Sunday, February 28, 2010

ஹோலிப்பண்டிகை - தமிழ் காமிக்ஸ் உலகில் வண்ணங்கள்

அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.சமீப காலமாக பல்வேறு மொக்கை பதிவுகளை இந்த காமிக்ஸ் உலகம் சந்தித்து உள்ளது. இதில் போட்டியாக காமிக்ஸ் டாக்டர் வேறு களமிறங்கி உள்ளார். இருந்தாலும் தன முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் போல நானும் ஒரு புதிய பதிவுடன் வந்து உள்ளேன்.

நம்மில் பலருக்கு ஹோலிப்பண்டிகை பற்றி தெரிந்திருக்கும். வெய்யில் காலம் ஆரம்பிக்கும் பருவத்தின் முதல் பௌர்ணமி இரவுதான் ஹோலிப்பண்டிகை என்பது ஐதீகம். இந்த பண்டிகையை பற்றி சரியாக தெரியாதவர்கள் இந்த சுட்டியை உபயோகப்படுத்தி தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

வண்ணங்களை நண்பர்களின் மீது பூசி விளையாடும் இந்த ஹோலிப்பண்டிகை தமிழகத்தில் பலருக்கும் தெரிந்து இருக்காது. ஆனால் வடநாட்டில் வாசித்தவர்களுக்கும் அந்த கலாச்சார முறையை தெரிந்தவர்களுக்கும் இந்த பண்டிகை பிடித்தமான ஒன்றாகும். எனக்கும் பிடித்த இந்த பண்டிகை நாளில் தமிழ் காமிக்ஸ் உலகில் வண்ணங்களை மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ் புத்தகங்களின் அட்டைப் படங்களை உங்களின் மேலான பார்வைக்கு சமர்பிக்கிறேன்.

 

 

011 Manjal Poo Marmam 147 Manjal Poo Marmam (Reprint) CC 08-1 038 Otran Vellai Nari
17 Neelappei Marmam 199 Manjalaai Oru Asuran Coming Soon Lion Comics Chick Bill Vellaiyai oru Vedhaalam 12 Vellai Pisasu
27 Sivappu Malai Marmam 255 Maraniththin Niram Karuppu 280 Sigapputhalai Saagasam Muthu Comics # 179 - Pachai Vaanam Marmam
New_Karuppu Pathiri Marman Poster 14 Sivappu Paathai Lion # 74 - Maranaththin Niram Pachchai New_Pachai Nari Padalam

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? உதாரணமாக இன்று பௌர்ணமி. அதனால் பௌர்ணமியை மைய்யமாக வந்த காமிக்ஸ்கள் என்று கூட நம்முடைய சக பதிவர்கள் பதிவிடலாம். அல்லது இன்று காட்டுக்குள்ளே வேட்டையாடிக் கொண்டு இருக்கும் ஒரு பதிவரை கருத்தில் கொண்டு கானகத்தில் கலவரம், இருண்ட காட்டில் இரண்டு மர்மம், கானக கலாட்டா, என்று கூட பதிவிடலாம்.

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன், 
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

14 comments:

  1. //உதாரணமாக இன்று பௌர்ணமி. அதனால் பௌர்ணமியை மைய்யமாக வந்த காமிக்ஸ்கள் என்று கூட நம்முடைய சக பதிவர்கள் பதிவிடலாம்.//

    என்ன கொடுமை சார் இது? அப்போ, இனிமே அமாவாசை, பௌர்ணமி நாட்களுக்கு கூட சிறப்பு பதிவுகள் வரும் போல இருக்கே?

    ReplyDelete
  2. //இன்று காட்டுக்குள்ளே வேட்டையாடிக் கொண்டு இருக்கும் ஒரு பதிவரை கருத்தில் கொண்டு கானகத்தில் கலவரம், இருண்ட காட்டில் இரண்டு மர்மம், கானக கலாட்டா, என்று கூட பதிவிடலாம். //

    அது யாருப்பா அது காட்டுக்குள்ளே கலாட்டா செய்வது? யாரென்று தெரியவில்லையே?

    ReplyDelete
  3. //தமிழ் காமிக்ஸ் உலகில் வண்ணங்களை மைய்யமாக கொண்டு வந்த//

    தவறை திருத்தி கொள்ளுங்கள். இங்கே ஒரு அட்டைப்படம் (வெள்ளையாய் ஒரு வேதாளம்) இன்றுவரை வரவில்லை. அதனால் வரவிருக்கும் என்று பதிப்பிக்கவும்.

    ReplyDelete
  4. ஒலக காமிக்ஸ் ரசிகா!

    உங்களுடைய சிந்திக்கும் பாங்கே தனிதான் போங்கள். காமிக்ஸ் தகவல்களை குறிப்பிட்ட ஒரு வகையில் தொகுத்து வழங்கும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பாராட்டத்தக்க முயற்சி! ஆனாலும்

    //இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை...// என்பதெல்லாம் சற்றே அதிகம் தான். இதெல்லாம் ஆராய்ச்சி கட்டுரையா? என்ன கொடுமை ஐயா இது?

    ReplyDelete
  5. எப்படியா இப்படில்லாம் யோசிக்கிறீங்க கொஞ்சம் சொல்லுங்களேன்

    ReplyDelete
  6. very very innovative concept.

    thanks for the covers

    ReplyDelete
  7. this is the 1st time am seeing the original cover of the manjal poo marmam. thanks.

    ReplyDelete
  8. there is another modesty blaise story that you have missed.

    pachai vanappaavai.

    or is it for next holi that you are holding those?

    ReplyDelete
  9. நண்பர்களே,

    புதிதாக ஒரு பதிவு இட்டு உள்ளேன். வந்து உங்கள் மேலான கருத்துக்களை பதிக்கவும்.

    நன்றி.

    http://kingofcrooks.blogspot.com/2010/03/blog-post.html

    ReplyDelete
  10. Lakki லிமட்,

    இதுக்கெல்லாம் நாங்க ஒரு சங்கம் வச்சு இருக்கோம். வந்து ஐக்கியம் ஆகணுமா?

    ReplyDelete
  11. //pachai vanappaavai.

    or is it for next holi that you are holding those?//

    Exactly.

    ReplyDelete
  12. Friend,புது போஸ்ட் ஒண்ணு போட்டு இருக்கேன்.வந்து பாத்துபுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.

    http://illuminati8.blogspot.com/2010/03/blog-post.html

    ReplyDelete

என்னுடைய வலைப்பூவை நீங்கள் படிக்கவில்லையெனில், படித்தவுடன் உங்களின் எண்ணங்களை தெரிவிக்கவில்லை எனில் உங்களிடம் அடிப்படையாகவே ஏதோ தவறு உள்ளது

Related Posts with Thumbnails