Wednesday, April 7, 2010

உலக சுகாதார நாள் - தமிழ் காமிக்ஸ் உலகில் டாக்டர்கள்

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். இன்று உலக சுகாதார நாள் ஆகும். உலக சுகாதார நாள் (World Health Day) என்பது உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக சுகாதார அமைப்பின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக சுகாதார நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து ஓர் முக்கியமான உலக சுகாதார அமைப்பின் முக்கியமான சுகாதாரம் சம்பந்தமான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.

இந்த நன்னாளில் நமது காமிக்ஸ் உலகில் இதுவரை டாக்டர்களை மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு. தமிழ் காமிக்ஸ் உலகம் என்றாலே திறமையான ஆங்கில பதிவர்கள் மட்டுமே (முதன் முதலில் முத்துவிசிறி & பின்னர் கிங் விஸ்வா) என்று இருந்த நிலையை மாற்றி தமிழிலும் சிறந்த காமிக்ஸ் தளங்களை இயக்க முடியும் என்பதை உலகிற்கு காட்டியவர் நமது காமிக்ஸ் டாக்டர் செவன். அவருக்கு இந்த பதிவுகளை சமர்ப்பணம் செய்கிறேன். நன்றி டாக்டர். உங்களால் தான் பலரும் தமிழில் காமிக்ஸ் வலைப்பதிவுகளை ஆரம்பித்தனர் என்பது கண்கூடான உண்மை. அவர்கள் அனைவரின் சார்பிலும் நன்றி.

அடுத்தபடியாக நான் நன்றி சொல்லும் இன்னொரு நபர் பழனி (எங்க சொந்த ஊர்) திருதலதினை சேர்ந்த டாக்டர் சுரேSH அவர்கள். யார் ஒருவர் காமிக்ஸ் பற்றிய பதிவினை இட்டாலும் வந்து அவர்களை பாராட்டும் ஒரு சிறப்பான மனிதர். வாழ்க அவர். வளர்க அவரின் கனவுகள்.

முத்து காமிக்ஸ் - சீக்ரெட் எஜன்ட் காரிகன் கதை - பயங்கரவாதி டாக்டர் செவன் - ஒரு கிளாசிக் சாகசக் கதை
Bayangaravaadhi Dr 7

நம்முடைய காமிக்ஸ் டாக்டர் முதன்முதலில் பதிவுலகில் அடியெடுத்து வைத்தபோது இந்த பதிவுடந்தான் வந்தார். ஆனால் அந்த பதிவில் இந்த கதையை பற்றி எதுவுமே சொல்லவில்லை என்பது ஒரு கொடிய உண்மை. ஆனால், அந்த பதிவின் தலைப்புக்கு நியாயம் செய்யும் விதமாகவே அந்த பதிவு இருந்தது என்பது மறுக்க இயலாத உண்மை.

லயன் காமிக்ஸ் - சூப்பர் ஸ்டார் ஸ்பைடர் சாகசம் - டாக்டர் டக்கர் - ஒரு அமானுஷ்ய வில்லனுடன் மோதல்
Lion004DoctorTakkar2

நம்முடைய லயன் காமிக்ஸில் வந்த மறக்க முடியாத ஸ்பைடர் கதை இது. இன்னமும் எனக்கு இந்த கதையை முதன்முதலில் படித்த நினைவு உள்ளது. பள்ளியில் ஸ்கூல் பையில் வைத்து தான் இந்த கதையை படித்தேன். புத்தகம் வரும்போது அல்ல, வந்து ஐந்து வருடங்களுக்கு பிறகு தான் 1989-இந்த புத்தகம் எனக்கு ஒரு பழைய புத்தககடையில் கிடைத்தது. அதனால் மதிய உணவு இடைவேளையில் இந்த கதையின் ஆரம்ப பக்கங்களை படித்தேன். மதிய உணவு இடைவெளி முடிந்தவுடன் முதல் வகுப்பு புவனேஸ்வரி மேடம் அவர்களின் வகுப்பு. அதனால் தைரியமாக கதையை படித்து முடித்தேன்.

ராணி காமிக்ஸ் - ராமஜெயம் அவர்களின் வெளியீடு – 007 ஜேம்ஸ் பாண்ட் சாகசம் - டாக்டர் நோ

RaniComics019Dr.No2

ராணி காமிக்ஸில் மறக்க முடியாத கதை இது. ஒரு கட்டத்தில் ஜேம்ஸ் பாண்ட் (கடைசியில்) தப்பிக்கும்போது மிகவும் தளர்ந்து விடுவார். அப்போதுகூட அவர் "ஜேம்ஸ் கண்ணா, மேலே நீந்தி போ" என்று நகைச்சுவையாக தன்னைத்தானே தேற்றிக்கொள்வார். மறக்கமுடியாத கட்டம் அது. சமீபத்தில் டாக்டர் செவன் இது தொடர்பான பதிவினை வெளியிட்டார். பதிவை படிக்க இங்கே கிளிக்கவும்.

லயன் காமிக்ஸ் - கராத்தே டாக்டர் – W.H.O டாக்டர் ஜஸ்டிஸ் - உலக சுகாதார நாள் சிறப்பு அட்டை படம்
Lion Comics Issue 41 Dated September 1986 Dr Justice Front Cover

இந்த அட்டைப்படதிர்க்கும் கதைக்கும் சம்பந்தமில்லை. இந்த அட்டைப்படம் இந்த புத்தகத்தில் வந்த ஒரு அற்புதமான கதையை மைய்யமாக கொண்டது. அந்த கதையின் தலைப்பு சூப்பர் மென். உங்களில் யாருக்கேனும் நினைவிருக்கிறதா? அது சரி, இந்த கதையை சென்ற ஆண்டே சிறப்பு பதிவாக இடுவதாக சொன்ன ஸ்ட்ராபெர்ரி சோம்பேறி விஸ்வா எங்கே?

லயன் காமிக்ஸ் - ஹாலிடே சூப்பர் ஸ்பெஷல் - மீண்டும் டாக்டர் செவன் - காரிகன் சாகசம்

Lion#083 - Holiday Super Special - BackLion Comics Phil Corrigan Agent X9 Issue No 83 Lion Holiday Sper Special Meendum Dr 7

இங்கிலாந்தில் இருந்து வந்த ஜேம்ஸ் பாண்ட் கதைகளுக்கு போட்டியாக அறுபதுகளில் வந்தவை காரிகன் கதைகள் (அதற்க்கு முன்னரே ஆரம்பித்தாலும், இந்த சமயத்தில் தான் இவை புகழ் பெற்றன). காரிகன் கதைகள் என்றாலே ஒரு சிறப்பு அம்சம் தரமான வில்லன்கள். குறிப்பாக டாக்டர் செவன். காமிக்ஸ் உலகின் தலைசிறந்த வில்லன்களில் முதன்மை இடத்திற்கு போட்டியிடுபவர் டாக்டர் செவன். அவரின் கதைகளில் சிறந்த கதை இது.

காமிக்ஸ் கிளாசிக்ஸ் - ஸ்பைடர் - மறுபதிப்பு -டாக்டர் டக்கர் - நல்ல அட்டைப்படம்?

CC 01-21

ஏற்கனவே இந்த கதையை பற்றி சொல்லிவிட்டதால் ஒரே ஒரு கம்ப்ளைன்ட் மட்டும்: ஏம்பா, ரெண்டு வருஷத்திற்கு முன்பே இந்த ஸ்பைடர் பற்றிய பதிவிடுவதாக சொன்ன சோம்பேறி எங்கே?

வாசு காமிக்ஸ் - ஒரிஜினல் தமிழ் காமிக்ஸ் - டாக்டரின் ஆவி - ஆஸ்கர் விருது பெற்ற படம் இந்த கதையில் இருந்து சுடப்பட்டது. 

Doctarin Aaavi

இந்த கதையை பற்றி நாம் ஏற்கனவே அலசி ஆராய்ந்து விட்டதால் புதிதாக சொல்ல எதுவும் இல்லை. புதிய வாசகர்கள் இந்த சுட்டியை பயன்படுத்தி நம்முடைய பழைய பதிவினை படிக்கவும். இந்த அட்டைப்படத்தை வரைந்த ஓவியர் G.K.மூர்த்தி அவர்களை பற்றி தீவிர ஆராய்ச்சி நடந்து வருகிறது. விரைவில் ஓவியர்களை பற்றிய ஒரு பதிவினை இட நான் உத்தேசித்து உள்ளேன்.

மாலைமதி காமிக்ஸ் AFI - ரகசிய எஜன்ட் காரிகன் - நம்பிக்கை துரோகி டாக்டர் செவன்

Corrigan Nambikkai Thurogi Doctor Seven

படத்தினை நண்பருக்கு மின் அஞ்சலில் அனுப்பி வைத்த உயர்திரு முது விசிறி அவர்களுக்கு நன்றி. படத்தை அனுப்ப மறுத்த டாக்டர் செவனுக்கு கண்டனம். வேறென்ன சொல்ல? இந்த பதிவில் இந்த அட்டைப்படத்தினை போட்டால் அவருடைய இமேஜ் பாதிக்கப்படுமாம். என்ன கொடுமை சார் இது?

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன், 
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

18 comments:

  1. ஒலக காமிக்ஸ் ரசிகரே, ஒற்றைக்கை பதிவரே,அட்டைப்பட பதிவுகளின் முதல்வரே...

    மாலைமதி காமிக்ஸின் அட்டைப்படம் தூள். மருத்துவர் ஏழு அவர்களின் அந்தப் பார்வை அட்டகாசம்.

    ஆஸ்கர் விருது பெற்ற டாக்டரின் ஆவி அட்டைப்படத்தை எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பதில்லை. என்ன ஒரு மந்திரக் கவர்ச்சி!

    ஆனால் டாக்டர் டக்கர் இரண்டாவது அட்டைப்படம் கவரத் தவறுகிறது. பிலிப் காரிகன் விமானத்திலிருந்து விமானத்திற்கு பாயும்[மாறும்] காட்சியை பார்க்க மனம் துடிக்கிறது.

    தமிழ் காமிக்ஸில் வைகிங்குகள் எனும் விஸ்வாவின் ஐடியாவை மனதில் கொள்ள வேண்டுகிறேன்.

    அது சரி ஸ்பைடர் ஏன் மார்க் கச்சை அணிந்திருக்கிறார்!!!!

    ReplyDelete
  2. //அது சரி, இந்த கதையை சென்ற ஆண்டே சிறப்பு பதிவாக இடுவதாக சொன்ன ஸ்ட்ராபெர்ரி சோம்பேறி விஸ்வா எங்கே?//

    உங்க போதைக்கு நான்தான் ஊறுகாயா? விடுங்கப்பா, விடுங்க. லூஸ்ல விடுங்க.

    ReplyDelete
  3. மிக நல்ல பதிவு சரியான தருணத்தில் வெளியுட்டுள்ளீர்
    முத்துவில் வந்த விசித்திர வேந்தன் & கல் நெஞ்சன் ஆகிய இரு புத்தகங்களை பற்றி குறிப்பிட மறந்துவிட்டீர்
    நன்றி

    ReplyDelete
  4. நல்ல பதிவு. மோட்சத்திற்கு அப்பால் புகழ் டாக்டர் பிரகாஷ் ஐ விட்டு விட்டீர்களே

    ReplyDelete
  5. கனவுகளின் காதலனே,

    வருக, வருக. முதன்மை கருத்துகளுக்கு நன்றி நண்பரே.

    //அது சரி ஸ்பைடர் ஏன் மார்க் கச்சை அணிந்திருக்கிறார்!// கேள்வி பார்வர்டட் டு சோம்பேறி கிங் விஸ்வா. ஏனெனில் அவர்தான் ஸ்பைடர் பற்றிய ஆராய்ச்சியில் ஒரு வருடம் முன்பு தெளிந்தவர். இருந்தாலும் இந்த கேள்வி ரொம்ப ஓவர்.

    ReplyDelete
  6. சிபி,
    //முத்துவில் வந்த விசித்திர வேந்தன் & கல் நெஞ்சன் ஆகிய இரு புத்தகங்களை பற்றி குறிப்பிட மறந்துவிட்டீர்//

    நண்பரே, வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. நம்முடைய பதிவே தலைப்பில் டாக்டர் என்று வரும் கதைகள் தான். இருந்தாலும் சிறப்பாக நினைவு வைத்து சொன்ன உங்களை நினைவில் வைத்து வெகு விரைவில் ஒரு பதிவினை இடுகிறேன்.

    ReplyDelete
  7. //நல்ல பதிவு. மோட்சத்திற்கு அப்பால் புகழ் டாக்டர் பிரகாஷ் ஐ விட்டு விட்டீர்களே//

    நன்றி சிவ். இருந்தாலும் சென்ற கமென்ட்டில் சொன்ன பதில்தான் உங்களுக்கும். டாக்டர் பிரகாஷின் மூன்றாவது காமிக்ஸ் பற்றிய விஸ்வாவின் பதிவை விரைவில் எதிர்பாருங்கள். நேற்றுதான் அவரை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்தேன்.

    ReplyDelete
  8. நண்பரே,

    ஸ்பைடரின் மார்க்கச்சையை பார்க்கும் போது பிரபல பாப் பாடகி மடோனா அவர்கள் 90ம் ஆண்டுகளில் தனது Blonde Ambition இன்னிசைக் கச்சேரிகளில் அணிந்து எமை சூடாக்கிய மார்க்கச்சை நினைவிற்கு வந்து தொலைக்கிறது. இந்த கூம்பு வடிவ!! மார்க்கச்சையை வடிவமைத்தவர் பிரபல மாடலிங் டிசைனர் Jean Paul Gaultier அவர்கள். ஸ்பைடரின் மார்க்கச்சைதான் அவரிற்கு உந்துதலாக இருந்திருக்க வேண்டும் என்று அடியேன் எண்ணுகிறேன் :))

    ReplyDelete
  9. நண்பரே,

    ஒப்பிட்டு பார்ப்பதற்கு லிங்கு கீழே...
    http://i.dailymail.co.uk/i/pix/2009/11/03/article-1224947-07114DF3000005DC-926_306x423.jpg

    இவ்வகையான ஆராய்ச்சிப் பின்னூட்டங்களை தொடர்ந்தும் நான் வழங்கலாமா?!

    ReplyDelete
  10. அப்போ மடோன்னா ஸ்பைடர் காமிக்ஸ் படிக்கிறாரா?

    டே பசுபதி! கூப்பிடுறா கிங் விஸ்வாவ! போடுறா காமிக்ஸ் நியூஸ!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  11. //அப்போ மடோன்னா ஸ்பைடர் காமிக்ஸ் படிக்கிறாரா?

    டே பசுபதி! கூப்பிடுறா கிங் விஸ்வாவ! போடுறா காமிக்ஸ் நியூஸ!//

    தலைவரே,

    ஏன் இந்த கொலைவெறி? ஏற்கனவே குஷ்பூ காமிக்ஸ் படிப்பது பற்றிய அலையே ஓயவில்லை. அதற்குள் மடோன்னா மேட்டர் வேறா? தமிழ் காமிக்ஸ் உலகம் தாங்காது ஐயா.

    ReplyDelete
  12. காதலரே,

    //இவ்வகையான ஆராய்ச்சிப் பின்னூட்டங்களை தொடர்ந்தும் நான் வழங்கலாமா?//

    ஏற்கனவே இந்த ஒல்க காமிக்ஸ் ரசிகரின் தொந்தரவு தான் தாங்கமுடியவில்ல என்றால் நீங்களுமா? என்சாய்.

    ReplyDelete
  13. ஒலக காமிக்ஸ் ரசிகா!

    சில சமயங்களில் பதிவை விட பின்னுட்டங்களில் நிறைய ஆராய்ச்சி விஷயங்கள் வெளிப்படும். அவ்வகையில்
    //அது சரி ஸ்பைடர் ஏன் மார்க் கச்சை அணிந்திருக்கிறார்!// என்ற 'கனவுககளின் காதலனி'ன் ஆராய்ச்சி என்னை அதிசயத்தில் ஆழ்த்தியது. தொன்றுதொட்டு இன்று வரை இப்படி ஒரு ஆராய்ச்சி நடந்தேயில்லை. அன்னாரின் "கேள்வி" ஞானத்திற்கும் கொடுத்த லிங்குங்கும் நன்றிகள்!

    ReplyDelete
  14. ஒலக காமிக்ஸ் ரசிகனே ,
    விரைவில் சிறந்த காமிக்ஸ் ஆராய்ச்சிக்கான நோபல் பரிசை வென்று விடுவீர் போல ...

    ReplyDelete
  15. சிம்ரன் படத்த மட்டுமே மணிக்கணக்கா பார்ப்பேன்னு சொல்ற மாதிரி, இந்த அட்டைப்படங்களையும் மணிக்கணக்காக பார்க்கலாம். தகவல்கள் அனைத்தும் அருமை.

    ReplyDelete

என்னுடைய வலைப்பூவை நீங்கள் படிக்கவில்லையெனில், படித்தவுடன் உங்களின் எண்ணங்களை தெரிவிக்கவில்லை எனில் உங்களிடம் அடிப்படையாகவே ஏதோ தவறு உள்ளது

Related Posts with Thumbnails