Wednesday, April 14, 2010

தமிழ் காமிக்ஸ் உலகில் ராஜாக்களும், மன்னர்களும்,

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். இன்று தமிழ் புத்தாண்டு நாள். தமிழ் காமிக்ஸ் உலகின் ரசிகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அதுமட்டுமல்ல, இன்று தமிழ் காமிக்ஸ் உலகின் முடி சூடிய மன்னர் கிங் விஸ்வாவின் பிறந்த நாளும்கூட.

இந்த நன்னாளில் நமது காமிக்ஸ் உலகில் இதுவரை ராஜாக்களையும், மன்னர்களையும் மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு. இந்த பதிவை இடாவிட்டால் தொடர்ந்து கவிதை சொல்லி டார்ச்சர் செய்வதாக "வேண்டப்பட்ட விரோதிகள்" என்னை மிரட்டியதால் வேறு வழி இல்லாமல் இப்படி ஒரு பதிவினை இடுகிறேன். பேரு என்னவோ, கிங் விஸ்வா, வலைப்பூ என்னவோ தமிழ் காமிக்ஸ் உலகம். ஆனால், எழுதுவது என்னவோ ஆங்கிலத்தில். இப்படி சில இருந்தாலும்கூட தமிழ் காமிக்ஸ் பற்றிய உருப்படியான தளமாக இருப்பதால் ஆங்கில அடிவருடித்தனத்தையும் கூட மறந்து அவரை வாழ்த்துகிறோம். நண்பர் முத்துவிசிறிக்கு பிறகு தரமான பதிவுகளை அற்புதமான நடையில் தொடர்ந்து தரும் நண்பர் கிங் விஸ்வாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

அவருடை பெயர் கிங் விஸ்வா என்பதால், தமிழ் காமிக்ஸ் உலகில் ராஜா மற்றும் மன்னர் என்று வந்த காமிக்ஸ்களை பற்றி அலசுவோம். முதலில் இதோ ராணி காமிக்ஸில் வந்த வேவு வீரர் ஜேம்ஸ்பாண்ட் துப்பறியும் ராஜா என்று பெயருள்ள கதைகள்:

ராணி காமிக்ஸ்-வேவு வீரர் 007-தங்க ராஜா ராணி காமிக்ஸ்-வேவு வீரர் 007-ராஜாளி ராஜா
James Bond Rani Comics Thanga Raja Cover Rani Comics 007 James Bond Rajali Raja Cover

அடுத்தபடியாக ராஜா மற்றும் மன்னர் என்று வந்த சில கதைகள். இந்த கதையின் தலைப்பை பாருங்கள் - ரவுடி ராஜா. என்ன கொடுமை சார் இது? ஒரு ரவுடி எப்படி ராஜாவாக முடியும் என்றா கேட்கிறீர்கள்? நீங்கள் இன்றைய அரசியல் நிலவரம் தெரியாத ஆள் என்று நினைக்கிறேன்.

ராணி காமிக்ஸ்-முகமூடி வீரர் மாயாவி-வேதாளர்-ரவுடி ராஜா
Rani Comics 007 Phantom Ravudi Raja
ராணி காமிக்ஸ்-முகமூடி வீரர் மாயாவி-வேதாளர்-தலைவெட்டி மன்னன்
Rani Comics Phantom Thalai Vetti Mannan

மன்னர் என்று வந்த சில பல தலைப்புகள் கொண்ட கதைகள். நண்பர் ஒருவருக்கு மிகவும் பிடித்த கதை இந்த தப்பி ஓடிய இளவரசி என்ற ராணி காமிக்ஸில் வந்த ஆரம்ப கதை. இதன் ஆங்கில வடிவ கதையை ஐய்யம்பாளயத்தார் அவர்களின் வீட்டில் பார்த்து ரசித்தேன். முழு வண்ணத்தில், பெரிய அளவில் வந்த அந்த புத்தகம் என்னை மிகவும் கவர்ந்தது. அதனை "தாருங்கள், படித்து விட்டு தருகிறேன்" என்று கேட்டால், அவரோ "இதெல்லாம் இப்போது கிடைக்காது சாமி" என்று கூறிவிட்டார். அதனால் மனம் நொந்தேன். இந்த அதிரடி மன்னன் கதையின் அட்டைப்படதினை அண்ணன் அழகிரி பிறந்த நாளின்போதும் இடலாம்.

ராணி காமிக்ஸ்-தப்பி ஓடிய இளவரசி-மன்னன் மகள் ஜூனியர் லயன் காமிக்ஸ்-சிக்பில்-அதிரடி மன்னன்
Rani Comics Historial Mannan Magal JuniorLionComics3AdhiradiMannan5

லயன் காமிக்ஸில் சமீபத்தில் வந்த இரண்டு கதைகளின் அட்டைப்படங்கள் இதோ. இந்த அட்டைப்படங்கள் நவீன கால யுத்தியை கையாண்டு லயன்  காமிக்ஸ் அலுவலகத்தில் உருவாக்கப்பட்டவை.

லயன் காமிக்ஸ்-சிக்பில்-மறையில்லா மன்னர் லயன் காமிக்ஸ்-லக்கிலூக்-மேற்கே ஒரு மாமன்னர் 
197 Maraiilla Mannar luckyluke

திகில் காமிக்ஸில் கருப்பு கிழவியின் கதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. ஆசிரியர் விஜயன் அவர்களின் எடிட்டோரியல் திறமைக்கு இந்த கதைகள் ஒரு சான்று. இதோ அவற்றில் ஒரு சிறந்த கதையை கொண்ட அட்டைப்படம்.

திகில் காமிக்ஸ்-அடுத்த வெளியீடு-தலையில்லா ராஜா திகில் காமிக்ஸ் - அட்டைப்படம் - தலையில்லா ராஜா
New_Thalaiyilla Raaja 39 Thalaiyilla Raja

டார்ஜான் அவர்களுக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஷூஜா என்ற கதாபாத்திரம் தமிழில் வனராஜா என்று முல்லை தங்கராசர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் மன்னர் பீமா என்ற பெயரில் ராணி காமிக்ஸ் ஆசிரியர் ராமஜெயம் அவர்களால் தொடரப்பட்டது.

முத்து காமிக்ஸ் வாரமலர் - முல்லை தங்கராசரின் அற்புத படைப்பு - வனராஜா யார்?
MCV18VanaRaja7
முத்து காமிக்ஸ் வாரமலர் - முல்லை தங்கராசரின் அற்புத படைப்பு - வனராஜா வண்ணத்தில்
MCV1VanaRaja5

மினி லயன் காமிக்ஸ் ஒரு அற்புத படைப்பு. சமீபத்தில் ஒருவர் என்னிடம் மொத்தம் நாற்பது மினி லயன் காமிக்ஸ்களையும் எட்டாயிரம் ரூபாய்க்கு விற்றார். இதோ அவற்றில் ஒன்று ராஜா ராணி ஜாக்கி.

மினி லயன் - சுஸ்கி மற்றும் விஸ்கி தோன்றும் - ராஜா ராணி ஜாக்கி - ஒரு அற்புதமான காமெடி தோரணம்
Mini Lion#019 - Raja Rani Jackie

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,  
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

25 comments:

  1. நண்பர் விஸ்வாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அப்போ ராணிகள், இளவரசிகள், சேடிப் பெண்கள் எல்லாரும் எங்கே என்று கூறவியலுமா!

    ReplyDelete
  3. நண்பரே,

    சிறப்பான அட்டைப்பட தெரிவுகள், ரவுடி ராஜா அட்டைப்படம் தூள் டக்கர்! வேதாளனின் பிடிக்குள் டயானா என்ன பாடுபடுவார் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

    யாவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ஒரு பெண்மான் புலியாக மாறியது- சரி ஏற்றுக் கொள்கிறோம் ஆனால் ஆண்புலியா, பெண் புலியா!

    ReplyDelete
  5. ராசாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. கிங் விஸ்வா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. நண்பர் விஸ்வாவிற்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  8. நண்பர் விஸ்வாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.



    அவரின் பிறந்த நாள் மற்றும் தமிழ் புத்தாண்டு சிறப்பு பதிவாக ஒரு முழு நீள காமிக்ஸ் கதையினை படிக்க அளித்துள்ளேன். படிக்க இங்கே செல்லுங்கள் தோழர்களே.

    காமிக்ஸ் ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்

    ReplyDelete
  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஸ்வா. அனைவருக்கும் என்னுடைய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. ஒலக காமிக்ஸ் ரசிகரே,

    அட்டைப்படங்கள் கண்ணை கவருகின்றன. அதிலும் அந்த திகில் காமிக்ஸ் அட்டை, சூப்பர்.

    ReplyDelete
  11. மறந்தே போய்விட்டேன்.

    தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் எல்லோருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. ரவுடி ராஜா, தலைப்பே சூப்பர்.

    ReplyDelete
  13. நண்பர்கள் அனைவருக்கும் விடுமுறை தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. amazing post with so much of unseen covers. thanks for the nice scans. they are awesome.

    ReplyDelete
  15. happy Tamil new year to one and all.

    ReplyDelete
  16. ஒலக காமிக்ஸ் ரசிகரே.

    பதிவிட்டமைக்கு நன்றி. இந்த பதிவில் வந்து கருது மற்றும் வாழ்த்து அளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மருத்துவமனையில் பாதி நாளை கழித்தமையால் உடனடியாக யாருக்கும் பதில் அளிக்கவில்ல.

    கனவுகளின் காதலன் - நன்றி நண்பரே.
    //அப்போ ராணிகள், இளவரசிகள், சேடிப் பெண்கள் எல்லாரும் எங்கே என்று கூறவியலுமா//
    அவர்களை யாரோ கனவு காணும் "பெரியவர்" ஒருவர் தள்ளிக் கொண்டு பொய் விட்டதாக தகவல். யார் என்று தெரியுமா?

    //SUREஷ் (பழனியிலிருந்து) said...
    ராசாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்//

    நன்றி தல.

    //அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் said...

    கிங் விஸ்வா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!//

    நன்றி சார்.
    //ஸ்ரீ.... said...

    நண்பர் விஸ்வாவிற்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்//

    நன்றி ஸ்ரீ.



    //புலா சுலாகி said...

    நண்பர் விஸ்வாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். //

    நன்றி நண்பரே.



    //முத்து விசிறி said...

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஸ்வா//

    நன்றி தலைவரே.

    ReplyDelete
  17. ரவுடி ராஜான்னு தெலுங்கு டப்பிங் படம் ஏதும் வந்திருக்கா?

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  18. அனைவருக்கும் அம்பேத்கர் தின, தமிழ் புத்தாண்டு, விடுமுறை தின சிறப்பு நல்வாழ்த்துக்கள்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  19. உங்களுக்கு மட்டும் எப்படியா காமிக்ஸ் வந்து விக்குராணுக... நானும் தேடிகிட்டு தான் இருக்கேன் ஒன்னும் கிடைக்க மாட்டேங்குது

    ReplyDelete
  20. நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் அம்பேத்கார் தின வாழ்த்துக்கள்.

    நண்பர் விஸ்வாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. super pathivu nanba raja rani jockey inrum en manathil AAni adithu nirkum kathaigalil onru!

    ReplyDelete
  22. மிக நன்றாக உள்ளது
    மிக்க நன்றி

    ReplyDelete

என்னுடைய வலைப்பூவை நீங்கள் படிக்கவில்லையெனில், படித்தவுடன் உங்களின் எண்ணங்களை தெரிவிக்கவில்லை எனில் உங்களிடம் அடிப்படையாகவே ஏதோ தவறு உள்ளது

Related Posts with Thumbnails