக்கு வணக்கம், தங்களின் வலைதளம் தகவல் ப்ளாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் இனி உங்களின் எழுத்துக்களைப் படித்து பயனுறவர். எமது உதவிக்கு மறு உபகாராமாய் எமது வலைப்பட்டையை உமது தளத்தில் இணைத்து உதவலாம். மேலும் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எம்மை தொடர்புகொள்ளலாம்.
ReplyDeleteநிர்வாக குழு,
தகவல் வலைப்பூக்கள்.....
http://thakaval.net/blogs/comics/
காதலரே,
ReplyDeleteதமிழில் வந்த சுறாவை பற்றி பதிவிடுவது சரி, மலையாளத்தில் வந்த சுறா - സുരാ பற்றி உங்களுக்கு தெரியுமா?
ஒலக காமிக்ஸ் ரசிகரே,
ReplyDeleteதமிழில் வந்த சுறாவை பற்றி பதிவிடுவது சரி, மலையாளத்தில் வந்த சுறா - സുരാ பற்றி உங்களுக்கு தெரியுமா?