Friday, May 28, 2010

தமிழ் காமிக்ஸ் உலகில் சிங்கம்

 பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். நம்முடைய சென்ற சினிமா சம்பந்தப்பட்ட பதிவானது (தமிழ் காமிக்ஸ் உலகில் சுறா) மக்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றது நினைவிருக்கும். அதனால் இனிமேல் அதனைப்போலவே சில பல பதிவுகளை இடலாம் என்று பலரும் கூறி இருந்தனர். குறிப்பாக கோவையிலிருந்து மருத்துவர் திரு கந்தசுவாமி அவர்கள் கொடுத்த வரவேற்பே இந்த பதிவின் மூலக்காரணம். அவருக்கு எங்கள் நன்றிகள்.

இன்று நடிகை ஜோதிகாவின் புருஷனாகிய சூர்யா நடித்த "சிங்கம்" என்ற படம் ரிலீஸ் ஆகி உள்ளது.  எனவே நமது காமிக்ஸ் உலகில் இதுவரை சிங்கத்தை மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு. நான் முதலில் படித்த சிங்கம் பெயருள்ள காமிக்ஸ் கதை "சிங்கத்தின் குகையில்" ஆகும். முத்து காமிக்ஸ் மறுபடியும் ஆசிரியர் விஜயன் அவர்களின் கைவண்ணத்தில் புத்துயிர் பெற்று வந்த நேரத்தில் வந்த ஒரு அற்புதமான கதை. இதில் வரும் ஒரு வில்லர் (வில்லனுக்கு கொஞ்சம் மரியாதை தான்) மிகவும் நுணுக்கமான ஒரு மனிதர். இந்த கதைக்கே ஆணிவேர் அவர்தான். ஆங்கிலத்தில் ஸ்பை-13 என்ற பெயரில் வந்த இந்த கதை தொடர் மிகவும் பிரபலம் பெற்றது.

முத்து காமிக்ஸ் இதழ் எண் 178 ஏஜென்ட் சைமன் (Spy – 13) தோன்றும் சிங்கத்தின் குகையில்

MuthuComics178SingathinGuhaiyil1

அடுத்தபடியாக நான் படித்த சிங்க வரிசை கதை கூட முத்து காமிக்ஸில் வந்த ஒன்றுதான். ஆம், விங் கமாண்டர் ஜார்ஜ் தோன்றும் சிங்கத்திற்கொரு சவால் என்ற கதைதான் அது. இது ஒரு போட்டியான கதை ஆகும். வழமையான ஜார்ஜ் கதை போல இல்லாமல் சற்று வேகமாக இருந்த கதை இது. இந்த விங் கமாண்டர் ஜார்ஜ் கதைகளைத்தான் ராணி காமிக்ஸில் ஜானி என்ற பெயரில் வெளியிட்டார்கள்.

முத்து காமிக்ஸ் இதழ் எண் 217 சிங்கத்திற்கொரு சவால் விங் கமாண்டர் ஜார்ஜ் சாகசம் Johnny Hazard

Singathirkoru Saval

அடுத்து நான் படித்த சிங்க தலைப்பு இருந்த கதை திகில் லைப்ரரி இதழில் வந்த இரண்டாம் புத்தகம் ஆகும். ஆம், ஷெர்லக் ஹோல்ம்ஸ் துப்பறிந்த "சிங்கத்தின் பிடரி" என்ற கதைதான் அது. இந்த கதை இப்போதும் திரு ஐய்யம்பாளயத்தாரால் மிகவும் ரசிக்கப்படுகிறது என்றால் அதன் சிறப்பான கதையோட்டமே காரணம் ஆகும்.

திகில் லைப்ரரி முதல் இதழ் விளம்பரம் “பிடறி” சிங்கத்தின் பிடரி (றி இல்லை றி தான்) முதல் பக்கம்
Thigil Library Issue No 1 Dated 1st March 1993 Next Issue Ad Thigil Library Issue No 2 Dated 1st Septl 1993 Sherlock Holmes 1st Page

Thigil Library Issue No 2 Dated 1st Sept 1993 Front Wrapper

அடுத்து நான் படித்த சிங்க கதை ராணி காமிக்ஸில் வந்த சிங்க சிறுவன் ஆகும். சூப்பர் கதை, வேறொன்றுமில்லை மேற்கொண்டு சொல்ல.

ராணிகாமிக்ஸ் இதழ்343 அடுத்த வெளியிடு விளம்பரம் ராணி காமிக்ஸ் இதழ் 344 சிங்கசிறுவன் முதல் பக்கம்
Rani Comics No 343 Palaivanak Kollai Next Issue Ad Rani Comics No 344 Singa Siruvan Cover

Rani Comics No 344 Singa Siruvan

அது சரி, இப்போது வந்துள்ள சிங்கம் படம் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை என்கிறீர்களா? சரிதான். இந்த சன் பிக்சர்ஸ் படம் என்றாலே எப்படி இருக்கும் என்பது மக்களுக்கு தெரியும். இந்த சிங்கம் படம் பார்ப்பதைவிட மர்மவீரன் மாவீரன் சிங்கன் தோன்றிய கடல் கொள்ளைக்காரி கதையையே படித்து விடலாம்.

சிம்ரன் மற்றும் விஜய் தோன்றிய பிரியமானவளே படத்தின் போட்டோ ஸ்டில்லை மாடலாக கொண்டு வரைந்த அட்டைப்படம் 

Rani Comics No 490 Kadal Kollaikkari Singam

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,  
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Monday, May 24, 2010

தமிழ் காமிக்ஸ் உலகில் - கார்

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். நம்முடைய சென்ற பதிவானது (தமிழ் காமிக்ஸ் உலகில் சுறா) மக்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக வெற்றிப்பட இயக்குனரும், வெற்றிப்பட நடிகர், இளைய தளபதி, மருதுதுவர் விஜய் அவர்களின் தந்தையுமான வருங்கால தமிழக கவர்னர் திரு எஸ். ஏ.சந்திரசேகரா அவர்களிடம் இருந்து தனிப்பட்ட பாராட்டி வந்தது. அவருக்கு நன்றிகள் பல. வெகு விரைவில் காவல்காரன் வேறு வரவிருப்பதால், "வேட்டை - ஆரம்பமாயிடுச்சு டோய்" என்று நம்முடைய கட்டம் போட்ட கர்சிப்பை இடது தொடையில் கட்டிக்கொண்டு களமிறங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை இங்கு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

சமீபத்தில், நான் ஒரு விபத்தை சந்தித்தது (தமிழ் காமிக்ஸில் விபத்துகள்) பற்றி அனைவரும் அறிந்ததே. அந்த விபத்தில் என்னுடைய வாகனம் பழுதடைந்தது மக்களுக்கு தெரியும். ஆகையால், சமீபத்தில் ஒரு சீருந்து ஒன்று வாங்கினேன். அதனை பற்றிய விவரங்கள் பதிவின் முடிவில். இந்த தருணத்தில் தமிழ் காமிக்ஸ் உலகில் கார்கள் பற்றிய சிறப்பு பதிவொன்றை இட்டால் என்ன என்று தோன்றியது. அதனால் களமிறங்கி விட்டோம்.

காமிக்ஸ் உலகில் கார் என்றாலே மக்களுக்கு நினைவுக்கு வருவது மினி லயன் காமிக்ஸில் வந்த கொள்ளைக்கார கார் கதைதான். சிறப்பான நடையும், துள்ளலான கதையோட்டமும், தெளிவான தமிழாக்கமும் இதன் வெற்றிக்கு காரணங்கள். இந்த கதையை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள கிங் விஸ்வாவின் இந்த பதிவை படியுங்கள்.

மினி லயன் காமிக்ஸ் - கொள்ளைக்கார கார் - ஒரு சூப்பர் டூப்பர் கதை - இங்கே சென்று படியுங்கள்
Mini Lion Comics Issue No 25 July 1990 Kollaikara Car Spirou Starter

அடுத்தபடியாக நான் சொள்ளவிருப்பது குங்க்பூ மன்னன் புரூஸ்லீ தோன்றிய கார் பந்தையம் ஆகும். இந்த கதைதான் நான் படித்த முதல் புரூஸ்லீ கதை. அந்த தருணங்களில் புரூஸ்லீ ஒரு கல்ட் ஹீரோவாக அவதாரம் எடுத்திருந்தார். ஆகையால் மிகவும் ஆர்வமுடன் இதனை படித்தேன். இது உண்மையில் திரைப்படமாக வந்த பிக் பாஸ் படத்தின் ஒரு அங்கமாகும். படிக்க தவறாதீர்கள்.

 

ராணி காமிக்ஸ் - அடுத்த இதழ் -கார் பந்தயம்

குங்க்பூ மன்னன் புரூஸ்லீ தோன்றும் கார் பந்தயம்

Rani Comics Car Pandhayam Next Issue Rani Comics Car Pandhayam

எகிப்திய மம்மி என்று ஒரு கதை ராணி காமிக்ஸில் வந்தது. யாருக்காவது நினைவிருக்கிறதா? அந்த கதை ஹீரோ பெயர் தியோ. அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அவர் ஒரு வித்தியாசமான ஹீரோ என்று பெயரெடுத்தவர். அவரின் கதைகள் இரண்டே இரண்டு தான் வந்துள்ளன. அவற்றில் இது இரண்டாவது கதை. காலப்பயணம் செய்யும் திறனுள்ள ஒரு வாகனம் அவரது சிறப்பு அம்சமாகும்.

ராணி காமிக்ஸ் - துப்பறியும் வீரர் தியோ தோன்றும் சூப்பர் கார்

Rani Comics Super Car Next Issue
Rani Comics Super Car

சிறப்பு வாய்ந்த ஓவியர் ரோமேரோவின் படைப்பாகிய ஆக்ஸா தமிழில் வந்துள்ளது எனக்கு மிகவும் ஆச்சர்யத்தை தருகிறது. பல வகையில் சென்சார் செய்யப்படவேண்டிய சித்திரங்களை கொண்டது இந்த தொடர். இதனையும் தமிழில் கொண்டு வந்தது ஆசிரியர் ராமஜெயம் அவர்களின் சிறப்பான திறமையை காட்டுகிறது.

 

பெண் டார்ஜான் ரீனா தோன்றும் கார் வேட்டை - குத்துன்னா குத்து - கும்மாங் குத்து

Rani Comics Car Vettai

கடைசியாக, இதோ இதுதான் என்னுடைய பெற்றோர்கள் சமீபத்தில் வாங்கிய காரின் புகைப்படம் (பின்னே என்னங்க, நான் கார் வாங்கினேன் என்று சொன்னால், உடனே எப்போ டிரீட் என்று கேட்கிறார்கள் - அதான் - என்னுடைய பெற்றோரின் வாகனம் என்று கூறிவிட்டேன்).

 

Car He He he

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இடகூடாது?

நன்றியுடன்,  
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Monday, May 3, 2010

தமிழ் காமிக்ஸ் உலகில் சுறா

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். நேற்றைய "தல" பதிவானது தமிழ் காமிக்ஸ் உலகில் பல அதிரடி மாற்றங்களை கொணர்ந்துள்ளது.

அதாகப்பட்டது, பல (உண்மையிலேயே) இளைய தளபதி டாக்டர் விஜய் ரசிகர்கள் நமக்கு மின்னஞ்சல் அனுப்பி நீங்கள் "தல" ரசிகரா? அதனால் தான் சுறா ரிலீஸ் ஆகும் தருணத்தில் "தல" பற்றிய பதிவினை இட்டு (இன்னமும் இருக்கும்) இளைய தளபதி டாக்டர் விஜய் ரசிகர்களை மனம் நோகச் செய்கிறீர்கள் - என்று வினவினார்கள். இந்த அரசியலில் கலக்க விரும்பாத ஒரு காரணத்தினால், இந்த பதிவானது இடப்பட்டுள்ளது. எனவே நமது காமிக்ஸ் உலகில் இதுவரை "சுறா"வை மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு.

என்னிடம் இருக்கும் புத்தகங்களிலேயே இதுதான் முதல் சுறா படக்கதை. அதனால் இந்த அட்டைப்படத்தினை முதலில் அளித்துள்ளேன். இந்த புத்தகம் ஒரு கிடைத்தற்கரிய புத்தகம். இந்த புத்தகத்தினை கனவுகளின் காதலர் (கவனித்தீர்களா மரியாதையை - ர்) போன்ற ரசிகர்கள் முதலில் கடையில் வாங்கி படித்திருக்கவும் வாய்ப்புண்டு. ஹாஜா, காதலர், முத்து விசிறி போன்ற நண்பர்கள் அந்த அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டால் சுகம்.

இந்த புத்தகத்தினை நான் முதலில் பார்த்தபோது லாரன்ஸ் டேவிட் ஜோடி சாகாசம் போலிருக்கிறது என்றெண்ணி விட்டேன். அட்டையில் இருக்கும் லோதரை பார்க்கையில் டேவிட் போலவே இருந்தது (கிறது?).

முத்து காமிக்ஸ் - மந்திரவாதி மாண்டிரெக் கதை - குறும்புக்கார சுறாமீன் – Issue No 77 – 15th June 1978

Kurumbukaara Surameen

என்னிடம் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் மற்றுமொரு புத்தகம் இது. இதுவும் கிடைத்தற்கரிய ஒன்றே ஆகும். இதனை எல்லாம் ரீபிரின்ட் செய்ய சொன்னால் நன்றாக இருக்கும். ஆனால் கடந்த முத்து காமிக்ஸ் (மாண்டிரெக் சாகசம்) விற்பனை நிலையை சற்றேன்ணினால் வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு என்றே தோன்றுகிறது.

முத்து காமிக்ஸ் - மந்திரவாதி மாண்டிரெக் சாகசம் - விண்ணில் நீந்தும் சுறா – Issue 81 – 15th Oct 1978

Vinnil Neendhum Sura

நான் படித்த முதல் ஒரு ருபாய் முத்து காமிக்ஸ் இதுதான். இந்த கதையில் ஜார்ஜ் உடன் வரும் ஒரு பெண் பாத்திரம் என் மனதை கவர்ந்த ஒரு பாத்திரம் ஆகும். இந்த கதை இதுவரை ராணி காமிக்ஸில் வரவில்லை என்பது கூடுதல் தகவல்.

முத்து காமிக்ஸ் - ஜார்ஜ் சாகசம் - ராணி காமிக்ஸ் ஜானி - சுறாமீன் வேட்டை – Issue 128 – 01st Sept 1981

Surameen Vettai

நான் வாங்கிய முதல் ராணி காமிக்ஸ் இதுவே. வேவு வீரர் ஜேம்ஸ் பான்ட் என்னை மிகவும் கவர்ந்த ஒரு ஹீரோ. அதுவும் அந்த முரட்டு கத்யாவை கவர அவர் படும்பாடு இருக்கிறதே, அப்பப்பா சொல்லி மாளாது. பல கிளுகிளுப்பான காட்சிகள் நிறைந்த கதை என்பதை சொல்லவும் வேண்டுமோ?

ராணி காமிக்ஸ் - வேவு வீரர் 007 ஜேம்ஸ் பான்ட் சாகசம் - சுறா வேட்டை – Issue No 7

Rani Comics Sura Vettai

உலகிலேயே ராணி காமிக்ஸில் தான் ஒரே பெயரில் பல கதைகள் அட்டைப்படத்திலேயே வந்துள்ளது என்றெண்ணுகிறேன். அதற்க்கு உதாரணம் இதோ:

ராணி காமிக்ஸ் - முகமூடி வீரர் மாயாவி -அடுத்த வெளியீடு விளம்பரம் 

ராணி காமிக்ஸ் - முகமூடி வீரர் மாயாவி- சுறா வேட்டை 

Rani Comics 331 Sura Vettai Next Issue Ad Rani Comics 332 Sura Vettai 1st Page

ஆம், ஆரம்ப காலத்தில் ஜேம்ஸ்பான்ட் எப்படி ராணி காமிக்ஸை காப்பாற்றினாரோ, அதைப்போலவே பிற்காலத்தில் மாயாவியும் ராணியை காப்பாற்றினார். இது மாயாவியின் சுறா வேட்டை.

ராணி காமிக்ஸ்-முகமூடி வீரர் மாயாவி-விறுவிறுக்க வைக்கும் படக்கதை-சுறா வேட்டை-படிக்க தவறாதீர்கள்

Rani Comics 332 Phantom Sura Vettai Cover

dr 7

இந்த இடத்தில் பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களைப் பற்றி சொல்லியே தீரவேண்டும். தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த விஷயம் (நன்றாக கவனிக்கவும் - விடயம் இல்லை) என்னவென்றால் அவர் ஒரு மருத்துவர் விஜய் ரசிகர் என்பது. ஆனால் தெரியாத விஷயம் என்ன என்றால் அவர் கடந்த மருத்துவர் விஜய் படமாகிய வேட்டைக்காரனை தியேட்டரில் பிளாக் டிக்கெட் கொடுத்து பார்த்தார் என்பதே. அந்த தருணத்தில் அவர் வெளியிட்ட இரண்டு பதிவுகளும் வேட்டைக்கரனை பற்றியதே. முதல் பதிவு வேட்டைக்காரன் திரை விமர்சனம். (படிக்க இங்கே அமுக்கவும் - அமுக்கினால் தனியாக வரும்) இரண்டாவது பதிவு - வேட்டைக்காரியை பற்றியது. அது ஒரு கசமுசா பதிவாகும், அதனை படிக்க இங்கே கிளிக்கவும். இதோ தமிழ் காமிக்ஸில் வந்த வேட்டைக்காரன் அட்டைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

ராணி காமிஸ் - முகமூடி வீரர் மாயாவி - வேட்டைக்காரன் 1

ராணி காமிஸ்-முகமூடி வீரர் மாயாவி  வேட்டைக்காரன் 2

Rani Comics Vettaikkaran 1 Rani Comics Vettaikkaran 2

சரி, ஏதோ சென்ற படத்தை தான் பிளாக் டிக்கெட்டில் பார்த்தார் என்றால் இந்த சுறா படத்தை சுமார் இருநூறு கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து தனியாக (ஆமாங்க, தனி ஆளாக - ஒண்டியாக) இந்த படத்தை முழுவதுமாக பார்த்து விட்டு செய்கூலி சேதாரம் இல்லாமல் திரும்பி வந்துள்ளார் என்பதே இந்த பதிவில் நாம் கூற விரும்பும் முக்கிய கருத்து.

வாழ்க டாக்டர் செவன், வளர்க அவரது தைரியம். உண்மையிலேயே நாம் அவரைப்பாராட்டியே தீர வேண்டும். எத்துனை தைரியம் இருந்தால் இப்படி ஒரு காரியத்தை தனியாக செய்திருப்பார். இதற்காகவே எஸ்.எ. சந்திரசேகரா அவர்கள் இவருக்கு தனியாக ஏதாவது ஒரு விருது வழங்க வேண்டும். அல்லது நாம் அனைவரும் சேர்ந்து ஜனாதிபதிக்கு மனு போட்டு நமது நாட்டின் உயரிய வீரச்செயலுக்கு வழங்கப்படும் பரம் வீர் சக்ரா போன்ற விருதகளையாவது வழங்க ஆவன செய்ய வேண்டும்.

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,  
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Saturday, May 1, 2010

தமிழ் காமிக்ஸ் உலகில் “தல”

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். இன்று மே தினம். அதாவது உழைப்பாளர் தினம். அதாவது உழைப்பாளர்களின் பெருமையை உலகுக்கு காட்டும் தினமாகும். இந்த நாளில் அனைத்து அரசாங்க மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கும் விடுமுறையாகும். ஆனால், உழைப்பாளர் தினத்திலேயே உழைக்கவில்லைஎனில் மற்ற நாளில் என்ன உழைப்பீர்கள்? என்ற கேள்வியுடன் நண்பர் திரு அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்கள் விடாபிடியாக இன்றும் தன்னுடைய கடமையை செய்ய பணிக்கு சென்றுள்ளார். அவர் வாழ்க, அவருடைய கடமை உணர்ச்சி வாழ்க.

இந்த உழைப்பாளர் தின நாளில் பிறந்தவர்தான் நம்முடைய அல்டிமேட் ஸ்டார் அஜித். அவரை ரசிகர்கள் செல்லமாக "தல" என்று அழைப்பார்கள். இந்த நாளில் அவரின் பிறந்த நாளை போற்றும் விதமாக இந்நாளில் நமது காமிக்ஸ் உலகில் இதுவரை "தல"யை மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு.

முதன் முதலில் நான் படித்த "தல" கதை டெக்ஸ் வில்லர் தோன்றும் (அறிமுகமாகும்) தலை வாங்கி குரங்கு. எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது அந்த நாள். டெக்ஸ் கூட ஒரு ஜென்டில் மென் ஹீரோதான் (ஆனால் நண்பர் கனவுகளின் காதலன் அவர்கள் எப்போது டெக்ஸின் கப்படிக்கும் சட்டையை பற்றியே கூறுவதால் ஒருவேளை அவர் இத கருத்தில் இருந்து மாறுபடலாம்). நம்ம தல போல வருமா என்று பாடல் வரும்போது எனக்கு என்னமோ டெக்ஸ் தான் நினைவுக்கு வருகிறார். 

லயன் காமிக்ஸ் - முதல் டெக்ஸ் கதை - தலை வாங்கி குரங்கு 

லயன் காமிக்ஸ் - முதல் டெக்ஸ் கதை - தலை வாங்கி குரங்கு 

Lion019ThalaiVaangiKurangu_thumb1 Lion019ThalaivaangikKuranguBack_thum

அடுத்தபடியாக நான் கடையில் வாங்கிய திகில் காமிக்ஸ் இதழ் - தலையில்லா ராஜா. இதில் வரும் ஒரு கதையை நண்பர் ஒருவர் பல வருடங்களாக பதிவிடுகிறேன் என்று சொல்லியே நாளை கழித்து வருகிறார். இந்த புத்தகம் ஒரு அரிய புத்தகம் ஆகும். கிடைத்தால் என்ன விலையாயினும் வாங்கி விடுங்கள். 

திகில் காமிக்ஸ் - கருப்பு கிழவி கதைகள்-தலையில்லா ராஜா 

திகில் காமிக்ஸ் - கருப்பு கிழவி கதைகள்-தலையில்லா ராஜா 

39 Thalaiyilla Raja New_Thalaiyilla Raaja

பிறகு ராணி காமிக்ஸில் முகமூடி வீரர் மாயாவி (மாயாவி குத்து கும்மாங்குத்து - மறக்க முடியுமா?) தோன்றும் தலை வெட்டி மன்னன் கதை. இது போன்ற மொக்கையான மொழிமாற்றத்தை யாரும் படித்திருக்கவே இயலாது. என்ன கொடுமை என்றால் கடந்த ஜெனரேஷனில் வந்த பல காமிக்ஸ் ரசிகர்கள் இது போன்ற மொக்கை கதைகளைத்தான் நினைவில் கொண்டிருக்கிறார்கள்.

ராணி காமிக்ஸ் - முகமூடி வீரர் மாயாவி தோன்றும் தலை வெட்டி மன்னன் - மொக்கை தமிழாக்கம்

Rani Comics Phantom Thalai Vetti Mannan

இந்த கதை வேவு வீரர் ஜேம்ஸ் பான்ட் தோன்றும் மொட்டை தலை ஒற்றன் கதையாகும். இந்த கதையையும் இதன் ஆங்கில மூலக்கதையையும் படித்தவர்கள் கேட்ட முதல் கேள்வி இதுதான்: "மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் என்னையா சம்பந்தம்?". அந்த அளவுக்கு பல வர்ணனைகள் இந்த கதையில் இருக்கும். மறக்க முடியாத ஒரு ஜெம்: கிளைமாக்சில் ஜேம்ஸ் பான்ட் கூறுவது: "இந்த ஜாடிக்கு மூடி தேவை இல்லை".

ராணி காமிக்ஸ் - வேவு வீரர் 007 - மொட்டை தலை ஒற்றன் - என்னாமா டைட்டில் வைக்கிறாங்கோ?

Rani Comics Mottai Thalai Otran

நான் முத்து காமிக்ஸில் ரசித்து படித்த கதை இந்த கதையாகும். தமிழில் நான் படித்த லாரன்ஸ் டேவிட்டின் முதல் கதை இதுவே. மறக்க முடியாத ஒரு வில்லன் பாத்திரம் இந்த கதையில் வருவார். மிஸ்டர் XYZஐ மறக்க முடியுமா தோழர்களே?

முத்து காமிக்ஸ் - சி.ஐ.டி. லாரன்ஸ் & டேவிட் சாகசம் - தலை கேட்ட தங்க புதையல்

TT-COVER

ஒரு அற்புதமான ஆக்ஷன் சீன் எப்படி அட்டைப்படமாக மாறுகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் ஆகும். காமிக்ஸ் கிலாசிக்சில் வந்த இந்த அட்டைப்படதினை பற்றிய விரிவான பதிவினை விரைவில் (ஒரிஜினல் ஒலக காமிக்ஸ் ரசிகன் ஸ்டைலில்) நீங்கள் படிக்கலாம். குறிப்பாக டேவிட் எப்படி ஆபரேஷன் செய்யப்பட்டு மாறுகிறார் என்பதே முக்கிய அம்சம். மறந்து விடாதீர்கள்.

காமிக்ஸ் கிளாசிக்ஸ்  - சி.ஐ.டி. லாரன்ஸ் & டேவிட் சாகசம் - தலை கேட்ட தங்க புதையல்

CC 14-2

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,  
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Related Posts with Thumbnails