பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். நம்முடைய சென்ற சினிமா சம்பந்தப்பட்ட பதிவானது (தமிழ் காமிக்ஸ் உலகில் சுறா) மக்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றது நினைவிருக்கும். அதனால் இனிமேல் அதனைப்போலவே சில பல பதிவுகளை இடலாம் என்று பலரும் கூறி இருந்தனர். குறிப்பாக கோவையிலிருந்து மருத்துவர் திரு கந்தசுவாமி அவர்கள் கொடுத்த வரவேற்பே இந்த பதிவின் மூலக்காரணம். அவருக்கு எங்கள் நன்றிகள்.
இன்று நடிகை ஜோதிகாவின் புருஷனாகிய சூர்யா நடித்த "சிங்கம்" என்ற படம் ரிலீஸ் ஆகி உள்ளது. எனவே நமது காமிக்ஸ் உலகில் இதுவரை சிங்கத்தை மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு. நான் முதலில் படித்த சிங்கம் பெயருள்ள காமிக்ஸ் கதை "சிங்கத்தின் குகையில்" ஆகும். முத்து காமிக்ஸ் மறுபடியும் ஆசிரியர் விஜயன் அவர்களின் கைவண்ணத்தில் புத்துயிர் பெற்று வந்த நேரத்தில் வந்த ஒரு அற்புதமான கதை. இதில் வரும் ஒரு வில்லர் (வில்லனுக்கு கொஞ்சம் மரியாதை தான்) மிகவும் நுணுக்கமான ஒரு மனிதர். இந்த கதைக்கே ஆணிவேர் அவர்தான். ஆங்கிலத்தில் ஸ்பை-13 என்ற பெயரில் வந்த இந்த கதை தொடர் மிகவும் பிரபலம் பெற்றது.
முத்து காமிக்ஸ் இதழ் எண் 178 ஏஜென்ட் சைமன் (Spy – 13) தோன்றும் சிங்கத்தின் குகையில் |
அடுத்தபடியாக நான் படித்த சிங்க வரிசை கதை கூட முத்து காமிக்ஸில் வந்த ஒன்றுதான். ஆம், விங் கமாண்டர் ஜார்ஜ் தோன்றும் சிங்கத்திற்கொரு சவால் என்ற கதைதான் அது. இது ஒரு போட்டியான கதை ஆகும். வழமையான ஜார்ஜ் கதை போல இல்லாமல் சற்று வேகமாக இருந்த கதை இது. இந்த விங் கமாண்டர் ஜார்ஜ் கதைகளைத்தான் ராணி காமிக்ஸில் ஜானி என்ற பெயரில் வெளியிட்டார்கள்.
முத்து காமிக்ஸ் இதழ் எண் 217 சிங்கத்திற்கொரு சவால் விங் கமாண்டர் ஜார்ஜ் சாகசம் Johnny Hazard |
அடுத்து நான் படித்த சிங்க தலைப்பு இருந்த கதை திகில் லைப்ரரி இதழில் வந்த இரண்டாம் புத்தகம் ஆகும். ஆம், ஷெர்லக் ஹோல்ம்ஸ் துப்பறிந்த "சிங்கத்தின் பிடரி" என்ற கதைதான் அது. இந்த கதை இப்போதும் திரு ஐய்யம்பாளயத்தாரால் மிகவும் ரசிக்கப்படுகிறது என்றால் அதன் சிறப்பான கதையோட்டமே காரணம் ஆகும்.
திகில் லைப்ரரி முதல் இதழ் விளம்பரம் “பிடறி” | சிங்கத்தின் பிடரி (றி இல்லை றி தான்) முதல் பக்கம் |
அடுத்து நான் படித்த சிங்க கதை ராணி காமிக்ஸில் வந்த சிங்க சிறுவன் ஆகும். சூப்பர் கதை, வேறொன்றுமில்லை மேற்கொண்டு சொல்ல.
ராணிகாமிக்ஸ் இதழ்343 அடுத்த வெளியிடு விளம்பரம் | ராணி காமிக்ஸ் இதழ் 344 சிங்கசிறுவன் முதல் பக்கம் |
அது சரி, இப்போது வந்துள்ள சிங்கம் படம் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை என்கிறீர்களா? சரிதான். இந்த சன் பிக்சர்ஸ் படம் என்றாலே எப்படி இருக்கும் என்பது மக்களுக்கு தெரியும். இந்த சிங்கம் படம் பார்ப்பதைவிட மர்மவீரன் மாவீரன் சிங்கன் தோன்றிய கடல் கொள்ளைக்காரி கதையையே படித்து விடலாம்.
சிம்ரன் மற்றும் விஜய் தோன்றிய பிரியமானவளே படத்தின் போட்டோ ஸ்டில்லை மாடலாக கொண்டு வரைந்த அட்டைப்படம் |
நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?
உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?
நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.
நண்பரே,
ReplyDeleteஅடுத்த வாரம் கலைஞரின் பெண் சிங்கம் ரிலீஸ் ஆகிறது.
அப்போது இதே பதிவை மீள் பதிவிட ஐடியா உள்ளதா?
ஒலக காமிக்ஸ் ரசிகரே,
ReplyDeleteகடல் கொள்ளைக்காரி எனும் கதையின் அருமையான அட்டைப்படத்தை வெளியிட்டமைக்கு நன்றிகள் கோடி.
இமயம் கண்டேன்.
ஓவர் நைட்டில் பாப்புலராகும் ஒலக காமிக்ஸ் ரசிகரே...
ReplyDelete//நடிகை ஜோதிகாவின் புருஷனாகிய சூர்யா//
இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராக இல்லை?!!
தலைவர்,
அ.கொ.தீ.க.
//வழமையான ஜார்ஜ் கதை போல இல்லாமல் சற்று வேகமாக இருந்த கதை இது.//
ReplyDeleteஇதை நான் வண்மையாகக் கண்டிக்கிறேன்! விங் கமாண்டர் ஜார்ஜின் எந்த கதை உங்களுக்கு ஆமை வேகத்தில் நகர்ந்ததாம்?!!
பரபரப்பான ஆக்ஷனின் மறுபெயரே விங் கமாண்டர் ஜார்ஜ்! இவரது கதைகளில் உள்ள சித்திரங்களின் துடிப்பு வேறு எந்த கதை வரிசையிலும் கிடையாது என்பதை இங்கு நினைவூட்டுகிறேன்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
//இந்த கதை இப்போதும் திரு ஐய்யம்பாளயத்தாரால் மிகவும் ரசிக்கப்படுகிறது என்றால் அதன் சிறப்பான கதையோட்டமே காரணம் ஆகும்.//
ReplyDeleteஷெர்லக் ஹோம்ஸ் ஆச்சே! சோடை போகுமா?!!
தலைவர்,
அ.கொ.தீ.க.
// இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? //
ReplyDeleteகேள்வி No. 1 சிங்கன் கடல் கொள்ளைக்காரி யை பிடித்து உள்ளாரா அல்லது கடல் கொள்ளைக்காரி சிங்கனை பிடித்து உள்ளாரா!! கை போட்டோவை நன்றாக கவனிக்கவும
கேள்வி No. 2 கடல் கொள்ளைக்காரி கையில் உள்ள செல் போன் மர்மம் என்ன ?
ஒலக காமிக்ஸ் ரசிகரே...இதே போல் கேள்விகள் கேட்கலாமா
//சிம்ரன் மற்றும் விஜய் தோன்றிய பிரியமானவளே படத்தின் போட்டோ ஸ்டில்லை மாடலாக கொண்டு வரைந்த//
ReplyDeleteஹா.., ஹா..,
//ஹா.., ஹா.//
ReplyDeleteபல நாட்கள் கழித்து சுரேஷ் சாரைப் பார்ப்பது மகிழ்ச்சி.
சிங்கம் படம் நல்லாதானே இருக்கு. எதுக்கு இந்த கலாய்ப்பு??
ReplyDeletemalarum ninaivukal
ReplyDeleteஉங்கள் காமிக்ஸ் உலகத்தை வலைச்சரத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2010/06/comics.html
எனது தளம் http://thisaikaati.blogspot.com
//என்னுடைய வலைப்பூவை நீங்கள் படிக்கவில்லையெனில், படித்தவுடன் உங்களின் எண்ணங்களை தெரிவிக்கவில்லை எனில் உங்களிடம் அடிப்படையாகவே ஏதோ தவறு உள்ளது//
ReplyDeleteஆம் அப்படித்தான் நினைக்கிறேன்