
பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். தமிழ் காமிக்ஸ் உலகில் பல பதிவர்கள் இருந்தாலும்கூட தனியிடத்தினை பிடித்தவர் திரு அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்கள். யாருக்கும் அஞ்சாமை, சீரிய சிந்தனை, நேர்மையான போக்கு, என்று பல குணாதிசயங்களை கொண்ட இவர் சுலபத்தில் அனைவரின் கருத்தினையும் கவர்ந்தவர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
தன்னுடைய காமிக்ஸ் பூக்கள் என்ற சிறுவர் இலக்கிய சிந்தனை வலைப்பூவிலேயே பல அனல் கக்கும் அரசியல் கருத்துக்களை அஞ்சாமல் அள்ளி வீசுபவர் அய்யம்பாளையம் சார் என்பது அவரின் வலைதளத்தினை தொடர்பவர்களுக்கு நன்றாக தெரியும். பல நாட்களாக தன்னுடைய கொள்கைகளை வகுத்துக்கொண்டிருந்த நண்பர் இப்போது அரசியல் உலகில் அடியெடுத்து வைக்கிறார். மிக, மிக விரைவில் கோட்டைக்கு போகப் போகும் அவரைப் பாராட்டி, இந்த நாளில் நமது காமிக்ஸ் உலகில் இதுவரை கோட்டைகளை மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு.
முதன் முதலில் விஜயன் சாரின் தயாரிப்பில் வந்த கோட்டை கதை இதுதான். இந்த கதையை ராணி காமிக்ஸ் மறுபடியும் வெளியிட்டார்கள். அட்டைப்படம் அட்டகாசம்.
லயன் காமிக்ஸ் Issue No 011 - மாடஸ்டி ப்ளைசி - மரணக் கோட்டை – Death of a Jester |
தொன்னூறுகளில் வெளிவந்த பார்வதி சித்திரக்கதை புத்தகங்களில் வாண்டுமாமா அவர்களின் சிறந்த கதைகள் வெளிவந்தன. அவற்றில் இரண்டு.
பார்வதி சித்திரக் கதைகள் - வாண்டுமாமா - ஓநாய்க் கோட்டை - அங்கதன் கோட்டை அதிசயம் |
ராணி காமிக்ஸ் இதழ்களில் பல கோட்டை சம்பந்தமான கதைகள் வந்தன. அவற்றில் சிலவற்றை உங்களின் பார்வைக்கு வைத்துள்ளேன்.
வாண்டுமாமா அவர்களின் எழுத்தில் கோட்டை சார்ந்த மேலும் இரண்டு கதைகள் உங்களின் பார்வைக்கு. இவற்றில் இந்த கரடிக் கோட்டை புத்தகம் இன்னமும் விற்பனைக்கு உள்ளது. மேல் விவரங்களுக்கு இந்த பதிவினை படிக்கவும்.
வாண்டுமாமா - நெருப்பு கோட்டை - இல்லாத புத்தகம் | வாண்டுமாமா - கரடி கோட்டை |
தமிழ் காமிக்ஸ் உலகில் கேப்டன் பிரின்சை தெரியாதவர்கள் குறைவே. அவரின் ஒரே கதை இரண்டு பதிப்பகங்களின் மூலம் வந்துள்ளது. பார்த்து ரசியுங்கள்.
ஸ்டார் காமிக்ஸ் - பனிமலைக்கோட்டை | திகில் காமிக்ஸ் - பனி மண்டல கோட்டை |
வாசகர்களுக்கு ஒரு போட்டி: அரசியல் உலகில் அடியெடுத்து வைக்கும் அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் சாருக்கு பிற்காலத்தில் அரசியல் விடிவெள்ளி, வாழும் கலைஞர், ஓடும் வள்ளுவர் என்றெல்லாம் பட்டப்பெயர்கள் வழங்கப்படும். ஆனால், இப்போதைய நிலையில் (பேரரசர் என்பதை தவிர) வேறு பட்டப்பெயர்கள் இல்லாமல் இருக்கிறார் அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் சார். ஒரு அரசியல்வாதிக்கு அழகே பட்டப்பெயர் தான். ஆகையால் நமது அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் சாருக்கு ஒரு சரியான பட்டப்பெயரை தேர்ந்தெடுத்து வழங்குங்கள். பொருத்தமான பெயரை வழங்குபவர்களுக்கு பரிசு பதவி வழங்கப்படும்.
நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?
உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?
நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.