Monday, May 24, 2010

தமிழ் காமிக்ஸ் உலகில் - கார்

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். நம்முடைய சென்ற பதிவானது (தமிழ் காமிக்ஸ் உலகில் சுறா) மக்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக வெற்றிப்பட இயக்குனரும், வெற்றிப்பட நடிகர், இளைய தளபதி, மருதுதுவர் விஜய் அவர்களின் தந்தையுமான வருங்கால தமிழக கவர்னர் திரு எஸ். ஏ.சந்திரசேகரா அவர்களிடம் இருந்து தனிப்பட்ட பாராட்டி வந்தது. அவருக்கு நன்றிகள் பல. வெகு விரைவில் காவல்காரன் வேறு வரவிருப்பதால், "வேட்டை - ஆரம்பமாயிடுச்சு டோய்" என்று நம்முடைய கட்டம் போட்ட கர்சிப்பை இடது தொடையில் கட்டிக்கொண்டு களமிறங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை இங்கு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

சமீபத்தில், நான் ஒரு விபத்தை சந்தித்தது (தமிழ் காமிக்ஸில் விபத்துகள்) பற்றி அனைவரும் அறிந்ததே. அந்த விபத்தில் என்னுடைய வாகனம் பழுதடைந்தது மக்களுக்கு தெரியும். ஆகையால், சமீபத்தில் ஒரு சீருந்து ஒன்று வாங்கினேன். அதனை பற்றிய விவரங்கள் பதிவின் முடிவில். இந்த தருணத்தில் தமிழ் காமிக்ஸ் உலகில் கார்கள் பற்றிய சிறப்பு பதிவொன்றை இட்டால் என்ன என்று தோன்றியது. அதனால் களமிறங்கி விட்டோம்.

காமிக்ஸ் உலகில் கார் என்றாலே மக்களுக்கு நினைவுக்கு வருவது மினி லயன் காமிக்ஸில் வந்த கொள்ளைக்கார கார் கதைதான். சிறப்பான நடையும், துள்ளலான கதையோட்டமும், தெளிவான தமிழாக்கமும் இதன் வெற்றிக்கு காரணங்கள். இந்த கதையை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள கிங் விஸ்வாவின் இந்த பதிவை படியுங்கள்.

மினி லயன் காமிக்ஸ் - கொள்ளைக்கார கார் - ஒரு சூப்பர் டூப்பர் கதை - இங்கே சென்று படியுங்கள்
Mini Lion Comics Issue No 25 July 1990 Kollaikara Car Spirou Starter

அடுத்தபடியாக நான் சொள்ளவிருப்பது குங்க்பூ மன்னன் புரூஸ்லீ தோன்றிய கார் பந்தையம் ஆகும். இந்த கதைதான் நான் படித்த முதல் புரூஸ்லீ கதை. அந்த தருணங்களில் புரூஸ்லீ ஒரு கல்ட் ஹீரோவாக அவதாரம் எடுத்திருந்தார். ஆகையால் மிகவும் ஆர்வமுடன் இதனை படித்தேன். இது உண்மையில் திரைப்படமாக வந்த பிக் பாஸ் படத்தின் ஒரு அங்கமாகும். படிக்க தவறாதீர்கள்.

 

ராணி காமிக்ஸ் - அடுத்த இதழ் -கார் பந்தயம்

குங்க்பூ மன்னன் புரூஸ்லீ தோன்றும் கார் பந்தயம்

Rani Comics Car Pandhayam Next Issue Rani Comics Car Pandhayam

எகிப்திய மம்மி என்று ஒரு கதை ராணி காமிக்ஸில் வந்தது. யாருக்காவது நினைவிருக்கிறதா? அந்த கதை ஹீரோ பெயர் தியோ. அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அவர் ஒரு வித்தியாசமான ஹீரோ என்று பெயரெடுத்தவர். அவரின் கதைகள் இரண்டே இரண்டு தான் வந்துள்ளன. அவற்றில் இது இரண்டாவது கதை. காலப்பயணம் செய்யும் திறனுள்ள ஒரு வாகனம் அவரது சிறப்பு அம்சமாகும்.

ராணி காமிக்ஸ் - துப்பறியும் வீரர் தியோ தோன்றும் சூப்பர் கார்

Rani Comics Super Car Next Issue
Rani Comics Super Car

சிறப்பு வாய்ந்த ஓவியர் ரோமேரோவின் படைப்பாகிய ஆக்ஸா தமிழில் வந்துள்ளது எனக்கு மிகவும் ஆச்சர்யத்தை தருகிறது. பல வகையில் சென்சார் செய்யப்படவேண்டிய சித்திரங்களை கொண்டது இந்த தொடர். இதனையும் தமிழில் கொண்டு வந்தது ஆசிரியர் ராமஜெயம் அவர்களின் சிறப்பான திறமையை காட்டுகிறது.

 

பெண் டார்ஜான் ரீனா தோன்றும் கார் வேட்டை - குத்துன்னா குத்து - கும்மாங் குத்து

Rani Comics Car Vettai

கடைசியாக, இதோ இதுதான் என்னுடைய பெற்றோர்கள் சமீபத்தில் வாங்கிய காரின் புகைப்படம் (பின்னே என்னங்க, நான் கார் வாங்கினேன் என்று சொன்னால், உடனே எப்போ டிரீட் என்று கேட்கிறார்கள் - அதான் - என்னுடைய பெற்றோரின் வாகனம் என்று கூறிவிட்டேன்).

 

Car He He he

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இடகூடாது?

நன்றியுடன்,  
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

11 comments:

  1. ஹைய்யா, மீ த பர்ஸ்ட்.

    மறுபடியும் நானேதான்.

    ReplyDelete
  2. So far I did not know that spirou has been introduced in tamil.Thanks for the info..were any other books of him been introduced in tamil?

    ReplyDelete
  3. Dear illuminati,

    What i meant by that was, The Character Starter from Spirou magazine. that is the meaning.

    actually the character spirou is yet to appear in tamil in any form.

    ReplyDelete
  4. சிறு வயதில் ஏன் இன்னமும் இதை படிக்கும் போதும் சிரிப்பை நிறுத்த முடியாது
    மிக சிறந்த கதை

    // இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? //

    தாரளமாக வழங்குங்கள் அதற்காக காத்திருக்கிறோம்

    // என்னங்க, நான் கார் வாங்கினேன் என்று சொன்னால், உடனே எப்போ டிரீட் என்று கேட்கிறார்கள் - அதான் - என்னுடைய பெற்றோரின் வாகனம் என்று கூறிவிட்டேன //

    கவர் பண்ணி மறைச்சா எப்படி ? நம்பர் தெரிஞ்ச தானே எதாவது பண்ணலாம்

    ReplyDelete
  5. காரைக் கண்ணிலே காட்டாமல் காரைப்பற்றிய ஒரு பதிவா? அற்புதம்.

    ReplyDelete
  6. புரூஸ்லீ கதைகள் மொத்தமே மூன்றுதனா என்ன? நல்ல கதைவரிசை. முதலில் ராணி காமிக்ஸில் வரவில்லை. முத்து வாரமலரில் வந்தது என்று நினைவு. சரிதானே?

    ReplyDelete
  7. துப்பறியும் வீரர் தியோ மறுபடியும் ஒரு ராணிகாமிக்ஸ் கதையில் வந்த நினைவு. முன்னூறு அல்லது நானூறு வரிசையில் வந்தது.

    ReplyDelete
  8. புதிய காருக்கு வாழ்த்துக்கள்.

    வேறு ஏதாவது பதிவுகள்?

    ReplyDelete
  9. சூப்பர் கார். கார் பந்தையம் இவை எல்லாம் மறக்க முடியாத கதைகள்.

    நினைவுகளுக்கு நன்றி.

    ReplyDelete
  10. Hi friend.A new post has been upped.Please do visit and spread the word..

    சிறை மீட்டிய சித்திரக் கதை.......

    http://illuminati8.blogspot.com/2010/05/blog-post_28.html

    kindly delete this comment after reading...

    ReplyDelete

என்னுடைய வலைப்பூவை நீங்கள் படிக்கவில்லையெனில், படித்தவுடன் உங்களின் எண்ணங்களை தெரிவிக்கவில்லை எனில் உங்களிடம் அடிப்படையாகவே ஏதோ தவறு உள்ளது

Related Posts with Thumbnails